ஏர்வாடியில் ஒரு பெண் ஓவியம் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா
“இதோ வந்துட்டேன் கீதா!
இதோ வந்துட்டேன் கீதா!”…
இந்த வார்த்தைகளை,
திருவிழா ஒலிபெருக்கி போல் மீண்டும் மீண்டும்…
சிரிப்பொலியுடன் கலந்து,
கைகால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் , மன நோயாளியான “ஏகன்”
உச்சரித்துகொண்டே இருக்க…

“ஏய் நாயே!
நிறுத்துடா.. “என கூறி, லட்டியால் அந்த முரட்டு வார்டன் அவனைக் கண்டபடி அடித்து நொறுக்கி ,
“ஏர்வாடி தர்காவின்” தனி கொட்டடியில் அடைக்கிறான்…!

30 வயதேயான “ஏகனுக்கு” ஏன் இந்த அவல நிலை…??
அறிய விரும்புவோர்க்கு ..இதோ அவன், “ஆட்டோ கிராப்…”

இருபது வயதிலேயே… கீதா என்னும் அழகிய, அன்பான, பண்பான தேவதையை.. அவன் பணக்கார தந்தை மணமுடித்தார்….
மனைவியின் காம சுகம் போதாதென்று…
ஏகனின் மைனர் விளையாட்டு, தொடர்ந்தது..
“பவ்யா” எனும் திருமணமான,
அவன் எக்ஸ் கல்லூரி தோழியுடன்… கள்ள காதல் வயப்பட்டு,
காமம் தலைக்கேறி, அவளுடன் கூட்டு சேர்ந்து கீதாவை…
“ஸ்லோ பாய்சன்” கொடுத்து.. கொலை செய்கிறான்!
பாவம் அந்த அப்ராணிப்பெண், இவன் மேல் கொண்ட அதீத அன்பால்,அழுது அரற்றி..நோய்வாய்ப்பட்டு
இவன் சூழ்ச்சி அறியாது…
பிரியா விடை பெறுகிறாள்..!

அவள் தகனக்கிரியை முடிந்து,
மகிழ்ச்சிக்கூத்தாடியவனுக்கு…
அன்று நடுநிசியில் ஒரு வாட்சாப் அழைப்பு வர, தூக்க கலக்கத்தில் போனில் பேச… மறுமுனையில், கீதாவின் குரல் ஸ்பஷ்ட்டமாய்
“ஏங்க.. சீக்கிரம் வாங்க! உங்களுக்காக நான் இங்கே ஆசை ஆசையாய்
காத்துக்கிட்டு இருக்கேன்!”என கொஞ்சும் குரலில் கேட்க,
பயந்து போய் துள்ளி எழுந்து, தூக்கம் கலைந்தான்!
ஒடோடிப்போய் அலமாரியில் இருந்த…
“சிம் காட்”நீக்கப்பட்ட, கீதாவின் செயலற்ற போனை தேடித்தேடிப் பார்க்க… அது கிடைக்கவே இல்லை…
‘நேற்றுதானே அதை அலமாரியில் பத்திரமாக வைத்து பூட்டினேன்… எப்படி காணாமல் போகும்?’ என யோசித்தபடி …
வீட்டில் எல்லா இடத்திலும் கிலிப்பிடிதவன் போல் வலைவீசி தேடிபார்க்க அது கிடைக்கவே இல்லை…இப்போது அவன் பயத்தால் வியர்த்துகொட்டி
வெளியேரிப்போகிறான்!

எப்படியோ மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு…
‘சரி பவ்யாதான் குரலை மாற்றி பேசி கிண்டல் செய்கிறாளோ?’ என்று எண்ணி..
அவளுக்கு போன் போட…
ரிங் போகவேயில்லை.!
மீண்டும் மீண்டும் முயற்சித்து விட்டு சோர்ந்துபோய்…
அவன் தூங்க முயற்சிக்க …
மீண்டும் மீண்டும் வாட்ஸ்அப் கால் நிற்காமல் வந்தவண்ணம் இருந்தது…!

கோபத்துடன் போனை “சுச் ஆஃப்” செய்தான்…
என்ன ஆச்சர்யம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அந்த போன் ஒலித்து கொண்டே இருக்க..,
அவன்… அதன் “சிம் கார்டை” அப்புறப்படுத்தி… தூர எறிகிறான்!
ஒலி ஒரு வழியாய் நின்று போக… சற்றே அச்சம் நீங்கி..
அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டு…
தூங்க செல்கிறான்!

அவன் சற்றே கண் அயர்ந்த நேரத்தில் …
மீண்டும் வாட்ஸ்அப் கால்…
இப்போது அவனுக்கு கிலி பிடித்து நடுநடுங்கி ஆத்திரத்தில் ,”செல்லை” தரையில் வீசி நொறுக்க..
ஒவ்வொரு துண்டமும், தனித்தனி செல்லாக மாறி ..
பற்பல வாட்ஸ்அப் கால்களை, ஒரு சேர ஒலிக்க…
அவன்
திகிலில் உறைந்து போய் ,
மூளை குழம்பி “இதோ வந்துட்டேன் கீதா! இதோ வந்துட்டேன் கீதா.!”.. என சதா சர்வகாலமும் உச்சரிக்க தொடங்குகிறான்!…
யாரிடம் எந்த “செல்போன்”
ஒலித்தாலும் தாவி பறித்து மிருகமாய் மாறி, வலுக்கட்டாயமாக பிடுங்கி உடைத்து எறிய தொடங்குகிறான்…!

அவன் தந்தை , அவனை அழைத்து போகாத மனநல மருத்துவமனைகளே இல்லை என கூறலாம்! ஆனால் எல்லா மருத்துவர்களும் இது “அப்சசிவ் நியூரோசிஸ்” எனப்படும் மனப்பிராந்தி நோய்… என கூறி எவ்ளோ மருந்து கொடுத்தும்
நோய் குணமாகாததால்…
இறுதியில் *ஏர்வாடியில் * தர்காவில், கனத்த மனதுடன், சேர்த்து விடுகிறார்!

அங்கு அவன் வாடி வதங்கி … சங்கிலியில் கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் நடுங்கிப்போய்,.. ஒடுங்கி போய், நிரந்தர மன நோயாளியாக மாறி அவதியுறுகிரான்…!

கீதா கோவிந்தம்..!
ஆம் !
கீதா ஓவியமாய் மாறி ….
அந்த தனிக்கொட்டடி சுவற்றில், அவனைப்பார்த்த வண்ணம், மோகத்துடன் சிரித்துகொண்டே நிற்கிறாள் …! இவனும் சளைக்காமல்… “இதோ வந்துட்டேன் கீதா!” எனும் பல்லவியை, உரக்க ஓய்வின்றி உச்சரித்து கொண்டே இருக்கிறான்…!!

-மரு உடலியங்கியல் பாலா

DR.K.BAlASUBRAMANIAN.MD
11,ARUNAGIRI STREET
WEST KAMAKOTTI NAGAR
VALASARAVAKAM
CHENNAI -600087.
CELL: 9382876968.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.