இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 – சுகந்தி நாடார்மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி

இணையம் மூலம் உலக மயமாதல் மிகவும் வேகமாக விரைவாக நடந்தேறிக் கொண்டு இருக்கின்றது. உணவு உடை பழக்க வழக்கங்கள் யாவுமே அனைத்து தேசங்களிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன என்றாலும் ஒரு நாட்டின் விவசாயம் பாரம்பரிய முறைப் பயிர்களையே விளைவிக்க முடியும். ஏன் எனில் அந்தந்த தேசத்தின் மண் வளமும் காலநிலையும் அப்படிப்பட்டது. ஒரு நாட்டில் விளையும் பொருட்கள் இன்னோரு தேசத்தில் வணிகப் பயிராக வளர வைக்க முடியுமா என்றால் அது ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். மைக்ரோசாப்ட், கூகுள், முகநூல் அமேசான் ஆகியவை நுகர்வோர்களுக்கான பொழுதுபோக்கிற்காகன ஒரு தொழில்நுட்பம் என்று வைத்துக் கொண்டால் அவை உலகமயமான ஒரு பொருளாதாரத்திற்கும், வணிகத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் வித்திட்டவர்கள். ஆனால் விவசாயத் தொழில்நுட்பம் என்று பார்க்கும் போது நாம் வாழும் இடங்களுக்குத் தகுந்த ஒரு தொழில்நுட்பம் வளர வேண்டிய கட்டாயம் உள்ளது.

இன்று தொழில்நுட்ப அறிவும், முதலீடும் நிறைந்த நாடு அமெரிக்கா, அங்குள்ள விவசாயத்தின் அடிப்படை அங்கே செயல்பாட்டில் இருக்கும் விவசாயத் தொழில்நுட்பம் என்ன என்று முதலில் பார்ப்போம். அடுத்ததாக சீன தேசத்து விவசாய முறைகளும், அதற்கானத் தொழில்நுட்பமும் என்ன என்று பார்ப்போம். அப்போது தான் நம் தேசத்திற்குத் தேவையான விவசாயத் தொழில்நுட்பம் என்ன என்பதை நம்மால் யோசிக்க முடியும், அதற்கு ஏற்ப மாணவர்களின் வாழ்க்கைக் கல்வியையும், தொழில்நுட்பக் கல்வியையும் நாம் ஒரு சேர மாணவர்களுக்குக் கொண்டு செல்ல முடியும்

அமெரிக்க விவசாய நிலங்கள் முழுக்க முழுக்க குடும்பங்கள் சார்ந்தவையாக உள்ளன. அவர்கள் பெரும்பாலும் உணவுப் பொருட்களைப் பயிருடுவதை விட இறைச்சிகாகவும், பாலுக்காகவும், தீவனங்களுக்காகவும், பழங்களுக்காகவும் விவசாயம் செய்கின்றனர். கோதுமையும், அரிசியும் தானியமாக விளைவிக்கப்படுகின்றன. புகையிலை, பருத்தி ஆகியப் பணப்பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. ஆனால் விவசாயத்திலிருந்து வரும் வருமானத்தில் 75% இறைச்சியிலிருந்தும், தீவனத்திலிருந்தும் வருகின்றன.. விவசாய தொழிற்சாலைகள் மூலம் இங்கு உணவு தயாரிக்கப்படுகின்றது. அதிக அளவு உணவு ஒரு சில நிறுவனங்களாலே குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றது. காலை முதல் இரவு வரை மக்கள் உண்ணும் உணவுகளாக இருந்தாலும் விலங்குகள், பறவைகள் உண்ணும் உணவாக இருந்தாலும் அவை தொழிற்சாலையில் பெரும் அளவில் தயாரிக்கப்பட்டு பின் பல விதங்களில் பொட்டணம் கட்டப்பட்டு குளிர்சாதன அறையில் நாடு எங்கும் விநியோகிக்கப்படுகின்றது.உழவர் சந்தை என்ற பெயரில் நுகர்வோர்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி பழங்களை வாரத்திற்கு ஒரு முறை சென்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ஆனால் அடிப்படையில் அமெரிக்காவின் விவசாயம் மிகப்பெரிய தொழிநிறுவனங்களுக்காகவே நடக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. நிறுவனங்களுக்காக நடக்கும் விவசாயம், வளர்க்கபடும் கால்நடைகளின் நலன் அங்கே முக்கியமாக இருக்காது. சிறிய இடத்தில் அதிகமான விலங்குகளும் கோழிகளும் வளர்க்கப்படும் அவை குறிப்பிட்ட எடையை அடைந்தவுடன் அவை தொழிற்சாலைக்கு விற்கப்படும் எனவே வளரும் பிராணிகள் ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டு வளரும் கால்நடைகளுக்கு நோய் வராமல் இருக்கவும் அவற்றின் எடை அதிகமாக இருக்கவும் தீவனத்தில் மருந்துகள் சேர்க்கபப்டுகின்றன. இவைகளின் இறைச்சி பால் முட்டை ஆகியவையே மனிதனுக்கும் உணவாக மாறுகின்றன. இந்த மாதிரியான விவசாய சூழலில் அமெரிக்க விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னுமொரு பிரச்சனை வேலை செய்யும் ஆட்கள். பொதுவாக அமெரிக்காவில் மக்கள்தொகை மிகக் குறைவு அதிலும் உடல்வருத்தி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால் மெக்ஸிக்கோ, இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் குடியேறிவர்க்கத்தினரையே வேலைக்கு வைக்கின்றனர். இந்தமாதிரியான சூழ்நிலையில் நிலையான விவசாயத்தின் அவசியத்தை உணர்ந்து இயற்கை வளங்களைப் பேணிப்பாதுக்காக்கும் படியான விவசாயத்திற்கு தற்போது அரசும் மக்களும் நல்ல வரவேற்பை தந்துள்ளன. நீர் வளம் குறைந்த வறண்ட பகுதிகளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் நைட்ரேட் உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை . சதுப்பு நிலங்களில் வேறு பயிர்கள் பயிரிடப்டுவதில்லை. 

அமெரிக்க விவசாயத் துறை விவசாயத் தொழிலை மேம்படுத்த பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. இந்த ஆராய்ச்சிகள் விவசாயத்தை இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு விவசாயிகளைப் பாதுகாக்க உதவி செய்கிறது, கொரானா காலத்தில் உணவு இன்றி அவதிப்படும் எட்டு மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் செய்வதோடு தொழில்நுட்ப ஆராய்ச்சியையும் செய்து வருகிறது. 2050ம் ஆண்டு வாக்கில் உலக மக்கள்த் தொகை 2.2 பில்லியனாக உயரும் என்று நகர்புற மக்கள் தொகை 2.5 பில்லியனாக உயரும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. உலகில் விளையும் பயிற்கலீல் 17% அறுவடையில் நாசம் அடையும் என்றும் ஒரு நபருக்கான விவசாயநிலம் 20% குறையும் என்றும் 5 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் நீர் இல்லாமல் அவதிப்படுவார்கள் என்றும் தரவுகள் காட்டுகின்றன.அப்படிப்பட்ட ஒரு சூழலில் விவசாய நிலங்கள் அழியாமல் காப்பது மட்டுமல்லாமல், இயற்கை சூழலையும் நாம் காப்பாற்றினால் மட்டும் தான் உலக மக்கள் பட்டினியால் வாடாமல் இருக்க முடியும். 

தொழில் புரட்சி காரணமாக இயற்கைக்கு நாம் செய்த கொடுமையை மாற்றி அமைக்க கணினித் தொழில்நுட்பம் உதவும். அதன் முதல் கட்டமாக நம்மைச் சுழ்ந்திருக்கும் கார்பனை சுற்றுச்சூழலிலிருந்து எடுப்பது ஒரு முக்கியமானத் தொழில்நுட்பமாகும்.இரண்டாவது நம் தொழிற்சாலைகளிலிருந்தும் வாகனங்களிடமிருந்தும் வெளிவரும் கரியமல வாயுவைக் குறைக்கும் தொழில்நுட்பமாகும். இயற்கையில் காடுகளும் விவசாய நிலங்களும் சுற்றுச் சூழலில் உள்ள மாசுக்காற்றைக் கட்டுப்படுத்தும். விவசாயத்திற்குத் தேவையான மண் வளத்தை அதிகரிக்க நமக்குக் கரிமம் தேவைப்படுகின்றது, தொழில்புரட்ச்சியால் பாழாய்ப் போன மண் வளத்தை சரி செய்ய இப்போது பல முயற்சிகள் அமெரிக்கா எங்கும் நடைபெற்று வருகிறது.(soil restoration technology

இந்தத் தொழில் நுட்பத்தின் அடிப்படை தொழில் புரட்சிக்கு முன்னால் நடை பெற்று வந்த இயற்கை விவசாய முறையை தூரிதப்படுத்துவது. இந்த செயல்களில் அமெரிக்க, வட சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. கடந்த ஒரு நூற்றாண்டில் செய்த செயல்களின் விளைவுகளை கணினித் தொழில்நுட்பம் வழியாகவே மாற்ற முடியும். ஆகாயத்தில் உள்ள கரிம வாயுவை ஒரு மரம் எடுத்து தனக்குத் தேவையான அளவு எடுத்துக் கொண்டு தனக்குத் தேவையில்லாத கரிமத்தை மண்ணுக்குள் வேர் வழி விடுகின்றது. இந்த செயலை கணினி மூலம் செய்ய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. எப்படி மனிதன் செய்யும் செயல்களை கணினி கொண்டு செய்ய வைக்கின்றோமோ அதே போல கணினி கொண்டு மரம் செய்யும் வேலைகளை செய்ய கணினி செய்ய ஆராய்ச்சிகள் நடந்து கொன்டு இருக்கின்றன. மரங்கள் செய்யும் வேலையை கணினி செய்யும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் சோளம், கரும்பு, எண்ணெய் தரும் பயிர்கள் மண்ணில் உள்ள கரிமத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் பெரிய பங்கு வகிக்கின்றது என்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இவை பராமரிப்பதற்கு எளிதாகவும் அதே சமயம் கச்சா எண்ணெய்க்கு பதிலாக இன்னுமொரு கச்சாப் பொருளாகவும் இவை பயன்படுத்தலாம்.

அடுத்ததாக சுற்றுப்புற சூழலில் உள்ள கரிமத்தை எடுக்கும் ஒரு தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் MIT பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. மின்ன்ணு வேதியல் தகடுகளைக் கொன்டு அமைக்கப்பட்ட மின்கலம் சுற்றுச்சூழலில் உள்ள கரிமல வாயுவைப் பிரித்து தனி கரிமமாக சேகரித்துத் தருகின்றது. மேலும் தகவல்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு அமெரிக்காவில் நிகழ்ந்தாலும் அதன் உற்பத்தி வணிக அளவில் வளரக்கூடும் என்று நம்பிக்கையுடன் எதிர் பார்க்கப்படுகின்றது. மேலதிகத் தகவல்களுக்கு இந்த இணையச்சுட்டியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

காரத்தன்மையுடைய நீரை alkaline சுற்றுச் சூழலுக்குள் வீசி கரிமத்தை ஒரு திடக் கனிமமாக மாற்றும் தொழில்நுட்பமும் தற்போது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தைச் சார்ந்த சிறு சிறு நிறுவனங்கள் இப்போது உருவாகி சூழலில் உள்ளக் கரிமத்தைக் கனிமமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக் கொண்ட கருவிகளைத் தயாரித்து வருகின்றன.இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்க ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள கழிவு நீர்த்தேக்கம் உடையும் நிலையில் உள்ளது. உப்புநீர், கழிவு நீர் பாஸ்பரஸ் சுரங்கத்திலிருந்து வெளியே வரும் கழிவு நீர் தேக்க நீர் உடைந்து வெள்ள அபாயம் ஏற்படும் நிலையில் உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப்பகுதியில் வாழும் முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறையின் கைதிகள் மேல் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. இந்த நீர் தேக்கம் உடைந்தால் எரிவாயுவை எடுத்துச்செல்லும் குழாய்களும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகின்றது. நீர் தேக்கம் உடையும் முன் நீரை வெளீயேற்ற பல முயற்சிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் நீர்தேக்கம் உடையாமல் காக்க்ப்படும் அது மட்டுமில்லாமல் நீர்தேக்கத்தை சுத்தம் செய்ய வேண்டிய வேலைகளை அரசு எடுத்துச் செய்யும் என்று நம்பப்படுகின்றது. 

மனித வளத்தை அடுத்து மிக முக்கியமான மண் வளத்தைப் பேணிப் பாதுகாக்க இன்னும் என்னென்ன தொழில்நுட்பங்கள் ஆரம்பக் கட்ட வேலையில் இருக்கின்றன என்று அடுத்துப் பார்க்கலாம்.தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்தொடர் 17: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்தொடர் 18: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 – சுகந்தி நாடார்தொடர் 19

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 – சுகந்தி நாடார்தொடர் 20: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 – சுகந்தி நாடார்தொடர் 21: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 – சுகந்தி நாடார்தொடர் 22:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 – சுகந்தி நாடார்தொடர் 23:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 – சுகந்தி நாடார்

 தொடர் 24: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 – சுகந்தி நாடார்

 தொடர் 25: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 – சுகந்தி நாடார்