ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்

அமெரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும் குழாய்களை நிறுமானம் செய்து நிர்வகிக்கும் கலோனியல் பைப்லைன் நிறுவனம் த்தை டார்க்சைட் என்று சொல்லும் நச்சு நிரலர்கள் கூட்டம் தாக்கி நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி வைத்து விட்டது என்பதை நாம் பார்த்தோம். மே 13ம் தேதி வந்த செய்திகளின் படி இந்தநிறுவனம் தன்னுடைய கணினிகளை நச்சு நிரல் மூலம் செயலிழக்கச் செய்த நச்சுநிரலர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பணையப் பணமாகக் கொடுத்துள்ளது. அதாவது அந்தப்பெரிய நிறுவனத்தில் தங்கள் கணினிகளைப் பாதுகாக்கச் செய்து இருந்த வழிமுறைகள் போதுமான அளவு சாமர்த்தியமானதாக இல்லை. அடுத்து நச்சு நிரல் எழுதியவர்கள் மிகவும் தீவிரமாக யோசித்து இதைச் செய்து இருப்பார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. நாம் பூட்டிய வீட்டில் திருடன் நுழைந்தால் நட்டம் ஏற்படும் என்று நினைத்துக் கொண்டிருக்க, இன்று காலம் மாறி நம் வீட்டைத் திருடன் பூட்டிக் கொண்டு நமக்குச் சாவியைக் கொடுக்க நம் வீட்டைத் திறந்து விட மீட்புப்பணம் கேட்கும் அளவிற்குக் கணினிகள் நம் வாழ்க்கை முறையை மாற்றுகின்றன.

இப்போது முகநூல் நிறுவனம் நடத்தி வரும் புலன குறுஞ்செயலியில் வரும் ஒப்பந்தத்தை நாம் ஒத்துக்கொண்டால் நாம் அந்தச் சேவையைப் பயன்படுத்த முடியாது. நமது அலைபேசி, நாம் அதற்கு இணைய வசதி ஏற்படுத்த நாம் பணம் கொடுத்து வாங்குகின்றோம். நமது அலைபேசியில் நமது கணினியை வலை செய்யத் தேவையான மென்பொருட்களையும், சேவைகளையும் பயன்படுத்த நாம் அவர்களுக்கு நம்முடைய தனிப்பட்ட விவரங்களையும் கொடுத்து, அவர்கள் சொல்லும் எல்லாவிதமான கட்டுப்பாட்டிற்கும் ஒத்துக் கொண்டால் ஒழிய நாம் அதைப் பயன் படுத்த முடியாது. முகநூல் நிறுவனம் whatsapp என்ற குறுஞ்செயலியை வாங்குவதற்கு முன்னால் வரை இலவசமாக எந்த ஒரு கட்டணமும் நிபந்தனைகளும் இல்லாமல் நாம் பயன்படுத்தி வந்த சேவை இப்போது அதன் நிலை மாறியது ஏன்? நாம் ஒரு கடைக்குச் செல்கின்றோம். நமக்கு ஒரு பொருள் தேவை என்றால் அது பல விலைகளில் பல தரங்களில் பல அளவுகளில் நமக்குக் கிடைக்கும் போது நமக்கு வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் எளிது. நாம் ஒரு கடையிலேயே வாடிக்கையாளராகப் பல ஆண்டுகள் பழகிய பின் அந்த அக்டையின் வர்த்தகர் தான் கொடுத்த பொருளைத் தான் வாங்க வேண்டும் என்று நம்மை வற்புறுத்தினால் என்ன தான் பழகிய கடையாக இருந்தாலும் நாம் மறுபடி அங்கு செல்வோமா? ஆனால் நாம் இந்தச் சமூக வலைத்தளங்களையும் இன்னபிற குறுஞ்செயலிகளையும் நம் உயிர்நாடியாக நினைத்துப் பழகிவிட்டோம்.அப்படிப் பழக்கப்படுத்தப்படுவும் விட்டோம்.



கணினியும் திறன்பேசிகளும் இந்த இருபது ஆண்டுகளில் மனிதனுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. ஆன்மீகத்திலும் சகோதரத்துவத்திலும் இந்தியா எவ்வாறு உலகத்திற்கே முன்னோடியோ அதே போல கணினித் தொழில்நுட்பத்தில் அமெரிக்க நாடும் சீன நாடும் முன்னோடி என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் அந்தந்த நாடுகளில் நடக்கும் நடப்பை வைத்து நம்முடைய கணினிப்பதையை இணையப் பயணத்தை மாற்றி அமைத்து பிரச்சனைகள் முன் கூட்டி வருவதற்கு முன் காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லவா?

நாட்டின் ஒரு மிக முக்கியமான வளமான கச்சா எண்ணெய் நிறுவனம் எத்தகைய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் . அது தனியார் நிறுவனமாக இருந்தாலும் கூட அது அவர்களின் வளம் . அதைப் பாதுகாக்க வெளியே எத்தனையோ மின் வேலிகள் ஆள் பலம் இருந்தும் ஒரு கணினி மூலம் இவ்வளவு பெரிய நஷ்டம்? ஏன் எனில் கணினி மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் என்னும் செல்வத்தைப் பற்றிய அறியாமை. இரண்டாவது கணினியின் பயனாளராக மட்டுமே இருந்து கொண்டு கணினிக்கு நிரல் எழுதும் பொறுப்பை மற்றவர்களிடம் கொடுத்தது. மூன்றாவது என்ன தான் செயற்கைத் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது என்று கூறினாலும் தன்னை தாக்க வருபவர்களைத் தடுக்க இயலாத கணினி அமைப்பு. நிரலாக்கக் கூறுகளிலும் உள்ள எல்லா நெளிவு சுளிவுகளையும் தெரிந்து வைத்துள்ள விற்பனர்கள் வெகு சிலரே.மறைக்குறியீடாக்கம்(encryption) மூலம் தங்கள் கணினிக்குக் கொடுத்த கட்டளையை மற்ற எவரும் படிக்க இயலாமல் செய்வது என்பது ஒன்று தான் இப்போது கணினித் தரவுகளுக்கு இருக்கும் ஒரு பொதுவான பாதுகாப்பு. ஒரு நிறுவனத்தின் கணினித் நச்சு நிரல்களால் தாக்கப்படும் போது அது எதனால் தாக்கப்பட்டது? என்று நிரல் கூறுகளைப்படித்துப் பார்த்து சரிசெய்ய நிறுவனத்தின் நிரல்களால் முடியாத போதும், கணினிகளைச் சார்ந்து விட்ட தரவுகள் இல்லாமல் இயங்காமல் ஸ்தம்பித்துப் போகக்கூடிய நிலையும் ஒரு நிறுவனத்திற்கு ஏற்படும் போது அவர்கள் மீட்புப் பணத்தைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நம் வீட்டை உடைத்துத் திருடாமல், நம் வீட்டுக்குள் நம்மை நுழையாமல் தடுக்கும் எத்தர்களின் செயல் தான் இது?

ஐரோப்பாவிலிருந்து கொண்டு இணையம் வழி அமெரிக்காவின் கணினிகளின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இதிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம் என்ன ஒரு நாட்டுக்கு இராணுவமும் காவலர்களும் தேவையோ அதே போலத் தேவை கணினி நிரல்களுக்கும் வரும். நாடு வீடு தனி மனித பாதுகாப்பு என்பது ஒரு மனிதன் எவ்வாறு ஆளத் தெரிந்து கொண்டு இருக்கின்றான் என்பதில் உள்ளது.



இதை நன்றாக உணர்ந்து கொண்ட ஆப்பிள் நிறுவனம், தனி மனித பாதுகாப்பை அந்தந்தப் பயனாளிகளிடமேக் கொடுத்து விட்டது. அதாவது நமது ஆப்பிள் போனில் நாம் சொல்வதைத்தான் அந்தக் குறுஞ்செயலி கேட்க வேண்டும். நமது கட்டளையை மீறி குறுஞ்செயலி எந்த ஒரு செயலையும் செய்யாது. அப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாட்டை மற்ற அலைபேசி நிறுவனங்கள் கோன்டு வருமா? அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு ஏன்?ஆண்டாரய்ட் தொழில்நுட்பம் பொதுவாகக் கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படுகின்றது. தரவுகளைத் தேடித தன் வணிகத்தை நடத்தும் ஒரு நிறுவனம் இப்படி ஒரு நிலையைப் பயனர்களுக்கு உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்க முடியாது.இன்று அமெரிக்காவில் நடப்பது நாளை எந்த தேசத்தில் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இன்னும் எதிர்காலத்தில் இத்தகையத் தாக்குதல்கள் அதிகரிக்கலாம் இந்த நிலையில் தற்போது ஆசிரியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்.

நம் மாணவர்களை தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல வல்லமை உடையவராக மாற்ற வேண்டும். இங்குக் கட்டுரையில் குறிப்பிடப்படும் சில குறிப்புக்கள் ஒரு பொழுது போக்கு அம்சமாக இருக்கலாம். இவை நடை முறை சாத்தியப்படாது என்பது போல இருக்கலாம். ஆனால் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இன்றைய இந்தியாவின் கல்வி என்பது ஒரு முக்கியமான பொருளாதாரமாக மாறி உள்ளது. எட்டுமணி நேரம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதையும் தாண்டி மேலும் பல சிறப்பு வகுப்புக்களில் போடப்படுகின்றனர். தேர்வு முடிவுகளை நோக்கிய இந்த கல்வி அமைப்பின் பொருளாதார சுமையை ஆசிரியர்களாகிய நாம் நம் வகுப்பறையையும் பாடம் ந்டத்தும் விதத்தையும் கொஞ்சம் மாற்றி அமைத்தால், நம்மாணவர்களின் நேரமும் உழைப்பும் இன்னும் எவ்வளவு சீர்படும்?

இந்தியாவின் ஒரு கல்வி நிறுவனமான ஆகாஷ் முப்பது வருடமாக நாடெங்கும் பல உப வகுப்புக்களையும் பயிற்ச்சி வகுப்புக்களையும் மாணவர்களுக்காக நடத்தி வந்தது. அந்த நிறுவத்தை இந்தியாவின் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான byju அமெரிக்க டாலரில் ஒரு பில்லியன் கொடுத்து வாங்கியுள்ளது. 2011ல் கணவன் மனைவியால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் முதலில் ஒரு குறுஞ்செயலியாக ஆரம்பித்ஹ்டு இப்போது அமெரிக்க டாலரில் 13 பில்லியன் மதிப்புள்ள ஒரு நிறுவனமாக வளர்ந்து உள்ளது. ஒரு குறுஞ்செயலி ஆசிரியர்களை மிஞ்சி விட முடியுமா? கண்டிப்பாக இல்லை ஏன் எனில் ஆசிரியர்களாகிய நாம் நம் வகுப்பறையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து மாணவச் செல்வங்களை வழிநடத்தி செல்லப்போகின்றோம் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் கணினித் திறனும் கணினி நிரல் எழுதும் திறன்பற்றி அடுத்துப் பார்ப்போம்.

இன்னும் தொடர்வோம்.



தொடர் 30:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 – சுகந்தி நாடார்



தொடர் 31:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31– சுகந்தி நாடார்




தொடர் 32:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32– சுகந்தி நாடார்

 



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33– சுகந்தி நாடார்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *