இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30– சுகந்தி நாடார்தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை

கணினி என்றவுடன் நாம் அனைவருமே அதை ஒரு மனித மூளையுடன் ஒப்பிட்டுக் கூறலாம். ஒரு மனிதன் செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு மூளையும் நரம்பு மண்டலமும் கட்டளைகளாகத் தருவது போல ஒரு கணினி நிரலர் எழுதிய கட்டளைகளை நிறைவேற்றி கணினி தன் வேலையைச் செய்கின்றது. ஒரு கணினி என்பது அடிப்படையில் ஒரு மின்சார சுற்று. வினாடிக்கு நூறாயிரம் கோடி என்ற வேகத்திலாவது (nano second) அல்லது வினாடிக்கு பதினாயிரம் கோடி வேகத்தில் (pisco second) அணைந்தும் எரிந்தும் குறிப்புகளைக் காட்டி வேலை செய்கின்றது. அதனுடைய பாதையில் எந்த ஒரு மாற்றம் நிகழ்ந்தாலும், தூசு படிந்தாலும் அல்லது மின்சக்தி இல்லாமல் போனாலும் அந்தக் கணினிச்சுற்று வேலை செய்வதில் தடங்கல்கள் ஏற்படலாம்.

ஆனால் மித மூளை அப்படிக் கிடையாது. தன்னைத் தானேத் திருத்திக் கொண்டு தன் பாதையை மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தி மனித மூளையில் உள்ள நீயுரான்களுக்கு உண்டு. காலில் இல்லாதவர்கள் உடலின் மற்ற மற்ற பாகங்களைக் கொண்டு நகர்ந்து செல்வதைப் பார்த்து இருக்கின்றோம்.

தொடக்க நிலை வகுப்பு என்று சொல்லும் போது முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை நாம் இங்கே குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் முதல் வகுப்பு ஆரம்பிக்கும் முன்னரே மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர் என்பது உண்மை தான் என்றாலும் pre kindergarten kindergarten வகுப்புக்களில் பாடங்கள் நடத்தப்படுவதை விட அவர்களை விளையாட்டுகள் மூலம் மற்ற மாணவர்களுடன் பழக விடுவதே ஒரு சிறந்த முறையாகும். அவர்கள் விளையாட்டின் மூலம் கற்றுக் கொள்வது தான் அதிகமாக இருக்கும்.மாணவர்களில் பலர் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை நினைவில் வைத்துக் கிளிப்பிள்ளை மீண்டும் திரும்பச் சொல்வரே தவிர அங்கே உண்மையான கற்றல் நடை பெறாது. கண்டிப்பாய மாணவர்களின் மனனதிறனும் மீண்டும் நினைவு கூறுதலும் நிச்சயமாகக் கூர்மை பெறும் ஆனால் அந்த மாணவர்களின் மூளை சொல்வதைச் செய்யும் ஒரு கணினி போல செயல்படுமே ஒழிய கணினி நிரல் எழுதும் தன்மை இயற்கையாகவே அமையும் வாய்ப்பை முழு நேரமும் பாடங்கள் எடுப்பது குறைத்து விடுகின்றது. முன்பே சொன்னது போல கணினி எழுதும் திறமை வளர மாணவர்களுக்கு கணினி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஒரு தொடக்க நிலை வகுப்பு மாணவனின் மூளை இன்னும் வளருகின்ற நிலையில் தான் உள்ளது புதுபுது செய்திகளை தெரிந்து கொள்ளும் போதும் அனுபவிக்கும் போதும் மூளையின் வேலை அதிகரிக்கும் போது புது புது நியுரான்கள் மூளைக்குள் உருவாகின்றன. இந்த நியுரான்கள் மூளையின் மைலின் என்று செல்லக்கூடிய பகுதியில் இணைந்து தாங்கள் கற்கும் விஷயங்களை பதிவு செய்ய ஆரம்பிக்கின்றன. மாணவர்களின் வீட்டுச் சூழ்நிலை உடல் அமைப்பு உடல்நிலை ஆகிய காரணங்களால் அவர்களின் மூளை வளர்ச்சியில் சில சில மாற்றங்கள் இருந்தாலும் கணினி நிரல் எழுதும் தன்மையை அவர்கள் மூளைக்குள் கொண்டு செல்வது மிகவும் எளிது.

மாணவர்களின் மூளை தொடக்கப் பள்ளி காலக்கட்டத்தில் படிப்படியாக செய்யும் வேலைகளின் ஆர்வம் கொள்கின்றது. ஆங்கிலத்தில் இதை Sequencing events என்று நாம் சொல்லலாம். ஒரு வேலையை அதே நேரத்தில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்ய வைப்பது மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். தொடக்க நிலைப் பள்ளியில் மாணவர்கள் தங்களுடைய எழுத்துக்கலையும் எண்கலையும் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். அவர்களுக்கு பாடங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த Sequencing விளையாட்டுக்களை நாம் அறிமுகப்படுத்தலாம்.

வகுப்பில் பாட நேரம் பத்து நிமிடம் என்றால் அதை அடுத்து 5 முதல் ஏழு நிமிடங்கள் அவர்களை கீழே உள்ள செயல்களில் ஏதாவது ஒன்றைச் செய்யச் சொல்லலாம். கீழே கொடுக்கப்பட்ட செயல்களுக்கு உதவியாக நாம் வகுப்பறை அமைப்பை மாற்றி அமைக்கலாம்.வகுப்பறை அமைப்பு

மாணவர்கள் பாடம் கவனிக்கும் நேரம், ஆசிரியர் வகுப்பின் முன்னால் நின்று பாடம் நடத்தாமல் அவர் மாணவர்களின் மத்தியில் நின்று கொண்டோ அல்லது அவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கொண்டோ பாடம் சொல்லிக் கொடுக்கும் வகையில் வட்டமான வகையில் ஆசிரியர், உதவி ஆசிரியர் மாணவர்கள் ஆகியோரின் இருக்கைகள் அமைந்து இருக்க வேண்டும். இந்த அமைப்பு வகுப்பின் மையப்பகுதியில் அமைந்து இருப்பது நலம். இதை வகுப்பின் பிரதான பாடங்கள் நடக்கும் இடமாக ஆசிரியர் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிரதானப் பாடப்பகுதியைச் சுற்றி மூன்று மாணவர்கள் உட்கார்ந்து வேலை செய்யக்கூடிய இருக்கைகள் இட வசதி செய்ய வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் இருக்கை வசதிகள் ஒவ்வொன்றிற்கும் எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்டு அடையாளம் இட வேண்டும். பாடம் நடத்திய இடை வேளை நேரத்தில் மாணவர்கள் இந்த இடங்களுக்குச் சென்று தங்கள் வேலைகளைச் செய்ய வேண்டும். ஒரு மாணவன் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேவ்வேறு விதமான செயல்களை செய்து இருக்க வேண்டும். ஒரு வாரத்தில் வகுப்பைச் சுற்றியுள்ள எல்லா நடவடிக்கைகளையும் செய்து முடித்து இருக்க வேண்டும்.

கீழ்கண்ட வகையில் மாணவர்களுக்குநாம் வேலைகளைப் பிரித்துக் கொடுக்கலாம்.

  • தட்டச்சு இயந்திரங்களைப் பழக்கப்படுத்துதல்

இன்றைய மாணவர்களுக்கு எழுதுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் தட்டச்சு செய்யத் தெரிந்து இருப்பது. மாணவர்கள் தட்டச்சுப் பழக இந்த இயந்திரங்களை தொடக்க நிலையில் பயன்படுத்தாவிட்டாலும். வரிசையாக எழுத்துக்களை தட்டச்சு செய்யவும், எண்களை வரிசையாக தட்டச்சு செய்யவும் அவர்களைப் பழக்க வேண்டும், கணினி வைத்துத் தான் தட்டச்சு செய்ய வேண்டும் என்பது இல்லை. காஜிதம் இணைத்து தட்டச்சு செய்யப் பயன்படுத்தப்படும் தட்டச்சு இய்நதிரங்கள் இருந்தாலும் மாணவர்களுக்கு மிகவும் ஆசையாக இதில் எழுத்துக்களை தட்டச்சு செய்ய விருப்பமாக இருக்கும். கணினி தட்டச்சு இயந்திரம் என்னும் போது ஆங்கில மொழி விசைப்பலகை தான் பொதுவாகக் கிடைக்கும், ஆனால் தட்டச்சு இயந்திரம் என்று பார்க்கும் போது தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நம்மால் மாணவர்களுக்கு வரிசைக்கிரமமாக சிந்திப்பதைப் பழக்கப்படுத்த முடியும் தட்டச்சு இயந்திரப் பயிற்சி வரிசைக்கிரமமாக சிந்திப்பதை மாணவர்களுக்கு வளர்த்து விட வேண்டும்

  • கையெழுத்து எழுதப்பழக்குதல்

இன்று பள்ளிகளில் மாணவர்கள் ஏற்கனவே கையெழுத்து எழுதுதல் கட்டம் போட்ட நோட்டுப்புத்தகங்களில் எழுதிப் பழகுதல் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டும் செய்து கொண்டும் தான் இருக்கின்றனர், இந்தக் கையெழுத்துப் பயிற்சி என்பது. ஒரு பக்கத்தில் ஒரு எழுத்தை பயில வைப்பதாக இருக்கும். அதாவது ஒரு பக்கத்திற்கு ஒரு எழுத்து. நன்கு பெரியதாக இருக்க வேண்டும் மாணவர்கள் அந்தக் காகிதத்தின் மேல் எழுதிப் பழக வேண்டும். அப்படி எழுதிப்பழகும் போது ஒரு வழிப் பாதையில் சிந்திக்கும் திறன் மூளைக்கு அதிகமாகும். எழுத்துக்கள் எண்கள் ஆகியவற்றை அவர்களாகவே கண்களால் பார்த்து கைகளால் வரையும் வகையும் இந்த எழுத்துப் பயிற்சி அமையலாம்.

  • அகரவரிசையில் எழுத்துக்களை வரிசைபடுத்தப் பழக்குதல்

ஆங்கிலம், தமிழ் என்று எந்த ஒரு மொழியை எடுத்தாலும், அல்லது எண்களை எடுத்தாலும் அவற்றை நேர் வரிசையாக அடுக்குவதோ அல்லது தலைகீழாக அடுக்கவும் உதவி செய்க்க கூடிய எழுத்துக்களும், எண்களும் அட்டையில் செய்யபட்டு கொடுக்கப்பட வேன்டும். பல மாணவர்கள் பயன்படுத்துக்கின்ற காரணத்தால் சுகாதார முறையிலும் அடை சிதைந்து போகாமலும் இருக்கும் படியாக இந்த எழுத்துக்களை நாம் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு மாணவருக்கு என்று தனியாக தயார் செய்தால் மொத்தம் மூன்று குவைகள் இருக்க வேண்டும் . ஒரு குவை தான் தயார் செய்ய முடியும் என்ற பட்சத்தில் மாணவர்களை அணி செயல்பட வழி வகை செய்ய வேண்டும். எழுத்துக்கள் எண்கள் ஆகியவற்றை வரிசைப்படுத்தி வரையும் வடிவங்களை மாணவர்களுக்குப் பயிற்சிக்காகக் கொடுக்கலாம்.  • வண்டி ஓட்டும் பாதைகளை அமைத்துக் கொடுத்தல்

இளம் மாணவர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதை வாகனமாக மாற்றி விளையாடுவது ஒரு அலாதிப் பிரியம். இது ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் பொருந்தும். எனவே பாதைகள் இரயில் தடவாளங்கள் ஆகியவற்றை மாணவர்களே அமைத்து அதில் வாகனங்களை ஓட்டி விளையாடும் ஒரு இடத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். விளையாட்டு சாதனங்கள் மாணவர்களின் வாய்க்குள் போட்டால் ஆபத்து வந்து விடாத படி பெரிய பெரிய விளையாட்டுப் பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும். மாணவர்களே பாதையை அமைக்கும் படியான பாதுகாப்பான பொருட்களை விளையாடக் கொடுக்க வேண்டும். ஒரு மாணவன் தானே பாதை அமைத்து அதில் ஒரு வாகனத்தைச் செலுத்தும் போது ஒரு கணினியின் வெளிப்பாட்டிற்கு ஏற்றபடி என்ன மாதிரியான உள்ளீடுகளை இட வேண்டும் என்று யோசிக்கும் திறமையை அந்த மூளை பெறுகின்றது. உப்புத் தாளிலில் வடிவங்கள் பாதைகள் உருவாக்கி மாணவர்களின் விரல்களைக் கொண்டு அந்தத் தாள்களின் மேல் எழுதச் சொல்வதும் ஒரு சிறந்த பயிற்சியாகும். சிறு சிறு கோலங்களை மாணவர்கள் மீண்டும் மீண்டும் போட்டுப் பார்க்கும் வகையில் அவர்களுக்கு எழுது பலகைகளில் கோலங்கள் வண்ணம் தீட்டப்பட்டு அவற்றை அவர்களுக்குக் கொடுக்கலாம். சிறு சிறு கோலங்கள் எப்படி வரைவது என்று அவர்கள் வரிசைப்படி குறிப்புக்கள் கொடுத்து அவர்களைப் போடச் சொல்லலாம்.

  • காரண காரியங்களும் அதன் விளைவுகளையும் அறிமுகப்படுத்தும் விளையாட்டுக்கள்

கணினி என்பது காரண காரியங்களும் அதன் விளைவுகளையும் சார்ந்த ஒரு செயல்பாடு நாம் ஒன்றை செய்தால் அதன் வெளிப்பாடு இருவகையாக இருக்கும். ஒவ்வோரு வெளிப்பாட்டிற்கும் ஏற்றபடி ஒரு கணினியின் அடுத்த செயல் பாடு இருக்கு, இதை விளக்கும் புதிர்கள் விளையாட்டுகள் ஆகியவற்றை நாம் இங்கே அறுமுகம் செய்யலாம். 

கதவு திறந்து மூடுதல், விளக்குகுகள் எரிதல், அணைதல், பந்து பிடித்து விளையாடுதல் போன்ற விளையாட்டுக்கள் மாணவர்களுக்கு ஆழ்ந்து யோசிக்கும் திறனை வளர்க்க வல்லன. இவற்றை வகுப்பறைக்குள்ளேயோ அல்லது வெளியேயோ நாம் மாணவர்களைச் செய்யச் சொல்லலாம்.

இத்தகைய விளையாட்டுகள் பள்ளியில் அறிமுகப்படுத்தும் போது மாணவர்களின் மூளைச் செயல்பாடுகள் தூண்டப்படுகின்றன. மனனம் செய்து சோர்வு அடைந்து இருக்கும் மூளையை இவை புத்துணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றன. எனவே நடத்தப்படும் பாடங்களுக்கு இடையில் ஒரு சிறு இடைவெளி விட்டு சொல்லிக் கொடுக்கும் போது அவர்கள் முளைப் புத்துணர்ச்சி பெற்று பாடங்களில் கவனமும் ஈர்ப்பும் கொள்வர். பள்ளியில் அறிமுகப்படுத்தப்படும் பாடங்கள் வீட்டிலும் தொடர்ந்து செய்ய பெற்றோர்களுக்கும் இது ஏதுவாகின்றது.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்தொடர் 17: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்தொடர் 18: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 – சுகந்தி நாடார்தொடர் 19

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 – சுகந்தி நாடார்தொடர் 20: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 – சுகந்தி நாடார்தொடர் 21: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 – சுகந்தி நாடார்தொடர் 22:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 – சுகந்தி நாடார்தொடர் 23:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 – சுகந்தி நாடார்

 தொடர் 24: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 – சுகந்தி நாடார்

 தொடர் 25: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 – சுகந்தி நாடார்தொடர் 26: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 – சுகந்தி நாடார்தொடர் 27: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 – சுகந்தி நாடார்தொடர் 28: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28– சுகந்தி நாடார்தொடர் 29: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 – சுகந்தி நாடார்