இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 – சுகந்தி நாடார்இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்

நேற்றையக் கச்சாப்பொருளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தேவை இல்லாமல் போகின்றது. நாளைத் தேவைக்கான மின்சாரமும் அதன் கடத்திகளுக்கும் இன்றே பற்றாக்குறையாக இருக்கின்றது.. அப்படியானால் நாளைய கச்சாப் பொருள் என்ன? இன்றைய பொருளாதார சூழ்நிலை என்ன? மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு என்ன?

அண்மையில் சூயஸ் கால்வாய் அடைபட்ட காலத்தில் உலக வணிபம் ஸ்தம்பித்து நின்றது நாம் அனைவரும் அறிந்ததே.உலக வர்த்தகத்தின் 12% வணிகம் தான் முடக்கப்பட்டது என்றாலும் ஒரு நாளைக்கு ஒன்பது பொல்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்புள்ள நஷ்டத்தை உருவாக்கியுள்ளது. IMF கொடுத்துள்ள தகவலின் படி 2020ம் ஆண்டு சீன நாட்டினைத் தவிர மற்ற உலகநாடுகளின் பொருளாதாரம் 4.4 சதவிகிதம் கீழே சென்றுள்ளது. 2021ம் ஆண்டு இந்தியா சீனா ஆகிய நாடுகளே ஏறத்தாழ ஐந்து சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி காணும் என்று அந்த அறிக்கைக் கூறுகின்றது..ஏன்?

இந்த இரு நாடுகளில் குறைவில்லா, திறமையான மனித வளம் உள்ளது. அதனால் அந்நிய நாடுகளின் நிறுவனங்களுக்குக் குறைந்த செலவில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பர். அதிலும் முக்கியமாக இந்தியாவில் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சீன தேசத்தில் எல்லாவற்றையும் அரசே எடுத்து நடத்துவதால், அவர்கள் திட்டமிட்டு தங்கள் வளர்ச்சியை நிர்ணயிக்க முடியும். இந்தியப் பொருளாதாரம் அப்படிப்பட்டது அல்ல. அரசும் தனியார்த் தொழில் நிறுவனங்களும் சேர்ந்து நம் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன. சீனா , இந்தியா இரண்டுமே தங்கத்தை இறக்குமதி செய்வதில் உலகின் முதல் இரண்டு இடத்தைப் பெற்று இருக்கின்றன.இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 321 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து உள்ளது. இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி நிலையிலேயே உள்ளது.அப்படியிருக்க உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க இந்தியாவும் சீனாவுடன் போட்டிப் போடலாம். சீனா தனது தேசிய அரசாங்கக் கொள்கைகளினால் மற்ற தேசங்களைக் கவருவதில் முனைப்பாக இருந்து வருகின்றது. இந்தியாவைப் பொறுத்த வரை பல தேசங்களின் கவனத்தை ஈர்ப்பதிலும் போல தன்னுடைய சுய வளர்ச்சியிலும் முதலீடு செய்யத் தொடங்கும். அதை மனதில் கொண்டு எப்படிப்பட்ட வேலை வாய்ப்புக்கள் இருக்கும் என்று பார்ப்போம்.கணினியைப் பிரித்து மூலக் கூறுகளை மறுசுழற்சிக்குத் தயார் செய்தல்

21ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவில் கணினிக்கான மூலப்பொருட்களான கணினிக் கடத்திகள் செய்யப்பட்டு வருகின்றது. இன்றைய பற்றாக்குறையைத் தீர்க்கக் கூடிய வளமை இந்தியருக்கு உள்ளது. அமெரிக்க நாட்டிற்குத் தேவைப்படும் குறைக் கடத்திகளில் 104 பில்லியன் குறைக்கடத்திகளை இந்தியா தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே திறனலைபேசிகள் இந்தியாவில் தான் சீனாவிற்கு அடுத்ததாக உருவாகப் படுகின்றன. அதனால் மின்னணு குறைக் கடத்திகளின் தேவை நம் நாட்டுத் தொழிற்சாலைகளுக்கேத் தேவைப்படும். இன்று சந்தையில் இருக்கும் அலைபேசிகள் தொழிற்சாலைகள் இந்திய நிறுவனம் அல்ல. வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட நிறுவனங்கள்.

நம் நாட்டில் உருவான மின்னணு குறைக்கடத்திகளை அவர்களுடைய சாதனங்களில் பொருத்திக் கொள்வது வெளி நாட்டு நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் புதிதாகத் தொடங்கப்படும் ஒரு மின்னணு சாதனங்கள் நிறுவும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் உதவித் தொகை வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்து உள்ளது. உற்பத்தியாகும் எந்த ஒரு கடத்திகளையும் அரசாங்கமே வாங்கிக் கொள்ளும் என்றும் அரசு வாங்கிக் கொள்ளும் என்றும் அரசு அறிவித்து உள்ளது. எனவே கணினிகள், திறன்பேசிகள் செய்வதற்கான துணைத் தொழில் நிறுவனங்கள் வளரும். கணினி சார்ந்த அனைத்து கச்சாப் பொருட்களுக்கும் கண்டிப்பாய் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அதிகமான தேவை இருக்கும்.

கணினிக்குத் தேவையான கச்சாப் பொருட்களை உடனுக்குடன் கொடுக்க கணினியைப் பிரித்து மூலக் கூறுகளை மறுசுழற்சிக்குத் தயார் செய்தல் மிகவும் உதவிகரமாக இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் தொழில் ஒரு உச்ச நிலையை அடைந்து விடும் எனவே இன்றைய வேலைவாய்ப்பு என்று பார்க்கும் போது கணினியைப் பிரித்து மூலக் கூறுகளை மறுசுழற்சிக்குத் தயார் செய்தல் முதல் இடத்தைப் பிரிக்கின்றது. செம்பு தங்கம் அலுமினியம் துத்தநாகம் போன்ற தாதுக்களை எளிதில் பிரித்தெடுக்க இந்த கணினி மறுசுழற்சி வியாபாரம் உதவுகின்றது.மறுசுழற்சி தொழில்நுட்பம்

நம் நாட்டில் ஏற்கனவே பொதுமக்கள் மறுசுழற்சித் திட்டத்திற்குப் பழக்கப்பட்டவர்கள். ஆனாலும் அதை ஒரு நுகர்வோர் என்ற அளவிலேயே செய்கின்றோம் அதை ஒரு தொழிலாகச் செய்வோரும் தங்களுடைய மனித அறிவை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மறுசுழற்சி வர்த்தகத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வர்த்தகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ளும் ஒரு கல்வி அறிவு குறைந்தவர்களாக, அதற்கானத் தொழில்நுட்பம் பற்றிய அறிவு குறைந்தவர்களாக இருக்கின்றனர். வளங்களின் மறு சுழற்சி என்று பார்க்கும் போது நாம் எண்ணெய், சுத்திகரிப்பும் சுழற்சியும், நீர் சுத்திகரிப்பும் சுழற்சியும், நில சுத்திகரிப்பும் மறுசுழற்சியும் முன்னணியில் நிற்கின்றன. காற்றிலிருந்தும் சூரியக்கதிர்களிலிருந்தும் மின்சாரம் என்பது தாண்டி மின்சாரத்தைச் சேகரித்து வைக்கும் தொழில்நுட்பமும் மின்சாரக் கழிவுகளை மறுசுழற்சி செய்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்திலும் நாம் இன்றே நம்முடைய மனித வளங்களை முதலீடு செய்ய வேண்டும்.

வழிவழியாக செய்து வந்த தொழிலாக இல்லாமல், கணினி உதவிக் கொண்டு புத்தாக்க முறையில் சுழற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கழிவு இல்லாத நிலையில் ஒரு நிறுவனம் தன் உற்பத்தியைச் செய்ய வேண்டும் என்பது இன்றைய நிறுவனங்கள், நுகர்வோ இருவரின் நோக்கமாக உள்ளது. ஒரு கணினித் தொழில்நுட்பத்தால் மட்டுமே கழிவு இல்லாத நிலைக்கு ஒரு பொருளை மூலக்கூறுகள் வரைத் துல்லியமாக்கப் பிரித்து எடுக்க முடியும். அப்படித் துல்லியமாக பிரித்தெடுக்கக் கூடிய கணினி தொழில்நுட்பம் உருவாக்கவும் அவற்றை இயங்கச்செய்யும் திறன் மிக்க மனித வளமும் இன்னும் சில ஆண்டுகளில் நிறுவனங்களின் அடிப்படைத் தேவையாக மாறக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. ஒரு பொருளை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் செயல்படும் நிறுவனங்கள் ஒரு தனித் துறையாக வளர்ந்து நிற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

இந்த மறுசுழற்சி துறையை நோக்கிப் பல நிறுவனங்கள் இன்று தங்கள் செயல்பாட்டையும் முதலீட்டையும் மாற்றிக் கொண்டு உள்ளன. மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் Breakthrough energy என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதன் குடை கீழ் மறுசுழற்சியால் மின்சாரம் உருவாக்கும் விதம் அணுமின் சக்தி ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்தும் அதற்கான மூலதனத்தை முதலீடு செய்தும் வருகின்றார். சூழ்நிலையில் கரிமத்தை நீக்கும் விதமான தொழில்நுட்பத்திற்கும் அதை நிறுவி செயல்படுத்தும் மனித வளத்திற்குமானத் தேவை கண்டிப்பாய் சில ஆண்டுகளில் அதிகரிக்கும்.விவசாயத் தொழில்நுட்பம்

மனிதனின் எல்லா வேலைகளையும் கணினியே செய்தாலும் உலகின் பசியைக் கணினியால் தீர்க்க முடியாது. இந்தப் பேரிடர் காலத்தில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாடும் வறுமையும் உணவின் அவசியத்தை, விவசாயத்தின் அவசியத்தைக் கண்டிப்பாக நாம் அனைவரும் உணரும் படி செய்து விட்டது. வருங்காலத்தில் ஒவ்வோரு குடிமகனும் தனக்கான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளவேண்டிய நிலை வரும். அது போக உலகமெங்கும் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் பசியைப் போக்க இந்தியா போன்ற விவசாய நாடுகளின் தேவையும் அங்கு பயன்படுத்தும் தொழில்நுட்பமும் உலகிற்கே வரப்பிரசாதமாக அமையும். விளைபொருட்களை விலங்கு பறவைகள் நோயிலிருந்து இயற்கையாகக் காப்பது எப்படி அதில் என்ன மாதிரியான கணினித் தொழில்நுட்பத்தைப் புகுத்தலாம் என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 20ம் நூற்றாண்டு போல இல்லாமல் இயற்கை சார்ந்த விவசாயமே கழிவில்லா விவசாய முறை என்று அடையாளம் காட்டப்பட்டு அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வேலைகள் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகின்றன. உலகமயமான வர்த்தகத்தின் அடிப்படைக்கூறாக உள்ளூர் விவசாயமும் வணிகமும் நிறுவனங்களின் கருத்தைக் கவர ஆரம்பித்து இருக்கின்றன. வாழ்வாதாரத்திற்காக நகரங்களுக்குக் குடிபெயர்தல் என்பது மாறி நிலவளம் காப்போம் , அதைக் கழிவில்லாமல் பயன்படுத்துவோம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் விவசாயத்தில் பல புத்தாக்கத் தொழில்நுட்பத்தை நாம் வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்.

தொடர்வோம்.தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்தொடர் 17: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்தொடர் 18: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 – சுகந்தி நாடார்தொடர் 19

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 – சுகந்தி நாடார்தொடர் 20: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 – சுகந்தி நாடார்தொடர் 21: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 – சுகந்தி நாடார்தொடர் 22:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 – சுகந்தி நாடார்தொடர் 23:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 – சுகந்தி நாடார்

 தொடர் 24: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 – சுகந்தி நாடார்