மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்
கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் தாக்கும். முன் நாம் தொடக்கப்பள்ளி சிறுவர்களுக்கு. கணினி நிரல் எழுதும் தன்மை கொடுப்பதனால் எப்படி அவர்களின். எதிர்கால வேலை வாய்ப்பிற்கு உதவ முடியும் ?என்று பார்த்துக் கொண்டு இருந்தோம். கணினிக்குத் தேவையான குறைக்கடத்தி மின் தகடுகளின் பற்றாக்குறை உலக அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டு இருப்பதையும் கணினியைச் சார்ந்திருக்கும் உலகத்திற்கு நேர் இணையாக மனித மூளையை எவ்வாறு செயல் படுத்த வைக்கலாம் என்பதை வேலை வாய்ப்பு என்ற பொருண்மையின் கீழ் பார்த்துக் கொண்டு இருந்தோம்
கணினி என்று சொல்லும் போது நிரல் எழுதும் தன்மையோடு பல விதமான கணினி சார் மென்பொருட்களின் பயன் பாடும். சுய வேலை வாய்ப்பிற்கு. வழி வகுக்கும்.கணினியின் செயற்கை அறிவும். , கணினியின் செயல்திறனும் இன்று பல விதங்களில் ஒருவருக்கு வேலை வாய்ப்பை ஒருவருக்கு வழங்கி வருகின்றது என்பதையும். பார்த்தோம். நாம் தொடக்க நிலை மாணவர்களிடையே கணினி நிரல் எழுதும் தன்மையைக் கற்ப்பிப்ப்தன் மூலம் கணினிகளின் எஜமானராக அவர்களை உருவாக்க முடியும். இந்திய நாட்டு இளைஞர்கள் கணினியை விட வேகமாகவும் விவேகமாகவும் சிந்தித்துச் செயல்பட வைக்க ஆசிரியர்களால். முடியும் என்றும் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.
கணினியை விட மனித மூளை ஒரு உயர்நிலையில் வேலை செயல்படுகின்றது அதுவும் தொடக்க நிலை மாணவர்களின் மூளை புதிய விஷயங்களைக் கிரகித்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றது. தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் அவர்களின் கருத்து பரிமாற்றம் நடக்கும் போது தங்களைப் பற்றியும் கருத்துக்கள் என்றால் என்ன உண்மை என்றால் என்ன என்பதை இந்த சிறிய மூளை யோசிக்க ஆரம்பிக்கின்றது. ஒரு விஷயத்தை ஒட்டி பல்வேறு கருத்துக்கள் இருப்பதையும் மூளை புரிந்து கொள்ள ஆரம்பின்ன்றது. அதே ஐந்தாம் வகுப்பு என்னும் போது அவர்களின் மூளை புதிய புதிய பாதைகளை தனக்குள் போட ஆரம்பிக்கின்றது புதிய புதிய விஷயங்களையும் புரியாத விஷயங்களையும் ஒஉரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றது. இந்த வயதுக் குழந்தைகள் துறு துறு என்று ஓடிக் கொண்டே இருப்பர். அவர்கள் உடல் ஓடியாட ஓடியாட மூளை வளர்ச்சியின் வேகமும் மூளையின் செயல்திறனும் சிறப்பால் மிளிரும் என்பதைப் பெற்றோர்களாகவும் ஆசிரியர்களாகவும் நாம் கண் கூடாகப் பார்க்கலாம்.
இந்த வயதில் அவர்களின் மொழியும் கணிதப் புலமையையும் ஆசிரியர்கள் பட்டைத் தீட்டலாம். கடந்த ஆண்டு நாம் மாணவர்களிடம் கற்றுக் கொண்டது என்ன என்பதை யோசித்து அடுத்த கல்வியாண்டிற்கு இந்தக் கோடை விடுமுறையில் நாம் பாடங்களை வேறுவிதமாகத் தயாரிக்கலாம்.
நேரடி வகுப்பு என்றால் மாணவர்கள் அனைவரையும் வகுப்பின் மையத்தில் உட்கார வைத்து வகுப்பின் சுவர்களை ஒட்டி அவர்களின் மொழித் திறமை கணிதத் திறமை அணியாக விளையாடும் திறமை ஆகிய வற்றிற்கு ஏற்றார் போல் நாம் பலவிதமான பொருட்களை வைக்கலாம். அவர்களின் வகுப்பு மேலாண்மை பங்கு எடுத்தல் முயற்சி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அவர்களின் செயல்திறனுக்கு வெகுமானமாக அவர்களை இந்த விளையாட்டுக்களில் ஈடுபடச் சொல்லலாம்.
சொற்கட்டை என்று அழைக்கப்படும் எண் மணிச்சட்டம் மாணவர்களுக்குக் கணக்கிடுதலுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்களின் இடது மூளை வலது மூளை இரண்டும் ஒரே நேரத்தில் வேலை செய்ய அவர்களுக்குக் கணித மனக்கணக்கு உதவுகின்றது. விரல் விட்டு எண்ண வேண்டிய எண்களைத் தாண்டி சிரமமில்லாமல்;கணக்கிட மணிகள் பொருந்திய சட்டத்தை வைத்து கணிதம் செய்வது அவர்களின் சிந்தனைத் திறனையும் சிக்கலைத் தீர்க்கும் திறனையும் வளர்ந்து விடுகின்றது. எண்கள் இன்றைய ஆங்கில வரி வடிவம் பெறும் முன் பண்ட மாற்று முறை பொருளாதாரத்தில் இந்தோ – அரேபிய எண்களின் குறியீடுகளாகவும். ரோமன் எண் குறியீடுகளாகவும் கணக்கிடப் பயன் படுத்தப்பட்டன. அந்தக் குறியீட்டுக் கணக்குகளை மணிச்சட்ட முறையில் சீனாவிலும், ஜப்பானிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இன்றைய கணக்குப் பொறிக்கு முன்னோடி என்று இந்த மணிச்சட்டங்களை நாம் கூறலாம் இது கிமு 1200ம் ஆண்டுகளில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகின்றது இந்த மணி சட்டத்தைப் பயன் படுத்தி மாணவர்களுக்கு எண்கள் கூட்டல் கழித்தல் ஆகியவற்றைச் சொல்லிக் கொடுக்கலாம்.
நம் கலாச்சாரத்தில் விளையாடும் பல்லாங்குழி, தாயக்கட்டை போன்ற விளையாட்டுக்களை அவர்களை விளையாட விடலாம்.
சிறு சிறு தையல்களை மானவர்களைப் போட்டுப் பழக்கலாம். மாணவர்களைக் கதை சொல்ல வைப்பதும் கதையின் கரு,வையும் கதாப்பாத்திரரங்களையும் கதை நடக்கும் களத்தைப் பற்றியும் அவர்களைக் கூறு பிரித்து விவாதிக்கலாம், அவர்களுக்கு அகராதியைப் பயன்படுத்தவும் தங்களுக்கான அகராதியை உருவாக்கவும் கற்றுத் தர வேண்டும் இவ்வாறு செய்யும் போது மாணவர்களின் கற்பனைத் திறனும், மொழித்திறனும் வளர்வதோடு பிரச்சனைகளுக்குப் புதிய கோணத்தில் தீர்வு காணவும் அவர்களால் முடிகின்றது. கதைகள் விளையாட்டுக்கள் விடுகதைகள் போன்றவற்றை இணைய வகுப்பறையின் முக்கிய அங்கமாக நாம் வைத்துக் கொண்டால் மாணவர்களின் பங்கேற்பு அதிகமாக இருப்பதோடு அவர்கள் மனதிலும் ஆழமாகப் பதியும்.
இணையத்தில் கண்டிப்பாக இத்தகைய வகுப்பு முறையைப் பின்பற்றுவது கடினம். முதலாவதாக மாணவர்களின் கவனம் குறையும் அடுத்ததாக அவர்கள் வகுப்பில் பங்கேற்பது குறையும். துருதுரு என்று ஓடிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் எட்டு மணிநேரம் கணினி முன் உட்கார வைப்பது அவர்களின் வருகைப் பதிவேட்டிற்கு ஒத்து வருமே தவிர அன்றாட வாழ்க்கையில் அவைகளுக்குப் பயன்படாது. எத்தனையோ பெற்றோர் அதிக பணம் செலவழித்து இந்தக் கணினிக் கருவிகளை வாங்கிக் கொடுத்தாலும் உண்மையில் வகுப்பறை நேரம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்காது.
சிறுகுழந்தைகள் கல்விக்காகப் பயன்படுத்தும் திறன்பேசிகளில் அவர்களின் பாடம் பற்றிய குறுஞ்செயலிகள் இருக்க வேண்டும்
அண்மையில் நீயுயார்க்கர் பத்திரிக்கையில் வந்த தகவல். 2020ம் ஆண்டு உலகமே கொரோனாவில் பாதிக்கப்பட்டு இருக்கும் போது இன்ஸ்டகிராம் சமூக வலை தளத்தில் இத்தாலி நாட்டில் பழம் பெரும் உள்ள கடற்கரை மாளிகைகள் மிகத் தத்ரூபமாக மாளிகைகளின் உள் அமைப்பு தோட்டம் வெளிப்புறம் என்று வலம் வரத்தொடங்கின. அவற்றின் அழகில் மயங்கி அந்த மாளிகைகளை வாடகைக்கு எடுக்கவும். வாடிக்கையாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால் உண்மையில் இந்த மாளிகைகள் ஒரு முப்பரிமாண வடிவமைப்பு மென்பொருளில் கணினியில் வடிவமைக்கப்பட்ட வீடுகள் தாம். இத்தாலியின் அந்தப் புகழ்பெற்ற கடற்கரை scala dei Torchia 2007ம் ஆண்டிலிருந்து மக்களின் வாழ்விடமாக இல்லாமல். இத்தாலியின் புராதனச்சின்னமாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் கட்டிடப் பொறியாளர்களின் கற்பனைக்கும். செயல் திறனுக்க்ய்ம் வடிகாலாகக் கணினித் தொழில் நுட்பம் விளங்கி வருகின்றது. ஆனால் சிறுகுழந்தைகள் மிக எளிதாக இணையம் மூலம் ஏமாற்றப்படலாம். நம்மில் பலர் Google pay, Apple store Paரென்று பயன்படுத்தி வருகின்றோம் இந்த சேவைகளை மாணவர்கள் தவறாகப் பயன்படுத்தி விட வாய்ப்புக்கள் அதிகம். அது மட்டுமல்லாமல் இணையத்தில் பொருட்கள் வாங்கப் போகும்போது எவ்வாறு பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது என்றும் நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். 2020ம் ஆண்டு மட்டும் உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் 2 மில்லியன் போலிப் பொருட்களைக் கண்டுபிடித்து அவற்றை தங்களின் சரக்குகளிலிருந்து கண்டுபிடித்து அழித்து இருக்கின்றனர்.
அமெரிக்கச் செய்தி நிறுவனமான NBC இணைய தொழில்நுட்பங்கள் நமக்கு வரும் செய்திகளை எவ்வாறு கணித்துக் கொடுக்கின்றன என்று விளையாட்டாய் செய்திகளுக்காகச் செய்த ஆராய்ச்சியில் நாம் பார்க்கும் சில தினசரி விஷயங்களில் முக்கியமான அரசியல் மதம் போன்ற உணர்வுப் பூர்வமான நிகழ்வுகளை ஒருவர் தேடும் போது முதல் இருநாட்களில் சாதாரணமாக வந்து கொண்டிருந்த செய்திகள், மூன்றாம் நாளிலிருந்து பயத்தைத் தூண்டக்கூடிய செய்திகளையும் ஆறாம் ஏழாம் நாட்களில் வன்முறையைத் தூண்டக்கூடிய செய்திகளையும் எடுத்துக் காட்டுவதாகக் கூறுகின்றனர்.
இத்தகைய தொழில் நுட்பத்தைப்பற்றி மாணவர்களிடம் விவாதம் நடத்துவதன் மூலம் நாம் அவர்களுக்கு கணினி தொழில்நுட்பத்தின் ஆக்கப்பூவமான செயல்களை எடுத்துக் கூறலாம். குறிப்பாக அவர்கள் திறன்பேசியைப் பயன்படுத்தி வகுப்புக்களுக்கு வரும் போது, இணையத்தில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை இதனால் குறைந்து வருகின்றது. நாம் இணையத்தில் பார்க்கும் செய்திகளிலிருந்து வடிகட்டி எடுத்து உண்மையான செய்திகளைப் பார்க்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமூக தளங்களில் வரும் செய்திகளின் உள்ள வன்முறைச்செய்திகளை அவர்களுக்கு விளக்கமாக விளக்க வேண்டும். அமெரிக்காவின் மிகப்பெரிய கச்சாஎண்ணைய் எடுத்துச்செல்லும் குழாய்களைநிறுமானம் செய்து நிர்வகிக்கும் கலோனியல் பைப்லைன் நிறுவனம் த்தை டார்க்சைட் என்று சொல்லும் நச்சு நிரல்கள் கூட்டம் தாக்கி நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி வைத்து விட்டது. அதாவது ஒரு கணினி என்னென்ன வேலையை எப்படி செய்கின்றது என்பதை ஆராய்ந்து அதன் கட்டளைகளை மாற்றி அந்தக் கணினி வேலைசெய்யாமல் செய்ய வைத்து விடுவது இந்த நச்சு நிரல்களின் வேலை. தாங்கள் பணம் கொடுத்தால் மட்டுமே கணினிகளிலிருந்து நச்சு நிரலை எடுக்க முடியும் என்று மிரட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஐந்து நாட்களாகக் கச்சா எண்ணெய் விநியோகம் அமெரிக்காவில் தடைப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தால் அமெரிக்காவில் எண்ணெய் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கணினியின் செயற்கை அறிவினால் பல நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தில் முண்ணனுயில் இருந்தாலும் இந்தக் கணினி நிரல்களை ஆராயும் அடிப்படை த் திறனை நாம் மாணவர்களுக்கு ச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
கணினி முன் உட்கார்ந்தால் தான் கணினி நிரலெழுதும் தன்மை வரும் என்று நாம் தவறாக எண்ணிக் கொண்டு இருக்கின்றோம். கணினி பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு நாம் உண்டாக்கினால் மட்டுமே அவர்கள் கணினியை ஆளத் தெரிந்தவர்களாக வளருகின்றனர், பாடப்புத்தகத்தில் உள்ள பொருண்ஐயை எப்படி கணித விளையாட்டுக்களாக விடுகதைகளாக கதைகளால் கதாபாத்திரங்களாக்க மாற்றி மாணவர்களுக்கு இணையத்தில் பாடம் நடத்துவது எப்படி என்று நம்முடைய சிந்தனையும் செயலாக்கமும் இருக்க வேண்டும்.
இன்னும் தொடர்வோம்.
தொடர் 30:
தொடர் 31:
தொடர் 32: