வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்

ஒருவரின் கருத்தை நாம் அப்படியே எழுதுவதும், ஒரு சில சொற்களை மாற்றி எழுதுவதும் , சொல்லும் கருத்தை மேற்கோள் குறிக்குள் இடாமல் எழுதுவதும் கருத்துத் திரட்டு என்று கொள்ளப்படும்.இணைய வசதி மிக எளிதாகக் கிடைக்கின்ற இக் காலத்தில் கருத்துத் திருட்டு என்பது மிக எளிதாக நடந்து விடக் கூடிய ஒன்று. இணையத் தொழில்நுட்பம் வருவதற்கு முன்னால் நாம் நமக்குத் தேவையான கருத்தை நூலகத்திலோ அல்லது அந்தந்தத் துறை விற்பனர்களிடமோ நாம் நேர்காணல் செய்து விவரத்தைப் பெற்றுவந்தோம். ஆனால் இணையம் வந்து விட்ட நிலையில் நாம் உடனடியாக எல்லாவற்றையும் தேடுபொறிகளில் தேடுகின்றோம். நமக்குக் கிடைக்கும் பதில்கள் உண்மையானவையா சரியானவையா என்று நாம் ஆராய்ந்து கண்டறிந்து அதன் பின் நமக்குத் தேவையானதை, நமது சொற்களில் நாம் கூற வேண்டும். இணையத்தில் கிடைத்த ஒரு விஷயத்தை அப்படியே நகல் எடுத்து ஒட்டுவதோ, அல்லது மேற்கோள் காட்டாமல் ஒருவரின் கருத்தை அப்படியேப் போடுவதோ கருத்துத் திருட்டு என்றேக் கொள்ளப்படும்.

முக்கியமாக கற்றல் கற்பித்தலில் நாம் மாணவர்களுக்குப் பயன்படுத்தும் வளங்கள் எங்கிருந்து வந்தன என்று குறிப்பிட்டுக் கூறும் போது , மாணவர்களும் அதே பயிற்சியை தங்கள் ஆராய்ச்சிகளிலும் மற்ற ஆவணங்களிலும் க பயன்படுத்த ஆரம்பிப்பர். அவ்வாறு தங்கள் கட்டுரைகளில் சரியான மேற்கோள் காட்டி வளங்களைப் பயன்படுத்தும் போது கற்றல் கற்பித்தலில் அவர்களின் தன்னபிக்கைப் பெருகுவதோடு, அவர்களது கட்டுரைகள் அவர்களின் துறைசார் தலைமையை சிறப்பாக எடுத்துரைக்கும். நமது கட்டுரைகளின் வளங்கள் மாணவர்களின் கல்விக் கேள்விகளுக்கு உதவி புரியும் மற்ற பல ஆதார வளங்களாக அவர்கள் பயன் படுத்திக் கொள்ள உதவும்

ஒவ்வோரு பொருண்மைக்கும் ஒரு ஆசிரியர் பயன்படுத்தும் வளங்களை மேற்கோள் காட்டி துணைப்பட்டியல் இட வேண்டும். எந்தெந்த துறைக்கு எப்படி மேற்கோள் காட்ட வேண்டும் என்பதை Research and Citation Resources // Purdue Writing Lab என்ன இணையச் சுட்டியிலிருந்து ஆசிரியர்கள் விரிவாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்..நாம் எந்த ஒரு வளங்களையும் பயன்படுத்தும் போது மேற்கோள் காட்டித் துணை பட்டியல் இடுவது மிகப் பெரிய வேலையாகும்.

அதற்கான சில தொழில் நுட்பங்கள் உள்ளன. நாம் பயன்படுத்தும் Microsoft word.,Google Docs, Libre office writer ஆகிய மூன்று தொழில்நுட்பங்களுமே நம்முடையத் துணை நூல்களைப் பட்டியல் இட உதவுகின்றன. Microsoft word ல் reference என்ற தெரிவைத் தெரிவு செய்தால் நமக்குத் தேவையானபடி நாம் துணை நூல் பட்டியல்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.ஏறத்தாழ பன்னிரெண்டு வகையான ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு நாம் மேற்கோள் காட்டி துணை நூல் பட்டியல் இட முடிகின்றது,

Microsoft word 365 வைத்து உள்ளவர்கள் Researcher எனும் தெரிவைத் தேர்வு செய்தால் ஆவணத்திற்குள்ளே இருந்தே அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்யலாம். ஆனால் நாம் இணைய வசதியோடு இணைந்து இருந்தால் மட்டுமே Microsoft 365 வேலை செய்யும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கூகுள் ஆவணத்தில் Tools என்று சென்று அதில் Citations என்ற தெரிவைத் தேர்வு செய்ய வேண்டும். நாம் அவ்வாறுத் தெரிவு செய்யும் போது அதற்கான சாளரம் கணினித் திரையின் இடது பக்கம் திறக்கின்றது. இதில் MLA APA Chicago ஆகிய மூன்று விதங்களில் நாம் பட்டியலைத் தயாரிக்கலாம்.

.

Libre office writer என்ற உரை மென்பொருள் மூலம் ஒரு தனி ஆவணத்தில் நம்மால் வளங்களை மேற்கோள் காட்டி பட்டியல் இட முடியும்,

ஆவணத்தின் உள் சென்று insert – Table of content and Index என்ற தெரிவைத் தெரிவு செய்து விவரங்களை இட வேண்டும்.

இந்த வகையில் நாம் அச்சில் கிடைக்கும் வளங்களையும், இணையத்தில் எடுக்கும் வளங்களையும் உடனுக்குடன் நமது ஆவணத்தில் சேர்த்து நம் ஆவணத்தில் கருத்துத் திரட்டு இல்லாதவாறு நமது வளங்களைத் தயாரிக்கலாம்.

இவை தவிர

EasyBib®: Free Bibliography Generator – MLA, APA, Chicago citation styles

https://www.citationmachine.net

ஆகிய இணைய தளங்கள் ஆராய்ச்சி வளங்களைத் தக்கவாறு பட்டியலிட மாணவர்களுக்கு உதவியாக உள்ளன. மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி விவரங்களில் இத்தளங்களில் இட்டால் அவை ஒரு உரைக் கோப்பாக அனைத்து ஆவணங்களையும் பட்டியலிட்டு நமக்குத் தருகின்றன.

மேற்கோள் பட்டியலிட தரவுத் தளங்களும் மென்பொருட்களும்

நம்மில் ஒரு சிலர் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய வண்ணம் இருப்போம் அவர்களுக்கான ஒரு தரவை உருவாக்க நான்கு மென்பொருட்கள் உள்ளன. இவை நமக்கு ஒரு இலவச சேவையாகக் கிடைக்கின்றன.

  1. Free Reference Manager & Citation Generator – Mendeley

  2. https://www.zotero.org

  3. Google Scholar

  4. Libre office writer

முதலில் கொடுத்த மூன்று தளங்களும் நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. Google Scholar தவிர மற்ற இரண்டு மென்பொருளையும் நாம் இலவசமாக நம் கணினிக்குள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.. Libre office writer, Zotero ஆகிய இரண்டும் திறவூற்று மென்பொருட்கள் ஆகும். அதில் Libre office writer, உண்மையில் ஒரு உரையெழுதும் ஆவணமாகும், ஆனாலும் அதன் உள்ளேயே நாம் நமது மேற்கோள் பட்டியல் தரவுகளை எளிதாக உருவாக்கலாம்.

இணையத்தில் நாம் தேடும் தகவல்களைச் சரியான முறையில் தேர்ந்தெடுத்துச் சரியான முறையில் பயன்படுத்தி நம் துறையில் நாம் சிறந்து விளங்கப் பல தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன். இதில் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தி நம் துறைக்கான தரவுகளை நாம் நல்ல முறையில் அதிகரிக்கலாம்.

 கருத்துத் திருட்டுகளைச் சரி பார்க்க:

  1. https://www.grammarly.com/plagiarism-checker?

  2. https://plagly.com

ஆகிய இரு தளங்களைப் பயன்படுத்தி நமது கட்டுரைகளில் கருத்துத்  திருட்டு உள்ளதா என்றும் நாம் பார்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்வோம்

 



தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்



தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்



தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்



தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்



தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்




தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்



தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்



தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்



தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்



தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்



தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்



தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்



தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்



தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்



தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்



தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்



தொடர் 17: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *