இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 – சுகந்தி நாடார்இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்

இன்று இணையம் என்று சொன்னால் இணைய உலாவிகள் இல்லாமல் நாம் இணையத்தில் வேலை செய்ய முடியாது. அலைபேசிகளிலும் இந்த உலாவிகள் மூலமே நாம் செய்திகளைப் படிக்கின்றோம். பல தரவு சேமிப்பகங்களிலிருந்து நமக்குச் செய்திகளை எடுத்து நம் கணினியிலும் திறன் அலைபேசியிலும் காட்டக் கூடிய மென்பொருளே உலாவி.நம் திரையில் காணும் விடயங்கள் உரையாகவோ, அட்டவணையாகவோ படங்களாகவோ அல்லது காணொலிகளாகவோ இருக்கலாம். இவை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இணையத் தரக் கட்டுப்பாடுகள் வகை செய்கின்றன. இந்த இணையத் தரக் கட்டுப்பாடுகள் ஒரு உலாவி எல்லா இயங்குதளங்களிலும் சரியாக வேலை செய்ய உதவுகின்றன.

 இந்த கட்டுப்பாடுகளினால் ஒரு உலாவி எந்த ஒரு இயங்குதளத்தில் இயங்கும் என்றாலும் கூகுள் க்ரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ் ஆப்பிள் சவாரி அமேசான் சில்க் பயர்பாக்ஸ் ஒப்ரா என்று ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென உலாவிகளை உருவாக்கியுள்ளன, இதில் பயர்பாக்ஸ் ஒப்ரா உலாவிகள் திறவூற்று மூலக்கூறினால் உருவாக்கப்பட்ட இரு வேறு உலாவித் தொழில்நுட்பங்களாகும். இன்றைய உலாவிகள் இன்று PDF , மின்னூல் ஆவணங்களையும் திறக்கின்றன. திறன் பேசிகள் வருவதற்கு முன்னால் மேஜைக் கணினியின் உலாவிகள் நமது இருப்பிட விவரத்தைக் கேட்டதில்லை. ஆனால் தற்போது அவைக் கேட்கின்றன, அது மட்டுமின்றி நம் ஒலி பேசி புகைப்படக்கருவி புகைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் அனுமதியையும் இணைய உலாவிகள் கேட்கின்றன. இணைய உலாவிகளில் இருந்து நேரடியாக நாம் மின்னஞ்சல் அனுப்ப இயலும். இந்த வசதி கணினிகளிலும், திறன் பேசிகளிலும் உண்டு. ஒரு இணை

உலாவி என்று வரும் போது அதை ஒருவர் மூன்று விதமான அடிப்படைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • Cookies (இணைய நினைவி)

  • Extensions( நீட்சிகள்)

  • Privacy(தனியுரிமை)

 

என்ற இந்த மூன்று அடிப்படைகளைப் புரிந்து கொண்ட பின் ஒருவர் உலாவியை எவ்வாறு செம்மையாகப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.இந்த மூன்று அடிப்படைகளும் ஒரு உலாவியின் அமைப்பிற்குள் நாம் தேடும் போது கிடைக்கும். பொதுவாக கூகுள் க்ரோம் உலாவிதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது என்றாலும் இன்று சந்தையில் கிடைக்கும் இணைய உலாவிகளைப் பற்றிய ஆழமான விழிப்புணர்வு நமக்கு இருக்குமானால் நாம் உலாவிகளை நம் தொழிலுக்கு ஏற்றவாறு பயன் படுத்தலாம்.

ஒவ்வோரு உலாவியும் ஒரு மென்பொருள் என்பதை நாம் கருத்தில் வைத்துக் கொண்டோமானால் ஒவ்வொன்றுக்கும் தனியான அமைப்புகள் இருக்கும் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு உலாவியின் அமைப்புக்கள் சக்கர நெம்புகோல் வடிவில் இருக்கும்.

Single gear with solid fill

அதில் பொது வீடு தேடுதல் தனியுரிமையும் பாதுகாப்பும் தோற்றம் பதிவிறக்கம் செய்தல் என பல தெரிவுகள் இருக்கும். நாம் எந்த ஒரு உலாவியைப் பயன்படுத்தினாலும் நாம் உலாவியின் அமைப்பைச் சரி பார்த்து நமக்குத் தேவையான வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும்

அமைப்புகளில் பொதுவானது என்று பார்க்கும் போது,

எந்த உலாவியைக் கணினிப் பயன்படுத்த வேண்டும்?

எந்த மாதிரி உலாவி திறக்க வேண்டும்?

ஒவ்வோரு முறையும் புதிதான பக்கத்தைத் திறக்க வேண்டுமா? அல்லது ஏற்கனவே திறந்திருந்த பக்கங்களைத் திறக்க வேண்டுமா? எந்த இணையப்பக்கம் முகப்புப் பக்கமாக இருக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்குப் பதில் அளித்து  நாம்  நம் தெரிவுகளைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்

எப்போதும் முகப்புப் பக்கங்களை நம் கல்வி நிலையத்தின் இணையப்பக்கமாக வைத்து இருத்தல் நமக்கு கல்லூரியில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவுகின்றது.

அது மட்டுமின்றி நமது கணினியில் நச்சுநிரல் இணையம் வழி வந்து இறங்கியுள்ளது என்பதைக் கண்டறிய இம்முறை சிறப்பாக உதவி செய்யும்.

பொதுவாக எந்த ஒரு நச்சு நிரல் நம் கணினிக்குள் நுழைந்தாலும் நமது முகப்பு இணையப்பக்கத்தை தானாக மாற்றி விடும். இணைய உலாவிகள் கொடுக்கும் பொதுவான முகப்புப்பக்கத்தை நாம் பயன் படுத்தும் போது இந்த சிறு மாற்றம் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் நாமாகவே ஒரு முகப்புப்பக்கத்தைத் தெரிவு செய்து பயன்படுத்தி வரும் போது ஒரு சிறு மாற்றமும் நம் கணினியின் சுகாதாரத்தைப் பேண உதவும் எச்சரிக்கை மணியாகச் செயல்படும்.

அதே போல, பதிவுகளை எங்கு தரமிறக்க வேண்டும் என்ற கேள்வி நமக்கு மிகவும் உதவியாக இருக்கும், உலாவிகள் எப்போதும் கணினியில் ஏற்கனவே அமைந்திருக்கும் தரவிறக்கக் கோப்பில் தான் நமக்குத் தேவையானவற்றைத் தரவிறக்கம் செய்யும். ஆனால் தரவிறக்கம் செய்யும் போது என்னைக் கேட்டுச் செய் என்ற தெரிவை நாம் பயன்படுத்தினால் நமக்குத் தேவையான கோப்பில் நாம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அடுத்ததாக இணைய உலாவிகள் நாம் அடிக்கடி செல்லும் தளங்களில் பயன்படுத்தும் பயனர் சொல் கடவுச்சொல் ஆகியவற்றை சேமித்து வைத்து நமக்கு உதவுகின்றனர். பெரும்பாலானார் இவ்வசதியைப் பயன்படுத்துகின்றோம். அது ஒரு ஆபத்தான தெரிவு ஆகும். நாம் நமக்கு உதவியாக இருப்பதற்காக விவரங்களைச் சேகரித்து வைத்தாலும், நமது கணினியோ அலைபேசியோ பிறரிடம் சிக்குமானால் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும், நம் கணினிக்கும் சேதாரம் தரக்கூடிய வேலைகளை மற்றவர்கள் செய்ய வாய்ப்பு உண்டு. மேலும் நம் கணினிக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து நம் விவரங்களைத் தேடிச்செல்ல காத்திருக்கும் பல விஷமிகள் கையில் விவரங்கள் எளிதில் போய்ச் சேர இணைய உலாவியில் சேமிக்கப்படும் பயனர்ச் சொல்லும் கடவுச்சொற்களும் பயன்படுத்தப் படுகின்றன.

இது தவிர நாம் அடிக்கடி பயன்படுத்தும்தளங்களைப் பிடித்தவை என்று குறிக்கவும், தேவையானவற்றைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளவும் எல்லா உலாவிகளுமே உதவுகின்றன.

நம்முடைய உலாவிகளின் அமைப்புகளை நாம் அவ்வப்போது சரி பார்ப்பதன் மூலம் நமது கணினியை சுகாதாரமாக வைத்துக் கொள்வதோடு நமது இணைய உலாவல் சரிவர நடக்க நம்மால் முடியும்.இணைய நினைவி நீட்சிகள் தனியுரிமை ஆகிய மூன்றும் இணைய உலாவியில் மிக முக்கியமானவை எனவே அவற்றைப் பற்றி அடுத்து விரிவாகப் பார்ப்போம்.  அடுத்து வரும் விவரங்களை நாம் ஆழ்ந்து கற்றுக் கொள்வதன்  மூலம் இணையத்தைப் பாதுகாப்போடு  பயன்படுத்துவதோடு இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி  அதில் படைக்கவும் செய்யலாம்.தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்
தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்தொடர் 17: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்தொடர் 18: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 – சுகந்தி நாடார்