இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்

கடந்த சில வாரங்களாக  இணைய உலாவி மூலம்  நமது நடவடிக்கைகளைக்   கணினி நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றன என்பதைக் கண்டோம்.   இணைய உலாவிகள் வழி நமது விவரங்கள் நடவடிக்கைகள்  மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இருக்கின்றது என்னும் போது நம் மனதில்  ஒரு அச்சம் வருவது இயற்கை.

நமது விவரங்களை தங்களது வணிகத்திற்கு ஏற்ற வாறு கையாண்டு விளம்பரங்கள் மூலம் நம்மைக் கவருகின்றனர் என்று எண்ணிப்பார்க்கும் போது, பயனாளிகளாகிய நமக்கு வரும் தார்மீகக் கோபமும் நியமானதே. அதற்காக நாம் இணையத்தில் வலம் வராமலோ  கணினியைப் பயன்படுத்தாமலோ இருக்க  முடியாது.

 நமது கணினிப் பயன்பாட்டையும் இணையப் பயணத்தையும்  முடக்கிப் போட்ட சில நிறுவனங்களின் வணிகத் தேவை காரணமாக இருக்கக் கூடாது.

அப்படி என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துப் பார்த்தோமானால் அதற்கு  ஐந்து முக்கிய வழிகளை நாம் பார்க்கலாம் அவையாவனஇரண்டு உலாவிகளை மட்டுமே பயன்படுத்துதல்

நாம் எந்த இயங்கு தளத்தினைப் பயன்படுத்துகின்றோமோ அந்த இணைய தள  உலாவியையும் ஒரு  திறவூற்று இணைய உலாவியையும் நாம் பயன்படுத்தலாம். இயங்குதள உலாவி  பல சட்ட திட்டங்களுக்கு ஏற்ப  தங்களைக் குறுகிய காலத்தில் மாற்றிக் கொள்கின்றன.   அது மட்டுமல்லாமல் எனவே இயங்கு தள உலாவி கண்டிப்பாக நம் கணினியிலும் அலைபேசியிலும் கண்டிப்பாக  இருக்க வேண்டும்.

இயங்குதள உலாவி நம் கணினியில் உள்ள மற்ற ,மென்பொருட்களுடன்  தன் தொடர்பை வைத்துக் கொண்டு உள்ளது. முக்கியமாக  இணைய உலாவி வழியாக நாம் வலம் வரும்  இணைய தளங்களில் இருக்கும் மின்னஞ்சல்களுக்கு மின்னஞ்சல் செய்வது அவர்களை அலைபேசியில் அழைப்பது ஆகியவற்றை எளிதாகச் செய்யலாம்.  இயங்கு தள உலாவியை நமது வழக்கமான உலாவியாக (default  browser) நாம்  தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

மொசில்லா பயர் பாக்ஸ் (Mozilla Firfox), ஓப்ரா (opera) ஆகிய இரு உலாவிகள் கணினியிலும் opera mini,  Firfox ஆகிய அலைபேசி உலாவிகளும் உள்ளன.

இவற்றை நிறுவியதும் இந்த உலாவிகளின் அமைப்புக்களை ஆராய் வேண்டும். முக்கியமாக இவற்றின்   தேடுபொறி, இணைய நினைவிகள் பற்றிய விவரங்களை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.  மொசில்லா பயர் பாக்ஸ் உலாவி ஏறத்தாழ கூகுள்  க்ரோம் போலவே வேலைச் செய்கின்றது. ஓப்ரா சிறிது மாறுபட்டாலும் அதில் புலனம் முகநூல் செய்திகள் ஆகியவற்றை நாம் உலாவியின் மூலமே பயன்படுத்தலாம்.

இயங்கு தள உலாவியை  நம் வழக்கமான உலாவியாக நிறுவி இருந்தாலும்   திறவூற்று  உலாவிகளை நம் இணைய உலாவலுக்குப் பயன்படுத்தும் போது  ஒரு உலாவி நம் கணினி நடவடிக்கைகளைக் கவனிக்கும் அளவு குறைகின்றது.இணைய தள முகப்பு   ஒரு குறிப்பிட்ட தளமாக இருத்தல்

 பொதுவாக ஒரு உலாவியை நம்  கணினிக் கருவியில் நிறுவியவுடன் அவை  கூகுள் தேடுபொறியின் முகப்புப் புத்தகத்தை  உலாவியின் முகப்புப் பக்கமாக வைத்திருக்கின்றன. நம்மில் அனைவரும்  இந்தத் தேடுபொறியைத்தான் வைத்து இருக்கின்றோம் என்றாலுமே நம் கணினியில் நச்சு நிரல்கள் வந்தால் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.  உலாவி வழி மட்டுமே நச்சு நிரல்கள் நம் கணினிக்குள் நுழைய முடியும். நச்சுநிரல்கள்  விளம்பரமாகவோ நாம்   தவறுதலாக  ஒரு  இணையச்சுட்டியை அழுத்தும் போதும் நாம் நச்சுநிரல் நமது  கணினியின் உள்ளே வர அனுமதிக்கின்றோம். அவ்வாறு தவறுதற்காக  நச்சு நிரல்கள் உள்ளே வந்தால் அவரி முதலில் மாற்றி அமைப்பது நம்முடைய  இணைய உலாவியைத் தான்.  சில நச்சுநிரல்கள்  நம் உலாவியின்   ஒரு குதியாக தங்களை அமைத்துக் கொள்கின்றன.

நாம் நம்முடைய  உலாவியின் முகப்புப் பக்கத்தைத் தேடுதல் பொறியியின் பக்கமாக வைத்து இருக்கும் போது   இவ்வாறு நச்சு நிரல்கள் நம் உலாவியில் வந்து உட்கார்ந்து கொள்வது நமக்குத் தெரிவதில்லை. ஏன் எனில் அவை  உலாவியின் முகப்பு பக்கமான தேடுபொறியின் பக்கமாக வே வைத்து இருப்பதால் நம்முடைய கவனத்திலிருந்து தப்பி விடுகின்றது.  எனவே நமது  உலாவியின் அமைப்பில் ( home) முகப்பு என்னவாய் இருக்கின்றது என்று பார்க்க வேண்டும்  அங்கு நமது கல்வி நிலைய இணைய தளத்தின் இணைய முகவரியை இட்டு விட வேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில் நச்சு நிரல்கள் வந்து நம்  உலாவியைத் தாக்கும் போது நம்மால் உடனடியாக அதைக் கண்டு கொள்ள முடிகின்றது.

உலாவிக்குள் சென்ற வுடன் நம்முடைய கவனம்  தேடுதல் பொறிகளினால்  சிதறாமல் நாம் செய்ய வேண்டிய பணியை மட்டும் நம்மால்  செய்ய முடிகின்றது.

கல்வி நிறுவனங்களுக்காகக் கணினியின் மற்ற  எந்த ஒரு  மென் பொருளின் வேலை செய்யாத படியும், அவர்கள் ஒரே ஒரு குறிப்பிட்ட தளத்திற்குச்செல்லும் படியான  கணினியை முடக்கி விடும் உலாவிகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றின் இணையச் சுட்டிகளை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 LockDown Browser – Respondus

LockDown Browser

இந்த இரு உலாவிகளும் கல்வி நிலையங்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. இவற்றைக் கல்வி நிலையங்களின் கணினித் துறை   தங்கள் மாணவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். இதனால்  மாணவர்களின்  கவனம் சிதறுவதையும் மாணவர்கள் தேர்வில்  திருட்டுத்தனம் செய்யாமல் இருக்கவும் வழி  கிடைக்கின்றது.அமெரிக்காவில் உள்ள 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்த வகை உலாவிகளை தங்கள் மாணவர்களின்  மாணவர்களின் கணினியில் நிறுவச்  செய்கின்றன. இந்த  உலாவிகள் மூலமே மாணவர்கள் தேர்வு எழுத முடியும். ஆசிரியர்கள் கூறும் தளங்களுக்கு மட்டுமே மாணவர்களால் செல்ல முடியும்.இணைய வரலாற்றைச் சரி பார்த்து அழித்தல்

எந்த ஒரு உலாவியை நாம் பயன்படுத்தினாலும் , எந்த ஒரு இணைய முகப்பினை நம் உலாவியின் முகப்பாகக் கொண்டிருந்தாலும் மஆதம் ஒரு முறை நம் உலாவியின் அமைப்புக்களைச் சரி பார்க்க வேண்டும். அமைப்புக்களைச் சரி பார்த்து நம் இணைய உலாவல் வரலாற்றை அழிக்க வேண்டும் உலாவியின் இணைய நினைவிகளைன் நிலையையும் ஆராய்ந்து பார்த்து பாதுகாப்பிற்குரிய செயல்களைச் செய்ய வேண்டும். தேவையற்ற மூன்றாம் நபர் இணைய நினைவிகளை அகற்ற வேண்டும். ஏன் எனில் நாம் உலாவியில் எந்த ஒரு பகுதியிலும் கூகுள், முகநூல் கீச்சகம் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருந்தால் அவை தாமாகவே தங்களுடைய இணைய நினைவிகளை நமது உலாவியில் நிறுவி இருக்கக் கூடும்.

ஒரு முக நோக்குடைய செயல்பாடு

ஒரு மென்பொருள் நம் கவனத்தைச் சிதற அடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வு நமக்கு இருக்கும் போது நாம் எந்த வேலைக்காக இணையத்தில் நுழைந்தோமோ அதை மட்டும் பார்க்கக் கூடிய ஒரு சுய ஒழுக்கம் தேவை. ஒரு ஆய்வுக் கட்டுரைக்கான ஆராய்ச்சி செய்ய நாம் இணையத்தைத் தேட் ஆரம்பிக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். முதலில் தேடுதலுக்கான நேரம், எத்தனை இணைய தளங்களைத் தேடப் போகின்றோம் என்ன மாதிரியான சொற்களை வைத்துத் தேடப் போகின்றோம் என்று நாம் முதலிலேயேத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் நாம் இணையத்தில் தேடும் போது நமக்குத் தேவையான விஷயங்களை நகலெடுத்து ஒரு ஆவணத்தில் சேகரித்துக் கொள்ள வேண்டும். அப்படி சேகரிக்கும் போது அந்த தளத்தின் சுட்டியையும் நாம் அப்படியே நகலெடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். நம்மால் நகலெடுக்க முடியாத நிலையில் கணினியின் அருகில் ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தை வைத்து அதில் நம் குறிப்பை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். நமது ஆவணமெபொருள் இணையச்சுட்டிகளை நீலநிற சுட்டிகளாக நம் ஆவணத்தில் சேமித்து வைத்து இருப்பதால் தேவையான போது நாம் அந்த சுட்டிகளுக்கு உடனடியாக செல்ல முடியும்.

ஒரு இணைய உலாவியில் நாம் செய்திகள் வாசிக்கும் போது உலாவியையே நேரிடையாக வாசிக்கச் சொல்லலாம். தற்போது உலாவிகளினால் வாசிக்கும் தொழில்நுட்பம் மைக்ரோசாப்ட் எட்௺ உலாவியில் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கின்றது. இன்றைய கணினி பயனாளரின் கவனம் ஒவ்வோரு 11 நிமிடங்களுக்கு ஒரு முறை சிதறடிக்கப்படுகின்றது. அவர்களின் மனம் ஒரு செயலில் அதிகபட்சம் எட்டு நிமிடங்கள் தான் இருக்கின்றது. ஒருவர் கணினியில் அதிக நேரம் இருக்கும் போது அவரது மூளை தன் செயல் திறனை மிகவும் குறைந்த அளவே செயல் படுத்துவதால் கணினி பயன்பாட்டில் ஒருவரின் சுயக் கட்டுப்பாடும் அவரின் கவனச்சிதறலுக்கான காரணிகளைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியம். ஒருவர் ப்ரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவராய் இருந்தாலும் கூட, அவர் கணினி முன் அமரும் போதும் அலைபேசியின் முன் அமரும் போதும் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்யும் பழக்கத்திற்குத் தன்னை பழக்கிக் கொள்ள வேண்டிய அவசியமாகின்றது

காலையும் மாலையும் மின்னஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், புலனக் குழு ஆகியவற்றிற்கான நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தைத் தவிர வேறு எந்த நேரத்திலும் நாம் இவற்றைச் சென்று பார்க்கக் கூடாது. அதே போல் கணினியில் வேலை செய்யும் போது நம் திறன் பேசியை அருகில் வைத்திருக்கக் கூடாது.

சமூக வலைத்தளங்களில் என்ன தான் பதிவு செய்து பிறருடன் தொடர்பில் இருந்தாலும் முக்கியமானவரிடம் வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறை நேரடித் தொடர்பில் இருத்தல் அவசியம்.
தனித் தன்மை மிளிரச்செய்யும் பயன்பாடு

இன்று குழந்தைகள் முதல் முதியவர் வரை வலை காணோலிகள் புலனம் முகநூல் ஆகியவற்றில் அதிக அளவு தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். கையகலக் கணினியாக நம் அலைபேசி மாறிவிட்ட பிறகு பொழுது போக்கிற்காக நாம் அலைபேசியையோ கணினியையோ பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வது முட்டாள் தனமேயாகும். என்னக் காரணமாக இருந்தாலும் நாம் சமூக வலை தளங்களில் உலா வரும் போது நம்மின் தனித் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அதில் பங்கு ஏற்க வேண்டும். சமூக வலைதளங்களஐ நம் வாழ்க்கையின் முன்னேற்றப் படிக்கட்டாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்று யோசிக்க வேண்டுமே தவிர தேங்காய் சில கிடைத்ததும் அதை முகர்ந்து பார்த்து இணைய வலையில் சிக்கும் ஒரு எலியாக நம்மை மாற்றும் வழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். சமூக வலை தளங்களில் நம் பதிவிற்கு எத்தனை விருப்பங்கள் வந்துள்ளது என்பதை விட நம் பதிவின் நோக்கம் என்ன என்று உணர்ந்து பதிவிட வேண்டும். ஒரு சமூக வலைத்தள பயன்பாடு ஒவ்வோரு பயனரையும் ஒரு ஊடகத்துறையாக மாற்றி உள்ளது என்பதை மறுக்க இயலாது. அதனால் நாம் சொல்லும் செய்திகளுக்கான நோக்கத்தை நாம் தெளிவு படுத்திக் கொண்டு பதிவுகளை இட வேண்டும்.

பதிவுகளை இடும் போது மொழியில் எந்த வித பிழைகள் இல்லாமலும், நேர்மறை சொற்கள் இல்லாததுமாய், மற்றவர்களைப் பழித்துச் சொல்லாததுமான பதிவுகளை நாம் இட வேண்டும்.தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்
தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்தொடர் 17: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்தொடர் 18: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 – சுகந்தி நாடார்தொடர் 19

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 – சுகந்தி நாடார்

 தொடர் 20: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 – சுகந்தி நாடார் 

தொடர் 21: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 – சுகந்தி நாடார்

 தொடர் 22:

https://bookday.in/essential-needs-for-internet-classroom-22-suganthi-nadar/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *