தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி:  ஒரு பரிசீலனை

 தாய்மொழியில்  வளர்ந்துவரும் வேலைவேய்ப்புக்களை மாணவர்கள் பெற    உயரிய  சிந்தனைக் கொண்ட  மொழிக்கல்வி   கற்றல் கற்பித்தலில் அத்தியாவசியமாகின்றது.

தாய் மொழிக்கல்வியை கற்பிப்பதிலும் கற்பதிலும்  ஆசிரியர்களும் மாணவர்களும், இன்று  பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது நடைமுறை. ஏன் என்றால்  அறிவியல் கணக்கு  தொழில்நுட்பத் துறைகளைப் போல  ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மொழிக்கல்வியின் பங்கு குறைவு என்ற ஒரு  எண்ணமே காரணம்.    மேலும்  தாய்மொழியைப் பயன்படுத்துவது கல்வி நிலையங்களிலும், வியாபாரத் தளத்திலும் மட்டுப்படுத்தப்பட்டக் காரணத்தால் இணைய சமுதாயத்தினரிடையே தங்களுடைய தாய்மொழியை  அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் குறைந்து கொண்டே வந்தன. ஆனால் இன்றைய  தொழில் நுட்ப வளர்ச்சியும் ,  இணைய வசதியும்,  மொழிக் கல்விக்கான எதிர் மறையான  சிந்தனையை மாற்ற  மிகவும் உதவியாக உள்ளன.  முக்கியமாக  உல்ககின்  முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்கள்   தங்கள் பயனாளிகளை அதிகரிக்கும் பொருட்டு, உலகின் அனைத்து மொழிக்லளின் தொழில்நுட்ப வளர்ச்சியில்  கடந்த பத்து  ஆண்டுகளாக முதலீடு செய்து வருகின்றனர்.

    உயரிய சிந்தனையை வளர்க்கும் மொழிக்கல்வி பல ஆண்டுகளாக மொழிக் கற்றல் கற்பித்தலில்  இல்லாத காரணத்தால் திறன் குறைந்த பணியாளர்களை நிறுவனங்கள்   எதிர் கொண்டன. அதனால் மொழிக் கல்வியும் தொழில்நுட்பக் கல்வியும்  இணைந்த  பாடங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தரும் முயற்சி மேற்கத்திய நாடுகளில் எழுந்துள்ளது. இன்று தொன் முது மொழிகளைப் பேணி வளர்ப்பதற்காக, பல தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை ஆஸ்திரேலியா, அமெரிக்க இந்திய  தொன்முது மொழியாளர்கள் கொண்டு வந்துள்ளனர்  இவ்வாறான  முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால்.  இணையத்திலும் தொழில்நுட்பத்திலும் பயன்படுத்த இயலாத  அருகி வரும்  மொழிகளின் பட்டியலில்  ஒருவரின்  தாய் மொழி இடம் பெற வாய்ப்புக்கள் அதிகம்.  இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 201 மொழிகள்  அருகி வரும் மொழிகளின் பட்டியலில் உள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை  அடித்தளத்திலேயே  மாற்றும் வகையில்  மொழித் தொழில்நுட்பத்துறை வேலை வாய்ப்புக்களை   கல்வியாளர்கள் அடையாளம் கண்டு  அதற்கேற்றத் திறன் வளர்க்கும்  மொழிக்கல்வித் தேவையாக உள்ளது.மொழித்திறமையை   முன்னிறுத்தும் வேலை வாய்ப்புக்கள் பட்டியலில்  முதன்மையாக வருவது, மொழி பெயர்ப்பு, அடுத்து அகராதி தயாரித்தல்

 • மொழி கற்பித்தல்,

 •   மொழி சார்ந்த  கலாச்சாரங்களையும் கலைளையும், அவற்றின் விவரங்கலையும்  இணைய ஊடகத்தில் கொண்டு வருதல்,

 •   புத்தாக்கா  படைப்புக்களை உருவாக்குதல்,

 •  நிகண்டுகளை உருவாக்குதல்

 • கிடைக்கும் மொழி வளங்களை    தொகுத்து வரிசைப் படுத்துதல்,

 • பொருண்மைகளை விரைவாக  சுருக்கி விளக்குதல்,

 •  பொருண்மைகளை  பல்லூடக  வடிவங்களில் கொண்டு வருதல்,

 • பள்ளி கல்லூரி கல்விக்கான   வளங்களை  தாய் மொழியில் தயாரித்தல்,

 • பயணம் சுற்றுலாத்துறையில் பணிகள்

 • அரசு கொள்கை, நீதித் துறையில் பணிகள்

 • விளம்பரத்துறை,  திரைப்பட தொலைக்காட்சி ஊடகத்துறை

என்று பலவிதமான  மொழி குறித்த வேலை வாய்ப்புக்கள்   அவரவர்  தாய் மொழியில் உலகம் முழுவதும் உள்ளன.

இந்த மாதிரியான வேலை வாய்ப்புக்களுக்கு மாணவர்களை தயார் செய்தல்  கல்வியாளராகிய நமது  பொறுப்பாகும்.  அப்படித் தயார் செய்வதற்குத்தான் ப்ளும்ஸ் தக்ஸானமி  ஆசிரியர்களுக்கு உதவுகின்றது.

  தற்கால, மொழிக்கல்வியை நாம் இரண்டு வகையாய்ப் பிரிக்கலாம்.

 பணி  சார்ந்த மொழிக்கல்வி, பொருண்மை சார்ந்த மொழிக்கல்வி என்ற இருவகைகளையும்  தனித் தனியாக கற்பிப்பதை விட  இரு முறைகளையும் இணைத்து  செயல் முறை பயிற்சியாக  மொழிக்கல்வியைக் கொடுக்க    ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி நமக்கு உதவுகின்றது.

 பொருண்மை சார்ந்த கல்வி பெரும்பாலும்  இன்று நடைமுறையில் உள்ளது

எடுத்துக் காட்டாக

 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. என்ற குறளைக் கற்றுக்  கொண்ட  ஒரு மாணவரால் கண்டிப்பாக, சொற்களையும் அதன் பொருளையும் அடையாளப்படுத்தி  நினைவு கூர்ந்து  விளக்கிக்  மொழி பெயர்த்தது  சுருங்கச் சொல்லி விளக்கக் கூடியத்  திறன்கள்  மாணவர்களூக்கு கண்டிப்பாக இருக்கின்றது.

ஆனால்  கடவுள் வாழ்த்தில்  வரும் பத்து பாடல்களையும்   ஒப்பிட்டு பார்த்து, கடவுள் பற்றிய திருவள்ளுரின் கருத்தைத் தொகுத்துக் ஒரு பத்தாம் வகுப்பு மாணவரால் ஒரு சக மாணவருக்கு  விளக்கிக் கூற முடியுமா? திருக்குறலை இஸ்லாமிய மதக் கோப்பாடுகளுடனோ  கிறுஸ்துவ வேதாகமங்களின் நீதி போதனைகளோடு ஒத்துப்பார்த்து வேறுபடுத்தி ஒரு கட்டுரையோ காணோளியோ  ஒரு பன்னிரெண்டாம்  வகுப்பு மாணவரால் உருவாக்க  முடியுமா?

 ஆம் என்ற பதில் சொல்வதில் நம்மில் 90 ஆசிரியர்களுக்கு தயக்கம் ஏற்படுகின்றது தானே? ஏன் என்றால்  கற்றுக் கொடுக்கப்படும் குறளோடு  ஒப்பிட்டுப் பார்க்க  நாம் இன்னோரு குறளையோ வேறு ஒரு செய்தியையோ புதியதாக  மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவில்லை.

ஒருவர்  வேலை வாய்ப்பிற்கு வகை செய்யும் கல்வித் திறனில்   அடிப்படையானது   ஒரு பொருண்மையை  சீர் தூக்கி ஆராய்தல் என்பது தான்.   அப்படி சீர் தூக்கிப் பார்க்கும் போது  அந்தப் பொருண்மையின் சிறப்பை எடுத்துச் செல்லலாம் , அல்லது மற்றோரு பொருண்மையுடன்  ஒப்பிட்டு வேறு படுத்திக் காட்டலாம். கொடுக்கப்பட்ட பொருண்மையையே வகைப்படுத்திக் காட்டலாம்..  கொடுக்கப்பட்ட பொருண்மையின்    முக்கியக் கூறுகளைக் மட்டும் எடுத்துச் சொல்லலாம்.

 நாம் மேற்கூறிய  திருகுறளை எடுத்துக் காட்டாகக் கொண்டால் ” அகர முதல எழுத்து” என்ற குறள் பாடத் திட்டத்தில்  கொடுக்கப்பட்டுள்ள பொருண்மை என்றால்  மற்ற  சமய நூல்கள் மாணவர்களுக்கு  செய்முறைப் பயிற்சியில் கொடுக்கப்படும்  புது செய்தியாக இருக்கலாம். சமய இலக்கங்களைத் தவிர செய்தித் தாளில் வரும்  கருத்துப் படங்கள், அன்றாட செய்திகள் ஆகியவற்றையும் நாம் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

     மாணவர்களுக்கு, பொருண்மையோடு  சேர்த்து புதிய செய்திகளைப் பகிர்வது சிரமமாக இருப்பின் மாணவர்களை   அகராதி உருவாக்க செய்தல்,  கொடுக்கப்பட்ட குறள்களின் தொகுப்பில் உள்ள சொற்களை  இலக்கண வகைப்படியோ அல்லது அவற்றின் பொருளின் படியோ வகை பிரிக்கச் சொல்லலாம்.  இவை அனைத்தும் மொழிக்கல்வியின் செயல் முறை பயிற்சியாக அமையும் போது, நேரடி வகுப்பிலும், இணைய வகுப்பிலும் மாணவர்களின் ஈடுபாட்டையும், உயரிய நிலை மொழியின் பயன் பாட்டையும் சிரமமில்லாமல் நம்மால் வலியுறுத்த முடியும். செயல் முறைப் பயிற்சிகளை செய்யச் சொல்லும் போது  அதன் மூலம் மாணவர்களின் ஆராய்வுத் திறனை எந்த அளவு அவர்கள் கற்றுக் கொண்டு  இருக்கின்றார்கள் என்று நாம் மதிப்பிட வேண்டுமே  தவிர அவர்கள்  செய்த பயிற்சியை நாம் மதிப்பிடக் கூடாது..

  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் திருக்குறளைக் கற்றுக் கொடுக்கும் போது  அணி வகைகளை தமிழ் நாடு பாடநூல் நிறுவனம் ஒரு புதிய செய்தியாக  அறிமுகம் செய்கின்றது.   பாடத்தில் இருக்கும் குறள்களை  ஏதாவது ஒரு அணியின் அடிப்படையில்  ஆராய்ந்து ஆசிரியர்  ஒரு எடுத்துக் காட்டாக  விளக்கக்  காணோளியாக வெளியிட வேண்டும்.  காணொளியில் குறளுக்கும்.  அணிக்குமான விளக்கம் மட்டும் கொடுக்காமல்,  ஓப்பிட்டுப் பார்த்தலின் வகைகளை  விளக்க வேண்டும்.

 அடுத்து மாணவருக்குக் கொடுக்கப் பட வேண்டிய  செய்முறைப் பயிற்சி  எடுத்துக்காட்டை ஒட்டியதாக இருக்க வேண்டும்.

இங்கே அறிவுறுத்திச் சொல்ல வருவது என்னவென்றால் திருக்குறளின் பொருளை விளக்குவதற்காக  வகுப்பறை நேரத்தைக் குறைவாக செலவிட்டு, அவர்களுக்குக் கொடுக்கப்படும் செயல்முறைப்  பயிற்சியை செய்யத் தேவையான நேரத்தை வகுப்பில் அதிகமாகக் கொடுக்க வேண்டும்..அவர்களின் செய்முறைப் பயிற்சி ஒரு கட்டுரையாகவோ கணோளியாகவோ அல்லது கருத்துப் பரிமாற்றமாகவோ இருக்கலாம்.

 கீழேக் கொடுக்கப்பட்ட  அளவுகோல் அட்டவணை  மோழியை சீர்தூக்கி ஆராய்தலின் அளவு கோலாகக் கொள்ளலாம்.   அட்டவணையில்  கொடுக்கப்பட்ட   திறமைகளே  ஒருவரது  பணித் திறமையை எடுத்துக் காட்டும்.முன்னேற்றம் தேவை

முன்னேற்றம் தெரிகின்றது

போதுமானது

சராசரியை விட  உயர்வானது

மிகச் சிறப்பானது

மொழித் திறன்கள்

எழுத்துப் பிழை

 தட்டச்சுப் பிழை

இலக்கணப்பிழை

உட்கருத்தைப்

புரிதலும் ஒப்பிடுதலும்

சொந்தக் கருத்து

  கருத்துத் திருட்டு இன்மை

நேரக் கட்டுப்பாடு

சீர் தூக்கப்பட்ட  விவரங்கள்

கணினித்

திறன்

 

 1.   கொடுக்கப்படும் செய்திகளை  ஒப்பிட்டு பார்க்க என்ன மாதிர்யான  கணினித் தொழில்நுட்பத்தை  நீங்கள் உங்கள்  வகுப்பில் பயன்படுத்துகின்றீர்கள்?

 2. Flat  stanley செயல் முறை பயிற்ச்சியை  மொழிக்கல்விக்கு  எந்த  முறையில் பயன் படுத்தலாம்?

தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *