தமிழ் இலக்கிய உலகில் எடுத்துக் கொண்டிருக்கும் சகோதரி இரா சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் அவர்களின் முதல் நூலான “நீலனின் பொங்குமாங்கடல் ” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சிறார் நாவல் நூலை வாசித்தேன்
இன்றைய தமிழ் இலக்கியத்தில் சிறார்களுக்கான நூல்கள் பல வெளிவந்த வண்ணம் இருக்கிறது . அதில் இதுவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்
“ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையாது”
என்று சொன்னது போல
“பசு மரத்தாணியைப் போல ”
இளமையிலே கற்பது நல்ல செயல் தான்
அது இலக்கியமும் கூட
கவிஞர் திரு கன்னிக்கோயில் இராஜா அவர்களின் “லாலிபாப் சிறுவர் உலகம் ” மூலம் வெளிவந்துள்ள இந்த நூல் இலக்கிய உலகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது
சிறார் இலக்கிய நூல்கள் வரிசையில்
வெகு நாட்களுக்கு பின்பு நான் இன்று வாசித்தேன்
இந்த நூலில் பக்கங்களில் நான் பயணிக்கும் பொது ஒரு குழந்தைக்கான மனநிலையை நான் உணர்ந்து கொண்டேன்
இந்த நூலுக்கான அணிந்துரையில்
சாதித்ய அகாதெமி விருதாளர் திரு.உதயசங்கர் ஐயா இந்த உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனாலும் முதல் உயிரினம் தோன்றி அதன் பின்பு பல உயிரினங்கள் தோன்றும் போது எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை ஆனால் மனித இனம் தோன்றிய பின்பு தான் இந்த இயற்கை பாதிப்புக்குள்ளானது என்றும் இயற்கையிடம் மனிதன் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றுக் கேட்கும் போதும்
“எதுவும் செய்யாமல் இருத்தாலே போதும் ” என்று கூறும் போது பாதி மனம் உடைகிறது
அடுத்ததாக கவிஞர் சிறார் எழுத்யாளர் திரு உமையவன் ஐயா அவர்களின் வாழ்த்துரையில் சுற்றுலா செல்லுகிறோம் என்ற பெயரில் இயற்கைக்கும், காட்டு வாழ் உயிரனங்களுக்கு நாம் எவ்வாறு தீங்கிழைக்கிறோம் என்பதை என்பதை சுட்டிக் காட்டி இந்நூலுக்கு வாழ்த்து எழுதுகிறார்,
கவிஞர் கன்னிக்கோயில் இராஜா ஐயா அவர்கள்
ஆகியோர்களுடைய எழுத்தின் அறிமுகத்தில்
சுற்றுச்சூழல் மாறுபாடு ஏற்படுவதற்கான முதல் காரணம்
மனிதனின் வாழ்வியல் தான் என்றும்
இயற்கையை பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று சுற்றுச்சூழல் மாற்றத்தை எக்காரணத்தைக் கொண்டும் இன்னும் அனுமதிக்க முடியாது என்பதை இந்த நூல் படம் பிடித்து காண்பிக்கிறது

கன்னி கோயில் ராஜா அவர்கள் கூறியது போன்று
ஐந்து வயது முதல் இருபது வயது வரை உள்ளவர்கள் எழுத்தாளர் திஜ ர சொல்வது போல் சிறார்களுக்கான இலக்கிய வட்டத்தில் இருக்கிற காரணத்தினால் அவர்களுக்கு சரியான நூல்களை கொடுக்க வேண்டிய அவசியம் தமிழ் எழுத்தாளருக்கு இருக்கிறது என்பதை கவிஞர் திரு கன்னிக்கோவில் இராஜா ஐயா அவர்களின் பதிப்புரை மூலம் நான் அறிந்து கொண்டேன்
கவிஞர் திருமதி இரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் அவர்கள் கொலுசு உட்பட பல்வேறு இலக்கிய இதழ்களில் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த சிறார்இலக்கியம் அவருக்கு புதிதான ஒரு அவதாரம் என்று நினைக்கிறேன்
இதிலும் அவருடைய பங்களிப்பு வெகு சிறப்பாக அமைந்திருப்பது தான் மிகவும் ஆச்சரியம்
பாராட்டப்பட வேண்டிய ஒரு செயலும் கூட
சரி இனி “நீலனின் பொங்குமாங்கடலுக்குள் “சென்றுப் பார்ப்போம்
” வீரா “என்ற ஒரு விலங்குகளின் மேல் பேராவல் கொண்ட ஒரு மனிதன் குரங்குகளுக்கு உதவிச் செய்வதாகக் கூறி காடுகளுக்குள் சென்று குரங்குகளுக்கு உணவு மற்றும் பழங்கள் கொடுத்து உதவியதால் காடுகளில் ஏற்பட்ட சூழலியல் மாற்றங்களை அந்தக் குரங்குகளின் தலைவன் நீலன் மூலம் காட்டுக்குள் வீராவை அழைத்துச் சென்று மனிதர்கள் உதவி என்ற பெயரில் செய்தத் தீங்கை எடுத்துச் சொல்லி காடுகளின் தற்போதைய நிலையைப் புரிய வைப்பது வீராவுக்கு மட்டுமல்ல இன்றைய
மனித சமுதாயத்துக்கும் தான்,
இந்த நாவலிலும் குற்றாலச் சாரலிலே நான் நனைந்ததாக எனக்கு ஞாபகம்
கதையின் போக்கு மீண்டும் மீண்டும் சுவாரசியத்தை உருவாக்குகிறது
நாவலை தனித்தனிப் பகுதிகளாக பிரித்தது எளிதாக்கியது வாசகர்களின் வாசிப்பை,
நாவலுக்கு இடையில்’ ‘தென்னைக்கு ஊடே பயிர்கள் இடுவது போல் ”
நாவலுக்கு ஊடே பெட்டிச் செய்திகள் மூலம்
குற்றால மலையின் சிறப்பையும்
உடும்பு ஒரு பல்லி இனம் தான் என்றும்
புலி ஒரு பூனை இனம் தான் என்றும்
அறுதியிட்டுச் சொன்னது அருமை,
‘”பொங்குமாங்கடல்” என்பது
பொங்குமாங்கடல் இல்லையென்றால் ஆர்ப்பரிக்கும்
அருவியின் வேகத்தைக் குறைக்க முடியாது என்றும் நாம் அருவியில் தாக்குப் பிடித்துக் குளிக்கவும் முடியாது என்பதை, அறிவியல் பூர்வமாக சொன்னதும் அருமை
குற்றாலத்தில் ஆறு அருவிகள் இருக்கிறது என்பதையும், அதில் இரண்டு அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை என்பதையும்
மூன்று ஆறுகள் சேர்ந்து அருவியை உருவாக்குகிறது என்பதையும் நாவலின் ஊடே நமக்குச் சுட்டிக்காட்டியது அருமையாக இருந்தது
மனிதர்களில் தவறுச் செய்யும் போது
குரங்கு என்று சொல்வதும்
குரங்குகள் மனிதத் தவறுகளை இப்பொழுது சுட்டிக் காட்டுவதும்
கதையின் போக்கை வெகுவாக ரசிக்க வைக்கிறது
குழந்தை பருவ குட்டிகளில் மான் மற்றும் யானை தங்களின் தாயை விட்டுப் பிரியும்போது தாயின் பாசத்துக்கு வெகுவாக ஏங்குவதை கதையின் ஓரிடத்தில் கூறும்போது தாய் பாசத்துக்கு அடிமை இல்லாதவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை இந்த பொங்குமாங்கடல் விளக்குகிறது
சுற்றுலாப் பயணிகள் காடுகளில்,
மலைகளில், ஆறுகளில் நெகிழியைக் கொண்டு இயற்கை மாசுப் படுத்துவதை
சத்தம் இல்லாமல் அமைதியாக கண்டித்து ஓர் ஊர்வலத்தை நடத்தி முடித்தது இந்த நீலனின் பொங்குமாங் கடல் என்ற நாவல்
இன்னும் சொல்லப்போனால்
சுற்றுலா சுற்றுலாவின் அவசியத்தை விட
அத்தனை உயிர்களும் இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ
இயற்கையை மாசுப் படுத்தாமல் அதன் தூய்மையை பேணிப் பாதுகாப்பது மனித இனத்தில் பிறந்த ஒவ்வொருவரின் கடமையும் கூட என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர் திருமதி இரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் அவர்கள்
பக்கம் முதல் பக்கம் வரை படங்கள் போட்டுக் காட்டியது சிறார் இலக்கிய நூல்களுக்கான தனிச்சிறப்புகளில் ஒன்று அது இந்த பொங்குமாங் கடலிலும் அருமையாக படர்ந்து இருக்கிறது
ஒரு சிறந்த சிறார் இலக்கிய நூல்களுக்கான நீலனின் பொங்குமாங் கடலும் இடம் பிடிக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்
மனிதனின் உணவுகள் விலங்குகளின் உணவுகள் அல்ல என்றும்,
மனிதரின் தேவைகள் விலங்குகளின் தேவைகள் அல்ல என்பதையும்,
மனிதனின் செரிமானமும் விளங்குகளின் செரிமானமும் ஒன்றல்ல என்பதையும்,
நாடும் காடும் ஒன்றல்ல என்பதையும்
இந்த நூல் தெளிவாக விவரிக்கிறது
எந்த ஒரு விலங்கும் மனிதனை வா, வா என்று தன்னைப் பார்க்க அழைப்பதில்லை
நாம் தான் அதன் இருப்பிடத்திற்கு போய் அதை அலைக்கழிக்கிறோம் என்பதை இந்த நூல் தெளிவாக கூறுகிறது
எளிமையான சொல் நடை
கண்கள் வலிக்காமல் வாசிக்கும் எழுத்து உருவங்கள் பெரிதாகவும்
கதைகளுக்கு ஏற்ப அழகிய படங்கள் ஆகவும், ஒரு அத்தியாயம்
மூன்று நான்கு பக்கங்களில் முடியும் படியாக அத்தியாயங்கள்
என்று
குழந்தைகள் விரும்பி வாசிக்கும் நூலாக இந்நூல் அமைந்திருப்பது
இலக்கியத்திற்கான ஒரு வரப்பிரசாதம் தான்
கதைகள் என்றாலே குழந்தைகள் என்றும்
குழந்தைகள் என்றாலே கதைகள் தான் என்றும்
நினைக்க வைக்கிறது இந்த” நீலனின் பொங்குமாங்கடல் ”
இந்த நூலிலும் ஆசிரியர் இயற்கை மற்றும் சூழலியல் சுழற்சியை அருமையாக விவரித்து இருக்கிறார்
குரங்குகள் மரங்களின் விழுந்து மேல் ஏறி தனக்கான உணவை தானேத் தேர்ந்தெடுத்து உண்ணும் போது அதனால் பயனடையும் மற்ற விலங்குகளைக் குறிப்பிட்டது அருமை,
கொஞ்சம் விலங்கினங்களையும், கொஞ்சம் அறிவியலையும் புரிய வைத்துவிட்டார்
இந்த நூலுக்கான அணிந்துரையும், வாழ்த்துரைகளையும், பதிப்புரையையும் எழுதிய அனைவருக்கும் எனது நன்றி
தான் எடுத்த சிறார் நாவலுக்கான இலக்கியத்தை மிக நேர்த்தியாகச் செய்த
எழுத்தாளர் இரா சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
எனது கனிவான பாராட்டுக்கள்…
வாழ்த்துக்கள்…
தொடர்ந்து எழுதுங்கள்…
குழந்தைகள் மனதில் நிற்பவர்கள் ஒன்று தலைவர்கள் அல்லது விரைவாய் தலைவர்களாய் ஆகப் போகிறவர்கள்
ஆகவே,
குழந்தை இலக்கியத்தில் பெயர் வாங்கும் போது மாபெரும் எழுத்தாளருக்கான வாய்ப்பு உங்களைத் தேடி வந்துக் கொண்டிருக்கிறது..
என்பதை மறந்து விடாதீர்கள்
இன்னும் எழுதுங்கள்
இந்த தமிழ் சமுதாயம் உங்கள் எழுத்துக்களை வாசிக்கக் காத்திருக்கிறது
வாழ்த்துக்கள் அம்மா…
தொடரட்டும் உங்கள் இலக்கியப் பயணம்
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “நீலனின் பொங்குமாங்கடல்” சிறார் நாவல் |
| ஆசிரியர்: | இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் |
| வெளியீடு: |
லாலிபாப் சிறுவர் உலகம்
|
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: |
இரா.மதிராஜ், காங்கேயம்
|
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

