இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்மதிப்பெண்களா?  வாழ்க்கைக் கல்வியா?

அமெரிக்க நாட்டுக் கல்வி முறையையும் தமிழகத்தின் கல்வி முறையையும் ஆராய்ந்து பார்க்கும் போது,  அமெரிக்க்கக் கல்வி முறை வாழ்க்கைக் கல்வியை நடைமுறைப் படுத்துவதாகவும், தமிழகக் கல்வி முறை   தேர்வுகளின் மதிப்பெண்களை ஒட்டியும் உள்ளது. உதாரணமாக அமெரிக்கத் தொடக்கக் கல்விகளில் ஒரு மூன்றாம் வகுப்பு மாணவர் கணிதத்தில் தேர்ச்சி பெற்று இருக்கின்றாரா என்பதை அறிய அமெரிக்க பள்ளிகளில்  ஒவ்வோரு நாள் காலையிலும் நூறு  எளிய கூட்டல் கழித்தல் பெருக்குதல், வகுத்தல் கணக்குகளை ஒரு நிமிடத்திற்குள்   செய்ய வைப்பர்.   செய்பயிற்சி முதல் வேலையாக ஆசிரியர்களால் கொடுக்கப் படும். அவற்றிற்கு எந்த  மதிப்பெண்ணூம் வழங்கபட மாட்டாது. முதல் வாரம்  முழுவதும் ஒன்றின் கூட்டுத் தொகை கணக்குகள் என்றல் அடுத்த வாரம் இரண்டின் கூட்டுத் தொகை எண்கள் என மானவர்களுக்கு அந்தப்பருவம் முழுவதும்   மாணவன் தன் கணக்கிடும் திறமையை  தானே அளவிட  உதவும் வகையில் செய்முறை பயிற்ச்ச்சி அமைகிறது அதே போல பருவத்தின்    ஆரம்பத்தில் அவர்களுக்கு கற்பனையாக  ஒரு தொகைக் கொடுக்கப்படும். அந்தத் தொகையிலிருந்து அவர்கள்  என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். என்ன வாங்குகின்றார் என்பதை அவர் படத்துடன் பட்டியலிட்டு ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். அந்த கல்விப் பருவத்தின் இறுதியில் மானவர் ஒரு நயாபைசோ கூட  மீதம் வைக்காமல் செஅவு செய்து இருக்க வேண்டும்.இப்படி ஒரு தனி மாணவன்   காகிதத்தில் வரவு செலவு கனக்குகளைச் செய்யும் போது அடிப்படை கணித அறிவு மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில்  ஏற்படும் அத்தியாவசிய செலவுகள்,  ஆடம்பர செலவுகள், தேவையான பொருட்கள்,  விருப்பமான பொருட்கள், ஆகியவற்றில்  விலை,  விடுதிகளில் ஒருவர் உணவு  வாங்கும் போது ஆகும் செலவிற்கும்  வீட்டில் சமைத்து  உண்ணும் செலவிற்கும் உள்ள வித்தியாசம் என்று  வாழ்க்கையின் அடிப்படை வழிமுறைகள்  மாணவருகளுக்குத் தெரிகிண்றது.

அறிவியியல் பாடம் என்று எடுத்துக் கொண்டால்   ஒரு வருடத்தின் காலங்களை[ பற்றிப் பயிலும் போது ஒரு  மரத்தையோ, ஆல்லது விலங்கையோ  ஒரு ஆண்டு முழுவதும் கண்காணித்து பருவ நிலைகளுக்கு ஏற்ப அவற்றில் ஏற்படும் மாற்றத்தை வாரக்குறிப்பாக  எழுதி பதிவு செய்து   வருட இறுதியில் மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும்  பகிர்ந்து கொள்ள  வேண்டும்.  வண்ணத்துப்பூச்சி வளர்த்தல், மீன் வளர்த்தல், செடிகள் வளர்த்தல் ஆகியவை வகுப்பறையிலேயே நடைபெறும். இம்முறை மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை வளர்ப்பதுடன்  அறிவியல் பாடத்தை ஆழமாக அறிந்து கொள்ளும்  ஈடுபாட்டை அதிகரிக்கின்றது.

  மொழிக்கல்வியில் ஒரு மாணவர் குறைந்தது நான்கு புத்தகங்கலைப் படித்து அவற்றைப்பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள்  கணினியில் தட்டச்ச்சு செய்து இருக்க வேண்டும், ஒவ்வோரு பருவத்தின் இறுதியில் அவர்கள்  தாங்கள் படிக்கும் நூலைப் பற்றி  நழுவல் காட்சிகளும் தயார் செய்து  மாணவர்களிடையே காட்ட வேண்டும். மாணவர்கள் தங்களின் வாசிப்புத் திறனுக்கு ஏற்பவும், தங்களுக்கு விருப்பமான செய்திகள் பற்றியுமான நூல்களைத் தேர்ந்து எடுக்கலாம். ஒவ்வோரு பள்ளியிலும் மாணவர்க்களுக்கான நூலகம் கண்டிப்பாக இருக்கும், இதில் மாணவர்களுக்கான இலக்கியங்கள்  படக்கதைகள் என்று பல வகைப் நூல்கள்  கிடைக்கும்..  இரண்டாம்  வகுப்பிலேயே மாணவர்கள்    கதைகளின் கூறுகளை  கற்றுக் கொண்டு வருட  இறுதியில் தாஙிகளே ஒரு கதையை எழுதவும் செய்கின்றனர். இந்த  வகையில்  மொழித்திறமை தவிர கணினியைக்   கல்விக்கான  ஒரு துணைக் கருவியாக  பயன்படுத்தும் வழக்கம்  இளமையிலேயே வருகின்றது.  Flat Stanley என்ற கதாப்பாத்திரம் 1964ல் ஜெவ் ப்ரெளன் என்பவரால் படைக்கப்பட்டது.   ஒரு மாணவன் அறிவிப்புப் பலகை அவன் மேல் விழுந்ததால் அவன் தட்டையாகி விடுகின்றான். இதுவே இந்த கதாப்பாத்திரத்தின் அடையாளம். தட்டையாக இருக்கும் இந்த மாணவனை     மாணவர்கள் தங்கள் உறவினர், நன்பர்கள்  தெரிந்தவர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு   ஒரு அறிமுகக் கடித்ததுடன் அனுப்புவர்,   பதில் கடிதம்  உறவினர்களைப் பற்றிய செய்தியாகவோ அல்லது அவர்கள் வசிக்கும்  இடத்தின் வரலாறு முக்கிய இடங்கள் ப்வி அமைப்பு தட்பவெட்பநிலை பற்றி அறிய   வழி வகுக்கின்றது. பல சமயங்களின் ஆண்டு விழாவில் மாணவர்கள் தங்கள்  வரலாறுபாடம் சம்பந்தமான நிகழ்வுகளை நடத்துவர்.   இதனால்  வரலாறு பற்றிய அறிவும் மாணவர்களுக்குக் கிடைக்கின்றது.

 இவ்வாறு  செயல் திறன பயிற்ச்சிகள் தொடக்க கல்வி நடுநிலைம் உயர் நிலைப் பள்ளிகளில் பாடங்களுக்கும் மாணவரின்   திறமைக்கும் ஏற்பதாக அமையும்.  இதற்கு இடையில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை  அவர்களின் நினைவுத் திறனை சோதிக்கும் எழுத்துத் தேர்வுகளும் உண்டு.  தேர்வுகளுக்கு பாரம்பரிய முறையில்  மதிப்பெண்கள்  கொடுப்பதும் உண்டு, இந்த மாதிரியான எடுத்துக்காட்டுகள் ஒரு வினாவிற்கான விடை என்ன என்பதை வரையறை செய்வதைக் காட்டிலும்,  மாணவனின் கற்றல் திறனை  மதிப்பீடு  செய்பவையாக இருப்பதைக் காணலாம். திறன் பேசிகளும் கைகணினிகளும்  மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்கின்ற இந்நிலையில்  அவற்றை கல்விக்காக மட்டுமே  பயன் படுத்தும்  நெறிமுறைகளை  மாணவர்களுக்குத் தெளிவாக விளக்கப்படும்.. எந்த ஒரு பாடத்திலும் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள் அனைத்தும் செய்முறைப் பயிற்சிகளாகவே இருக்கும்.  ஒரு மாணவரது செயல் திறனை ஆசிரியர் எவ்வாறு அளவிடப் போகின்றார் என்ற அளவுகோல் நெறிமுறைகளும்   மாணவர்களுக்குக் கொடுக்கப்படும்.

  மாணவர்களின்  திறனை  மதிப்பிட கொடுக்கப்படும் அளவு நெறிமுறைகள், மாணவர்கள் சுதந்திரமாக சிந்த்தித்து செயல்பட்டு  தங்களுடைய செய்முறை பயிற்சியை  செய்ய உதவுகின்றன. மாணவரின்  சிந்தனை ஓட்டம் ஒரு  உயரிய அளவில் இருக்கிறது  என்று சொல்ல வேன்டுமானால் அவர்,  ஒரு செய்தியை கற்ற பின் அதை மனனம் செய்து அப்படியேக் கூறுவதைத் தாண்டி,   கற்றலில் கொடுக்கப்பட்ட  செய்தியைப் புரிந்து,, கொடுக்கப்பட்ட விவரங்களை சார்ந்த  நுண்ணிய விளக்கங்களைப் அறிந்து கொண்டு, அந்த விளக்கங்களையும் விவரங்களையும்,  இன்னுமொரு  விஷயத்தோடு இணைத்து,  விவரங்களை  வகைப்படுத்தி, மாற்றி அமைத்து அதிலிருந்து புதியதாக ஒரு கோட்பாட்டை வரையறை  செய்யும் திறன் பெற்று இருக்க வேண்டும்.

ஒரு கல்வி முறை  எப்போது  ஆழமான,  சுதந்திரமான   உயரிய அளவிலான சிந்தனைத் திறனை மாணவருக்குக் கொடுக்கும் போது அந்தக் கல்வி முறை மாணவனை வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கும் ஒரு தூண்டுகோலாக அமைகின்றது.

மதிப்பெண்களும், வாழ்க்கை கல்வி அடிப்படைகளும் ஒரு மாணவரின்  திறனை  மதிப்பிட  பயன்படுத்தப் படும் போது ஒரு மாணவன்   பள்ளியிலிருந்து  வெளிவரும் போது தன் வாழ்க்கைக்குத் தேவையான முடிவுகளை யும் அவற்றின் விளைவுகளையும் சந்திக்கும் அளவு  சுதந்திரமாக   சிந்திக்கவும்  செயல் படவும்  தயாராக இருக்கின்றான். உயர் நிலை பள்ளி மாணவனின் மனநிலையும் அவ்வாறு சுதந்திரமாக   செயல்படவே தயாராக உள்ளது. ஆனால் அவரது மனநிலையுடன் ஏற்ப அவரது திறன்கள் ஒத்துப்போகாத போது தான் அந்த மாணவரரோ மாணவியோ  கல்விநிலையத்தின் உள்ளேயும் வெளியேயையும் பிரச்சனைகளை  சந்திக்கின்றார்.

 செய்முறை பயிற்ச்சி  உயரிய  சிந்தனையை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டுமானால் என்ன  செய்ய வேண்டும்? மேலே   கூறிய  ஒரு எடுத்துக் காட்டை எடுத்து  நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

 ஒரு தாவத்தை   மூன்று மாதங்கள்  ஒரு மாணவர் கண்காணித்து அவர்  வாரக்குறிப்பைக் கொடுக்கும் செய்முறை பயிற்ச்சியை  எடுத்துக் கொள்வோம்.

அதனை நாம் செய்முறைப் பயிர்ச்சியாக நாம் கொடுப்பதர்கு முன்  நாம் மாணவர்களின்  உயரிய  சிந்தனையை அளவிடப் போகின்றோம் என்ற தெளிவு மாணவர்களுக்கு வரும் வகையில்  நாம் ஒரு அளவு கோலை உருவாக்க வேண்டும்

  ஒரு தாவரத்தைக் கண்காணிக்கும் போது, அந்த தாவரத்தின்  பாகங்கள், இலை அமைப்பு உணவு சேமிக்கும் இடங்கள்,  வேர்களின் வகை ஆகியவர்றை மாணவர்கள், மனனம் செய்து நினைவில் வைத்துக்  கொள்ள வேண்டும்.

இவை அறிவியல் பாடத்திலேயே   கொடுக்கப்பட்டு இருக்கும்.    தாவரத்தின் பாகங்களை அடையாளம் காட்டுவதோ, அல்லது  அவற்றின் வகைகளை அடையாளம் காட்டுவதோ    மாணவர்களின்  நினைவாற்றலையும்,  மனனம் செய்யும்  திறமையையும் அளவிடும்.ஆனால் வீட்டில் உள்ளச் செடியை  கவனித்து  வாருங்கள் என்று சொல்லும் போது, மாணவர்கள் எதைக் கவனிக்கின்றனர் என்பதை வைத்து அவர்களது  உயரிய  சிந்தனையை நாம் அளவிடலாம்

நினைவாற்றல்

புரிதல்

பயன்பாடு

ஆராய்தல்

மதிப்பிடுதல்

படைத்தல்

கணினித்

திறன்

100%

  பாடத்தில் உள்ள விவரங்கள்

மூன்றுக்கும் மேற்பட்ட    வேறுபட்ட தாவர வகைகளின் சூழல்

  ஒரு சிறு தோட்டத்தை பராமரித்தல்

  இரு வேறு தோட்டங்களைன் சூழ்நிலையை

ஒப்பீடு செய்தல்

ஒரு  தோட்டம் அமைப்பதற்கு   ஏற்ற  சூழல் எது?

புதிய  தாவர வகையை  இரு வேறுபட்ட வேர்களை  இணைத்து  ஒரு புதிய தாவரத்தை உருவாக்கும் முயற்சி

புகைப்படம், காணோளி உரை

75%

75%  விவரங்கள்

மூன்று   வேறுபட்ட தாவர வகைகளின் சூழல்

  மூன்று தாவரங்க்ளை ஒட்டி வாழும்  மற்ற உயிரினங்களைக் கவனித்தல்

மூன்று  வேறுபட்ட  வகைத் தாவரங்களின் சுற்றுப்புற  சூழலோடு  ஓப்பீடு  செய்தல்

தாவரங்களும் அதை அண்டி வாழும் விலங்குகளின் சூழல்

மூன்று வேறுபட்ட தாவரங்களின்  வளர்ச்சிக்கான விதைகளைத் தயார் செய்தல்

காணோளி

50%

50%  விவரங்கள்

இரு  வேறுபட்ட தாவர வகைகளின் சூழல்

தாவரத்தை ஒட்டியுள்ள இன்னோரு  செடியையும் பேணுதல்

இரு வேறுபட்ட  வகைத் தாவரங்களின் சுற்றுப்புற  சூழலோடு  ஓப்பீடு  செய்தல்

இரு தாவரங்களைப் பற்றிய   தன் கணிப்பு

  இரு  வேறுபட்ட தாவரங்களின்  வளர்ச்சிக்கான விதைகளைத் தயார் செய்தல்

புகைப்படம்,

25%

25%  விவரங்கள்

தாவரத்தின் சூழல்

  தாவரத்தைப்   பேணுதல்

ஒரு  தாவரத்தின்  சூழலை மாற்றி அமைத்தல்

தாவரத்தைப் பற்றிய அடிப்ப்டைக் கணிப்பு

தாவர வளர்ச்சிக்கான விதையை தயார் செய்தல்

உரை

 

 மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை மாணவர்களுக்குக்  செய்முறை பயிற்ச்சியின் போது கொடுத்தால்  பயிற்சியில் முழு மதிப்பெண் பெற தான் என்ன  செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்குத் தெளிவாகப் புரியும்

  மதிப்பெண் அளவு கோலின் அட்டவணையைப் பார்த்ததும் ஆசிரியர்களுக்கே  இதை செய்ய முடியுமா? என்று  திகைப்பாக இருக்கும்.ஆனால் தாவர பாகங்களை வேறுபடுத்துவதிலோ, விதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதிலோ மாணவர்களின் வாழ்வியல் திறன்  வளர்வதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவு. இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை அடிப்படையாக  வைத்து செய்முறைப் பயிற்சியை உருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களில் ஈடுபாட்டை உருவாக்கலாம்,  மேலும் அட்டவணையில் 25% மதிப்பெண் பெறக்கூடிய செயல்கள் அனைத்தும் ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன்,  அடிப்படையில் சிறப்பாகச் செய்யக் கூடிய  செயல்களே!. ஆனால்  செய்முறைப் பயிற்ச்சியின் நோக்கம்   மாணவர்களின் உயரிய சிந்தனையையும் செயல்திறனையும் தூண்ட  அவர்களின் செய்முறைகள் எப்படி அமைய வேண்டும்  என்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு  தெளிவை  இம்மாதிரியான அளவுகோல் அட்டவணைகள் கொடுக்கின்றன. இந்த செய்முயற்சியைப் பயன்படுத்தும் போது   அந்தப் பருவதற்கான பல பாடங்களின்  விவரங்களைச் சேர்த்து கொடுக்கும்   வாய்ப்பு இருக்கின்றது.  தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின்  மூன்றாம் வகுப்பு அறிவியல்  வகுப்பின் மூன்று பாடங்களின் விவரங்களை இந்த  செய்முறைப் பயிற்ச்சி மூலம்  மாணவர்களுக்கு நடைமுறையாக உணர்த்தி  ஏட்டுக்கல்வியை வாழ்க்கைக் கல்வியாக மாற்றலாம்.

  1. இதே  போல  நீங்களும்   ஒரு செய்முறைப் பயிற்ச்சிக்கான  அளவுகோலைத் தயாரித்துப் பகிரலாமே?

  2.  மொழிக் கல்விக்கு எப்படிப்பட்ட  செய்முறைப் பயிற்சிகளை  நீங்கள்  வகுப்பில் பயன்படுத்துகின்றீர்கள்?

தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

 Show 2 Comments

2 Comments

  1. Varatharajan

    சாதியத்தை தூக்கி பிடிப்பவர்… எந்த மனநிலையில் இருப்பார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *