இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 – சுகந்தி நாடார்



இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்

நம்மில் பலர் வண்டியில் பயணத்தில் இருக்கும் போது you tubeல் திரைப்படங்கள் பார்ப்பதோ, அல்லது பாடல்கள் கேட்பதோ வழமை. அப்போது நீங்கள் பணம் கட்டி பார்த்தால் விளம்பரங்கள் வராது என்ற அறிவிப்பு வரும்.

கூகுள் போன்ற ஒரு நிறுவனம் விளம்பரம் மூலம் தங்களின் வருமானத்தை பெருக்கவே இவ்வாறு செய்கின்றன என்பதற்கு இது நல்ல உதாரணம்.

தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் பயனர்களுத்தெரியாமல் அவர்களின் விவரங்களை எடுத்துப் பயன்படுத்தி இலாபம் அடைவதைத் தவிர்க்கவே ஐரோப்பியக் கூட்டமைப்பு General Data Protection Regulation (பொது தரவு பாதுகாப்பு ஒழுங்கு முறைகள்) சுருக்கமாக GDPR என்ற விதிமுறைகளை 2016ல் கொண்டு வந்து 2018ல் ஒரு சில மாற்றங்களுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஒருவரிடமிருந்து அவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெறுமேயானால் அந்த நிறுவனம் என்ன மாதிரியான தரவுகளைச் சேகரிக்கின்றது? சேகரித்த விவரங்களை என்ன செய்கின்றது என்பதைப் பயனாளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஐரோப்பியக் கூட்டமைப்பின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் வலியுறுத்தின., இந்த விதிமுறைகளை கடைபிடிக்கும் நிறுவனங்களே ஐரோப்பியாவில் இயங்க முடியும் என்ற ஒரு நிலை வந்த பிறகு அனைத்து இணைய தளங்களிலும் அவை சேகரிக்கும் இணைய நினைவிகள் மற்றும் தனிப்பட்ட நபரின் விவரங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்ற விவரங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தன.

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் இருந்தாலும் அவை நிறுவனங்கள் சேகரிக்கும் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துபவரைத் தண்டிக்கும் சட்டங்களே தவிர நிறுவனங்கள் தாங்கள் சேகரிக்கும் தரவுகளின் பயன்பாட்டு விவரங்களை வெளிப்படையாகத் தெள்ளத் தெளிவாகப் பயனர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நிறுவனங்களைச் சட்ட பூர்வமாக நிர்ப்பந்திப்பதில்லை. ஆனால் இரு நாடுகளும் இணையத்தில் நாம் ஒத்துக் கொள்ளும் ஒப்பந்தங்களைச் சட்ட ரீதியில் ஒப்பந்தங்களாக ஒத்துக் கொள்கின்றன.

பொது தரவு பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் விதிமுறைகளின் 4வது கூறு ஒருவரின் தனிப்பட்ட விவரத் தரவு என்ன என்று விரிவாகக் கூறுவதாவது

இயற்கையான மனிதன் என்று அடையாளப்படுத்தப்பட்ட, அடையாளப்படுத்தக் கூடிய ஒரு நபரின் எல்லாவிதமான விவரங்களும் அவரின் தனிப்பட்ட விவரங்களாகும். இந்த விவரங்களில் அவரது பெயர், அவரை அடையாளப்படுத்தக்கூடிய எண், புவியிருப்பு இடம், இணையத்தில் அவரை அடையாளப்படுத்தக் கூடிய எண்கள், அவரது உடலமைப்பை விவரிக்கக் கூடிய விவரங்கள், அவரது மனநிலை, அவரது பொருளாதார நிலை, கலாச்சார நிலை சமூக அடையாளம் ஆகிய அனைத்துத் தரவுகளும் அவரது தனிப்பட்ட விவரங்கள் ஆகும்.



இதுவரை நாம் உலாவிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட விவரங்களில் முக்கியமானது இணைய நினைவி. ஒரு தளத்தை கணினி வழியாகவோ அல்லது திறன் பேசி வழியாகவோ நாம் சென்று பார்க்கும் போது இந்தத் தளம் ” cookies” அதாவது இணைய நினைவிக் கோப்பைப் பயன்படுத்துகின்றது. எங்கள் தளத்தின் அந்தக் கொள்கைகளுக்கு ஒத்துக் கொள்கின்றீர்களா? என்று கேள்வியை எழுப்பிய படி ஒரு சாளரம் நம் இணையப்பக்கத்தில் தோன்றும் அந்த சாளரத்திற்கு நாம் பதில் சொல்லும் வரை நாம் அதற்கு பதில் அளித்தால் தவிர நம்மால் அந்த தளத்தில் உலா சென்று பார்க்க இயலாது. நாம் இணையத்தில் விவரங்களைப் பார்க்க வேண்டிய அவசரத்தில் சரி என்று அழுத்தி விட்டு நமது இணைய உலாவலைத் தொடருவோம்.

நம்முடைய இந்தச்செய்கையை நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும்.

ஒன்று நாம் அந்த தளத்தில் உலா வர இணைய நினைவியைப் பயன்படுத்துக என்று ஒப்புதல் கொடுத்தல் மூலம், நாம் அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஒன்றில் நாம் கையெழுத்து இடுகிறோம். இரண்டாவது முக்கியமாக நாம் எதற்கு சரி என்று சொன்னோம் என்ற தெளிவு நம்மிடம் இல்லை.

ஒரு முறை அந்தத் தளத்தின் இணைய உலாவிகளின் கொள்கைகள் என்ன என்று படித்துப் பார்த்தோமானால்

அவசியத் தேவைக்கான இணைய நினைவிகள் (strictly necessary cookies)

செயற்பாட்டிற்கான இணைய நினைவிகள் (functional cookies)

செயல் திறனுக்கான இணைய நினைவிகள் (performance cookies)

மூன்றாம் நபருடைய இணைய நினைவிகள் (third party cookies)

பயனரைச் சார்ந்த இணைய நினைவிகளும், விளம்பரத்திற்கான இணைய நினைவிகளும்(Targeting and advertising cookies) என இருப்பதைக் காணலாம்

இந்த ஒவ்வொரு நினைவிகளும் என்ன வேலை செய்யும் என்ன பெயரில் இருக்கும் என்ற விவரங்களும், அந்த நிறுவனங்கள் நம்மிடம் இணைய நினைவிகள் வழி சேகரிக்கும் தகவல்களை என்ன செய்கின்றன என்ற விளக்கமும் இருக்கும்.

அவசியத் தேவைக்கான இணைய நினைவிகள் ஒரு இணையதளம் அடிப்படையாக வேலை செய்ய என்ன தகவல் தேவையோ அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும் நீங்கள் பொருட்கள் வாங்குவதோ அல்லது வங்கிக் கணக்குகளை இணையத்தில் செய்யவும் இவை உதவுகின்றன, பெரும்பாலும் இவை ஒரே ஒரு உரைக் கோப்பாகவும் அந்த உரைக் கோப்பில் ஒரே ஒரு வரியும் மட்டும் தான் இருக்கும்.

செயற்பாட்டிற்கான இணைய நினைவிகள்: பொதுவாக நமது பயனர்ச்சொல் கடவுச்சொல் நமது கடன் அட்டைகள் போன்ற விவரங்களை நினைவில் வைத்துக் கொள்ளும். இவை பெரும்பாலும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள சொன்ன தகவல்களின் அடிப்படையில் உரைக் கோப்புகளாக நம் கணினியில் இணைய உலாவிகளால் சேர்த்து வைக்கப்பட்டு இருக்கும்.



செயல் திறனுக்கான இணைய நினைவிகள்

நமது இணையப் பயன்பாட்டு வகைப்படுத்தும் வகையில் அது கோப்புகளை உருவாக்கும், இந்த இணைய நினைவிகள். எந்த பயனருடையத் தனித்தனி தகவல்களைத் திரட்டுவதில்லை . ஆனால் மொத்தமாக அந்த தளத்திற்கு வரும் பயனர்களைப் பற்றிய விவரங்களைத் திரட்டி தேடுபொறிகளுக்குக் கொடுக்கும்.

மூன்றாம் நபருடைய இணைய நினைவிகள் என்பன நாம் செல்லும் தளம் அல்லாது பிற தளங்கள் பயனரின் விவரங்களைத் திரட்டுகின்றன. நாம் செல்லும் தளத்தில் ஒரு பொருளை விளம்பரம் செய்கின்றார்கள், அல்லது ஒரு you tube காணோலியை தளத்தில் வைத்து இருக்கின்றார்கள். அல்லது அங்கே முகநூலில் பகிருங்கள் டிவிட்டரில் பகிருங்கள் என்று இருக்குமேயானால் இந்தத் தளங்களின் இணைய நினைவிகளும் நமது கணினிக்குள் இடம்பெறும்.

பயனரைச் சார்ந்த இணைய நினைவிகளும், விளம்பரத்திற்கான இணைய நினைவிகளும் என்பது பயனர் சார்ந்த அனைத்து விவரங்களையும் சேகரித்து பயனருக்கு ஏதுவான விளம்பரங்களைத் தருவதற்கான நினைவிகள்.

இந்த வகை இணைய நினைவிகளில் நாம் அனைத்தையும் தேர்வு செய்யும் வரை நாம் இணைய தளத்திற்குள் செல்லும் ஒவ்வொரு முறையும் இந்த எச்சரிக்கை சா:ளரம் நம் முன்னால் வரும்.

இன்றைய உலகில் இணையப் பயன்பாடு இல்லாமல் செயல்கள் இல்லை. நாம் அனைவருமே பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்ற சாலையாக இணையம் விளங்கி வருகின்றது. நிலப்பரப்பிற்கும் நீர்ப்பரப்பிற்கும் அரசுகள் எல்லைகள் வகுத்து சட்டங்களை வகுத்து விதிமுறைகளை விதிப்பது போல இணைய வழிக்கும் இன்னும் சட்டங்கள் வர வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் தங்கள் தொழில்நஇறுவனத்தை நிறுவும் நிறுவனங்கள் தங்களின் கொள்கைகளையும் தங்கள் இணைய தள நினைவி பயன்பாட்டைப்பற்றிய அறிக்கைகளையும் ஒவ்வோரு மாநிலத்தின் தாய் மொழியிலும் இருக்க வேண்டும் என்பதை பொது மக்கள் அரசிற்கு வலியுறுத்த வேண்டும். அரசு அதற்கேற்ற கொள்கைகளைச் செயல்பாட்டில் கொண்டு வரும் வரை கல்வியாளர்களாகிய நாம் கல்விக்காக இணையத்தையும் கணினிகளையும் பயன்படுத்தத் தலைப்படும் போது நம்முடைய எந்த மாதிரியான தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன, அவை ஏன் சேகரிக்கப்படுகின்றன என்பதன் விளக்கத்தைப் புரிந்து செயலாற்ற வேண்டும். மாணவர்களுக்கு நிறுவனங்களின் தனிமனித விவரக் கொள்கைகள் பற்றியும் இணைய நினைவிகள் பற்றியும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.

இன்னும் தொடர்வோம்.

 



தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்



தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்



தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்



தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்



தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்




தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்



தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்



தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்



தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்



தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்



தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்



தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்



தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்



தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்



தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்



தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்



தொடர் 17: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்



தொடர் 18: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 – சுகந்தி நாடார்



தொடர் 19

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 – சுகந்தி நாடார்

 



தொடர் 20: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 – சுகந்தி நாடார்



Show 9 Comments

9 Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *