இனி அடுத்து என்ன?
தொழிற்புரட்சியின் விளைவாக நம் நாடு இங்கிலாந்து அரசின் கைப்பிடியில் தத்தளித்தது என்றால் இன்றைய இணையத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று உலகிலேயே தங்கள் கைக்குள் வைத்துள்ளனர். முகநூல், புலனம், கீச்சகம், கூகுள் தேடுபொறி கணினியில் தலைத் தொடர்பு , பயணச்சீட்டு வாங்குதல், சுற்றுலா செல்லுதல் , பொருட்களை வாங்குதல் விற்றல், தொலைதூர மருத்துவம் இணையக் கல்வி இணையப் பொழுது போக்கு என்று ஏதோ ஒருவிதத்தில் நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றோம்.
Google Voice amazon Alexa போன்றவற்றுடன் ஒரு மனிதருடன் உரையாடுவது போல நம்மால் உரையாடமுடிகின்றது. இருபது ஆண்டுகளுக்கு முனால் இருந்த வசதிகள் பல இப்போது முற்றிலுமாக மாறிவிட்டன. பண்டமாற்று முறை காகிதப் பணமாக நாம் புழங்கிக் கொண்டு இருந்த காலம் இப்போது குறியீடாக்க செலவாணி (crypto currency) கணினிசெலவாணிகள் பிரபலம் ஆகிக் கொண்டு வருகின்றனர்.
இப்படி தினம் தினம் மாறிக் கொண்டே இருக்கும் தொழில்நுட்ப சூழலில் மாணவர்களுக்கு ஏற்ற ஒரு கல்வியை எவ்வாறு தருவது?
பள்ளிக் கல்வியில் பயிலும் பாடங்கள் அவர்களின் வருங்கால வாழ்க்கைக்கு உதவுமா? என்ற பெரியக் கேள்வி கல்வியாளர்களைத் தினம் யோசிக்க வைக்கின்றது.
கணினியும் கணினியும் பேசுவது போய் மனிதனும் கணினியும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் மனிதனைப் போல கணினி சிந்தித்துச் செயல்படத் தொடங்கியுள்ளது. இதுதான் நாகரீகத்தின் உச்சக்கட்டம் ஒரு அஃறிணைப் பொருள் உலகின் எல்லாவிதமான தகவல் தொடர்புகளையும் செய்கின்றது. விரைவில் மனிதனின் செயல்கள் அனைத்தும் கணினியின் கட்டுக்குள் இருக்கும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.
கணினியின் கட்டுப்பாட்டில் உலகம் இயங்கும் போது ஒரு மனிதனின் செயல்பாடு என்ன? வருங்காலத்தில் மனிதனின் வாழ்வியல் என்னவாக இருக்க முடியும் ஆகிய இரு கேள்விகளின் பதிலே நம் மாணவர்களுக்கு எத்தகைய எதிர்கால வேலை வாய்ப்பிற்குத் தயார் செய்யலாம்?
அவர்களின் வாழ்க்கைக் கல்வி எப்படி இருக்கும் என்று நாம் சிந்தித்துப் பார்த்தாலே நம்மால் அவர்களை அவர்களுடைய வளமான எதிர் காலத்திற்குத் தயார் செய்ய முடியும். வரலாற்றின் ஒரு கால கட்டத்தில் மனிதனின் வாழ்க்கை இயற்கையைச் சார்ந்து ஆன்மீக முக்கியத்துவம் பெற்று இருந்தது. அடுத்த கால கட்டத்தில் அரசுடைமைக்கு முக்கியம் கொடுத்து அதன்படி அரசர்களின் விதிப்படி பொது மக்களின் அன்றாட வாழ்க்கை அமைந்து இருந்தது. நாடாளும் பொறுப்பு ஒரு சிலரிடம் இருக்க , ஒருவரின் வீட்டை மட்டும் ஒருவர் பார்த்துக் கொண்டால் போதும். தனி ஒருவர் தன் தனித்திறமையை மிளிரச்செய்வதில் ஆர்வம் காட்டினால் அவருக்கு அந்த வழியில் வளர வாய்ப்புக்களும், அந்த வாய்ப்புக்களை அவர் பயன்படுத்தும் போது அவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் வழி இருந்தது. ஒரு கால கட்டத்தில் உயர் கல்விக்கு நன்மதிப்பு இருந்தது, கல்வி கேள்விகளில் தலை சிறந்தவர்கள் கொண்டாடப்பட்டனர்.. அதன் பின் பொருளாதாரம் சார்ந்த ஒரு வாழ்வியலை நாம் பின்பற்றி வந்தோம். ஆனால் இன்று தகவல் தொடர்பு வசதிகளையும் கணினியையும் சார்ந்த வாழ்க்கை முறையாக நம் வாழ்க்கை முறை மாறி விட்டது.
இந்தக் கணினி யுகத்தில் இணைய வலையில் விழுந்த நாம் எங்கு பார்த்தாலும் பல்வேறு தகவல்களால் மூழ்கடிக்கப்படுகின்றோம், கணினிகளைச் சார்ந்து நாம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில், மனிதன் செய்யும் பல அடிப்படை வேலைகளைக் கணினி செய்யத் தொடங்கியுள்ளது, அப்படியானால் மனிதனின் எதிர்கால நிலை என்ன?
ஒருவர் கணினி சொல்லும் உணவை உண்ண வேண்டும். கணினி நமக்காகத் தேர்ந்தெடுக்கும் செய்திகளைப் படிக்க வேண்டும். கணினி சொல்லும் சாலையில் செல்ல வேண்டும். பணம் தங்கம் என்று காப்பாற்றிச் சேர்த்து வைத்தது மாறி கணினி அலைபேசி அதன் கடவுச்சொல், நம்முடைய தனிப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை நாம் பூட்டிப் பாதுகாக்க வேண்டும். என்று நினைத்தோம். அதுவும் இந்தப் பேரிடர் காலத்தில் இணையத்தின் கணினியையும் பயன்படுத்தி அது தான் உண்மையோ என்று யோசிக்கும் அளவில் நாம் இருக்கின்றோம். இந்த நிலையில் நாம் ஒன்றை யோசிக்க மறந்து விடுகின்றோம். வரலாற்றின் எந்தக் கால கட்டத்திலும் எந்த பொருள் அரியதாக இருக்கின்றதோ அந்தப் பொருளுக்கே விலை மதிப்பு அதிகம்.
வணிகம் முக்கியமாக இருந்த காலத்தில் நாம் விவசாயத்தை மறந்தோம். குடியிருப்புக்கள் முக்கியமாக இருந்த காலத்தில் நாம் காடுகளைப் புறக்கணித்தோம். தொழில் வளர்ச்சி காலத்தில் இயற்கையைப் புறக்கணித்தோம். இப்போது விவசாயம் நீர், காடுகள் இன்று விலை மதிக்க முடியாத இடத்தில் இருக்கின்றன. அதே போலத்தான் மனித வளமும். இன்றைய மனித வளத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் கணினியில் நம் பொழுதைக் கழிப்பது பெருமை என்று இப்போது எண்ணிக் கொண்டு இருப்பது எதிர்காலத்தில் என்ன மாதிரியான விளைவுகளை எதிர் கொள்ளச்செய்யும் என்று யோசித்துப் பார்க்கலாம்.
உலக வாழ்வு எப்போதுமே தேவைகளுக்கும் அளிப்பிற்கும் இடையில் தான் உழலுகின்றது.அப்படியிருக்க, நாம் கணினியின் பின்னால் சொல்லிக் கொண்டிருக்கும் இந்நாளில் கணினி செய்யப் பயன்படும் ஒரு முக்கியமான கச்சாப் பொருள் குறைக்கடத்தி(semiconductor)யின் பற்றாக்குறை உலகெங்கும் நிலவி வருகின்றது.. உலகில் இன்று இயங்கும் எல்லா மின்னணு சாதனங்களும் முக்கியமான இந்த மூலக்கூறு கணினியை வேலை செய்ய வைக்கும் மூளையாகச் செயல்படுகின்றது. பூமியின் தாதுக்களில் முக்கியமான ஒன்றான சிலிகானை வைத்துச் செய்யப்படும் இந்த குறைக்கடத்திகள் மின்சாரத்தைக் கடத்திச் செல்ல மிகவும் உதவியாக இருக்கின்றன. அதனால் இவை மின்னணுப் பெருக்கிகளாகவும் வேலை செய்கின்றன. இந்த மின் பெருக்கிகள் மின்சாரத்தைத் தூண்டவும் அணைக்கவும் செய்கின்றன. அணைந்து இருக்கும் போது ஒரு மதிப்பும் மின்சாரம் சென்று கொண்டு இருக்கும் பொது ஒரு மதிப்பையும் ஏற்றுக் கொண்டு கணினியின் இரும எண்களான 1,0 ஆகிய வற்றை உருவாக்கி இந்த சிலிகான் மின் பெருக்கிகள் நம் கணினிகள் செயல் பட ஒரு முக்கியமான மூலப் பொருளாக இருக்கின்றது. ஒரு தனி மனிதனின் மின்னணு பொருட்களின் பயன்பாடும் நுகர்தலும் அதிவேகமாக உயர்ந்து வருவதாலும் இந்தப் பேரிடர் காலத்தில் மக்களின் பயன்பாடு அதிகரித்ததனாலும் இத்தகைய ஒரு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள், கணினிகள் திறன் பேசிகள் என்று பல முக்கியமான மின்னணு சாதனங்களைத் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓவ்வோரு ஆண்டும் புதிய வகை மின்னணு சாதனங்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.
அதே நேரம் பெட்ரோலியம் எண்ணெய் கொண்டு இயங்கி வந்த வாகனங்கள் இயற்க்கைச்சூழலை மாசுபடுத்துவதைத் தடுக்க மின் ஊர்திகளை தயாரித்துக் கொடுப்பதில் ஆசை காட்டுகின்றனர்.ஆனால் மின்சாரம் இல்லாமல் போனால் என்ன செய்வது என்ற யோசனை எழவே இல்லையா என்று தோன்றுகின்றது. வாகன ஓட்டிகளுக்குக் கணினியின் உதவியினால் எல்லா சிறப்பு அம்சம் கொண்ட ஒரு ஊர்தியை அமைத்து விற்பனையைக் கூட்டி வர்த்தகத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று யோசிக்கின்றன.
அமேசான் நிறுவனம் கணினித் துறையிலும் இணைய வணிகத்திலும் முதன்மையான நிறுவனமும் பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு நிறுவனமும் ஆகும். இணைய வணிபத்த்தின் வெற்றியால் பல அமெரிக்க நிறுவனங்களை இழுத்து மூடச் செய்த பெருமையும் அந்த நிறுவனத்திற்கு உண்டு. இன்று கணினி செயற்கை அறிவுத் திறனிலும் மற்ற நிறுவனங்களுக்கு இணையாக முன்னிலையில் இருக்கின்றது. பல நாடுகளின் தன் வர்த்தகத்தை விரிவு செய்ய இந்தியா போன்ற நாடுகளிலும் இந்நிறுவனம் தன் கிளையைத் தொடங்கி அதை நாம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வருகின்றது.
வர்த்தகம் மட்டுமின்றி கணினித்துறை போக்குவரத்து என்று பல விதமான பொருளாதார நடவடிக்கையில் தன்னை உட்படுத்திக் கொண்டு இருக்கின்றது,
இணையக் கல்வியில் zoom, google meet Microsoft team linked in இணையம் வழி தொழில்நுட்பங்கள் அமெரிக்காவில் நுகர்வோரின் தேர்வாக இருக்க, linked in வை பணி அமர்ந்தோர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள அமேசான் இந்தியாவில் இணையக் கல்வி முறையில் கால் பதித்து பொறியியல் நுழைவுத்தேர்விற்கு(JEE) மாணவர்களைத் தயார் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது.ஆனாலும் தனது பணியாளர்களை ஒழுங்காக நடத்துவதில்லை என்ற குறைபாடுகளும் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
பல நிறுவனங்கள் நொடித்துப் போக காரணமான ஒரு நிறுவனம் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்காகப் பொதுமக்களின் கண்டனத்தைப் பெற்ற வண்ணம் உள்ளது.பயனர் கேட்கும் பாடலை ஒலிபரப்பும் மின்னணு ஒலிபெருக்கி, கணினித் திரையே தொலைக்காட்சிப் பெட்டி என்பது போய் தொலைக்காட்சிப் பெட்டிகள் கணினிகளாக வேலை செய்யும் தொழில்நுட்பம் தன் முன்னால் நிற்பவரை உடற்பயிற்சி செய்ய சொல்லும் கண்ணாடி, தன் மீது அமர்ந்து உடற்பயிற்சி செய்யும் நபரை ஊக்குவித்து வழிகாட்டும் கணினி, தனக்குள் இருக்கும் பொருட்களையும் காய்கறிகளையும் வைத்து என்ன சமையல் செய்ய வேண்டும் என்று சொல்லும் குளிர்சாதனப்பெட்டி. சாலைகளிலும் வியாபாரத்தலங்களிலும் கூட்டிப் பெருக்கும் வேலையைச்செய்யும் தொழிலாளி, என்று செயற்கை மனிதனாக ஒரு கணினி உருவகம் மாற்றிக் கொண்டு இருக்கின்ற கால கட்டத்தில் அடுத்தது தன்னைத் தானே ஓட்டிச் செல்லும் ஊர்திகளென்று நாளுக்குநாள் கணினியின் ஆதிக்கமின்றி வலுத்துக் கொண்டே வருகின்றது.. நிலம் நிர் ஆகாயம் என்று அரசுகள் போர் புரிந்த காலம் மாறி இணைய வழித் தாக்குதல்கள் இன்று ஒரு அரசின் புதியப் போர் முறையாக மாறி வருகின்றன..
இதே வேளையில் கொரானா தடுப்பூசி கடவு அட்டைப் பெரும்பாலும் ஒரு எண்ணியல் ஆவணமாகவே தேசங்கள் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளன, இணையம் வழி வேலை பார்ப்பதால் ஒருவர் தன் கல்வியைப் பெற்றுக் கொண்டே வேலைக்குச் செல்ல முடிகின்றது. ஒரு வேலை செய்பவர் மூன்று வேலைகளைச் செய்ய முடிகின்றது. ஒரு நிறுவனத்தில் வேலை செய்யக் குறிப்பிட்ட இடத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாளுக்கு நாள் கணினி வழி புத்தாக்க செயல்களைச் செய்த வண்ணம் உள்ளனர். ஊடகத் துறையில் பல பரிமாணங்கள் கொண்டு மிளிர்ந்து வருகின்றது.
இது போன்ற கணினி சார்ந்த உலகிற்கு என்ன பற்றாக்குறை வரக்கூடும் என்பதைப் பற்றியும் கணினி வளர்ச்சி எந்தத் துறையில் எவ்வளவு வளரும் என்பது பற்றியும் யோசித்தால் அடுத்த தலைமுறை மாணவர்களின் வேலை வாய்ப்பை பற்றி யோசிக்கலாம்.
நேற்றையக் கச்சாப்பொருளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தேவை இல்லாமல் போகின்றது. நாளைத் தேவைக்கான மின்சாரமும் அதன் கடத்திகளுக்கும் இன்றே பற்றாக்குறையாக இருக்கின்றது.. அப்படியானால் நாளைய கச்சாப் பொருள் என்ன?
யோசிப்போம்.
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3:
தொடர் 4
தொடர் 5
தொடர் 6:
தொடர் 7:
தொடர் 8:
தொடர் 9:
தொடர் 10:
தொடர் 11:
தொடர் 12:
தொடர் 13:
தொடர் 14:
தொடர் 15:
தொடர் 16:
தொடர் 17:
தொடர் 18:
தொடர் 19
தொடர் 20:
தொடர் 21:
தொடர் 22:
தொடர் 23: