இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்

இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் மைக்ரோசாப்ட் ஆப்பிள், கூகுள், அமேசான், முகநூல், டிவிட்டர், அடோபி என்று ஒரு பக்கம் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கம் கோலோச்சிக் கொண்டு இருந்தாலும் அவர்களுக்கு இணையாக கணினி பயனர்களின் உதவிக்கு வந்து இருக்கும் ஒரு இயக்கம் திறவூற்றுத் தொழில்நுட்பத்துறை. மேலே கூறிய நிறுவனங்கள் தங்களுடைய தொழில் நுட்பத்தை வாங்கும் நுகர்வோர்களைப் பயனாளர்களாக்கி அவர்களுடையத் தரவுகளைப் பலவகையில் பயன்படுத்தி இலாபம் காணும் காலகட்டத்தில் மக்களின் தேவைகளை மட்டுமே மனதில் கொண்டும் இலாபம் காணும் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொழில்நுட்பங்களை உருவாக்கி செயல்படும் ஒரு தன்னார்வ இயக்கம் தான் திறவூற்றுத் தொழில்நுட்பம்.

இணைய வளங்கள் பற்றிக் கலந்தாலோசிக்கும் போது ஒவ்வொருவரும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான இடத்தை திறவூற்றுத் தொழில்நுட்பம் பெற்றுள்ளது. திறவூற்று என்பது open source என்ற ஆங்கிலச்சொல்லின் மொழியாக்கம் ஆகும். அதாவது. விலைகொடுத்து வாங்கும் மென்பொருட்களின் மூலக்கூறுகள் அந்த நிறுவனத்தின் காப்புரிமையாக இருக்கும் போது, நிறுவனங்களின் ஏகாதிபத்தியம் அதிகமாகி விட்ட ஒரு சூழ்நிலையில் 1999களில் இந்த திறவூற்று இயக்கம் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இந்த கலிபோர்னியா மாநிலமே சிலிகான் பள்ளத்தாக்கு என்று செல்லமாக அழைக்கப்படும் சான்பிரான்ஸிஸ்கோ நகரையும் அதைச்சுற்றியுள்ள இடங்களையும் கொண்டுள்ளது. சிலிகான் என்ற கனிம வளத்தைக் கொண்டு கணினி தொழில்நுட்பத்திற்குத் தேவையான குறைக்கடத்திகளையும், மின்சுற்றுத் தகடுகளையும் உருவாக்கும் ஒரு முக்கிய இடமாக இருந்ததாலும், அங்கு பல புதிய கண்டுபிடிப்புக்கள் உருவானதாலும் சிலிகான் பள்ளத்தாக்கு என்று பெயர் பெற்றது. தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறைந்த அந்த நகரில் இந்த திறவூற்று இயக்கம் பிறந்ததில் வியப்பேதும் இல்லை. இன்றைய பயன்பாட்டில் இருக்கும் ஒவ்வோரு தொழில்நுட்ப நிறுவனமும் அந்த நகரில் தான் உள்ளன. அவை தவிர நுண்ணியத் தொழில்நுட்பம் சார்ந்த பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கே தொடங்கப்பட்டன.பல நிரலர்களும் தொழிற்விற்பனர்களும் இருக்கும் ஒரு சூழலில், புதுப் புது மென்பொருட்களை உருவாக்கவும் , பல நிரலர்களை உருவாக்கவும் மென்பொருட்களின் மூல நிரலர்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் அவசியம் உணரப்பட்டது. மூலநிரல்கள் காப்புரிமைச் சட்டத்திற்குள் உட்பட்டுப் பகிர வேண்டியதின் அவசியத்தை திறவூற்று இயக்கத்தினர் உணர்ந்தனர். அதனால் 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாகப் பகிரக் கூடிய காப்புரிமைகளாக ஒரு பட்டிலை வெளியிட்டனர்.முதலில் கணினி மூல நிரல்களைப் பொதுவுடைமையாக்கத் தோன்றிய முயற்சி 2009ம் ஆண்டு Creative Commons உரிமம் முறை எல்லாவித படைப்புக்களுக்கும் கொண்டு வரப்பட்டது.இணைய வளங்களில் திறவூற்று இயக்கத்தின் மிக முக்கியமான பங்கு காப்புரிமை வகைகளாகும்.Creative Commons என்பது ஒரு படைப்பாளி தனது படைப்பை மற்றவர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு பொதுவுடைமை உரிமம் வழங்கும் முறை

Creative Commons ஆறு வகையான காப்புரிமைகளைப் பட்டியலிடுகின்றன. அவையாவன,

  1. CC BY – CC என்றால் Creative Commons எனவும் Bஎன்றால் படைப்பாளியின் பெயரும் விவரமும் கொடுக்கப்பட வேண்டும். என்று பொருளாகும். படைப்பாளியின் பெயரையும் விவரத்தையும் குறிப்பிட்டு அவரை மேற்கோள் காட்டிப் பயன் படுத்தப்படும் எந்த விதமான படைப்புக்களும் எல்லா வகையிலும் வளங்களை உபயோகிப்பவரால் பயன் படுத்த முடியும். இந்த உரிமங்கள் வழி பெறப்படும் வளங்கள் இலாப நோக்கத்திற்காகக் கூட பயன்படுத்தலாம்.
  2. CC BY-SA CC என்றால் Creative Commonsஎன்றும் Bஎன்றால் படைப்பாளியின் பெயரும் விவரமும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் SA என்பது எல்லாவிதத்திலும் பகிர்தல் உரிமையையும் தருகின்றது என்று பொருளாகும் இந்த உரிமங்களைக் கொண்ட படைப்புக்களைப் பயன்படுத்தும் பயனாளிகள் அதை உரிய படைப்பாளியின் பெயரையும் விவரத்தையும் குறிப்பிட்டு அவரை மேற்கோள்காட்டி எந்த விதத்திற்காக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அவற்றை மாற்றலாம் மெருகூட்டலாம் இலாப நோக்கத்திற்கும் கூட பயன்படுத்தலாம்.இவ்வாறு உருவாக்கப்படும் புதிய படைப்பு இதே உரிமத்தைக் கொண்டு இருக்க வேண்டும்
  3. CC BY-ND இங்கு NDஎன்பது படைப்பை எந்த விதத்திலும் மாற்ற முடியாதது என்று குறிக்கின்றது இந்த உரிமங்களைக் கொண்ட படைப்புக்களைப் பயன்படுத்தும் பயனாளிகள் அதை உரிய படைப்பாளியின் பெயரையும் விவரத்தையும் குறிப்பிட்டு அவரை மேற்கோள்காட்டி எந்த விதத்திற்காக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், இலாபத்திற்காகக்கூடப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை தன் சொந்தப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தலாமே தவிர மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது.அவற்றை மாற்றவோ மெருகூட்டவோக் கூடாது.
  4. CC BY-NC இங்கு NC என்பது வியாபாரத்திற்கானது அல்ல என்பதைக் குறிக்கின்றது. இந்த உரிமங்களைக் கொண்ட படைப்புக்களைப் பயன்படுத்தும் பயனாளிகள் அதை உரிய படைப்பாளியின் பெயரையும் விவரத்தையும் குறிப்பிட்டு அவரை மேற்கோள்காட்டி எந்த விதத்திற்காக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அவற்றை மாற்றலாம் மெருகூட்டலாம். புதிய படைப்பை வைத்து பணம் சம்பாதிக்க இயலாது. இப்படி உருவான புதிய படைப்பை அதே மாதிரியான உரிமத்தில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
  5. CC BY-NC-SA இந்த உரிமங்களைக் கொண்ட படைப்புக்களைப் பயன்படுத்தும் பயனாளிகள் அதை உரிய படைப்பாளியின் பெயரையும் விவரத்தையும் குறிப்பிட்டு அவரை மேற்கோள்காட்டி எந்த விதத்திற்காக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அவற்றை மாற்றலாம் மெருகூட்டலாம். புதிய படைப்பை வைத்து பணம் சம்பாதிக்க இயலாது. இப்படி உருவான புதிய படைப்பை அதே மாதிரியான உரிமத்தில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் உண்டு
  6. CC BY-NC-ND – ஒருவரின் படைப்பை நாம் பயன்படுத்தலாம்.உ ரிய படைப்பாளியின் பெயரையும் விவரத்தையும் குறிப்பிட்டு அவரை மேற்கோள்காட்ட வேண்டிய அவசியம் ஆனால்மொரு படைப்பைப் பயன்படுத்தி இன்னொரு படைப்பை உருவாக்குவதோ நாம் பயன்படுத்தும் படைப்பை மெருகூட்டுவதோ கூடாது.

நாம் இணையத்தில் வளங்களைத் தேடும் போது இந்தCreative Commons உரிமங்கள் உள்ள விவரத்தைப் பார்த்து அதை எடுத்துப் பயன் படுத்தலாம்.Creative Commonsஎன்பது பொதுவுடைமை அதனால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இணைய வளங்களைப் பயன்படுத்தலாம் என்ற தவறான கருத்தைப் போக்கவே இங்கு Creative Commonsபற்றி மேலோட்டமாகக் கூறியுள்ளேன். Creative Commonsலிருந்து நாம் ஒரு வளத்தைப் பயன்படுத்தும் போது கண்டிப்பாகப் படைப்பாளிகளுக்கு உரிய மரியாதையை நாம் செலுத்திப் படைப்பாளியை மேற்கோள் காட்டிப் பயன்படுத்த வேண்டும்.அனைத்துத் தேடுபொறிகளும் Creative Commons வகையிலான வளங்களை அடையாளப்படுத்த நமக்கு உதவுகின்றன. Microsoft 365 மென்பொருட்களைப் பயன்படுத்தும் போது நாம் படங்களைத் தேடினால் Creative Commons உரிமம் உள்ள படங்களை மட்டுமே நமக்குக் காட்டும் அது மட்டுமில்லாமல் அவருக்குரிய மேற்கோளைக் கணினியே உள்ளீடு செய்யும். Microsoft bing தேடுபொறியில் சென்று நாம் படங்களைத் தேடும் போது திரையின் இடது பக்கம் மேற்புறம் ஒரு வடிகட்டியின் படம் இருக்கும் அதை அழுத்தினால் உரிமம் என்ற பட்டியலின் கீழ் நமக்குப்படங்கள் கிடைக்கும் உரிமங்களின் வரிசைப்படியே படங்கள் இருக்கும்.Google தேடு பொறியிலும் இவ்வாறே. படங்களைத் தேடும் போது, தெடுபொறி கட்டத்தின் கீழே settings , டூல்ஸ் என்று உள்ள தெரிவுகளில் tools என்னும் சொல்லை அழுத்தினால்,Creative Commons ,Commercial & other licensesஎன்று இரு தெரிவுகள் நமக்குக் கிடைக்கும். பல நேரங்களில் நாம் தேடும் விதமான படங்கள் நமக்குக் Creative Commons உரிமத்தின் கீழ் கிடைக்காமல் போகலாம். அவ்வாறான நிலையில் நாமே படங்களை உருவாக்குவதோ, அல்லது படங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதும் சிறந்ததே தவிரப் படங்களை ஒருவரின் அனுமதியின்றிப் பயன் படுத்தக் கூடாது.

unsplash.com, pixabay.com ஆகிய இரு தளங்களிலும் நாம் நமக்குத் தேவையான படங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.www.gutenberg.org பல மின்னூல்களை இலவசமாகத் தருகின்றது.

உரைகள் என்று வரும் போது ஆங்கில மொழிக்கு EBISCO, Library of Congress போன்ற தரவுத்தளங்களைக் கல்வி நிலையங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தரவு தளங்கள் சாதாரண தேடுபொறியில் கண்டெடுக்கப்படும் விஷயங்களை நல்ல ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை. நம் தமிழ் மொழிக்குத் தமிழ் இணையக் கல்விக் கழகம், மதுரைத் திட்டம் noolagam.com,வலைத் தமிழ் ஆகிய தளங்கள் பல செய்திகளை நமக்குத் தருகின்றன. ஆங்கிலத்தில் கிடைக்கும் தரவுகளோடு ஒப்பிடும்போது தமிழுக்கான தரவுகள் குறைவு என்றாலும் நாம் நமக்குக் கிடைக்கக் கூடிய வளங்களைச் சரியாகப் பயன்படுத்தவும் புதிய வளங்களைத் தயாரிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். நாம் விக்கிப்பீடியாவில் பல செய்திகளைப் பெறுகின்றோம். அங்கே இருந்து படங்களையும் எடுத்துப் பயன்படுத்துகின்றோம். அவ்வாறு நாம் பெறும் போது படங்களுக்கான உரிமம் என்ன என்பதைத் தெளிவாகப் படித்து அதன் படி படங்களை மேற்கோள் காட்டி பயன்படுத்த வேண்டும்.

தமிழ் மொழிக்கு விக்கிப்பீடியா ஒரு சிறந்த ஆதார வளமாக இருந்த போதிலும் அதை நம் ஆராய்ச்சிக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக மட்டுமேப் பயன்படுத்த வேண்டும். விக்கிப்பீடியா கட்டுரைகளின் அடியில் உள்ள துணை நூல் பட்டியல்களை நாம் தேடி சென்று பார்த்தோமானால் நமக்கு ஆழமான கருத்துக்கள் கிடைக்கக் கூடும்.

இணைய வளங்களைச் செம்மைப்படுத்தி அவற்றின் பயன்பாட்டைப் பலருக்கும் பயன்படும் வகையில் காப்புரிமைகளை வகைப்படுத்தி படைப்பாளிகளுக்கும், பயனாளிகளுக்கும் ஒரு நல்லுறவைத் தேடித் தந்த பெருமை திறவூற்று இயக்கத்தைச் சாரும் என்று சொன்னால் மிகையாகாது.

இணைய வளங்களைப் பற்றி இன்னும் தொடர்வோம்

 தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்
தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்