நமக்குத் தேவை ஆள் வினையுடைமை
இந்தியாவில் கோரோனா இரண்டாவது அலையில் அடிபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் அனைவருமே அச்சத்திலும் கவலையிலும் ஏன் பல நேரங்களில் கோபத்திலும், இயலாமையிலும், சிக்கித் தவிக்கின்றோம். இச்சூழ்நிலையில் நம்பிக்கை ஒன்று மட்டுமே நம்முடைய ஆதாரமாக நம் அன்றாட வாழ்வியல் உள்ளது. இப்பேரிடர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்துநம்மில் பலருக்கு கடந்அன்றாட வாழ்வு என்பது. புவியில் வாழும் மற்ற உயிரினங்களை ஒத்து உள்ளது. ஒரு சிறு வைரஸ் கிருமி நம்மை நம் வீட்டுக்குள் சுருங்க வைத்து விட்டது. உலகின் மற்ற உயிரினங்களைப் போல் உண்பதும் உருவாக்குவதும் மட்டுமே நாம் செய்யும் ஒரு நிலையில் இருக்கின்றோம். நம் அன்றாட வேலைகளை நாம் கணினி வழி செய்து கொண்டும் தொலைக்காட்சிகளும், திறன்பேசிகளும் கொடுக்கும் செய்திகளுக்கும் தகவல் பரிமாற்றத்திற்குள்ளே நாம் தத்தளித்து கொண்டு இருக்கின்றோம். கணினி சார்ந்த செயல்பாடுகள் மட்டும் இல்லையெனில் நமக்கும் பிற உயிரினங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இந்த கணினி சார் வாழ்நிலை உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் வேற ஒரு நிலைக்கு எடுத்துச் சென்று கொண்டு இருக்கின்றது.
கணினித் தொழில்நுட்பத்திற்க்குத் தேவையான புவிக்கனிமங்கள் தோண்டி எடுப்பதில் இன்று சீன அரசு முன்னிலையில் உள்ளது. தொழில் புரட்சியின் போது கச்சா எண்ணெய்களின் பயன்பாடு எவ்வாறு உலக பொருளாதாரத்திலும் வணிகத்திலும், போக்குவரத்திலும் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்ததோ அதே போல இந்த தொழில்நுட்பக் கனிம வளங்க்ஃளை பயன்படுத்தித் தான் நாம் கணினி சார்ந்த மின்னணு சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த முடியும். விண்ணியல் தொழில்நுட்பம் முதல் மின் சக்தி உருவாக்கும் உபகரணங்கள் நம் திறன் பேசிகள் தொலைக்காட்சிகள் வரை அனைத்துமே இந்தக் கனிம வளங்களை நம்பியுள்ளது. எனவே இந்த கனிம வளங்களின் முன்னிலையில் இருக்கும் நாடாகச் சீனா அரசு முயற்சி செய்கின்றது.
கணினி சார்ந்த உலக அரசியலில் முன்னணியில் இருக்க சீன அரசுடன் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்து உள்ளன. தங்களுடைய நாட்டின் கணினிக் கனிம வளத்தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள முயன்று வருகின்றன. அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் குளோரடு போன்ற வேதிப்பொருட்கள் டன் கணக்கில் மண்ணுக்குள் செலுத்தப்பட்டு எண்ணிமத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கனிமங்கள் பூமியிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இதனால் மண்வளமும், நீர் வளமும் நச்சு நிறைந்ததாக மாறும் வாய்ப்புக்கள் அதிகம். மலைகளிலிருந்த்து இந்தக் கனிமங்கள் பெறப்படுமேயானால் கழுவு நீர் குளங்களும், வேதிப் பொருட்களின் குளங்களுமாக நிலப்பரப்பு மாறி விடும். இது ஒரு பக்கம் இருக்க, கணினி தொழில்நுட்பத்தின் இன்னொரு கடந்த முப்பது ஆண்டுகளில் கணினித் தொழில்நுட்பம் சார்ந்த குப்பைகள் நம் நிலத்தை மக்காத குப்பைகளாய் நிறைத்துக் கொண்டு வருகின்றன.
கணினித் தொழில்நுட்பத்தின் பொருளாதார பரிணாமமாக ஒரு புறம் செயற்கை அறிவு நிறைந்த கருவிகளும் எண்னிமப் பண பரிவர்த்தனைகளும் ஒரு புறம் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தக் கருவிகளுக்குத் தேவையான மின் தகடுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களாக முன்னிலையில் இருப்பவை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள ஒரு சில நிறுவனங்களே. உலகின் மிகப் பெரிய நிறுவனமான இண்டெல் அமெரிக்காவில் அமைந்து இருக்கும் தொழிற்சாலையைப் போல ஐரோப்பாவிலும் நிறுவ முயற்சி செய்து வருகின்றது. இந்த நிறுவனத்திற்குப் போட்டியாகத் தைவான் நாட்டில் இருக்கும் மின் கடத்தி உற்பத்தி நிறுவனம் உலக நாடுகளின் கவனத்தை முக்கியமாக சீன, அமெரிக்க அரசுகளின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இந்த நிறுவனத்தை எந்த அரசு உரிமை கொண்டாடுகின்றதோ அந்த அரசு அடுத்த நூற்றாண்டுக்கான அரசாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம். உலகின் எந்த ஒரு நாடு கணினி கனிம வளங்களிலும் கணினி செயற்கை அறிவுத் திறனிலும் மற்றக் கணினித் தொழில்நுட்பத்தின் எல்லாம் கூறுகளிலும் முன்னிலையில் இருக்கின்றதோ அந்த நாடு ஒரு ஏகாதிபத்திய வல்லரசாகத் திகழும்.
ஒரு நாட்டின் குடை கீழ் உலகமே இயங்கும் நிலை வராதிருக்க நாம் இந்த பேரிடர் காலத்தைப் பயன்படுத்துவோம். மனிதனையும், மற்ற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவது அவர்களின் பண்பாடும், மொழியும், கலாச்சாரமும் இன்று கணினி செயற்கை அறிவுத் திறனில் ஆங்கிலமும், சீன மொழியும் உச்ச நிலையில் இருக்கும் காலகட்டத்தில் கொரானாவின் இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கி இருப்பது நம் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் குறைப்பதாகத் தோன்றலாம். ஆனால் இப்போது தான் நாம் யார் இந்த உலகிற்குக் காட்ட வேண்டிய நேரம்.
மனமும் உடலும் முடங்கிக் கிடக்கும் போது நாம் யார் என்ற தேடலும் நம்முடைய அடுத்த கட்ட குறிக்கோள்களையும் நமக்கும் நம் நாட்டின் இளைய தலைமுறைகளுக்கும் நாம் எடுத்துப் போக வேண்டிய கட்டாய அகலம் கட்டத்தில் உள்ளோம். இயற்கை வளங்களைச் சூறையாடி செயற்கையான ஒரு கணினி உலகில் வாழும் நிலை தவிர்க்கும் ஆவண செய்யவும் நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் நாம் இந்தக் கொரோனா காலத்தைப் பயன்படுத்துவோம். கணினியை விட சிறந்தது மனித மூளை என்பதை நினைவில் நிறுத்தி ஒவ்வொரு தனிமனிதனும் நம்மை நாமே உயரத்தில் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம், நம்மை நாமே உயர்த்திக் கொண்டு வளர்த்துக் கொள்வதோடு நம் மாணவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். உதாரணம் காட்டும் ஒரு சக்தியாக நாம் இருப்போம். நம்முடைய ஆள்வினை சக்தியை அதிகரிப்போம். மனித சக்தி ஆக்க சக்தியாக மாற நம் ஆள்வினை செயலாக்கம் நமக்கு உதவி புரியும்.
என்ன செய்யலாம்? எப்படி செயல் படுத்தலாம்?
அச்சம் தவிர்த்தல்
விருப்பமில்லாத பழக்கமில்லாத ஒரு சூழ்நிலையில் மனித மூளை இயங்கும் போது அதற்கு முதலில் தோன்றுவது அச்சம். அச்ச உணர்வினாலேதான் நம் மூளை நம்மை இயக்க ஆரம்பிக்கின்றது. நம்முடையப் பாதுகாப்பையும் அடிப்படைத் தேவையையும் பூர்த்தி செய்வது. இந்த அச்ச உணர்வு தான், ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலமும் புலனமும் மூலமும். தொலைக்காட்சி மூலமும். வரும் செய்திகளையும் வடிகட்டி நமக்குத் தேவையான செய்திகளை மட்டும் நமக்கு வசதியான நேரத்தில் பெற்றுக் கொள்ளப் பழகிக் கொள்வோம். நமது கவனத்தை இருபத்து நான்கு மணிநேரமும் இழுத்துப் பிடித்து வைக்கும் தகவல் தொடர்பு சாதனங்களிலிருந்து நாம் நம்முடைய கவனத்திற்கு விடுதலைத் தருவோம்.
அமெரிக்க நாட்டில் உள்ள பெலடான் என்ற உடற்பயிற்சி உபகரண நிறுவனம் அண்மையில் தான் வடிவமைத்துள்ள செயற்கை அறிவுத் திறன் கொண்டு இயங்கும் ஒரு உடற்பயிற்சி உபகரணத்தைச் சந்தையில் விடுவதை நிறுத்தியுள்ளது. இயந்திரத்தின் மேல் உடல் பயிற்சி செய்யும் ஒருவரின் இதயத் துடிப்பு இரத்த அழுத்தம் சர்க்கரை, உப்பு, அவரின் உடல் எடை உடற்பயிற்சி செய்யும் வேகம் அவர் உடற்பயிற்சியில் செலவிடும் கலோரிகள் போன்ற தரவுகளைக் கணக்கில் கொண்டு உடற்பயிற்சி செய்பவரின் உடற்பயிற்சியை மாற்றி அமைக்கும் ஒரு உடற்பயிற்சி ஆசானாக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த இயந்திரத்தால் ஒரு குழந்தை உயிர் இழந்ததோடு பலர் காயம் அடைந்த காரணத்தால் இந்த உபகரணம் தற்போது சந்தையில் இல்லை. ஒரு உடற்பயிற்சி ஆசிரியருக்கும் அவரின் வேலையைச் செய்ய முயலும் ஒரு கருவிக்கும் உள்ள வித்தியாசம் இது தான். தரவுகளை மட்டும் நம்பும் கணினி அறிவு உள்ளது தான். ஆனால் அந்தத் தரவுகளைத் தாண்டிய விவரங்களை நுண்ணியமாக கவனித்து அதற்குரிய மாற்றங்களை உடனுக்குடன் கவனமாகச் செய்வது மனித மூளை. எனவே அந்த கவனத்தை சிதறடிக்காமல், நமக்குத் தேவையில்லாத தகவல்களைத் தந்து நம் மூளையில் குப்பைக் கூளமாக்கும் விஷயங்களைத் தவிர்த்தாலே நம் அச்சம் நம்மை விட்டு விலகி விடும்.
நேரம் காத்தல்
ஒரு கணினி துல்லியமாகச் செயல்பட முக்கியக் காரணம் நேரம் தவறாமை. நேரத்தை மிகத்துல்லியமாகக் கணக்கிட்டுச் செய்யக் கூடிய திறமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது நம்முடைய நேரம் மற்றவர்களுக்கானதாகி விடுகிறது. ஆனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் போது நமது நேரம் நம்முடையது. வீட்டில் இருக்கும் போதும், வேலைக்குச்செல்வது போல தயாராகி நமது வேலைகளைத் திட்டமிடல் வேண்டும். முக்கியமாகக் கணினியாலும் திறன் பேசியாலும் வரும் கவனச்சிதறல்களைக் கணக்கில் கொண்டு நம் வேலைகளை நம் நாம் திட்டமிட வேண்டும். நாள் முழுவதும் என்னைப் போல கணினி முன் அமர்ந்து இருப்பராயின். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களுக்கும் மூளைக்கும் கணினித் திரையின் வெளிச்சத்திலிருந்து ஒரு பத்து நிமிடத்திற்கு இடைவெளி விட வேண்டும். கணினிப் பயன்பாடு எந்த வேலை சம்பந்தமானதோ அதை மட்டும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும். ஒரு செயலை நாம் மீண்டும் மீண்டும் அதே நேரத்தில் ஒரே மாதிரியாகச் செய்யும் போது அது அனிச்சை செயலாக மாறி நம் திறமைகளின் அடித்தளமாக மாறுகின்றது.
பிரச்சனைகளில் எதிர்நீச்சல் போடும் தன்மை
நம்முடைய அன்றாட செயல்கள் நமது திறமைகளின் அடித்தளமாக மாறி, நம் கவனச்சிதறல்கள் குறையும் போது நம் மூளையின் ஆள்வினைத் திறன் தானாக அதிகமாகின்றது. பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறனும் சிக்கலான சூழ்நிலையில் எதிர் நீச்சல் போடும் திறமையும் நமக்குள்ளே வளர்கின்றது. வாய் மொழியாக வரும் பாராட்டை விட நம்முடைய செயல்கள் நமது மூளைக்கு வெற்றி சாத்தியம் என்பதை ஆதாரப்பூர்வமாகத் தந்து நம் நம்பிக்கையை ஆழ் மனதில் விதைக்கின்றது. கழுத்து, முதுகுத் தண்டு, விரல்கள், பாதங்கள் ஆகியவற்றிக்கு நம் வேலைகளுக்கு இடையில் நாம் செய்யும் சிறு சிறு பயிற்சிகள் நம் மூளையைப் புத்துணர்ச்சியோடு வைத்து இருக்கின்றது. மனித மூளை என்ற கணினி எந்த ஒரு சக்தியையும் அண்டி இருக்காமல் தனக்குத் தானே புத்துணர்ச்சிக் கொடுத்துக் கொண்டு தன்னை மேலும் மேலும் வளர்த்து துல்லியமாக விரைந்து செயல்படும் நிலையை அடைய சிறு சிறு உடற்பயிற்சிகள் உதவியாக இருக்கின்றன. உடலுக்கு உடல் பயிற்சி போல, ஆழ் மனதிற்கு பயிற்சி வாசிப்பு பழக்கத்தால் வளர்கிறது. புத்தாக்க சிந்தனைகள் வளர வாசிப்பு பழக்கம் உதவி செய்கின்றது. எந்த வயதினராக இருந்தாலும் குறைந்தது மூன்று மணி நேரம் வாசிக்க வேண்டும். காலை எழுந்தவுடன் வாசித்தலும் இரவில் உறங்கப் போகும் முன் வாசிப்பதும். மிகவும் நல்ல ஒரு விஷயமாகும் இது நமக்குப் பல புத்தாக்கச் சிந்தனைகளைத் தருவதோடு நம்பிக்கையையும் பிரச்சனைகளைச் சமாளிக்க வழி முறைகளையும் தருகின்றது. சுருக்கமாகச்சொல்ல போனால் நம் மூளை என்னும் கணினியைத் தூசி தட்டும் வேலையை இந்த வாசிப்புப் பழக்கம் நமக்குக் கொடுக்கின்றது
இந்தப் பேரிடர் காலத்தில் நாம் ஒரு ஆரோக்கியமான வாழ்வை, வாழ்க்கைச் சூழலைப் பின்பற்றத் தொடங்குவோம். இந்தப் பேரிடரிலிருந்து மீண்டு வந்து இயற்கை வளங்களையும் கலாச்சாரம் மொழி பண்பாடு ஆகியவற்றைக் காக்கும் ஒரு மாபெரும் ஆக்க சக்தியாக வெளிவருவோம் என்ற நம்பிக்கையும் பிரார்த்தனையும் நம்மோடு என்றென்றும் இருக்கட்டும்.
இன்னும் தொடர்வோம்.
தொடர் 30:
தொடர் 31:
இசைக்கும் ஓசைக்கும் மிகச் சிறிய இடைவெளிதான்
ஆகா!