இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 – சுகந்தி நாடார்



விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு

செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் வளர்ந்து மனிதன் செய்யும் பல காரியங்களை எளிமையாக மாற்றியதோடு மனிதனுக்குப் போட்டிப்போடும் வகையில் வளர்ந்துள்ளன. இந்த நிலையில் வேளாண்மைத் துறையில் என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் உள்ளன என்று நாம் பார்க்கலாம். கச்சா எண்ணெய் பயன்பாட்டால் அழிந்து விட்ட இயற்கையையும், சுற்றுச்சூழலையும் மீட்டெடுக்கவும், பாராம்பரிய விவசாயத்தை வளர்ப்பதற்குமான தொழில்நுட்பத்திற்கான முக்கியத்துவத்தை பல நாடுகள் உணர்ந்து வருகின்றன. கணினி செயற்கை அறிவுத் திறனில் இன்று முன்னணியில் வளர்ந்து நிற்கும் ஒரு நாடாக சீனா திகழ்கின்றது. சீனாவில் தயாரிக்கப்படும் திட்டம் 2025ன் படி ஒரு எண்ணியியல் வணிகப்பாதையை சீனா உருவாக்கி வருகின்றது, அது புராதாண சீனாவின் பட்டு வியாபார சாலையை ஒத்ததாக இருக்க்கும் என்றத் திட்டத்தின் கீழ் 2012ம் ஆண்டிலிருந்து அதற்கான முதலீட்டையும் திறன் வளர்ப்பையும் திட்டங்களையும் சீன அரசு மேற்கொண்டு வருகின்றது. இதனால் சைனாவின் அடிப்படை விவசாய முறையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1978ம் ஆண்டிலிருந்து சீனாவின் விவசாயம் சந்தைப் படுத்துதலை நோக்கி இருந்த காரணத்தால் சிறு விறு விவசாயிகளுக்கு ஒரளவே சுதந்திரம் கிடைத்தது. அரசு திட்டங்களுக்கு ஏற்றபடியே விவசாயம் நடந்து வருகின்றது. சீனாவின் தட்பவெட்பநிலை, புவியின் அமைப்பு ஆகியவற்றின் காரணமாக நாட்டின் மொத்தப்பரப்பில் மொத்தம் 10%விதம் தான் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. அரிசி சீனாவின் முக்கியமான ஒரு விளைபொருள் ஆகும். கோதுமை, திணை ஆகியவையும் விளைவிக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பத்தை சீனா விவசாயத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் ஏழ்மையைக் குறைக்கும் விதமாக காகிதப் பணங்களை நீக்கி மின்னணு பணப்பரிமாற்றத்தை சீனா அமுல்படுத்தி வருகின்றது. ஆனால் ஏழ்மை ஒழிவதற்கு பதில் சீனாவில் உள்ள யாசகர்கள் மின்னணு பணப்பைகளை (e wallet) எடுத்துச் செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த அளவு மின்னணு பயன்பாடு சீனாவில் அதிக அளவு உள்ளது.

ஆனாலும் கிராமப்புறங்களிலிருந்து விவசாயம் மக்கள் தொகை குறைந்து வருகின்றது. நகரங்களுக்கு சென்று செயற்கை கணினி தொழில்நுட்பத்தில் வேலை செய்ய விருப்பபடும் இளைஞர்கள் அதிகமாக இருப்பதனாலும் இன்றைய மக்கள் தொகையில் மூத்தவர்கள் அதிகமாக இருப்பதனால் வருங்காலத்தில் வளர்ச்சி கொடுக்கக் கூடிய ஒரு மனித வளம் குறைவாகவே இருக்கும். ரீங்காரமிட்டமிட்டபடி வானில் பறக்கும் கணினி புகைப்பட கருவிகள் (drone) முக்கியமாகப் பயன் படுத்தப்படுகின்றன. இந்தக் கருவிகள் பல ஹெக்டர் பரப்பளவை வேகமாக கவனித்து செயற்கை உரங்களை இடுவதில் விவசாயிகளுக்கு உதவுகின்றன.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் நான்கு. அமெரிக்க விவசாயிகளின் முக்கிய உற்பத்தி இறைச்சியே தவிர தானியங்கள் இல்லை. சீனாவில் விவசாயம் வெற்றிகரமாக நடந்ததாலும் அதை நடத்தும் தலைமுறை குறைந்து வருகின்றது. உரங்களை சார்ந்த விவசாயம் என்பதால் மண் வளமும் குறைந்து விடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர், இயற்கையையும் சுற்றுச்சூழலையும் தொழில்நுட்பத்தையும் அது சார்ந்த நுகர்வோர் பொருட்களையுமே. அப்படிப்பட்ட இயற்கை சார்ந்து பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்யும் வாய்ப்பு நம் நாட்டினருக்கு கண்டிப்பாக உள்ளது.



இந்திய விவசாயம் அதன் மொழி அமைப்பைப் போல பிராந்திய அமைப்பைச்சார்ந்தது. அதுவும் இப்போது பாரம்பரிய விவசாயத்திற்கு மக்களின் கவனம் திரும்பி உள்ளது. வருங்கால தலைமுறையினரின் உணவுத் தேவையையும் அவர்களின் நுகர்வோர் பழக்க முறையும் இன்றைய இந்திய பாரம்பரிய விவசாய வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமைகின்றது. இதுவரை நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரிய வழி முறைகளை கணினி முறைக்குள் கொண்டு செல்வது நம்முடிய இன்றைய முக்கிய வேலையாகும். வட்டார விவசாய முறைகளை பதிவு செய்து அவற்றிகான உரிமம் பெறுவதும் மிக மிக அவசியமாகும். அதிலும் அமெரிக்க விவசாயிகள் இயற்கை முறைக்கு மாறி வர முயற்சிக்கும் போது அந்த தொழில்நிறுவனங்கள் தங்களுக்கான மூலப்பொருளை இந்தியாவில் தேட அதிகமாக வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டிய நிலையில் உள்ளோம். நம் மொழியையும் பண்பாட்டையும் காப்பது போல நம் விவசாய முறைகளையும் நாம் கணினி அறிவிற்கு கொண்டு செல்வதன் மூலம் பேணிப்பாதுகாப்பதோடு நம்முடைய விவசாயத்திலும் புதியதாக வேலை வாய்ப்பைப் பெருக்கலாம். உதாரணத்திற்கு கர்நாடாக மாநிலத்திலிருந்து நடக்கும் நிறுவனத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். இங்கே அந்த நிறுவனத்தின் இணைய தளம். நம் பாரம்பரிய உணவுப் பொருட்களை விற்பனை செய்து இலாம் ஈட்டி வருகிறது இந்நிறுவனம்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறுவது என்ன வென்றால் தொழில்நுட்பத்தின் உதவியால் கழிவில்லாத நிலையான விவசாயம் வெற்றிகரமாக நடைபெற முடியும். நமது இயற்கை வளங்களை அழிக்காமல் நமது வருங்கால உணவுத் தேவையை நாம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்கிறார். இறைச்சிக்கு பதிலாக தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தை வைத்து, இறைச்சியைப் போல சுவையுள்ள உணவுப்பதார்த்தங்களை தயாரிக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றியும் அணுமின்சக்தி பற்றிய தொழில்நுட்பங்களிலும் அவர் ஆராய்ச்சிகளை வரவேற்கின்றார். அப்படிப்பட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தும் நிறுவனங்களில் முதலீடும் செய்து வருகின்றார். மேலும் விவரங்களுக்கு Beyond Meat – Go Beyond® கோழியின் செல்லிலிருந்து கூறுகளைப் பிரித்தெடுத்து செயற்கையாக கோழி இறைச்சியை உருவாக்கும் தொழில்நுட்பமும் உருவாகி வருகின்றது.

மேலும் விவரங்களுக்கு JUST Egg | Made from plants சென்று பார்க்கவும். அதாவது புரதச்சத்தை உருவாக்கும் விளைநிலங்களுக்கும் அதை இயற்கை சார்ந்து தயாரிக்கும் விவசாயிகளுக்குமான பொருளாதாரத் தேவை அதிகரிக்கின்றது. பில் கேட்ஸ் அவர்களின் கனவை நிஜமாக்க்கும் அனைத்து தகுதிகளும் நம் விவசாயத் தலைமுறைக்கு கண்டிப்பாய் இருக்கின்றது. நாம் சிறிது மாற்றி யோசிக்க வேண்டும். கணினித் தொழில்நுட்பத்தை பொழுது போக்கிற்கு மட்டுமல்லாமல் நம் வாழ்க்கைத் திறனை வளர்க்கும் விதமாக செயல் படுத்த அறிந்து இருக்க வேண்டும். பராம்பரிய முறை விவவாய முறைகளை கணினிக்கு எடுத்துச் செல்லும் ஒரு அடிப்படைத் தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும், விவசாய தொழில்நுட்பங்கள் பற்றி மாணவர்களின் வாழ்க்கைக் கல்வியாக இருக்க வேண்டும்.




இன்றைய இந்திய விவசாயத்தின் அடிப்படையில் விவசாயத் தொழில்நுட்பத்தை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1. விவசாயத்தில் மனிதனுக்கு உதவியாக செயல் படும் தொழில்நுட்பம்

விவசாயத்தின் வளங்களை கணினித் தரவுகளாக சேமித்து வைத்தல்

விவசாயத்தில் சுகாதார பழக்க வழக்கங்கள் பயிற்சிகளை கொண்டு வருதல்

கொள் முதல் விவரங்களை கணினிப்படுத்துதல்

விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைத்தல்

2. விவசாயத்தில் மனிதனுக்கு பதிலாக கணினி செய்யும் வேலைகளுக்கானத் தொழில் நுட்பம்

பூச்சிகளை விரட்டவும் உரங்களை இடவும் உதவும் தானியங்கி பறக்கும் புகைப்படக் கருவிகள்

விளை பொருட்களைப் பிரித்து எடுக்கும் தானியங்கி தொழில்நுட்பம்

விளைபொருட்களை சுத்தம் செய்யும் தொழில்நுட்பம்

சுழ்வியலுக்கு ஏற்றவாறு விவசாயத்தை மாற்றும் தொழில்நுட்பம்

சூழ்வியல் வானிலைக் காரணிகளிலிருந்து விவசாயத்தைக் காப்பாற்றி மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பம்

இயற்கையையும் சூழ்வியலையும் சீராக்கும் புத்தாக்கத் திட்டங்கள்

இந்தத் திட்டங்கள் எல்லாம் வெறும் எழுத்தில் மட்டுமில்லாமல் அதற்கான ஆர்வத்தை மாணவர்களைத் தூண்டி அதற்கான ஆராய்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்துவது நம் ஆசிரியர்களின் பொறுப்பாகும். ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே வேலைக் கிடைக்கும் என்ற மனநிலையை மாறி நம் பண்பாட்டையும் பாராம்பரியத்தையும் காப்பாற்ற தொழில்நுட்பம் பயில வேண்டும் என்ற ஈடுபாடு ஒவ்வோரு மாணவரிடமும் வளர வேண்டும்.



தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்



தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்



தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்



தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்



தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்



தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்



தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்



தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்



தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்



தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்



தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்



தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்



தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்



தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்



தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்



தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்



தொடர் 17: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்



தொடர் 18: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 – சுகந்தி நாடார்



தொடர் 19

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 – சுகந்தி நாடார்



தொடர் 20: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 – சுகந்தி நாடார்



தொடர் 21: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 – சுகந்தி நாடார்



தொடர் 22:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 – சுகந்தி நாடார்



தொடர் 23:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 – சுகந்தி நாடார்

 



தொடர் 24: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 – சுகந்தி நாடார்

 



தொடர் 25: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 – சுகந்தி நாடார்



தொடர் 26: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 – சுகந்தி நாடார்



Show 5 Comments

5 Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *