எரியும் பனிக்காடு என்ற மிகச்சிறந்த புத்தகம் ஒன்று உண்டு. மலைகளில் தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்யும் அவல நிலை குறித்து. அதில் வரும் கதாப்பாத்திரங்களை நினைத்தால் அதே புத்தகத்தில் வரும் அட்டைப் புழுக்களை விட கொடுமையாக இருப்பர். அது புத்தகம் மட்டுமல்ல. இன்னும் அந்த மக்கள் பயணித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழல். சரியான உணவு கல்வி மருத்துவம் ஏதுமில்லாமல் தேயிலைத் தோட்டத்திலேயே கூலி வேலை பார்த்து கால் வயிற்றை நிரப்பும் செயல்கள் தான் அணுதினமும் நடந்தேறுகின்றன. நோய் வந்தால் கூட மருத்துவர்களை அழைத்து வராமல் பாதிரியார்களை வரவழைத்து பிரசங்கம் செய்வது என படிப்பறியாத மக்களை எதையெல்லாமோ ஆட்கொண்டனர்.
அதிக உடல் உழைப்பு. வட்டிக்கு காசு அதிகம் வாங்கியுள்ளதாக கூறி வாங்கும் சிறு ஊதியத்தையும் பிடுங்கி விடுவார்கள். இப்படி இந்த எஸ்டேட்களில் சிக்கி தப்பிக்க முயன்று அப்படியே இறந்து போன சம்பவங்களும் அரங்கேறியது. பிறகு தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் என சங்கங்கள் தலையிடவே கொஞ்சம் மாற்றம் கண்டுள்ளதாக நான் உணர்கிறேன். நேரில் சென்று பார்த்ததில்லை. புத்தகத்தில் வாசித்த நியாபகம். இந்த எரியும் பனிக்காடு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே இயக்குனர் பாலா பரதேசி என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எரியும் பூந்தோட்டம். எரியும் பூந்தோட்டம் என்றதுமே முதலில் தெரியும் பனிக்காடு தான் ஞாபகத்தில் வந்தது. பூந்தோட்டமும் எரியத் தான் செய்கிறது. தெலுங்கில் சாகித்திய அகாதமி விருது வாங்கிய புத்தகம். தமிழ் மொழிபெயர்ப்பு. அழகான மனைவி இன்பமாய் இரு பிள்ளைகள் என மிடில் கிளாஸ் வாழ்க்கை நடத்தி வரும் மிஸ்டர் குமார் தனது பணி நிமிர்த்ததின் காரணமாக சென்னை செல்கிறார். எதேர்ச்சியாக சுதீராவை சந்திக்கிறார்.
சுதீரா சுதீரா சுதீரா…….
மிக மிக அழகான துடிப்பான வித்தியாசமான கண்ணோட்டங்களை கொண்ட கல்லூரி காதலி. கல்லூரியில் படிக்கும் போது அவள் மேல் காதல் கொண்டவர்களில் இல்லை கா காதல் கொண்டவர்களில் நானும் (குமார்) ஒன்று. அவளை மெரினாவில் சந்திக்கவும் ஸ்ரீ ராமச்சந்திரனாக இருந்த அவனுக்குள் மீண்டும் சுதீராவின் காதல் காதல் முளையிட்டது. பாதுகாப்பற்ற உடலுறவு மேற்கொள்ளப்பட்டது. சுதிரா இதற்கு முன் தான் மனம் விரும்பிய பல பேருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டிருப்பவள். அதில் அவளின் கருத்துக்கள் தனிப்பட்டது. அது அவளின் விருப்பமான சுதந்திரம். குமாருடன் உடலுறவு கொண்ட சிறு தினங்களில் அவளுக்கு எய்ட்ஸ் என ஊர்ஜிதம் ஆகிவிட்டது. அதை குமாரிடம் தெரிவிக்க தனக்கும் எய்ட்ஸ் என பரிசோதனை செய்யாமலே தானே முடிவெடுத்து….. மனைவி குழந்தைகள் உறவுகள் அலுவலகப் பணியாளர்கள் என எல்லோரிடமும் இருந்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு மேலும் தன்னைத் தானே தண்டனை உள்ளாக்கினார். சமீரா குமாருக்கு லெட்டர் எழுதி வைத்து விட்டு சூசைட் அட்டெண்ட் செய்துவிட குமாருக்கு மேலும் பீதி பற்றிக் கொண்டது. மேலும் தன் அலுவலகப் பணியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் இணையருக்கும் எய்ட்ஸ் நோய் இரத்தம் உடலில் ஏற்றியது மூலம் பரவ இந்த சமூகம் குடும்ப நபர்கள் உட்பட எல்லோரும் அவர்களை விலக்கி வைக்க அவர்களும் சூசைட் அட்டெண்ட் செய்துவிட்டனர். சுற்றி எங்கிலும் எய்ட்ஸ் குறித்த பேச்சே…. தேவதை போன்ற மனைவி இருக்க அந்நியப் பெண்ணுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால் வந்த தண்டனை எய்ட்ஸ். விளைவை நானே அனுபவிக்கிறேன் என தன்னைத்தானே கடிந்து இன்பங்களை எல்லாம் தொலைத்து தனித்து வாழ ஆரம்பித்தார் குமார். மேலும் காய்ச்சல் சளி பசியின்மை உடல் எடை குறைவு இப்படி இருக்க யாருக்கும் தெரியாமல் வெகு தூரத்தில் இருக்கும் சிறிய ஆய்வகத்தில் சென்று இரத்த பரிசோதனை செய்ய அதில் ஹெச் எய் வி பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தது.
இது ஒருபுறமிருக்க கோடய்யா லாரி கிளீனிங் செய்பவர். திருமணம் ஆகி நாகமணி என்ற கண்ணுக்கழகான மனைவியும் சீனு என்ற 4வயது குழந்தையுமாக நாட்கள் நகர… சில தினங்கள் காய்ச்சல் விடாது தொற்றிக் கொண்டது. எவ்வளவோ மருந்துகள் கொடுத்தும் பயனில்லாது போய் மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்ய அவருக்கு எச் எய் வி பாசிட்டிவ் என தெரிய வரவும் அந்த மருத்துவமனை ஊழியர்கள் யாரும் தொட மாட்டோம். எங்களுக்கும் பரவிவிடும் என புழுப் பூச்சிகளை விட ஈனமாய் நடந்து கொண்டனர்..
சீனுவும் அடிக்கடி நோய்வாய்ப்படுவது நாகமணிக்கு ஞாபகம் வந்தது. உடனே மருத்துவர் ஆலோசனைக்கு இணங்க இருவரும் வெஸ்டர்ன் பிளாஸ்ட் டெஸ்ட் செய்ய இருவருக்கும் எய்ட்ஸ் பாசிட்டிவ் என உறுதி. மருத்துவமனை ஊழியர்கள் கோடய்யாவை கையில் கூட தொட மறுத்து கடப்பாறையைக் கொண்டு தள்ளி விட்டு ரிக்ஷாவில் ஏற்ற மறுத்து நாகமணி அவனைத் தோளிலேயே தூக்கி வீடு வந்து சேற…. நம்ம மீடியாக்கள் எல்லாம் அவள் வீட்டை நோக்கி படையெடுத்து அவர்களின் மூவர் படமும் எல்லா தொலைக்காட்சியிலும் இடம் பெற எல்லோருக்கும் அவள் குடும்பம் எய்ட்ஸ் பாதிக்கப் பட்டதென ஊரை விட்டு காலி பண்ண வைத்தனர்.
அங்கிருந்து வேறு சேரிக்கு சென்று அங்கு குடிசை பார்த்து கோடய்யாவையும் சீனுவையும் வீட்டில் இருக்க வைத்து விட்டு கூலி வேலை தேட டவுன் க்கு சென்று விசாரித்தாள் நாகமணி. அப்போது மருத்துவமனை ஊழியர் அவளை கண்டுகொள்ள அவளோ அவன் கண்ணில் படாமல் ஓட்டமும் நடையுமாய் வீடு வருவதற்குள் ஊழியர் அந்த சேரியை அடைந்து தகவல் சொல்ல ஊர் மக்களின் வசைகளுக்கு ஆளாகி கல்லடி பட்டு உள்ளே சென்றால் கோடய்யாவின் உயிர் பிரிந்திருந்தது. உடலை அகற்ற கூட ஊரார் முன் வரவில்லை. முனிஸ்பாலிட்டி வேலைக்காரர்களும் தொடவே பயந்தனர். ஊராரிடம் இருந்து கடப்பாரை பெற்று ஒரு தோட்டியில் கோடய்யாவைக் கட்டி முதுகில் சுமந்து கையில் துணிப் பையையும் சீனுவையும் சுமந்து நடக்கலானாள்.
யாரும் காணாத வெகு தூரம் கடந்து நாணல் செடி கொடிகள் குவிந்த இடத்தில் குழிதோண்டி அவனை உள்ளே போட்டு மூடி பேரழுகையிட்டு நகன்று ரயில் நிலையம் செல்ல அங்கே மஸ்தானம்மா என்பவளின் தாய்போன்ற பரிவு கிடைக்க அவளுடன் பிச்சையெடுத்து பிழைக்கலானாள். சிங்கையா என்ற காவலாளி அவர்களுக்கு தினமும் தொல்லை கொடுத்து காசைப் பிடுங்கி நாகமணியை கற்பழிக்கவும் செய்தான். விளைவு அவனுக்கும் எச் எய் வி என்பது தான். அங்கிருந்த அத்தனை பேரையும் அவன் அடித்து விரட்ட மஸ்தானம்மா இறந்து விட தனக்கு கிடைத்த ஒரே ஆத்மார்த்த உறவின் இழப்பை தவிர்க்க முடியாது அவளை அநாதையாக இல்லாமல் மகள் என்ற அந்தஸ்தோடு நகராட்சியில் எரித்து விட்டு ரயிலேறினாள் சீனுவுடன்.
விஜயவாடா சென்று அங்கிருந்த மேரி மாதா சர்ச்சில் சிறிது காலம் பிச்சை எடுத்து சீனுவை பள்ளிக்கு அனுப்பவும் ஆரம்பித்தாள். அங்கேயும் அவளைக் கண்டு கொண்டு இவள் இங்கிருந்தால் எங்களுக்கும் தொற்றிக் கொள்ளும் என அவளை விரட்ட விசயம் பிரஸ்க்கு தெரிந்து செய்தியானது எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட சிறுவனை பள்ளியில் சேர்க்காமல் இருப்பது சமூக கொடுமை என…. சர்ச் வாசலில் சக பிச்சைக்காரர்களுக்கு தெரிந்து போக அனைவரும் அவளைக் கல்லால் தாக்கி மயங்கி விழ பாதிரியார் கண்டு அவளை எய்ட்ஸ் பாசிட்டிவ் கேர் சென்டரில் சேர்த்தார். அங்கு அவளைப் போல் 50பேர் இருக்க அவளுக்கு மிகுந்த ஆச்சரியமும் கூடிய மன திருப்தி அளித்தது.
மாதவியின் உதவியால் அங்கேயே கல்வி கற்று எய்ட்ஸ் கவுன்சிலராக மாறி வீதியெங்கும், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் என எல்லோரிடமும் பிரச்சாரம் மேற்கொண்டார் நாகமணி அம்மா….. உலகமெங்கும் நடந்த எய்ட்ஸ் குறித்த மாநாட்டில் பாராளுமன்றத்தில் அவளுக்கு பேச வாய்ப்பு வந்தது. உண்மையில் எய்ட்ஸை வென்றவர் தான் நாகமணி அம்மா… மிகப்பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த கேர் சென்டரை மாதவிக்குப் பிறகு அவர் செயல்பட வைத்தார். சீனு இறந்துவிட்டான். அப்படியாக நாகமணி அம்மா பூந்தோட்டமாய் எரிந்து கொண்டு தான் உள்ளார் எய்ட்ஸ் நோயாளியாக.
குமார் தனக்கு பாசிட்டிவ் என வெறுத்து தன்னையே வருத்தி ஒரு நாள் சூசைட் செய்ய முடிவு செய்து வண்டியில் விழுந்து கண் விழித்து பார்க்கும்போது மனைவி மற்றும் குழந்தைகள் அருகே. தனக்கு நேர்ந்தது புரியாமல் மருத்துவரிடம் கேட்க இரண்டு ஆபரேஷன் முடிந்தது. இரத்தப் பரிசோதனை செய்தாயிற்று என்றார். குமாரின் கேள்வி மருத்துவருக்கு புரிய உங்களுக்கு எய்ட்ஸ் இல்லை என தீரமாக கூறிவிட்டார். சில சிறிய பரிசோதனை மையங்களில் ஃபால்ஸ் ரிப்போர்ட் செய்வதாகவும் கூறி பி ஹேப்பி மேன் என கூறி விடைபெற்றார்.
குமாரின் ஆனந்தத்தில் நானும் கலந்து கொண்டேன். அவர் தன் மனைவியிடம் நடந்ததை எல்லாம் முறையிட்டு அழும்போது நானும் அழுதேன். வரிகள் ஒவ்வொன்றும் ஆழப்பதிந்தன. எய்ட்ஸ் ஒரு கொடிய நோய். கண்முன்னே ஒரு நோயாளி சிதைவதைப் போல உணர்ந்தேன். புத்தகம் ஒரு கதைக்களத்தை கண்முன்னே தெரிய வைத்தது. புத்தாண்டில் தொடங்கி போகியில் முடித்தேன் .
எரிகிறது பூந்தோட்டம்
எரியும் பூந்தோட்டம்…
நூலின் தகவல்
நூல் : “எரிகிறது பூந்தோட்டம்”
ஆசிரியர் :சலீம்
தமிழில் : சாந்தாதத்
பக்கங்கள் : 250
விலை :145
வெளியீடு :சாகித்திய அகாதமி
எழுதியவர்
வினோதினி செல்வராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.