ஹைக்கூ கவிதைகள்
தங்க இடம் இருந்தும் கூட
தங்குவதே இல்லை
தங்கம்.
ஓடி வந்த அவளை
தூக்க முடியவில்லை
அலை
ஐந்து நட்சத்திர உணவகம்
அழகாகப் பரிமாறியது
பழையசோற்றை
வெட்டி சாய்த்த குலையாய்
வீதியில் கிடந்தனர்
ஆணவக்கொலை
அடகு கடைகளில் மாதிரியாக
தூக்கில் தொங்கியது
மனைவியின் தாலி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.