புலன்கள் வழி கற்றல் கற்பித்தல்
ஒரு வகுப்பில் கற்றல் கற்பித்தலில் ஞாபக சக்தி அடித்தளம் என்றால் புத்தாக்க சிந்தனை அதன் உச்சக்கட்டம். எந்த ஒரு பாடத்தைக் கற்பித்தாலும் ஆசிரியர்களுக்கு , மாணவர்களின் புத்தாக்க வளர்ச்சியை எப்படி மேம்படுத்துவது என்ற ஒரு சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு யோசனையையும் நேரடி வகுப்பில் செயல் படுத்துவதை விட இணைய வகுப்பில் செயல்படுத்தும் போது அதன் சிக்கல்கள் அதிகமாகின்றது.அத்தோடு நாம் மாணவர்களைத் தேர்விற்கும் தயாராக்க வேண்டி இருக்கின்றது.ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போதும், மாணவர்களை வகுப்பில் பாடப்புத்தகததை வாசிக்க வைத்து அதற்கு விளக்கம் கேட்போம். இன்னும் சிலர் கேள்விகள் மூலம் பாடத்தை நடத்துவோம் நாம் எந்த வகையில் பாடம் நடத்தினாலும், ஒரு மனித மூளை எவ்வாறு பாடம் கற்கின்றது என்பதை உணர்ந்து கொண்டால் நாம் பாடம் நடத்தும் விதத்தை அதற்கேற்ப மாற்றி அமைக்கலாம்
மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற முக்கியக் குறிக்கோளோடு பாடம் நடத்தினாலும், தேர்வில் பெற வேண்டிய மதிப்பெண்களுக்காக மனனம் செய்யும் பாடவிவரங்கள், அவர்களின் வாழ்க்கை முழுவதும் பயன்படும் விதமாகவும், அவர்களுக்குத் தேவைப் படும் போது அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நினிவு படுத்தி , மீட்டெடுத்துப் பயன்படுத்த முடிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
நம்மில் பலர், மாணவர்கள் நல்ல நினைவுத் திறனைக் கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் அவர்களின் நினைவுத் திறனையும், அதை மீட்டெடுத்தலையும் எவ்வாறு செய்வது என்று அவர்களுக்குக் கற்றுத் தருவதில்லை. மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே படித்த பாடத்தை மீட்டெடுத்துப் பயன்படுத்தும் திறனை எவ்வாறு மாணவர்களுக்குச் சொல்லித் தருவது? அதாவது நினைவு கூறுதலின் முக்கியப்பங்கு தான் நினைவு படுத்தியதை மீட்டெடுப்பது தான்.
பொதுவாக நாம் ஒரு விவரத்தைத் திரும்பத்திரும்ப படித்து, எழுதிப் பார்த்துப் பாட விவரங்களை, மனனம் செய்கின்றோம் .இந்த ஒரு முறையே நாம் விவரங்களை மனனம் செய்யும் ஒரு வழியாகப் பார்க்க முடிகின்றது. இப்படி செய்யும் போது நமது மூளை கண் என்ற ஒரு புலனை மட்டுமே பயன்படுத்துகின்றது. செவி வழி படிப்பதலோ, செய்து பார்த்துப் படிப்பதிலோ நாம் நேரம் செலவழிப்பதில்லை.. பாடம் நடத்தும் வேளையிலோ அல்லது. பாடத்தைப் படிக்கும்போதோ நாம் படிக்கும் விவரங்களைத் திரும்ப நமக்கே சொல்லிக் கொடுத்தல் அல்லது நமது நண்பர்கள், அல்லது மற்ற மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்போதோ நம்முடைய பேச்சுத்திறன், சொல்லாடல் மூலம் நமக்கு கற்றல் கற்பித்தல் நடைபெறுகின்றது. ஒரு சிலர் தங்களுக்குப் புகைப்பட நினைவுத்திறன் உள்ளதாகச் சொல்வோம் அதாவது தங்கள் கண்கள் பார்ப்பதை அப்படியே நினவில் இருக்கும். ஒரு சில விவரங்களை நாம் மீண்டும் மீண்டும் செய்து பார்க்கும் போது அவை நம் மனதில் நன்றாகப் பதியும்
காணுதல் கேட்டல் செய்தல் பேசுதல் ஆகிய அனைத்துப் புலன்களும் நம்முடைய கற்றல் கற்பித்தலுக்கு உதவி புரிகின்றன. புலன்கள் வழி உள் செல்லும் விவரம், குறுகிய கால நினைவாற்றலில் முதலில் பதிகின்றன/ குறுகிய கால நினைவு மண்டலத்தில் பதியும் விவரங்கள், மீண்டும் மீண்டும் மீட்டெடுக்கப்படும் போது, அவை நீண்ட நாள் நினைவுகளில் பதிந்து விடுகின்றது. ஒரு புலன் வழி பாட விவரங்கள் உள்ளே செல்வதை விட, நான்கு புலன்கள் வழியாகவும் மாணவர்கள் பாட விவரங்களைக் கிரகிக்கச் செய்ய வேண்டும்.அவ்வாறு புலன்கள் வழி செல்லும் விவரங்கள், ஏற்கனவே மாணவர்களுக்குத் தெரிந்த ஒன்றோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும் போது, மனனம் செய்த விவரம் மூளையின் நீண்டநாள் நினைவு மண்டலத்தில் பதிவாகி விடுகின்றது.
ஒரு பாடவிவரத்தை நான்கு புலன்களுக்கும் ஏற்றவாறு அமைப்பது?பாடவிவரங்களில் கொடுக்கப்படும் விதிகள், சொல்லாக்கம் , எடுத்துக் காட்டுகள் ஆகியவை நாம் படிக்கும், படிப்பிக்கும் விவரங்களில் மிக முக்கியமானவை.இவற்றை மாணவர்களிடையே எப்படி எடுத்துச் செல்வது என்பதைத் தேர்வு வினாக்களின் அடிப்படையில் நாம் இங்குக் காணலாம்.
நம்முடையத் தேர்வுகளில் வரும் ஒரு நெடுவினாவை எடுத்துக் கொண்டால் அதில் மூன்று குறு வினாவிற்கான பதில்களும் ஐந்து சிறு வினாக்களுக்கான பதில்களும் இருக்கக் கூடும். பாடவிவரத்தில் வரும் முக்கிய சொல்லாடல்கள், விதிகள், தேதிகள் என்று முக்கியமான விவரங்கள் வரும். எனவே ஒரு நெடுவினாவிற்கான விடையை நான்கு புலன்களையும் பயன்படுத்து வகுப்பில் கற்பிப்பதன் மூலம், மாணவர்களின் நினைவுத் திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று பார்ப்போம்.
பாடம் தயாரிக்கும் விதம்
நெடுவினாவிற்கான பதிலை முதல் காட்சிவில்லை கொண்டோ, உரை ஆவணமாகவோ நாம் கறுப்பு எழுத்துக்களில் காட்ட வேண்டும். உபதலைப்புக்கள் இருப்பின் அவற்றை வேறு வேறு வண்ணங்களில் காட்ட வேண்டும். உபதலைப்புக்கள் இல்லை என்றால் குறு வினாவின் உட்பொருளை உபதலைப்புக்களாக்கிக் காட்ட வேண்டும்.காட்டப்படும் விடையில் அடங்கி இருக்கும் குறு வினாக்களை insert comment என்று சென்று comment பகுதியில் உள்ளிட வேண்டும். பாடத்திற்கான காணொளி இருப்பின் அதையும் நாம் இங்கே insert Online media என்று பதிவு செய்யலாம்.(இதற்கான காணொளியை நாம் youtubeலிருந்து எடுக்கும் போது embed என்ற தெரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
பின் அதே விடையை நகலெடுத்து நம் ஆவணத்தில் ஒட்ட வேண்டும். நாம் comment பகுதியில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடையை நகலெடுத்து ஒட்டிய பகுதியில் வேறு வேறு வண்ணம் கொடுத்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
பின் மூன்றாவது முறையாக முதலில் பயன் படுத்திய நெடுவினாவின் விடையை நகலெடுத்து ஒட்டி
அதில் உள்ள முக்கியக் கூறுகள், சொல்லாடல் விதிகள் ஆகியவற்றை நாம் வேறுவேறு வண்ணங்கள் கொடுத்து அவற்றின் முக்கியத்துவத்தை insert comment என்று சென்று comment பகுதியில் உள்ளிட வேண்டும்.
இப்போது மாணவர்களுக்கு நாம் நடத்தும் பாடம் தயாராகி விட்டது..
பாடம் நடத்தும் விதம்
வகுப்பில் பாடநேரத்தை நாம் மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொள்ளலாம்.
பாடத்தின் முன்னோட்டமாக பத்து நிமிடங்கள்
மாணவர்களின் பங்கேற்பிற்காக 20 நிமிடங்கள்,
மாணவர்களின் சந்தேகத்திற்காக 10 நிமிடங்கள்
முன்னோட்டப் பகுதியில் முதல் நெடுவினா விடையை வாசித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
மாணவர்களின் பங்கேற்பு நேரத்தில், திரையில் குறு வினாவிற்கான விடையைக் காட்டியபடி வினாக்களைக் கேட்டு அவர்களிடமிருந்து பதிலைப் பெறலாம். நாம் ஏற்கனவே திரையில் காட்டுவதால் மாணவர்கள் பயமும் சிரமமும் இல்லாமல் பதில் அளிப்பார்கள். அடுத்ததாக மாணவர்களுக்குச் சொல்லாடல், விதிகள் ஆகிய பகுதிகளைக் காட்டி அவற்றில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். அந்த முக்கிய சொல்லாடல்களையும் விதிகளையும் அவர்களின் அலைபேசி வழி ஒலிப்பதிவு செய்து கொள்ளச்சொல்லலாம். Microsoft power point ல் insert audiலென்று கொடுத்து நம் குரலிலேயே அவர்களுக்கு விடையின் விவரங்களை வாசித்தும் காட்டலாம்.
நேரடி வகுப்புக்களில் கரும்பலகை வழி செய்யும் வேலையை விடக் கணினியில் இந்த வேலைகளை நாம் சிரமமின்றி எளிதாகச் செய்யலாம்.
நாம் பாடப்புத்தகத்தில் படிக்கும் விவரங்களை மாணவர்கள் பயன்படுத்தும் போது தான் அது மாணவர்களின் அறிவாகின்றது. தேர்வு என்பது மாணவர்களின் நினைவாற்றலையும் புரிந்து கொள் திறனையும் சோதிக்கும் வகையில் உள்ளன. தேர்வுகளில் முக்கியமாக மாணவர்களின் அறிவாற்றலும் புரிகைத் திறனும் சோதிக்கப்படுகின்றது. வகுப்பில் படித்த பாடங்களைத் தேர்வில் தான் மாணவர்கள் பயன் படுத்திப் பார்க்கின்றனர். மாணவர்களின் எண்ணம் செயல் திறன் நம்பிக்கை, மாறுபாடின்மை இவை அனைத்தும் ஒத்துப் போகும் போதே அவர்களால் தேர்வை நம்பிக்கையோடு எதிர் கொண்டு நல்ல மதிப்பெண்கள் வாங்க முடிகின்றது.
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3:
தொடர் 4
தொடர் 5
தொடர் 6:
தொடர் 7:
தொடர் 8:
தொடர் 9:
Leave a Reply