இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 – சுகந்தி நாடார்மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency)

தமிழில் குழுவுக்குறி என்று ஒரு இலக்கணப்பகுதி உண்டு என்பது தமிழ் ஆசிரியர்களுக்குத் தெரியும். ஒரு சொல்லின் பொருளை அதை மறைமுகமாக வேறு ஒரு சொல் கொண்டு ஒரு குறிப்பிட்ட குழுவினர் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்வதும், பொதுவில் குறிப்பிடத் தகாத சொற்களைப் பண்பாடு கருதி வேறு ஒரு பொருள் கொண்ட சொல்லைப் பயன்படுத்துவதே குழுவுக்குறி. இந்த ஒரு இலக்கணம் Cryptocurrency என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டு இன்றைய வர்த்தகத்தில் முக்கிய இடத்தை மெள்ளமாக பிடித்துவரும் எண்ணியல் யுக மாற்றத்தின் இன்னும் ஒரு அடையாளம் இந்த எண்ணியல் செலவாணி. பல காரணங்களுக்காக இவை மறைக்குறீட்டுகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பற்றிய புரிதல் நமக்கு வேண்டும் என்பதால் இன்று Cryptocurrency பேசலாம் என்று நினைக்கின்றேன்.

எப்போதுமே ஒரு புதிய மாற்றத்தைத் தமிழில் சொல்ல வரும் போது அதற்கான சரியான சொல் அமைவதில்லை அதனாலேயே ஆங்கிலச் சொற்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அதைப்போலவே, தமிழில் Cryptocurrency அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு அதற்கான ஒரு கலைச்சொல் வரும் வரை இந்த மறை குறியாக்க எண்ணியல் செலவாணி என்ற சொல்லை பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மறை குறியாக்க எண்ணியல் செலவாணி என்பது சுருங்க சொன்னால் எண்ணியல் வழி நடக்கும் பண்ட மாற்று முறையாகும். பண்ட மாற்று முறை வர்த்தகத்தின் தொடக்கமாக நாம் கொள்ளலாம். இன்று பல தேசங்கள் தங்களின் புவியியல் எல்லைக்குள் , நடக்கும் எல்லாவித வர்த்தகங்களை நிர்ணயிக்க ஒரு பண மதிப்பை உருவாக்கி இன்று பயன்பாட்டில் உள்ளன. காகிதப் பணம் உலோக நாணயங்கள் காசோலைகள் பண விடை வரையோலௌ என்று பல விதங்களில் பணப் பரிமாற்றம் வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்புரட்சியின் உச்சக்கட்டமாகக் கடன் அட்டைகளை வங்கிகள் அறிமுகம் செய்தன. அதாவது பிடிப்பு வட்டி பண பரிமாற்றம் முறையை நெகிழி அட்டை உருவில் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் தான் நாம் இன்று பயன்படுத்தி வரும் கடன் அட்டைகள். அதை எடுத்து, Apple pay, Google Pay, Pay TM என்று எண்ணியல் முறைப்படி பணப் பரிவர்த்தனை வக்ன்கிகளுக்கு இடையே நடந்தது. இது முதல் முறையாக 1990களில் அமெரிக்க அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. எண்ணியல் உகத்தின் இன்னுமொரு பரிமாண வளர்ச்சியாகத் தோன்றி இருப்பதே இன்றைய Cryptocurrency .

வணிகத் துறையில் பண பரிவர்த்தனை விவரங்களை குறித்து வைக்கப் பயன்படும் கணக்கு வழக்குப்புத்தகம் லெட்ஜர் என்று குறிப்பிடப்படும் ஒரு பேரேடு ஆகும். ஒரு நாட்டில் நடக்கும் எல்லாப் பணப் பரிவர்த்தனைகளும் பொதுவாக ஓரிடத்தில் குறித்து வைத்து பாதுகாக்கப்பட்டு இருக்கும். இந்தப்பரிவர்த்தனைகள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்குப் பல சட்டங்களும் பல வரைமுறைகளும் உண்டு. வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளை கண்டுபிடிக்கவும் தடுக்கவும் பொது மக்களைப் பண மோசடியின் பாதிப்புக்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் இந்த சட்டதிட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு நாட்டு இன்னொரு நாட்டினுடன் வர்த்தகம் செய்யவும் இந்த சட்டதிட்டங்கள் உதவி செய்தன.ஆனால் இன்றைய எண்ணியல் காலத்தில் ஒரு புதிய முறை உருவாக்கப்பட்டது. அதாவது எந்த ஒரு சட்டதிட்டத்திற்கும் உள்ளாகாத ஒரு கணக்குப் பேரடு எண்ணியல் வழியில் உருவாக்கப்பட்டது. 2006ம் ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் இப்போது பல சமூகதளங்களங்களிலும் பல்வேறு அரசாங்கங்களாலும் பணபரிவர்த்தன முறையாகப் பயன் படுத்தப்படும் ஒரு முறையாக வளர்ந்து வருகின்றது.

அனைவராலும் பார்க்கக் கூடிய பகிரக்கூடிய ஒரு பேரிடு , இந்தப் பேரேடு எண்ணியல் வழியாகப் பகிரப்படுவதால் இது எந்த நாட்டின் சட்டத்திற்கும் உட்படாது, அது மட்டுமல்ல எல்லாவிதமானப் புவியியல் எல்லைகளையும் இது எளிதாகத் தாண்டக் கூடியது. இந்த முறை distributed ledger technology என்றோ Replicated Journal Technology என்றோ அழைல்லப்படுகின்றது.

எண்ணியல் முறையில் உருவாக்கப்படும் இந்த பெரிய பண புள்ளிவிவரப்பதிவேடு தரவுகளாக ஒரு கணினி சாதனத்திற்கும் இன்னுமொரு கணினி சாதனத்திற்கும் இடையே நகல் செய்யப்பட்டு பகிரப்படுகின்றது. மூலப்பதிவேட்டிலோ அல்லது நகல்களிலோ ஏதாவது மாற்றம் செய்யப்பட்டால் தரவு ஒருங்கிணைப்பு கணினி நெறிமுறைகளால் (consensus algorithm) சரிபார்க்கப்படு எல்லா நகல்களிலும் இந்த மாற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதே போல மூலப்பதிவேட்டில் ஏற்படுத்தப் படும் மாற்றங்களுக்கு ஏற்ப நகல்களும் கணினி நெறிமுறைகளைக் கொண்டு தங்களைத் தாங்களே புதிப்பித்துக் கொள்ளவும் செய்கின்றன.
இந்தப்பதிவேடுகளைப் பார்க்கவும் பயன்படுத்தவும் அனுமதி தேவையாக இருக்கலாம். அதே நேரம் எந்தவொரு அனுமதியில்லாமலும் பார்வையிடக்கூடிய பதிவேடுகளும் பயன்பாட்டிலிருந்தன. முக்கியமாக இந்த மூலப்பதிவேடும் நகல்களும் எந்த ஒரு மைய அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டவை அல்ல. இந்தப் பேரேடுகளில் உள்ள தரவுகள் எண்ணியியல் கையெழுத்துக்களாலும் மறை குறியீடுகளாலும் பாதுகாக்கப்பட்டு எளிதாக மாற்றி விட முடியாத படி அமைக்கப்பட்டுள்ளன.

Bitcoin என்று அழைக்கப்படும் ஒரு மறைக்குறியீட்டு செலவாணியே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பணப்பரிவர்த்தனையின் மூலம் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வந்த வங்கிகளுக்கு வேலை இல்லாமல் போனது. இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட எண்ணியல் பகிரப்பட்ட பேரேட்டிற்குப் பெயர் தான் block chain. இந்த block chain என்பதன் அடிப்படை என்ன ? இந்த தரவுகள் இன்று உலகில் எவ்வாறு நெறிமுறைப்படுத்தபடுகின்றன என்பதை அடுத்து பார்க்கலாம்.

 இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 – சுகந்தி நாடார்