“குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா…..” என்ற பாடல் நம் அனைவர் நினைவிலும் தேனாய் பவனி வருவது போல இந்த நாவலும் குற்றாலம் என்றவுடன் வாசித்தவர் மனதில் ரீங்காரமிடும் என்பதில் ஐய்யமில்லை.
பொங்குமாங்கடல் செண்பக மரம், குற்றால மூலிகை வளம், பழைர குற்றால அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, தேன்ருவி, என்ற அருவிகளின் அமைவிடம் வரலாறு மற்றும் பொன்னெட் மக்காக் (செம்முக மந்தி), கருமந்தி, செம்போத்து, உடும்பு,, செண்பகக்குயில், யானை அதிலும் காட்டை உருவாக்குவதில் யானையின் பணி என்ன? புள்ளி மான், சாம்பர் மான், சருகு மான், வரையாடு. ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் இருவாச்சி மற்றும்குழு தாமரை மலை நெல்லி குறுநொச்சி கொடியார் கூந்தல் ஜேதி புல்லை,…. போன்ற தாவரங்கள் மூலிகைகள், விலங்குகள், பறவைகள் பற்றிய தகவல்கள் தாங்கி நிற்கும் கையேடு. அதுமட்டுமின்றி செண்பக மரம் காற்றில் உள்ள தூசிகளை உறிஞ்சிக் காற்றை சுத்திகரித்துத் தூய்மையான காற்றை தருகிறது என்ற செய்தியை இந்த புத்தக வாசிப்பு தருகிறது.
இந்த தகவல் இயற்கையின் அற்புதத்தை எப்படி வர்ணிக்க என ஆச்சிரியத்தை தருகிறது.
காடு இல்லையெனில் நாடு இல்லை. நாடு இல்லையெனில் மனிதகுலம் இல்லை. இதைஅறியாமல் நாம் நமது கருவறையான காட்டை சிதைத்துக் கொண்டு இருக்கிறோம். அதை நமக்கு நீலனின் பயணத்தின் முலம் நாளைய மனித குலத்திற்கு சொல்லும் விதம் அருமை. நம்மில் பலர் சமூகசேவை என்ற பெயரில் நமக்கான வாழ்வாதாரத்தை பலமான அஸ்திவாரம் அமைத்து கட்டிக் கொள்கிறோம்.

வனவிலங்குகளுக்கு உள்ள உணவு பழக்கத்தை நாம் மாற்றுகிறோம். மனிதர்களான நாம் நமது பசியையே உணர முடியாமல் புசித்துக் கொண்டே இருக்கும். இரவு என்று ஒன்று இல்லை எனில் 24 மணிநேரமும் சாப்பிட்டுக் கொண்டே இருப்போம். நமக்கான உணவு என நாம் நம்பிக் கொண்டு இருக்கும் உணவு அல்லாததையும் கொடுத்து விலங்குகளையும் மாற்றிவிடுகிறோம். சமீபத்தில் பந்திபூர் சென்றோம். வனத்தின் வழியாக பயணிக்கும் போது மயில்கள் சிப்ஸ் வாங்க மனிதர்களுக்காக காத்துகிடக்கின்ற அவல நிலையை காண முடிந்தது. வழியெங்கும் மது பாட்டில்கள், நெகிழிகள். வறண்ட நிலம். நீருக்காக தவிக்கும் மிருகங்கள்.
இயற்கையால் நடந்த காட்டு தீயை விட மனிதர்கள் புகைத்து விட்டு விட்டுச் சென்ற தீ தான் காட்டு தீயை உருவாக்கியுள்ளது. நாம சம காலத்தில் காணும் நிலையை நாவல் வாசிக்கும் போது கண்முன் காட்சியாக வருகிறது.
இந்த நாவல் குற்றாலத்தின் கையேடாக குற்றாலம் செல்லும் ஒவ்வொருவரும் கொண்டு செல்லாம். குற்றாலம் பற்றி நன்கு அறிந்து புரிந்தவர் தான் இத்தனை தரவுகளை நமக்கு தர இயலும் கதை சொல்லி, சிறுகதை எழுத்தாளர் என தனது பன்முக தன்மையை வெளிப்படுத்தும் தோழர் இரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறார் படைப்புலகிலும் தனது முதல் படைப்பாக இந்த “நீலனின் பொங்குமாங்கடல்”, நமக்கு அளித்துள்ளார். அவர் மேலும் பல படைப்புகள் படைத்து வளர எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரு வாசிப்பு ஒரு படைப்பை உருவாக்கும். இந்த புத்தக வாசிப்பு எனக்குள் விதைத்த ஹைக்கூ கவிதைகள்
கலங்குகிறாள்
இயற்கை அன்னை
பணப்பயிர்களின் சாகுபடி
***
பசிக்கு வேட்டையாடும்
வனவிலங்குகள்
பேராசைக்கு விலங்கை கொல்லும் மனிதன்
****
விதைத்து விட்டு
சென்றான் மனிதன்
காட்டில் நெகிழிகளையும் மது பாட்டிலையும்
**
ஒருவழி காட்டு பாதை
குதிக்க காத்திருந்த குரங்குகள்
பேருந்திற்கு மேலே
பாடல்
டும் டும் டும் டும்
பம்பளிமாஸ் பம்பளிமாஸ் எப்படி நீ குண்டா ஆனே?
நகரத்துக்கு போயி உழைக்காமல் சாப்பிட்டதாலே
குண்டாதான் நான் ஆனேன்
பம்பளிமாஸ் பம்பளிமாஸ் காட்டை விட்டு ஏன் போனே?
வேல செய்யாம சோறு கிடைச்சது அதனால நான்போனேன்.
பம்பளிமாஸ் பம்பளிமாஸ் சோறு சாப்பிட்டதால என்ன ஆச்சு?
பசிகாம சாப்பிட்டதாலே பம்பளிமாஸாக மாறி போனேன்
பம்பளிமாஸ் பம்பளிமாஸ் இப்ப என்ன பண்ண போறே?
வேலை செஞ்சு வேலை செஞ்சு ஆரோக்கியமா வாழ போறேன்.
பம்பளிமாஸ் பம்பளிமாஸ் இப்போ எங்க போக போறே?
நான் நானாக மாறி என் கூட்டத்தோட விளையாடப் போறேன்
பம்பளிமாஸ் பம்பளிமாஸ் எப்போ நீ சாப்பிடபோறே?
பசித்து புசித்து ஒல்லியாக மாறப் போறேன்
பம்பளிமாஸ் பம்பளிமாஸ் குழந்தைகளுக்கு என்ன சொல்லப் போற?
காய் பழம் சாப்பிட்டு ஆரோக்கியமா வாழுங்கள் என சொல்லப் போறேன்
டும் டும் டும் டும்
*****
எழுத்தாளர் இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த
வாழ்த்துகள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “நீலனின் பொங்குமாங்கடல்” சிறார் நாவல் |
| ஆசிரியர்: | இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் |
| வெளியீடு: |
லாலிபாப் சிறுவர் உலகம்
|
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: |
![]() சாந்தி சரவணன்
|
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


