எரிக் ஹாப்ஸ்பாம் (Eric Hobsbawm) எழுதிய மே தின விடுமுறையின் வரலாறு (May Dina Vidumuraiyin Varalaru)- தமிழில் : ராமச்சந்திர வைத்தியநாத்

மே தின விடுமுறையின் வரலாறு – நூல் அறிமுகம்

மே தின விடுமுறையின் வரலாறு நூலில் இருந்து

மே தின விடுமுறையின் வரலாறு என்ற புத்தகத்தை பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் எரிக் ஹாப்ஸ்பாம் (Eric Hobsbawm) எழுதியுள்ளார். அதைத் தமிழில் ராமாசந்திர வையத்தியநாத் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்துகள் அனைத்தும் டிரிப்யூன் பத்திரிக்கையில் 2019ல் எழுதியக் கட்டுரையின் அடிப்படையில் எழுதிய நூலாக இருக்கிறது.

மே தினம் என்று சொல்லும்போது, அது தொழிலாளர்களுக்கான தினம் என்று பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படும் பொருளாக இருக்கும். ஒவ்வொரு தொழிற்சங்கமும், அரசியல்வாதிகளும் சிகப்பு சட்டையை அணிந்து பேரணி, ஊர்வலம் சென்று அன்றையத் தினம் என்பது சிறப்பாக நடைபெறும். ஆனால் எதற்காக மே தினம் கொண்டாடப்படுகிறது. எப்படி உருவானது என்ற கேள்விக்களுக்குப் பதிலாக இந்தப் புத்தகத்தம் அமைந்திருக்கிறது.

1890ஆம் ஆண்டு மே முதல் நாள் எட்டு மணி நேரமாக மாற்றும் சட்டத்திற்கு ஆதரவாக முதன் முதலில் சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. ஐரோப்பியாவில் முதன்முதலில் ஏற்றுக்கொண்டது இடதுசாரிகள் அல்ல, வலதுசாரிகள் தான் என்று எழுத்தாளர் கூறுகிறார்.

ஐக்கிய சோவியத் சோஷியலிஸ்ட் குடியரசுக்கு பின் ஹிட்லர் அரசுதான் முதன் முதலாக மே தினத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டாடியதாக இருக்கிறது. பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் மே தினத்தை அங்கிகரித்தாகவும், முழுக்க முழுக்க சோசிலிஸ்டுகள் அமைப்பாக சில அரசுகள் இருந்தாலும் தொழிலாளி வர்க்க உணர்வு, வர்க்கப் போராட்டம், தொழிலாளர் இயக்கங்கள் அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் மேற்கத்திய நாடுகள் இருந்ததாக புத்தகத்தில் எழுத்தாளர் கூறுகிறார்.

அமெரிக்காவில் முதன் முதலில் செப்டம்பர் மாதம் முதல் திங்கள்கிழமை தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டது. பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனி மே 4 ஆம் தேதி மே தினத்தை கொண்டாடியதாகவும், பின்பு அது எப்படி மாறியது குறித்தும் புத்தகத்தில் இருக்கிறது. மே தினத்தில் தொழிலாளிகள் ஆர்ப்பாட்டமாகவோ, வேலைநிறுத்தம் செய்வது, நினைவுநாளாக கொண்டாடுவது என்று தீர்மாளித்தார்கள். ஆனால் பிரிட்டனில் மட்டும் சாத்தியமில்லாமல் இருந்ததாக எழுத்தாளர் எழுதியுள்ளார்.

” அதிகாரத்தில் உள்ளவர்களின் நெருக்கடி காரணமாக எங்களால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாவிடினும், எட்டு மணி நேர வேலைநாள் என்ற கோரிக்கைக்கு எங்களால் முழுமையான ஆதரவளிப்பதை தவிர்க்க முடியாது” என்று ரயில்வே தொழிலாளிகள் குரல்கள் ஒலித்தது. ஆஸ்திரியாவில் 1890ஆம் ஆண்டு மே முதல் நாள் ஆயுத தொழிற்சாலை மூடப்பட்டது. அதன் பிறகும் ஒவ்வொரு வருடமும் மூடப்பட்டதாகவும் வரலாறுகளை கூறுகிறார்.

எரிக் ஹாப்ஸ்பாம் (Eric Hobsbawm) எழுதிய மே தின விடுமுறையின் வரலாறு (May Dina Vidumuraiyin Varalaru)- தமிழில் : ராமச்சந்திர வைத்தியநாத்
ஆசிரியர் : எரிக் ஹாப்ஸ்பாம் (Eric Hobsbawm)

1886 ஆம் ஆண்டு சிகாகோ தியாகிகள் நினைவாக மே தினத்தை காண விரும்பினார்கள். ஸ்பெயின், தென் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் தியாகிகள் நாளாக எடுத்துக் கொண்டாலும், சில நாடுகள் துக்க நாளாக அனுசரித்ததாகவும் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.

மே தினம் தொடக்கத்தில் தேதிகளின் முடிவு செய்வதில் நிறைய நாடுகள் முரண்பாடுகள் இருந்தது என்பது இந்தப் புத்தகத்தின் மூலம் அறிய முடிந்தது. ஸ்வீடனில் மே முதல் தினம் விடுமுறை தினமாக நீண்ட பாரம்பரியத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மே மாதங்களில் குளிர்காலம் என்பதால் சிரமம் இருந்ததாகவும் எழுத்தாளர் கூறுகிறார்.

” உலகத் தொழிலாளிகள் ஒன்றுபடுங்கள்” என்று மார்க்ஸ் கூறுகிறார்.
” ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்துங்கள்” என்று இயேசு பிரான் கூறுகிறார்.

இப்படி ஒரு மாதிரியான ஒற்றுமையின் அடிப்படையில் மதத்தின் அடிப்படையிலும், தொழிலாளர் வர்க்கம் சில கருத்துகளை முன் வைத்து பேசியதாகவும் இருக்கிறது. ஆண்கள், பெண்கள் பேதமின்றி அனைவரும் தொழிலாளர் வர்க்கம் என்று வர்க்க உணர்வை தொழிலாளிகளுக்கு கொடுக்கும் மே தினம் விடுமுறை தினமாக மாறியது.

வட இத்தாலியில் 1891ல் ” பூசாரிகள் தங்கள் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்” என்று தொடக்கத்தில் பத்திரிக்கை செய்திகளும் மே தினக் கருத்தாக வெளிவந்தது. ஆனால் ” மே தினமென்பது ஒட்டு மொத்த உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் பண்டிகையாகும்” என்று பின்பு பத்திரிக்கையின் வந்ததாகவும் இருக்கிறது.

1890ல் தேர்தல் ஜனநாயகம் என்பது ஐரோப்பாவில் மிகவும் அசாதாரணமானதாக இருந்தது. எட்டுமணி நேரம் வேலையும், அனைவருக்கும் வாக்குரிமையும் கோரிக்கையாக தேர்தலில் முன்னெடுக்கப்பட்டது. ஆஸ்திரியா, பெல்ஜியம், ஸ்காண்டிநேவியா, இத்தாலி வாக்களிக்கும் உரிமையை மே தினத்தோடு கோரிக்கை வைத்ததாக புத்தகத்தில் இருக்கிறது.

” குறுகிய நேர வேலை அதிக ஊதியம்” என்று மே தினம் குறித்து ஸ்வீடனின் தொழிற்சங்கள் அக்கறை கொண்டிருந்தாகவும் பேசப்படுகிறது.

சமத்துவம், சுகந்திரம், சகோதரத்துவம் என்று பிரஞ்சுப் புரட்சியின் அடையாங்கள் மே தினம் முழக்கமாகவும், ஒவியங்களிலும், நினைவுச்சின்னங்களில் இருந்தது.

சில நாடுகளில் மே தினத்தை மலர்கள் கொண்டு கொண்டாடியதாகவும், முதலில் செம்மலரும், பின்பு ரோஜாவும், லில்லியும் அதிகாரபூர்வ அடையாள மலராக நாடுகள் எடுத்துக் கொண்டதாக புத்தகத்தில் இருக்கிறது.

” பன்னிரெட்டு வயதில் ஜவுளித் தொழிற்சாலையில் பணியாளராக பணிபுரியும்போது செங்கொடியை ஏந்தினேன், ஆனால் இப்போது ஆணும், பெண்ணுமாகதான் வேலைக்கு செல்கிறாள்” என்று இத்தாலிய பெண் பேசும் மே தினம் உரையில் இருக்கிறது. குழந்தை தொழிலாளிகள் அகற்றப்பட்டதாக புரிய முடிந்தது.

கடைசியாக டிசம்பர் 25, ஜனவரி 1 போன்று மே ஒன்றும் விடுமுறை நாளாக ஐரோப்பிய நாட்டில் இடம்பெற்றது. இந்தப் புத்தகத்தில் மே தினத்தின் முந்தைய வரலாறுகளில் ஐரோப்பிய நாடுகள் எப்படி பயணம் செய்தது என்பது தான் இந்தப் புத்தகத்தில் கட்டுரை வடிவில் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை 1923 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் முதன்முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது. அதுவும் தமிழகத்தில் தான் மே தினம் கொண்டாடப்பட்டது.

தொழிலாளர் வர்க்கம், சர்வதேச ஒற்றுமை, எட்டு மணி வேலை நேரமும், வாக்குரிமையும், தொழிற்சங்கத்தின் இடதுசாரிகள் பங்கேற்பும் நிறைந்து இருக்கும் புத்தகமாக சர்வதேச தொழிலாளிகளின் மே தினம் வலுப்பெற்றது.

ஒவ்வொரு தொழிலாளிக்கும் மே ஒன்று தினமே பொங்கல், தீபாவளி போன்று பண்டிகை நாளாக கொண்டாடப்பட வேண்டிய தினம் என்று புரிதலோடு முடிக்கிறேன்.

” இறுதி வெற்றி நமதே”
” செங்கொடி பறக்கட்டும்”
” தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்”

நூலின் தகவல்கள் : 

நூல் : மே தின விடுமுறையின் வரலாறு (May Dina Vidumuraiyin Varalaru)
ஆசிரியர் : எரிக் ஹாப்ஸ்பாம் (Eric Hobsbawm)
தமிழில். ராமச்சந்திர வைத்தியநாத்
விலை :  ரூ.25
பக்கங்கள் : 32
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு :  044 24332424

நூல் அறிமுகம் எழுதியவர் :

சு.வினோத்குமார்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *