Subscribe

Thamizhbooks ad

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்



வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்

மாணவர்களின் சுய மதிப்பீடு, மாணவர்களை ஊக்கப்படுத்துதல் ஆகிய இரு செயல்பாடுகளும் இணைய வழி வகுப்பிலும் நேரடி வகுப்பிலும் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன ஆனால் இந்த இரு செயல்பாடுகளும் பேச்சளவில் நிற்காமல்,உண்மையான மாற்றத்தை மாணவர்களுக்கிடையே உருவாக்க வேண்டும் என்றால் மாணவர்களின் வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தரும் திறன்களை நாம் வகுப்பறையில் வழங்க வேண்டும். முன்பே சொன்னது போல் நேரடி வகுப்புக்களை விட இணைய வகுப்புக்கள் இதற்குச் சிறப்பான சூழலாக அமைகின்றது.

நேரடி வகுப்பில் மாணவர்களின் கற்கும் சூழல் பண்டைய குருகுல அமைப்பை ஒத்ததாக அமைகின்றது. அதாவது. கற்றல் கற்பித்தல் மட்டுமே ஒரு சூழ்நிலையை நேரடி வகுப்புக்கள் நமக்கு இதுவரை உருவாக்கித் தந்துள்ளன. நேரடி வகுப்புக்களில் மாணவர்களின் கவனச்சிதறலுக்கு காரணமாக இருக்கும் எல்லாவித நடவடிக்கைகளுக்கும் ஆசிரியர்களாலும் கல்வி நிர்வாகத்தினராலும் முட்டுக்கட்டை போட முடியும். ஆனால் ஒரு இணைய வகுப்பில் மாணவர்களுக்கு அத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் முன் அதிரடியாக ஆசிரியர்கள் இணைய வழிக் கல்விமுறையைக் கையாள வேண்டியதாயிற்று. வருங்காலத்தில் நாம் கல்விக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்தாலும் அதை கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களைச் சேர்ந்ததாகின்றது. அதாவது கல்விக் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் மாணவர்களையேச் சார்ந்ததாகிறது. அவர்கள் கவிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் அவர்களுக்குத் தண்டனை தான் தர முடியுமே தவிர ஒரு இணைய வகுப்பறையில் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கல்விக் கொள்கைகளைக் கடைப் பிடித்து வைக்க முடியாது.

இந்த நிலையில் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களைக் கல்விக் கொள்கைகளால் மட்டுமே நாம் மாணவர்களுக்குக் கற்றுத்தர முடியாது.

மாணவர்கள் எந்தப் பாடத்தை முக்கியத்துவம் எடுத்துப் படித்தாலும், எந்தத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தாலும் கல்வி நிலையத்தை விட்டு வெளியே வரும் போது, தலைமைப் பண்பு, அணியாகச் செயல்படும் பண்பு, சமூக உணர்வோடு செயல்படுத்தக் நன்முறையில் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளத் தெரிதல், புதியவற்றை எளிதில் வேகமாக கற்று செயல் படுத்தும் திறன் கணினித்திறன், நேர மேலாண்மை பிரச்சனைகளைச் சமாளித்தல் ஆகிய திறன்கள் அடிப்படையாகத் தேவையாக உள்ளன. இந்தத் திறமைகளை நாமும் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்குள் வரும் போதே நாம் எதிர்பார்க்கவும் செய்கின்றோம். ஆனால் இந்தத் திறன்கள் ஒரு பாடப் பொருண்மையாக்கச் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.. பாடப் பொருண்மைகளை மாணவர்கள் நினைவு கூர்ந்து மீட்டெடுத்துச் செய்வது என்ற திறன் நமது கல்வி நிலையங்களில் மிகச்சிறப்பாகச் செயல் படுத்தப்படுகின்றது. தேர்வுகளில் வெற்றி பெற இந்த ஒரு திறனே போதுமனதாக் இருக்கின்ற சூழலில் மாணவர்களின் முழு வளர்ச்சியைப் பற்றிய சிந்தனை ஆசிரியர்களாகிய நமக்கு மிகவும் முக்கியமானது.



மாணவர்களைத் தேர்வுக்கு மட்டும் தயார் செய்யாமல் அவர்களின் மன வளர்ச்சி சமூக அக்கறை தொழில் தர்மம் ஆகியவற்றையும் நாம் கற்றுக் கொடுக்க வேண்டும், மேலே கூறிய நேரம் தவறாமை, தலைமைப்பண்பு ஒற்றுமை உணர்ச்சி பிரச்சனைகளை எதிர் கொள்ளுதல் , சுயமாக முடிவு எடுத்தல் ஒரு நல்ல வேலை வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ள அடிப்படைத் தேவைகளாக நாம் எடுத்துக் கொண்டால், எதிர்காலத்தின் வேலை வாய்ப்புக்களுக்கு இன்னும் சில கூடுதலான திறன்கள் நிறுவனங்களால் எதிர்பார்க்கப் படுகின்றன. இன்றைய கல்விச் சூழலில் கற்று வெளிவரும் மாணவர்கள் ஒரு தொழிற்விற்பனர்களாக, நல்ல அரசு அதிகாரிகளாக அல்லது நல்ல பெற்றோர்களாக வரவேண்டுமேயானால் அவர்களுக்கு ஐந்து முக்கியத் திறன்கள் தேவையாய் உள்ளது

  • மொழி ஆளுமை

  • கொடுக்கப்படும் காரியத்தைக் குறைந்த நேரத்தில் மிகச் சிறப்பாகச் செய்தல்

  • கணினி மொழி அறிவு

  • வளங்களின் மூல தனம்

  • பணி முன் அனுபவம்

நாளைய வேலைவாய்ப்பு என்னும் போது இந்த ஐந்து திறன்களும் சமநிலையில் மிக முக்கியமானவை.

மொழி ஆளுமை: எந்த ஒரு பாடப் பொருண்மையை எடுத்தாலும் அதைச் சிறப்பாக வெளிக் கொண்டு வந்து அடுத்தவரிகளுக்கு எடுத்துச்செல்ல மொழி ஆளுமைத் தேவைப் படுகின்றது. மொழி ஆளுமையில் முதல் படியாக மாணவர்களுக்குத் தாய் மொழி அறிவும் அவர்களுடைய பிராந்திய மொழி அறிவும் மிக அடிப்படையாகத் தேவைப் படுகின்றது. நாம் பல காலமாக ஆங்கில மொழி அறிவு அதிகரித்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று எண்ணி அதன் படி செயல் பட்டு வந்தோம். ஆனால் இன்றைய உண்மை நிலை என்ன?

பலநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டிற்குள் உள் நுழைந்து இருக்கின்றன. அவர்களின் பொருட்களைச் சந்தைப் படுத்தவும் அவர்களின் பயனாளிகளை அதிகப்படுத்தவும் பிராந்திய மொழியில் கற்றுத் தேரிந்தவர்கள் தேவைப் படுகின்றனர். அது மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் அவர்களின் நிறுவனங்களைப் பற்றி பிராந்திய மொழிகளில் நிறுவனங்களில் நடக்கும் நிகழ்வுகளை எடுத்துச் செல்ல அவர்களுக்கு ஆட்கள் தேவை, இணைய ஊடகங்கள் வழி நிறுவனத்தின் நடவடிக்கைகளை, நிறுவனத்தின் நிகழ்வுகளை, நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை பொது மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. எடுத்துக் காட்டாக, ஒரு பொருளை நாம் வாங்கினால் அதை எப்படிப் பயன்படுத்துவது என்ற விவரங்கள் நமக்கு ஆங்கிலத்தில் கிடைக்கும். பல உலகளாவிய நிறுவனங்கள் அவர்களது அத்தகைய விவரங்களைத் தாய் மொழியிலும், கொடுக்க விரும்புவர். பொருட்களை ஊடகங்கள் வழி சந்தைப் படுத்த ஒரு நிறுவனத்திற்குத் தாய் மொழிப் புலமையும் பிராந்திய மொழிப்புலமையும் தேவையாய் உள்ளது.



இதை அடுத்து அந்நியநாட்டு நிறுவனங்களுக்கு இணையாக அல்லது போட்டியாக இயங்கும் தொழிற் விற்ப்பனர்கள் எதிர் காலத்தில் தேவைப் படுகின்றனர். தாய் மொழி அறிவு, பிராந்திய மொழிப்புலமை இருந்தால் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டிப் போட்டு செயல் பட முடியும். தாய் மொழிப்புலமை கலாச்சார ஆளுமை நம்நாட்டுத் தொழில் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களிலிருந்து வேறு படுத்திக் காட்டும்.

இதை விட முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பாடப்புத்தகத்தில் இருக்கும் பொருண்மைகள் அடிப்படையாக மாறவில்லை. ஆனால் தற்போது அறிவியல் பொருளாதாரம் வரலாறு சூழ்நிலையியல் கணக்கியல் தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் புதுப் புது நிகழ்வுகள், புதுப் புது பொருட்கள் உருவாகிக் கொண்டே உள்ளன. அவற்றைச் சரிவர மக்களுக்கு எடுத்துச் செல்லும் வேலை யை செவ்வனே செய்யப் பிராந்திய மொழிப்புலமையும் தாய்மொழிப்புலமையும் தேவைப்படுகின்றது. இந்தப் புதிய வரவுகளை மாற்றங்களை எளிதாக விரைவாகக் குறுகிய காலகட்டத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. எனவே இந்தப் புது விவரங்களைத் தாய் மொழியில் கற்கவும் கற்பிக்கவும் தேவையான ஆதார வளங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வோரு நிறுவனமும் உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் 24 மணிநேரமும் ஏதாவது வேலை செய்து கொண்டு இருக்கின்றார். ஓய்வு நேரமின்றி கணினி முன் அமர்ந்து, மின்னஞ்சல்கள் செய்வது பல கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளுதல், பின் அந்த உரையாடல்களின் சுருக்கத்தைச் சொல்லுதல் ஆகியவை இப்போது ஆங்கிலத்திலேயே நடந்தாலும், தாய் மொழியில் அதற்கான ஆவணங்கள் தயாரித்து ஆவணப்படுத்துதல் ஒரு முக்கியத் திறனாக அடையாளப்படுத்தப்படுகின்றது. கணினி பயன் படுத்தும் போது பல சமயங்களில் கணினியுடன் உரையாடி அதன் தரவுகளை ஆராய்ந்து அதன் படி நிறுவனத்தின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கத் தாய்மொழியில் தரவுகளைப் பதிவு செய்பவர்களும், அந்தத் தரவுகளைப் படித்து, தரவுகளின் படி முடிவுகளை எடுக்கக் கூடிய திறன் வாய்ந்தவர்களையும் இன்றைய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

இன்று இணையத்திலும் ஊடகத்திலும் பல செய்திகள் வெளிவருகின்றன. அந்த செய்திகளின் உண்மைகளை ஆராய்ந்து, பொய்ச்செய்திகளையும், போலிச் செய்திகளையும் நையாண்டிகளையும் அடையாளப்படுத்தி ஒரு நிறுவனத்திற்குத் தேவையான உண்மையான நிலவரங்களை மட்டும் கொடுக்கக் கூடிய ஆராய்ச்சியாளர்களின் தேவை அதிகமாக உள்ளது.

போட்டி நிறுவனக் கணினிகளின் (algorithms) கணக்கீடுகளை முறியடிக்கும் வகையிலானத் தரவுகளை உருவாக்கவும், கொடுக்கப்பட்ட விவரங்களின் முக்கியத்துவத்தை சுருக்கமாகச் சொல்லவும் ஒரு வருக்கு மொழி ஆளுமைத் தேவைப்படுகின்றது.

இன்று தொழில்நுட்பத்தின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கின்ற காலகட்டத்தில் உலகின் மிக முக்கிய ஏழு தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாண்டி அவர்கள் கொடுக்கும் சேவையைத் தாண்டி பல நிறுவனங்களைத் தாய் மொழியிலும் பிராந்திய மொழியிலும் உருவாக்க மாணவர்கள் எதிர்கால தொழில் விற்பன்னர்களாக வெளிவர வேண்டும். இணைய வகுப்பின் உதவிக் கொண்டு இந்த புதிய சவால்களைச் சமாளிக்கும் திறனை மாணவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும்,

கேட்டல் பேசுதல் எழுதல் வாசித்தல் தாண்டிய மொழிக்கல்வியை எல்லாப் பாடப்பொருண்மைகளிலும் புகுத்த இணைய வகுப்புக்கள் நல்ல சாதனமாக அமைகின்றது.



தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

 



தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்



தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்



தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்



தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்




தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்



தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்



தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்



தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்

 



தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்



தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்



தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்



Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......