இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 – சுகந்தி நாடார்உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்

நாம் இதுவரை மாணவர்களுக்கான கணினி நிரல் எழுதும் தன்மையைப் பற்றிப் பார்த்து வருகின்றோம். குழந்தைப் பருவத்திலிருந்து நாம் மெல்ல மெல்லக் குழந்தைகளுக்குக் கணினியைப் போல வேகமாகச் சிந்திக்கக் கற்றுக் கொடுக்கும் போது நடுநிலைப் பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் கணினிக்கு நிரல் எழுதும் பாடங்களை ஒரு தனிப் பாடப் பொருண்மையாக ஏற்று நடத்த நம்மால் முடியும். இன்று பல மாணவர்கள் வகுப்பிலும் பாடம் கற்று, அதன் பின் பல விஷயங்களையும் தேர்விற்காகத் தயார் செய்வதற்காக சில பல வகுப்புக்களுக்குப் பள்ளிக்கு வெளியேயும் சென்று வருகின்றனர்.

ஒரு மாணவன் பள்ளியில் இருக்கும் 8 மணி நேரத்தில் அவர்களின் அனைத்து தேவைகளும் பள்ளியிலேயே, ஆசிரியர்களின் துணையோடு நடத்தி முடிக்கும் படி வகுப்புக்கள் அமைய வேண்டும்.

மாணவர்கள் காலையில் வகுப்புக்கள் தொடங்கும் முன் பள்ளிக்கு வந்து தங்கள் பாடங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் ஆசிரியர்களிடம் பெற நாம் வழி வகை செய்து இருக்க வேண்டும். அதே போல் மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யவும் மாணவர்கள் குழாம்களை ஒவ்வோருத்துறையிலும் அமைத்து உலக நடப்புக்களைக் கணினி வழி கொண்டு செல்வதற்கான வகையில் அவர்களின் பாடப் பொருண்மைகளும் கணினி மொழித் திறன் குழாம்களும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

சீன நாட்டின் தேன் மேற்கு பகுதி மாகாணங்களில் உள்ள இளம் வயதினரின் முக்கியமான வேலை கணினி நிரல் எழுதுதல் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்னால் தேயிலைத் தோட்டங்களாக இருந்தன. இங்குள்ள தேயிஅலிட் தோட்டத்து இளம் தொழிலாளிகள் தற்போது ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் செயற்கை அறிவுத் திறன் தொழில்நுட்பத்தில் வேலை செய்கின்றனர். ஒலி ஒளி ஆகியவற்றின் கூறுகளைக் கணினிப்படுத்துதலும் புகைப்படங்கள் காணொலிகளில் வரும் முகங்களை அடையாளப்படுத்துவதிலும் என்னென்ன தேவையோ அந்த விவரங்களை இந்தத் தொழிலாளிகள் செய்கின்றனர். அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உழைப்பைக் கொடுக்கின்றனரோ அவ்வளவிற்கு அவ்வளவு கணினியின் செயற்கை அறிவுத் திறன் உயரிய நிலையில் இருக்கின்றது என்பதை அங்கு இத் தொழிலாளிகளை வழி நடத்தும் மேலாளர் கூறுகின்றார். அதாவது விவசாய நிலங்கள் விளைச்சலைத் தருவது போல இந்த சிறுசிறு கணினி மையங்கள் செயற்கை அறிவுத் திறன் சார்ந்த செயலிகள் மென்பொருட்கள் ஆகியவற்றை உருவாக்கித் தள்ளிக் கொண்டு இருக்கின்றன.அமெரிக்காவின் ஐந்தாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் உலக வர்த்தகத்தில் கோலோச்சுவது போலச் சீன அரசாங்கம் செயற்கை அறிவுத் திறனில் இன்று முன்ணனியில் இருக்கின்றது.2030ம் ஆண்டுக்குள் சைனாவை உலகின் செயற்கைத் திறன் அறிவு மையமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு சீன அரசு செயல்பட்டு வருகின்றது. அதற்கான முன்னெடுப்பாக 2019ம் ஆண்டு பல செயற்கை அறிவுத்திறன் மையங்கள் உருவாக்கப்பட்டு இளைஞர்களைச் செயற்கை அறிவுத் திறனை விளைவிக்கச் செய்கின்றன்ர். இவர்கள் பல அரசுக் கல்லூரி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களை இந்தக் கணினி செயல்பாட்டில் ஈடுபட வைக்கின்றனர். செயற்கை அறிவுத் திறனுக்கான பாடநூல்கள் தொடக்க நிலையிலேயே மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

இங்கு இதைக் குறிப்பிடக் காரணம் சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளை விட நம் நாட்டின் நிலை முற்றிலும் வேறுபட்டது. அமெரிக்காவில் ஆங்கிலம் பொது மொழியாகவும் சீனாவில் சீனம் பொது மொழியாகவும் இருக்க, பல மொழிகள் பேசும் தேசமாக நம் இந்திய நாடு திகழ்கின்றது. உலக நாடுகளில் உள்ள அனைத்துத் திறமைகளுக்கும் சவால் அளிக்கும் திறமையான இளைய சமுதாயம் நம் நாட்டிலிருந்தாலும், அவர்களின் கணினிப் பயன்பாடு ஒரு முனைப்படுத்தபடாமல் பல்வேறு திசைகளில் சிந்திக்கிடக்கின்றது. அதை விட நம்முடைய பிராந்திய மொழிகளில் கணினியைப் பயன்படுத்துவதே சவாலாக இருக்கின்ற நிலையில், அந்தந்த மொழிகளில் செயற்கைத் திறனைக் கொண்டுவருவது என்பதும் ஒரு இயலாதக் காரியமாகவேத் தோன்றும். இந்த சிக்கலை நாம் விடுவித்தால் மட்டுமே இந்திய அரசியல் சூழலும் இந்திய இளைஞர்களும் வருங்காலத்தில் போட்டி வர்த்தகத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் . ஒரு அரசிற்கு எந்த அளவு இராணுவம் முக்கியமோ அந்த அளவு இணையப் பாதுகாப்பும் செயற்கை அறிவுத் திறனும் முக்கியமானது என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று சீன நாடு எந்த அளவிற்கு செயற்கை அறிவுத் திறனில் முன்னிலையில் இருக்கின்றதோ அந்த அளவு வளர்ந்து வரும் மக்கள் தொகையில் இல்லை. பல ஆண்டுகளாக தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற கட்டுப்பாட்டை விதித்து இருந்தது சீன அரசு 2016ம் ஆண்டு அதை ஒரு குடும்பம் இரு குழந்தைகள் என்று தளர்த்தியது. ஆன போதும் இரு குழந்தைகளை வளர்க்க போதுமான சூழ்நிலை சீன நகரங்களில் இல்லாத காரணத்தால் சீன அரசு எதிர்பார்த்தது போல பிறப்பு சதவிகிதம் அதிகரிக்கவில்லை, அதனால் அண்மையில் ஒரு குடும்பம் மூன்று குழந்தைகள் என்று தனது கொள்கையைச் சீன அரசு தளர்த்தியுள்ளது. அது தவிரக் கல்விக் கட்டணங்கள், வீடுகள் வரிகள் என்று எல்லா விதத்திலும் ஒரு புதிய தலைமுறை உருவாகுவதற்கு சீன அரசு தன் பிரஜைகளை ஊக்குவித்து வருகின்றது.ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஒரு அறிக்கையில் 2050ம் ஆண்டுகளில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து வயது குழந்தைகளின் தொகையை விட அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றது.அதே போல இந்திய நாட்டின் மக்கள் தொகை உலகிலேயே முன்னணியில் இருக்கும் என்றும் 2050 ஆண்டுக்குள் இந்தியாவில் 273 மில்லியனாக மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை என்றால் உணவுப் பற்றாக்குறை ஏழ்மை நிலை ஆகியவற்றோடும். பல தேசங்களுக்கு குடிபெயர்ந்து செல்லவேண்டிய தேவையும் இந்தியக் குடிமக்களுக்கு ஏற்படலாம். இந்த நிலையில் கணினி மொழியில் நிபுணர்களாகவும் அதே நேரத்தில் நம்முடிஅய பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் ஒரு தலைமுறையை எதிர்காலத்திற்காக உருவாக்குவது கல்வியாளர்களாகிய நம்முடையக் கடமையாகின்றது. அப்படிப்பட்ட தலைமுறையை உருவாக்கவும் அந்தத்தலைமுறையினர் இந்தியாவை ஒரு வல்லரசு நாடுகளில் ஒன்றாகத் திகழவும் கண்டிப்பாக நாம் கணினி மொழி அறிவையும் ஒரு பாடப் பொருண்மையாகப் பள்ளிகளிலும் கல்வி நிலையங்களிலும் கொண்டு வர வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

தற்போது உலகமே சந்தித்து வரும் பேரிடர் காலத்தில் மாணவர்களும் கல்வியாளர்களுமககணினிப் பயன்பாட்டைக் கல்விக்காகப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டுள்ளோம், தகவல் பரிமாற்றங்கள் பிராந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் நடந்தாலும் பெரும்பான்மை நேரம் ஆங்கிலத்திலேயே இந்த பரிமாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பிராந்திய மொழிகளில் சில அடிப்படை வசதிகளைக் கொடுத்தாலும் பெரும்பாலான வசதிகள் முக்கியமாக மனித நடவடிக்கைகளைக் கணினி வழி சீர் நடத்திச் செல்லும் பல கணினி நெறிமுறைகள்,(algorithms)ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. நம் இணையத்திலும் குறுஞ்செயலிகளிலும் எந்த மாதிரியான விளம்பரங்கள் வர வேண்டும் என்பதிலிருந்து, ஒரு விற்பனையாளரின் பொருள் தனது தளத்தில் எத்தனையாவது இடத்தைப் பெறுகிறது என்பது வரைக் கணினி நெறிமுறைகளேப் பயன்படுத்தப்படுகின்றன. வருங்காலத்தில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் போது தொழில்நுட்ப நிறுவனங்களின் அனைத்து செயல்களும் இந்தப் பொது மக்களின் விவரங்களை அறிந்து கொள்வதிலேயே இருக்கும். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலிருந்து நாட்டின் பொருளாதாரம் அரசியல் ஆகியவை கணினிகளால் நிர்ணயிக்கப்படும் காலம் வரலாம். அதே நேரம் நம்முடைய தேசத்திலும் பிராந்திய மொழித் தொழில்நுட்பங்களும் கணினியின் செயற்கை அறிவுத் திறனும் வளர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இந்த நிலையில் இன்றைய மாணவர்கள் கணினித் தொழில்நுட்பத்தையும் கணினி நிரல் எழுதும் தன்மையையும் கொண்டு இருந்தால் அவரவர் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப கணினியை தங்களின் வேலையாளாக மாற்றி அமைக்க அவர்களால் முடியும் எனவே உயர்நிலைப்பள்ளிகளில் மூன்றாம் மொழியாகக் கணினி மொழி இன்றைய மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட வேண்டும்.பைத்தான் மொழி:

இன்று பரவலாகக் கற்றுக் கொள்ளப்படும் மிக எளிதான கணினி மொழி பைத்தான். இணையத் தொழில்நுட்பங்களைக் இந்த மொழியைக் கொன்டு மிக விரைவாக உருவாக்க முடியும். இந்த மொழிக்கான ஆதார வளங்களும் நமக்கு பலக் கிடைக்கின்றன.
https://stackoverflow.com
https://www.python.org/community/#
https://knightlab.northwestern.edu/2014/06/05/five-mini-programming-projects-for-the-python-beginner/ ஆகிய தளங்களில் நாம் பைதான் மொழி பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஜாவா மொழி:

மென் பொருள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிப்பது ஜாவா மொழி. தொலைத் தொடர்பு கல்வி பொருளாதாரம் வியாபாரம் என்று எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. அண்ட்ராய்ட் தொழில்நுட்பங்களுக்கும் இந்த மொழி அடிப்படையாக அமைகின்றது.
https://community.oracle.com/tech/developers/categories/13287-java
https://stackoverflow.com ஆகிய இரு தளங்களில் ஜாவா மொழியின் அடிப்படைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

Ruby/Ruby on Rails

இந்த மொழி ஒரு திறவூற்று மொழியாகும். இந்த மொழியை வைத்து மென்பொருட்கள் தயாரித்தல் தரவுகள் ஆராய்ச்சி செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம். இயந்திரவியல் இணையம் பாதுகாப்பு ஆகியத் துறைகளில் முக்கியமாக இந்த மொழிப் பயன்படுத்தப்படுகின்றது.

https://www.codecademy.com/catalog/language/ruby
https://www.learnrubyonline.org ஆகியத் தளங்கள் இந்த மொழியின் அடிப்படையை புரிந்து கொள்ள உதவுகின்றன.இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 – சுகந்தி நாடார்