இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 – சுகந்தி நாடார்இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்

கணினித் தொழில்நுட்பம் என்பது ஒரு எண்கை சிலந்தி மீன் போன்றது. தன் கரங்களால் மனித வாழ்வில் எல்லாப் பரிணாமங்களையும் தனக்குள் இழுத்து விழுங்கிக் கொள்ள முயல்கின்றது, அதற்குச் சரியான உதாரணமாக அமேசான் நிறுவனத்தைச் சொல்லலாம். இணையத்தில் புத்தகங்களை விற்கும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று கணினித் தொழில்நுட்பத்தின் ஒரு பெரிய அரக்கனாக வளர்ந்து நிற்கின்றது. மின்னூல்கள் கிண்டில் என்று தொடங்கி ஆடை அணிகலன்களிலிருந்து சீட்டு மளிகைச் சாமான்கள் வரை அனைத்தையும் விற்கும் தளமாக மாறியதோடு சிறுசிறு வர்த்தகர்களுக்கும் ஒரு வணிகத் தலமாக மாறி அமெரிக்காவின் சில முக்கியமான வணிகத் தலங்களை மூட வைத்த பெருமை அமேசானுக்கு உண்டு. அமேசானின் செயற்கை அறிவு தொழில்நுட்ப வளர்ச்சி அலெக்ஸா, ரிங்க் புகைப்படக்கருவிகள் என்று வளர்ந்த போதும் இன்னும் இன்னும் வணிகப் போக்குவரத்து, கொள்முதல் விற்பனை என்று பல நுகர்வோர் வாழ்க்கை முறை என்று பல பல விதங்களில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தைப் புகுத்தி கணினி உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் அமேசான்.

தற்போது அமெரிக்க அரசாங்கத் தளத்திலும் தன்னுடைய ஆளுமையை நிலை நாட்ட பணி ஓய்வு பெற்ற் அரசியல் அதிகாரிகளை பணியில் அமர்த்தியிருப்பதாக அமெரிக்க பொலிட்டிக்கோ(politico)ப் பத்திரிக்கைத் தெரிவிக்கின்றது. இதுவரை அமெரிக்க அரசாங்கங்களில் மைக்ரோசாப்ட்டின் கணினிகளே பயன்படுத்தப்பட்டு வருககின்றன என்றாலும் தன்னுடைய cloud computing தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்லும் முயற்சியில் முதல் கட்ட ஆராய்ச்சியாக இந்த பணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.கணினிப்பாதுகாப்பு இணையப்பாதுகாப்பு என்பவை இரண்டும் அமெரிக்க அரசின் ஒரு முக்கிய இறையாண்மைக் கொள்கைகளுக்கு வித்திடும் இந்த நேரத்தில் அமேசானின் இந்தப் புதிய முயற்சி எதிர்காலத்தில் எப்படி அமையும் என்பது தெரியவில்லை.

அமெரிக்க அரசு அலுவலங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மைரோசோஃப்ட் தொழில்நுட்பத்தின் ஒரு அங்கமான மைக்ரோசாப்ட் டீம்ஸ் தொழில்நுட்பத்தில்மறைக்குறியீடாக்க முறையை ஜீலை மாதத்திலிருந்து கொண்டு வருவதாக அறிவித்து இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் முகநூலின் விளம்பரத் தரவுகளைப் பற்றிய சட்டக் கேள்விகளை எழுப்பியுள்ளன. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்ஹ்டின் மீது பலவிதமான வரிகளை விதித்து உள்ள ஐரோப்பிய நாடுகள் இப்போது முகநூலின் நிறுவன மாதிரியைக் கேள்வி கேட்க ஆரம்பித்து உள்ளனர். இது போல அமெரிக்காவின் பல கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்களை ஐரோப்பா சட்டப்படிக் கேள்வி கேட்க ஆரம்பித்து உள்ளது. அமெரிக்க அதிபரான பைடன் சீன இராணுவ பாதுகாப்பு துப்பறியும் தொழில் நுட்ப நிறுவனங்களின் அமெரிக்கர்கள் எந்த விதத்திலும் முதலீடு செய்யக் கூடாது என்று ஒரு அரசாணையை வெளியிட்டு உள்ளார் அதன் படி சீனாவின் மொத்தம் 59 நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய இயலாது. இது அமெரிக்க அரசின் பாதுகாப்பிற்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு அரசாணையாகும்.இப்படித் தரவுகளின் தொழில்நுட்பமும் இணையப்பாதுகாப்புத் துறையும் அரசாங்கங்களால் வரைமுறைப்படுத்தப்படுகின்ற இந்தக் காலகட்டத்தில் இயந்திரவியலும் மனிதனுக்கு நிகராக வளர்ந்து வருகின்றது அமெரிக்க நாடுகளில் தொழிற்சாலைகளில் மனிதனும் இயந்திரமும் இணைந்து வேலை செய்யக் கூடிய கூட்டு இயந்திரம் என்று அழைக்கப்படும் இயந்திரங்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன, இன்றைய மனித தொழிலாளிகளுக்குப் போட்டியாக இயந்திர மனிதர்களை உருவாக்காமல் அவர்களுடைய வேலைக்கு உதவி செய்யும் வகையில் மனித இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மனிதர்களால் செய்ய முடியாத கனமான வேலைகளைச் செய்வதற்கும் அவர்களால் சிறு பிழை கூட இல்லாமல் துல்லியமாகச் செய்ய வேண்டிய வேளைகளையும் இந்த கூட்டு இயந்திரங்களை வைத்து தொழில் அதிபர்கள் செய்து முடிக்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்ப வாழ்க்கைமுறையும் அதற்கான சட்டங்களும் மாறி வருகின்ற இந்தக் காலகட்டத்தில் நமக்குத் தெளிவாகப் புரிவது நம் நாட்டில் ஒவ்வோரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பம் அதிவேகத்தில் வளரும் நிலை விரைவில் உருவாகும். ஒவ்வோரு நாடும் தனக்கென சட்டதிட்டங்கள் இராணுவம் அரசியல் அமைப்பு என்று வைத்து இருப்பதைப் போல ஒவ்வோருவரு நாட்டிற்கும் அதன் அரசியல் அமைப்பிற்கும் சட்ட திட்டத்திற்கும் அடங்கிய தொழில்நுட்பம் தேவை என்பதை நாம் மறுக்க முடியாது. அந்தத் தேவையை நிவர்த்தி செய்யும் தொழில் வளத்தையும் மனித வளத்தையும் நம்மால் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய இயலாது. எனவே பள்ளி மாணவர்களுக்கு நாம் மனிதர்களைப் பற்றிய கல்வி அறிவு இயந்திரங்களைப் பற்றிய கல்வி அறிவு தரவுகளைப் பற்றிய கல்வி அறிவு கணினி மொழி அறிவு படைத்தல் தாய்மொழிப்புலமை ஆராய்ந்து அறிதல் ஆகியவற்றை அடிப்படைப் பாடங்களாகல் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.அதே நேரத்தில் கல்வி நிலயங்கள் தான் மாணவர்களின் புகலிடமாக இருந்தது. இந்தக் கொரானா பேரிடர் காலம் நம் கல்வி நிலையங்களுக்கும் மாணவர்களின் கற்றல் திறனுக்கும் பெரிய சவாலாக உள்ளது. பல மாணவர்கள் கல்வி நிலையங்களில் கொடுக்கப்படும் சத்துணவுகளை நம்பியே பள்ளிக்கு வருகின்றனர். அண்மையில் பெருகியுள்ள இணையக் கல்விக்கான தொழில்நுட்பத்திற்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் பெற்றோர்கள் திடீர் பொருளாதாரச் சமையில் தள்ளாடுகின்றனர். மாணவர்களும் அலைபேசி வழியே நடந்த கற்றல் கற்பித்தலால் மனௌளைச்சலுக்கும் உடல் சோர்வுக்கும் ஆளாகி உள்ளனர். ஒரு கட்டுப்பாடற்ற நிலையில் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் இருக்கின்ற காரணத்தால் அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும் போது எதிர்காலம் பற்றிய சிந்தனையும் நம்பிக்கையும் குறைந்து ஒருவித அச்சத்துடனும் மேம்போக்கான மனநிலையுடனுமே பள்ளிக்கு வருவர். இந்த ஒரு பெரிய சவாலைத் தாண்டி கணினி மொழி அறிவு என்பது ஒரு ஆசிரியரின் துணையோடும் மாணவர்களின் கூட்டு முயற்சியோடும் நடக்க வேண்டியது. எனவே இந்தப் பிரச்சனைகளைச் சமாளித்து கணினி பாதுகாப்பு இணையப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு,கணினி தொழில் சார்ந்த கணினிப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு ஜணினிஅறிவு, கணினி மொழி அறிவு என்று நெருங்கி வரும் எதிர்காலத்திற்கு ஏற்ப அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய புதிய விஷயங்களை எளிதாகக் கற்றுக் கொடுக்கும் ஒரே வழி மாணவர்களிடையே போட்டிகளை வைப்பது தான்.

கணினி சார்ந்த ம் கணினி மொழிசார்ந்த போட்டிகளும் கணினியில் படைக்கும் போட்டிகளும் மாணவர்களுக்கு ஒரு விளையாட்டாக் கணினி சார்ந்த அடிப்படை கல்வியறிவைத் தரும் கணினி சார்ந்த போட்டிகள், மாணவர்களின் சுயமுனைப்பைதூண்டி விடும். இங்கே சில கணினிப் போட்டிகளின் சான்றுகளுக்கான சுட்டிகளை ஆராய்வதன் மூலம் நம் மாணவர்களின் பொருளாதார சூழ்நிலைக்கும் மனநிலைக்கும் ஏற்றவாறு நாமே போட்டிகளை உருவாக்கி அவர்களை பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். கணினிப் போட்டிகளுக்கான இந்த ஆதார தலங்கள் அமெரிக்க தொழிநுட்பநிறுவனங்களின் போட்டிகள் என்பதை மனதில் கொண்டு நம் நாட்டு நம் மொழி சார்ந்த தொழில் நுட்பங்களை உருவாக்கும் உந்து சகதியாக இந்தக் கணினிப் போட்டிகள் அமைய வேண்டும்.

https://imaginecup.microsoft.com/en-us/compete/whycompete
https://www.congressionalappchallenge.us
https://ioinformatics.org
http://zerorobotics.mit.edu
https://www.fifa.com/fifae/
https://chi2021.acm.org/for-authors/students/student-game-competition
http://gamesforchange.org/studentchallenge/
https://www.firstlegoleague.org

நம் நாட்டு மொழி கலாச்சாரம் பண்பாடு வரலாறு இறையாண்மை பொதுநலம் பொருளாதாரம் ஆகியவற்றை மையப்படுத்தி மாணவர்களின் வாழ்க்கையோடு இணைந்து செல்லக்கூடிய கணி தொழில்நுட்பப் போட்டிகளைக் கல்வி நிலையங்களும் ஊடகத்துறையும் இணைந்து செயல் படுத்தினால் நம் மாணவர்களின் ஒரு உந்து சக்தியாக இந்தப் போட்டிகள் அமையும். மாணவர்களுக்கு நாம் எந்த ஒரு உந்து சக்தியைக் கொடுத்தாலும் எந்தத் தடைகளையும் சிக்கல்களையும் தீர்க்கும் வழிகளை அவர்களே கண்டு கொள்வர், மாணவர்களே அவர்களின் பலம். ஆசிரியர்களாகிய நாம் அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அமைய எல்லா வகையிலும் முயல வேண்டும்.இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 – சுகந்தி நாடார்