இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28– சுகந்தி நாடார்உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்

எதிர் காலத்தில் என்ன மாதிரியான வேலைவாய்ப்பிற்கு இன்றைய மாணவர்களை ஒரு தரம் மிக்க மனித வளமாக மாற்றுவது என்பதைத் தான் நாம் கடந்த மூன்று வாரங்களாகப் பார்த்துக் கொண்டு இருந்தோம். கல்வி மருத்துவம் நுகர்வோ பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களைத் தாண்டி மறுசுழற்சித் தொழில்நுட்பம் சூழலியல் தொழில்நுட்பம் விவசாயத் தொழில்நுட்பம் என்று பலவகையிலும் கணினித் தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மனிதன் இயற்கைக்குச் செய்த கேடுகளை சீர் செய்ய அதிவேகமாக வேலை செய்யும் கணினித் தொழில்நுட்பம் உதவி செய்கின்றது என்பதையும் நாம் பார்த்தோ, இன்றைய உலகில் செயற்கை அறிவுத் தொழில்நுட்பமும் முன்னணியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கெல்லாம் காரணம் இன்று வளர்ந்து நிற்கும் இணையத் தொழில்நுட்பம் என்றால் மிகையாகாது. மருத்துவம் இராணுவம் நுகர்வோர் பொருளாதாரம் கல்வி என்று மனிதனின் எல்லா வாழ்க்கை நிலையிலும் இணையத்தால் நாம் ஒருவரோடு ஒருவர் இணைவது மட்டுமன்றி செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்திலும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இன்றைய செயற்கை அறிவுத் திறனில் வலுப்பெற்று இருக்கும் நாடு சீனா என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் சிறுவயது முதலே மாணவர்களுக்குக் கணினியின் அடிப்படை மட்டுமின்றி கணினி நிரல் எழுதுதல், செயற்கை அறிவுத் திறன் ஆகியவற்றை உருவாக்கும் இளைய சமுதாயத்தினரை சீன அரசு திட்டமிட்டு உருவாக்கி வருவது தான் காரணம் உண்ண உணவு உற்பத்தி செய்வது போல செயற்கை அறிவுத் திறன் கொண்ட கருவிகளை உருவாக்குவதற்குச் சீன அரசு அனைத்து வழிகளையும் கையாண்டு வருகின்றது. இதே நேரம் நுகர்வோர் அனைவரைப்பற்றியும் அறிந்து கொள்ளும் வண்ணம் அதற்கான செயற்கை அறிவுத்திறனை அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.

இந்தியா என்று பார்க்கும் போது உலகின் கணினி நிரல் எழுதுவோரின் மக்கள் தொலையில் பாதிக்கு மேல் இந்தியர்களாக இருந்தும் இந்திய நாட்டில் கணினித் தொழில்நுட்பம் தற்போது முன்னிலையில் இல்லை என்றாலும் அது மாற வேண்டிய கட்டாயம் எதிர்காலத்தில் அவசியம் வரும். ஏன்?

இந்தியப் பொருளாதாரம் பல மொழிகளைப் பழக்க வழக்கங்களைக் கொண்ட மாநிலங்களைச் சார்ந்தது என்றாலும் ஆங்கில மொழி மட்டுமே நம்முடைய பொது மொழியாக பல ஆண்டுகளாக இருக்கின்ற காரணத்தால் ஆங்கில மொழித் தொழில்நுட்பமே நமக்கு இன்றைக்குப் போதுமானதாக இருக்கின்றது. அந்நிய தொழில்நுட்ப நிறுவனங்களும் ஓரளவு நம்முடைய மொழிகளைக் கருவிகளில் கொடுத்தாலும் ஆங்கில மொழிக்கு இணையாக நம் நாட்டு மொழிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து விடவில்லை. அதை வளர்க்க வேண்டிய கட்டாயமும் அமெரிக்க நாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையும் இல்லை. அவர்களுக்கு தங்களுடிஅய விளம்பரங்களை விற்கும் நுகர்வோர் தேவை அவ்வளவே. ஆனால் நம் நாட்டுடையப் பொருளாதாரம் உள்ளூர் வியாபாரத்தையும் விவசாயத்தையும் சார்ந்தது. என்னதான் வால் மார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும் அவற்றால் அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைப்பது போல நம் இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேராக மாற முடியவில்லை காரணம் நம்முடைய கலாச்சாரமும் பல மொழிப் பண்பாடும் என்றால் இன்னொரு காரணம் அவர்கள் வியாபாரம் நடத்தும் முறை. அமெரிக்க நிறுவனங்கள் இலாபம். சட்டம் இவை இரண்டையுமே முக்கியமாகக் கொண்டுசெயல்படுபவை. எனவே எல்லாவற்றிற்கும் சரியான திட்டமிடுதல் இருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் அவர்கள் நிறுவனத்தில் சேர இருக்கின்றார் என்றோ அல்லது வாடிக்கையாளர்களிடம் பேச வேண்டும் என்றோ வைத்துக் கொள்வோம். அவர் கள் என்ன பேச வேண்டும் என்பதை முன்கூட்டிய எழுதிக் கொடுத்து இருப்பார்கள். அதில் இருப்பதை அப்படியேப் படிக்க வேண்டும் அவ்வளவு தான். இந்த சரியான திட்டமிடல் ஒவ்வோரு படியாக எழுதப்பட்டு இருப்பதால் எல்லாவித சிக்கலான சூழ்நிலைகளுக்கும் தீர்வு எழுதி வைத்து இருப்பர். அதனால் படிப்படியான திட்டமிடலைக் கணினிக்குச் சொல்லிக் கொடுப்பதும் எளிதாக இருந்தது. ஆனால் அதே மாதிரியான தொழில்நுட்பத்தை நம் நாட்டில் மேலோட்ட,மாகப் பயன்படுத்த முடியுமே தவிர அதை மிகவும் ஆணித்தரமாகப் பொருளாதாரத்திற்குள் நுழைக்க முடியாது.இன்னும் விளக்கிச் சொல்லப் போனால்அண்மையைல் கூகுள் நிறுவனம் 2018ம் ஆண்டு ஒருவரின் கண்களைப் பரிசோதிக்கும் ஒரு கருவியைக் கொண்டு அவரது இதயத்தின் நலக்குறைவை எளிதாகக் கண்டு கொள்ளக் கூடிய ஒரு செயற்கை அறிவு சாதனத்தைக் கண்டு பிடித்து விட்டதாக உலகிற்கு அறிவித்து இருந்தது. சக்கரை நோயினால் கண் பார்வை இழப்போருக்கு உதவியாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திலும் இந்தியாவில் சங்கரா மருத்துவமனைகளிலும் பயன்படுத்திப் பார்க்கப்பட்டது. அந்த கருவி பரிசோதனைக் கூடத்தில் சரியாக வேலைபார்த்தாலும் வெளியே வேலை செய்யும் போது பல இடர்பாடுகளைச் சந்தித்தது. அதாவது கண்களைக் கண்டு பரிசோதிக்கும் போது வருடிக்குத் தேவையான ஒளி சில சமயம் சரியாக கிடைக்கவில்லை என்றாலோ அல்லது பயன்படுத்துபவர் கருவியைச் சரியாகப் பிடிக்கவில்லை என்றாலோ செயற்கை அறிவுத் திறனுக்குத் தேவையான தரவுகள் தவறுதலாக வர வாய்ப்புக்கள் இருந்தன. இதனால் அந்தக் கருவி எதிர் பார்த்ததைப் போல பெரும் வெற்றியை மருத்துவ உலகிற்குக் கொண்டு வரவில்லை.

எனவே தான் நம் நாட்டின் கலாச்சாரம் மொழி பண்பாடு பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட செயற்கை அறிவுத் திறன் வளரவும், கணினித் தொழில்நுட்பம் வளரவும் அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன. இன்று பல வணிகங்கள் புலனம் வழியும் அதைத் தாண்டி முகநூல் வழியாகவும் நடந்து கொண்டு தான் உள்ளன அதைத் தாண்டி உள்ளீர் நுகர்வோரின் கணினித் தொழில்நுட்பத்திற்கான தேவை கண்டிப்பாக அதிகரிக்கும். அதிலும் இப்போது நடைபெற்று கொண்டு வரும் பேரிடர் காலங்களில் பிரயாணமும் வர்த்தகமும் , முடக்கப்படும் சூழ்நிலையிலும் அந்தந்த நாட்டுச் சட்டஙள் மாறுபடும் போதும் கண்டிப்பாய் இன்றைய ஆங்கிலத் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்ட பிராந்தியத் தொழில்நுட்பங்கள் வளரத்தான் செய்யும், முக்கியமாக கணினி செய்யத் தேவையான கச்சாப்பொருட்கள் கிடைப்பது அரிதாகிக் கொண்டு இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் கணினியின் விலை அதிகமாகாமல் இருக்க வேண்டும் எனில் மக்கள் சீனத் தயாரிப்புக்களை ஒதுக்கி இந்தியாவிலேயேத் தயாரிக்கப்பட்ட பொருட்களைத் தான் வாங்கு வர். அப்படிப்பட்ட எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை எதிர் நோக்கக் கூடிய மாணவர்களை நாம் தயார்ப்படுத்த வேண்டும்.அதில் முக்கியமாகக் கணினி நிரலெழுதும் தன்மை என்பது நம் தொடக்கக் கல்வியிலிருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்கென தனி வகுப்புக்கள் அமைத்தாலும் இது அனைத்து பாடத்திட்டங்களிலும் ஒரு பகுதியாக அமைய வேண்டும். கணினியையும் பலகைக் கணினியையும் கல்வியின் ஒரு துணைக்கருவியாகப் பயன்படுத்துவதிலிருந்து தன்னைச்சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் புரிந்து அதற்கு ஏற்ப தேவையான வளங்களை ஏற்படுத்தித் தருதல், எதையும் ஆராய்ச்சியுடன் ஏற்கும் தன்மை, தான் ஆராய்ந்து அறிந்ததைத் திறம்பட எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் பிறருக்குத் தெளிவு படுத்தும் திறமை. பிரச்சனைகளைக் கண்டறிந்து அதை சமூகத்தின் பார்வையில் சரியான படி தீர்த்து வைக்கும் தன்மை ஆகியவை அடிப்படைத் திறமைகளாக மாணவர்களுக்கு எல்லாப் பாடங்களிலும் போதிக்கப் பட வேண்டும். இதைச் சொல்லித் தருவது தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வதைப் போல மிக முக்கியமானது ஆகும்.

இவை தவிர ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை ஒரு ஆசிரியர் போல யோசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏன் எனில் கணினி நிரல் எழுதும் தன்மை என்பது கணினிக்குக் கட்டளைகளைப் பிறப்பிப்பது ஆகும் ஒரு உயிரற்ற பொருளை உயிர் உள்ள பொருள் போல் யோசித்துச் செயல்பட வைக்க வேண்டும் என்றால் எந்த அளவிற்கு நுண்ணீயமாகத் திட்டமிடல் வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்

தேர்வு மட்டுமே முக்கியமாக இருக்கும் கல்விச்சூழ்நிலையில் கணினி நிரலாக்கம் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஒரு தனிப்பாடமாக மட்டும் நடத்தப்படுவது ஏன்? இதை எப்படி மாற்றலா? தொடர்வோம்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்தொடர் 17: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்தொடர் 18: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 – சுகந்தி நாடார்தொடர் 19

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 – சுகந்தி நாடார்தொடர் 20: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 – சுகந்தி நாடார்தொடர் 21: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 – சுகந்தி நாடார்தொடர் 22:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 – சுகந்தி நாடார்தொடர் 23:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 – சுகந்தி நாடார்

 தொடர் 24: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 – சுகந்தி நாடார்

 தொடர் 25: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 – சுகந்தி நாடார்தொடர் 26: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 – சுகந்தி நாடார்தொடர் 27: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 – சுகந்தி நாடார்