இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 – சுகந்தி நாடார்கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?

கணினி நிரலாக்கம் என்பது அடிப்படையில் மனிதன் ஒரு கணினி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைக் கணினிக்குப் புரியும் வகையில் சொல்லித்தருவது ஆகும். மனிதனின் கட்டளைகளைப் புரிந்து அந்தக் கணினி செயலாற்றுவதில் தான் மனிதன் கணினிக்குக் கொடுத்த கட்டளை சரியானதா தவறானதா என்று தெரியும், நாம் உள்ளிடும் தரவுகளை க் கொண்டு கணினி என்ன மாதிரியான வெளிப்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று நாம் கட்டளைக் கொடுத்தோமேயானால் அந்தக் கணினியின் வெளிப்பாடு எப்படி இருக்கின்றது என்று தெரிந்தபின் தான் கட்டளைகள் சரியாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்று தெரியும்.

உதாரணத்திற்கு நாம் ஒருவருக்கு இரசம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று சமையல் குறிப்புக் கொடுக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் அவருக்கு இரசத்திற்குத் தேவையான பொருட்களையும் கூறி அவற்றை எப்படி வரிசையாக இட்டு இரசம் செய்ய வேண்டும் என்பதைப் படிப்படியாக விளக்க வேண்டும். இதில் நாம் ஏதாவது ஒரு பொருளை விட்டு விட்டாலோ அல்லது ஏதாவது ஒரு அளவை மாற்றிச் சொன்னாலோ அல்லது படிப்படியாகச் செய்ய வேண்டிய செயல்களை மாற்றி மாற்றித் தந்தாலோ அங்கு இரசம் ஒழுங்காக ருசியாக இருக்காது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இப்படி நாம் இரசம் செய்வதை எல்லாப் பொருட்களையும் அடுக்கி அதைப் படிப்படியாகச் செய்வதைக் கணினிக்குச் சொல்லிக் கொடுத்தோமேயானால் அது தான் இரசம் செய்ய வேண்டிய அல்காரிதம் எனப்படும் கணினி நிரல் எழுதும் தன்மை. இரசம் செய்வதற்குத் தேவையான பொருட்களை நாம் தரவுகள் என்று கொள்ளலாம்.

அப்படியானால் ஒரு மொழியை எழுதப்படித்துப் புரிந்து செயல்படுகின்ற தன்மை உள்ள எவராலும் இரம் செய்வது எப்படி என்ற சமையல் குறிப்பை வைத்து இரசம் செய்யலாம். அதனால் இங்கு இரசம் செய்யத் தேவையானது இரசம் செய்வது எப்படி என்பது அல்ல? இரசம் செய்வது எப்படி என்ற குறிப்பைப் படித்துப் புரிந்து செயல்படுத்துதல். செயல்படுத்தும் போது வரும் பிரச்சனைகளை எதிர் நோக்கிச் சமாளித்தல் என்பது ஆகும். கணினி நிரல் எழுதும் தன்மையில் படித்தல் புரிதல் செயல் படுத்துதல் பிரச்சனைகளை எதிர்நோக்குதல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கா காணுதல் என்ற திறன் செயல்பாட்டினை நாம் எவ்வாறு எப்படி மாணவர்களுக்குக் கற்பிக்கலாம் என்பதை வகுப்பு வாரியாக நாம் ஆராயலாம். அதன் மூலம் கணினி அறிவு என்பது கணினி வகுப்புக்களில் மட்டும் கொடுக்கப்பட வேண்டியது என்ற நம்முடைய எண்ணம் மாறலாம். வரும் காலங்களில் இயற்கையாகவே கணினியை இயக்கும் தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு எடுத்துக்காட்டோடு பார்க்கலாம்.இன்று உலகிலேயே கணினி மூலம் செலுத்தப்படும் ஒரு வாகனம் டெஸ்லா. இந்த நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ் ஒரு பொறியியலாளர் தானியங்கி வாகனங்களை மட்டும் தயாரிக்காமல் ஒரு தனி நிறுவனமாக இருந்து ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் நிறுவி செயல் பட்டு வருகின்றார். விண்கலம் விடும் ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரு வாகனம் எந்த அளவு சிறப்பாகச் செயல்பட வேண்டுமோ அந்த அளவு சிறப்பாகச் செயல்படுகின்றது. இது மனித குலத்தின் மிகப் பெரிய சாதனை தான். அப்படியானால் வாகனம் ஓட்டத் தெரியாதவர்கள் வண்டியைப் பயன்படுத்தலாமா? இந்த வண்டியில் செல்வதால் விபத்துக்களே ஏற்படாதா? எங்கு வேண்டுமானாலும் பிரச்சனை இன்றி பயணம் செய்ய முடியுமா? பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இதை ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற கேள்விகள் நம்மில் எழலாம். நமக்கு எழுகின்றதோ இல்லையோ அந்த வாகனத் தயாரிப்பாளர்களுக்கும் கணினி நிரல்களுக்கும் தோன்றி இருக்க வேண்டும். அதனால் தான் உலகிலேயே மிகப் பாதுகாப்பான வாகனமாக அவர்கள் தங்கள் வாகனத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். அவர்களே 2021ம் ஆண்டு 979ஆயிரம் மைல்களுக்கு ஒரு முறை விபத்து ஏற்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.அதே புள்ளிவிவரம் 2018ல் 170 மில்லியன் மைல்களுக்கு ஒரு முறை விபத்து நடப்பதாகத் தெரிவித்து உள்ளது.

2018ம் ஆண்டு 170 மைல்களுக்கு ஒரு முறை ஏற்பட்ட ஒரு விபத்து 2021ம் ஆண்டு விபத்தே இல்லாமல் நின்று போயிருக்க வேண்டாமா? அதுவும் இந்தப் பேரிடர் காலத்தில் பயணம் குறைவாக இருந்த வேளையிலும் விபத்தின் எண்ணிக்கை அதிகரித்துத் தானே உள்ளது காரணம் சோதனைக் கட்டத்தில் வேல செய்த கணினி கணக்கீடுகள்(algorithm) நிஜ வாழ்க்கையில் செயல்படுத்தும் தருணங்கள் அதிகமாகும் போது சரியாகச் செயல்படவில்லை. அதவாது 2018. டெஸ்லா வாகனத்தைப் பயன்படுத்தியவர்களை விட 2021ல் பயன்படுத்துவார்களின் எண்ணிக்கையும் அதிகம் சூழல்களும் வேறுபடுகின்றது. இதை அண்மையில் டெக்ஸாஸ் மாநிலத்தில் நடந்த கோர விபத்து நமக்குத் தெரிவிக்கின்றது. இருவர் வாகன ஓட்டி இல்லாமல் தங்கள் வாகனத்தை இயக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஒரு இருப்புப்பாதையைக் கடக்கும் போது விபத்து ஏற்பட்டு இருவரும் உயிர் இழந்தனர். காரணம் தானியங்கி வாகனம் சாலை என்பதைப் புரிந்து கொள்ளக் கோடிய வெள்ளைக் கோடுகள் அந்த சாலையில் இடப்பட்டு இருக்கவில்லை. அதாவது சாலை என்பதை எப்படி நிர்ணயிக்க வேண்டும் என்று எழுதிய கணக்கீடு புறநகர் வழி செல்லும் சிறுசிறு சாலைகளைக் கணக்கெடுத்துக் கொள்ளாமல் போய் இருக்கலாம்.

எனவே மிகத் திறமையாகச் செயல் படும் கணினி என்பது வரவேப் போவதில்லை. மிக வேகமாகத் துல்லியமாகச் செயல்படக் கணினி வந்தாலும் அதைத் திறம்பட நிர்வகிக்கக் கண்டிப்பாய் மாணவர்கள் இளமையிலேயே தெரிந்து கொள்ள வேண்டும்.நம்முடைய அன்றாட வகுப்பு பாடங்களில் கணினி நிரலெழுதும் தன்மையை நாம் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் போது எதிர்கால கணினிகளுக்குக் கட்டளை சொல்லும் ஒரு குடிமக்களாக நம் மாணவர்கள் விளங்குவர். இயற்கையிலேயே கணினியைத் திறம் பட இயக்கும் ஒரு திறன் நம் மாணவர்களிடையே வருங்காலத்தில் மிக முக்கியமானது ஆகும்.
கணினிகளும் கணினி ஆசிரியர்களும் இல்லாத ஒரு சூழ்நிலையில் எவ்வாறு மாணவர்களுக்குக் கணினி நிரல் எழுதும் தன்மையை நாம் புகுத்துவது என்று பார்ப்போம். ஒரு மாணவனுக்கு கணினி நிரல் எழுதும் தன்மையைக் கற்பிக்கக் கற்பிக்க நம் நாட்டில் கணினி சார்ந்த வேலைவாய்ப்புக்களையும் எப்படி அதிகப்படுத்துவது என்று பார்க்கலாம்.பால பருவம்:

ஒரு மாணவன் எந்த வயதினராக இருந்தாலும் இன்றைய கணினிப்பயன்பாடு ஒரு திறன்பேசி மூலம் நடந்து கொண்டு தான் உள்ளது. எந்த ஒரு குழந்தையும் திறன்பேசியில் படம் பார்க்காமல் சாப்பிடுவது கூட இல்லை. அது அவர்களின் மூளையைப் பாதிக்கும் என்று தெரிந்த போதிலும் வேறு வழியின்றி குழந்தைகளை சமாதானப்படுத்த நாம் திறன்பேசிகளைப் பயன்படுத்துகின்றோம். இந்த சிறு குழந்தைகளுக்கு நாம் முதன் முதலில் கற்றுக் கொடுப்பது கணினிப் பயன்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வு. நாம் எவ்வாறு எந்த நோக்கத்திற்காக நம் திறன்பேசியைப் பயன்படுத்துகின்றோம் என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். பொழுது போக்கிற்காகக் குழந்தைகள் முன் நாம் நம்முடைய அலைபேசியைப் பயன் படுத்துதல் கூடாது. ஒரு திறன்பேசியும் விளையாட்டுப் பொருள் என்ற எண்ணத்தை நாம் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அடுத்ததாகக் குழந்தைகளின் சிந்திக்கும் திறனையும், ஒரே வழியில் படிப்படியாக சில சில செயல்களைக் குழந்தைகளைச் செய்யப் பழக்க வேண்டும். ஆங்கிலத்தில் linear thinking என்று கூறுவார்கள்.

கணினி ஒரு வழிப்பாதையில் சிந்தித்து செயல்படக்கூடியது, ஆம் இல்லை என்ற பதில்களைக் கொண்டே பிரச்சனைகளுக்கான தீர்வு கண்டுபிடிக்கக் கூடியது. குழந்தைகளின் மூளை ஒரு கணினியை விட அதிக சக்தி வாய்ந்தது. நம்மிடம் கைப்பேசி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் அது கிடைக்கும் என்று தெரியும் என்றாலும் பல வகை உணர்ச்சிகளைக் காட்டி நம்மிடம் திறன்பேசியை அடைய முயல்வது இயற்கை அத்தலையை முளைத் திறனை வளர்க்கும் விளையாட்டுச் சாதனங்களை நாம் கொடுக்க வேண்டும். அமெரிக்க நாட்டிலுள்ள Fisher-Price நிறுவனம் அத்தகைய விளையாட்டுப் பொருட்களை அறிமுகம் செய்து உள்ளது. அதில் உள்ள முக்கியமான ஒரு விளையாட்டுப் பொருளை நாம் இந்தச் சுட்டியில் காணலாம்.

நாம் இதைத் தான் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் குழந்தைகள் திறன்பேசிக்காக அழுது அடம் பிடிக்கும் போது அவர்களுடன் இணைந்து தலையணைகளை அடுக்கி விளையாட்டுக் காட்டலாம். தரையில் பாயை விரித்து அதன் எல்லைக்குள்ளே விளையாடப் பழக்கலாம். பாயின் எல்லையை ஒட்டி நடக்கவோ தவழ்ந்து வரவோ பழக்கலாம் புத்தகங்களைப் பல அடுக்குகளாக அடுக்கி அதில் வண்டி ஓட்டிக் காட்டலாம். சமையலறையில் மூடியுள்ள பாத்திரங்களைக் கொடுத்து மூடியைப் பொறுத்த சொல்லலாம். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான முறையில் அவர்களோடு பெரியவர்கள் விளையாடும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். மூன்று மாதக் குழந்தைகளுக்குப் படிக்கப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அது போல நாம் புகைப்படத் தொகுப்பேடுகளை (photo album) பயன்படுத்தி கதைகள் சொல்லலாம். மனித உணர்ச்சிகளைப் படங்களாக எடுத்து அவற்றைப் புத்தகமாகக் காட்டலாம். வெளியே நடத்திக் கூட்டிச் செல்லும் போது எத்தனை அடிகள் எடுத்தால் கதவு எந்தப்பக்கம் திரும்புகின்றோம் ஏன் திரும்புகின்றோம் என்பதை நாம் சொல்லிக் கொண்டே நடக்கலாம். உணவு ஊட்டி விடும் போது எத்தனை கவளங்கள் இருக்கும்? என்று கணிக்கச் சொல்லிக் கொடுக்கலாம். அவர்கள் விளையாட்டு முடித்ததும் அவர்களின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கும் வழக்கத்தைக் கொண்டு வரலாம். பெரிய கிண்ணங்களுக்குள் சிறிய கிண்ணங்களைப் போடுவது போல விளையாடச் செய்யலாம்.

என்னுடையக் குழந்தைகள் வளரும் போது ஒரு கூடையில் அரிசியைக் கொட்டி அதில் இரு சில கரண்டிகள் டம்ளர்கள் கிண்ணங்கள் போட்டு விடுவேன். நான் சமைக்கும் போது குழந்தைகள் அந்தக் கூடையில் அதிக நேரம் விளையாடுவார்கள். அந்த அரிசிக்குள்ளே சில விளையாட்டுப் பொருட்களைக் கூட ஒளித்து வைத்து விட்டால் அவர்கள் ஒவ்வொன்றாகத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுப்பர், இவை எல்லாம் மூன்று வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டும். நமக்கு வேலை இருக்கிறது என்பதற்காகக் குழந்தைகளைத் திறன்பேசியோடு விளையாட விடுவது அவர்களின் கணினி அறிவை கண்டிப்பாக வளர்க்காது.

கணினியில்லாமல் கணினி அறிவை வளர்க்கப் பல உத்திகள் உள்ளன. அடுத்து குழந்தைகளின் வயது படி எப்படி கணினி நிரல் எழுதும் தன்மையைக் கொண்டு வருவது என்று தொடர்ந்து பார்ப்போம்.

 

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)தொடர் 28: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28– சுகந்தி நாடார்