எண்ணிமக் காலடிகள்:
கடந்த ஜனவரி 6ம் தேதி அமெரிக்கப் பாராளுமன்றத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் தாக்கிய செய்தி நம் எல்லோரையும் வந்தடைந்தது. அந்தக் கிளர்ச்சியில் பங்கு கொண்டவர்கள் ஏறக்குறைய 260 பேரை இதுவரைக் கைது செய்து உள்ளனர். அவர்களின் குற்றத்திற்கான சாட்சிகள் பெரும்பாலும் அவர்களுடைய சமூக ஊடகங்களிருந்தும் அலைபேசிகளிலிருந்தும் தான் எடுக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் எடுக்கப்பட்டும் இந்த சாட்சியங்கள் எண்ணிமக் காலடி என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். நாம் எவ்வளவிற்கு எவ்வளவி இணையத்தில் நம்முடைய கவனச்சிதறல்களைக் பற்றி கவனமாக இருக்கின்றோமோ அவ்வளவிற்கு அவ்வளவு நம்முடைய எண்ணிமக் காலடிகளைப் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும்,
ஒரு சிறு குழந்தையிடம் உணவினைக் கொடுத்தால் அது கையில் ஏந்தி செல்லும் போது உணவுத் துகள்கள் கீழே விழுந்து, அந்தக் குழந்தை சென்ற வழியைக் காட்டும். அதே போலத்தான் நம்முடைய எண்ணிமக் காலடிகளும். நாம் நம்முடிஅய திறன் பேசியின் வழியாகவோ அல்லது கணினியின் வழியாக நாம் செய்யும் ஒவ்வோரு செயல்களும் நம்முடைய எண்ணிமக் காலடிகள் ஆகும்.
இங்கு எத்தனை பேர் குகூள் க்ரோம் இணைய உலாவியைப் பயன் படுத்துகின்றீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நாம் அந்த உலாவியைப் பயன்படுத்தினால். அண்ஐயில் அதில் நாம் நமது ஜிமெயில் கணக்கில் உட்புக வேண்டுமென அந்த உலாவி நம்மைக் கேட்டுக் கொண்டே இருக்கும், இரண்டாவதாக நமது திறன்பேசியின் உலாவியையும் கணினியில் பார்க்கும் உலாவியையும் (synchronize) ஒத்துப் போக வைக்க வேண்டுமா என்று நாம் பயன் படுத்தும் ஒவ்வோரு உலாவியும் கேட்டுக் கொண்டே இருக்கும். நம்முடைய வசதி கருதி நாம் அப்படி இரு உலாவிகளையும் ஒத்திசைக்கும் படி செய்தால் நாம் இரு உலாவிகளிலும் செய்யும் ஒவ்வோரு செயல்களும் உலாவிகளால் கண்காணிக்கப்படுகின்றது என்பது பொருள்.அதாவது நாம் வீட்டின் உள்ளே நமது அறையின் தனிமையில் , கணினியில் செய்யும் வேலைகளாகட்டும், அல்லது திறன்பேசிகளில் செய்யும் செயல்கள் ஆகட்டும் அனைத்துமே கண்காணிக்கப்படுகின்றன, சேமித்தும் வைக்கப்படுகின்றன. இவ்வாறு உலாவிகள் நம்மைப் பற்றிச் சேகரிக்கும் ஒவ்வோரு விஷமும் நம்முடைய எண்ணிமக் காலடிகள் ஆகும்.
அமெசான் ப்ரைம் நெட்விளிக்ஸ், யூடியூப் வழி காணொளிகளைப் பார்ப்பவர்களும் இதைக் கவனித்து இருக்கலாம். நாமொரு கணினியில் பார்த்துக் கொண்டு இருந்ததை அடுத்த கணினியில் பார்க்கும் போது நம் கணக்குகளைச் சரி பார்க்கச் சொல்லி நமக்குச் செய்தி வரும். சந்தா முறையில் நாம் பயன்படுத்தும் ஆபீஸ் 365 அந்த வகையைச் சார்ந்ததே. நாம் இணையத்தில் இணைந்து வேலை செய்யாவிட்டால் ஆபீஸ் 365 வேலை செய்யாது.நாம் என்ன என்ன நம் கணினியில் செய்கின்றோமோ அது அப்படியே ஒரு வினாடி கூடத் தவறாமல், ஒரு அட்சரம் கூடத் தப்பால் பதிவாகி விடும்.
எண்ணிமக் காலடிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
சாத்வீக எண்ணிமக்காலடிகள், இயங்கு எண்ணிமக் காலடிகள்
நம்முடைய இணைய முகவரி, நமது சேமிப்பக முகவரி நமது இணைய இணைப்புக்கள், கணினியின் எண், திறன் பேசியின் எண் (model) உருப்படிவ எண் (serial) தொடர் எண் IMIE எண்கள் ஆகியவை சாத்வீக எண்ணிமக் காலடிகள் என்று சொல்லப்படும்.
நான் கவனத்ஹ்டுடன் இணையத்தில் தேடும் தேடல் சொற்கள், தரமிறக்கும் படங்கள் பாடல்கள், சமூக வலைதளஙக்ளில் இடும் பதிவுகள். நாம் அனுப்பும் மின்னஞ்சல்கள், நாம் அனுப்பும் கோப்புக்கள் ஆகிய அனைத்தும் இயங்கு எண்ணிமக் காலடிகள் என்று ம் பிரிக்கலாம். நமது செயல் பாடுகள் அனைத்தும் எண்களாக அடையாளப்படுத்தப்பட்டு விடுவதால் நம் எண்ணிமக் காலடிகளைக் கணினி நிறுவனங்களாலும் மற்ற வல்லுநர்களாலும் எளிதில் பின்பற்றி நம் செயல்களைக் கண்காணிக்கவோ அல்லது நமக்குத் தெரியாமல் நம்மை இணையத்தில் பின் பற்றுவதோ சாத்தியமாகின்றது.
இணைய உலாவிகளாலும் கணினி நிறுவனங்களாலும் நாம் கண்காணிக்கப்படுகின்றோம் என்பதும் நமது இணைய வரலாறு அழிக்க முடியாத ஒன்று என்ற உணர்வும் நமக்கு நம்முடையக் கணினிப் பயன்பாடு, இணையப் பயன்பாடு சமூகத்தள பயன் பாடு பற்றிய ஒரு பயத்தை உருவாக்கினாலும் நாம் நம்முடைய பயன்பாடு எத்தகையாக இருக்க வேண்டும் என்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது முக்கியமான விவரங்கள், பாதுகாப்பாய் வைக்க வேண்டிய விவரங்கள் ஆகியவற்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
நமது எந்த ஒரு கடவுச்சொல்லையும் யாருக்கும் பகிர்ந்து அளிக்கக் கூடாது
நம்முடையக் கடவுச் சொற்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்
நமது அலைபேசியையும் கணினியும் மற்றவர்கள் பயன் படுத்தினால் அவர்கள் விருந்தினராக உள்ளே சென்று பயன்படுத்தும் படி வைக்க வேண்டும்.
குழந்தைகள் எந்தெந்த தளங்களுக்குச் செல்லலாம் எது எது அனுமதி இல்லை என்பதைக் கணினியிலும் அலைபேசியிலும் போட்டு விடுவது நல்லது.
சமூக வலைத்தளங்களில் நாம் இடும் பதிவுகளும் பின்னூட்டங்களும் நம்மை எப்படிக் காட்டப் போகின்றன என்ற ஒரு தெளிவுடன் பதிவுகளை இட வேண்டும்.
கோபமாகவோ ஆத்திரமாகவோ பேசி மின்னஞ்சல்கள் அனுப்புவதும் பதிவிடுவதும் தவறானது.
நம்மைத் தரக்குறைவாகக் காட்டக் கூடிய எந்த ஒரு புகைப்படங்களையோ, காணொலிகளையோ பதிவேற்றம் செய்தல் கூடாது.
இணையம் என்பது இனி நம் வாழ்வில் இன்றி அமையாதது. ஆனால் அதைப் பயன்படுத்தும் முறையை நாம் இணையத்தை, கணினியைப் பயன் படுத்தும் நேரத்தை நம்முடைய சுயக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும்.
இணைய வகுப்பு நடக்கும் போது எண்ணிமக் காலடிகளைப் பற்றிய விழிப்புணர்வையும், நமது காலடிகள் நமக்கு ஒரு நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துத் தருவதாகவும், வேலைவாய்ப்புக்களைப் பெருக்கித் தரும் வகையிலும் அமைய வேண்டும் என்பதை நாம் மாணவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.
எண்ணிமக் காலடிகள் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே சுயக் கட்டுப்பாட்டையும், சுய மதிப்பீட்டையும் கண்டிப்பாக வளர்க்கும்.
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3:
தொடர் 4
தொடர் 5
தொடர் 6:
தொடர் 7:
தொடர் 8:
தொடர் 9:
தொடர் 10:
தொடர் 11:
தொடர் 12:
தொடர் 13:
தொடர் 14:
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]