மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எவ்வாறு குகூள் நிறுவனத்தின் தேடல் முறை ஒரு திருப்புமுனையாக இருந்ததோ அதே போல் 2008 அறிமுகமான இந்த Block chain தொழில்நுட்பம் கணினி வர்த்தகவியலில் ஒரு முக்கிய மாற்றங்களைச் சிறிது சிறிதாக உருவாக்கி இன்றைய உலக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தை பெற ஆரம்பித்து உள்ளது.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இன்றைய பண பரிவர்த்தனை முழுவதும் கணினி வழியும், கடன் அட்டை வழியாகவும். நடக்கின்ற காலகட்டத்தில் இந்தியா விலை என்னும் காகிதத்தில் கணக்கு எழுதும் முறை பயன்பாட்டில் உள்ளது. அதோடு இணைந்து கனி இதிலும் பண்பரிவர்த்த்னைகள் பதிவாகி வருகின்றன. எனவே block chain தொழில்நுட்பத்தைப் பற்றி அடிப்படை விழிப்புணர்வு நமக்கு அவசியமாகின்றது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் வங்கிகளின் வரலாற்றையும் கூகுள் தேடல் தொழில்முறையின் அடிப்படை கூறுகளையும் நாம் ஒரு சேர புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் இன்றைய வங்கிகளின் வரலாற்றை நாம் சுருக்கமாகப் பார்ப்போம்.
நாமின்று பயன் படுத்திவரும் வங்கி முறை 17ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும் 18ம் நூறாண்டுகளில் இந்தியாவிலும் தொடங்கப்பட்டது என்றாலும், பண்டமாற்று முறை வர்த்தகம் தொடங்கிய காலத்திலிருந்தே ஏதோ ஒரு வகையில் வர்த்தக பரிவர்த்தனை முறை செயல்பாட்டிலிருந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்தின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பணப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ய ஏதோ ஒரு தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
நாணயம் என்ற ஒரு பொருள் வர்த்தகத்திற்காகப் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து நாணயமும் பணப்பரிமாற்றத்திற்கும் மனித வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பம் இருந்து வந்தது. இன்றும் நம் கிராமங்களில் சில வணிக முறை பண்டைய கைவிரல்கள் கொண்டு செய்யும் கணித முறையில் நடைபெறுகின்றது. கைக்குறியிடுகளால் வணிகம் நடைபெற்றது. பணத்தை வட்டியாகக் கடனுக்குக் கொடுத்த வழக்கமும் பண்டைய காலத்திலிருந்தது. பொந்துகள் கொண்ட களிமண் உருண்டையில் பொருத்துவதற்காகச் சிறு வெவ்வேறு அளவுகள் களிமண் பந்து அச்சுகளும் பய்னப்டுத்தன. ஏறத்தாழ 4000 ஆண்டுகள் இந்த தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. அதன் பின் ஈரமான களிமண் பலகைகளில் புள்ளிகள் வைத்து வணிக கணக்கும் வரிக்கணக்கும் குறித்து வைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்களில் ஒரு மாதிரியான கணித பதிவேடு தான்.. காகிதம் கண்டுபிடிக்கப்பட்டன் பின் சில இடங்களில் காகித ஆவணங்களோடு சேர்ந்த செப்புத் தகடுகள் இன்றைய கணக்கிடும் கருவியை ஒத்து இருந்தன இடைக்காலத்தில் நாம் இன்று பயன்படுத்தும் வங்கிகளின் முன்னோடி முறைத் தோன்றியது. 16, 17ம் நூற்றாண்டுகளில், வங்கிகள் பரவலாக புழக்கத்திற்கு வந்தது. வெண்கடன் பத்திரம் காசோலை கடவுப்பபுத்தகம் என்று பணம் கை மாறியது. இந்த பரிவர்த்தனைகள் வங்கிகளால் பதிவேடுகளில் குறித்து வைக்கப்படுகின்றன. வங்கியில் நுகர்வோர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கணக்கில் இருக்கும் தொகையைக் குறிக்கும் கடவுப்புத்தகம் கொடுக்கப்படும். 17ம் நூற்றாண்டில் தொடங்கிய வங்கிகள் அமெரிக்காவில் தான் முதல் முதலாக முழுவதும் எண்ணியல் வழியிலேயே பாதுகாக்கப்படுகின்றன. நுகர்வோரின் கணக்கில் இருக்கும் பணமதிப்பு மின்னியல் வழியாகவோ அல்லது தேவையென்றால் அச்சிடப்பட்டும் கொடுக்கப்படுகின்றது.
இன்று இந்தியாவில் காகிதப் பதிவேடும் மின்னியல் முறைப் பயன்பாடும் இன்று பரவிக் கிடைக்கின்றது. உலக வர்த்தகத்தில் ஒரு நாட்டு நாணய முறை இன்னொரு நாட்டின் நாணய முறையாக மாறுவதை நாம் அந்த நாட்டின் அந்நிய செலவாணி என்று குறிப்பிடுகின்றோம். ஒரு நாட்டின் நாணயம் இன்னொரு நாட்டின் நாணயமாக மாற விகிதம் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த விகிதம் ஒரு நாட்டின் நாணய மதிப்பையும் சந்தை நாட்டின் பொருளாதார நிலையையும் வைத்து நிர்ணயிக்கப்படுகின்றது. மாறிக்கொண்டே இருக்கும் இந்த விகிதத் தொகையைப் பல நாட்டின் சட்டங்களும் விதிகளும் ஒழுங்கு முறைகளும் நிர்ணயிக்கின்றன
இணையத்தில் தேடுபொறி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தபட்ட பின் அதன் ஒரு பரிணாமமே மறைக்குறியாகப்பட்ட நாணயம் ஆகும். உலகின் பல வித நாணயங்கள் எல்லாம் மறைந்து அனைத்தும் எண்ணியல் செலவாணியாகவே இந்த இப்போது இந்த மறைக்குறியாகப்பட்ட நாணயம் செயல்படுகின்றது. ஒரே வார்த்தையில் சொன்னால் வர்த்தகத்திற்காகப் பயனில் வந்த ஒரு சிக்கலான கணக்கீடு முறை தான் இந்த மறைகுறியாக்க நாணயம். இந்த தொழில்நுட்பங்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது போல பொதுமக்களும் முதலீடு செய்ய ஆரம்பித்து இருக்கின்றன. எண்ணியல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், இன்றைய வங்கிகள் செய்யும் வேலையை கணினிகள் கொண்டு செய்கின்றனர். இதில் வங்கி குமாஸ்தாக்கள் செய்த வேலையைப் பலவித கணக்கீடுகளை தன்னில் கொண்ட ஒரு சிக்கலான கணக்கீட்டு முறை செய்கின்றது என்று சொல்ல வேண்டும்.இந்த ஒவ்வொரு கணக்கீட்டு முறையும் தங்களுக்குள்ளே கணக்கீடு செய்வதற்கான தரவுத் தளங்களை உள்ளடக்கி இருக்கும்.
இந்த ஒரு கணக்கிடு முறை ஆங்கிலத்தில் block என்று அழைக்கப்படுகின்றது இப்படி ஒச்சொரு பாளமாக( block) உருவாக்கப்பட்டு அவை சங்கிலித் தொடர்போல் இணைக்கப்படுவதே block chain technology என்று அழைக்கப்படுகின்றது. Nodes, PtoP Network, genesis block ledger mining consensus coin burn, nounce hash time stamp போன்ற ஆங்கிலச்சொற்கள் இந்த பாளத் தொழில்நுட்பவல்லுனர்கள் பயன் படுத்தும் கலைச்சொற்களாகும்.’ கடந்த இரு வாரங்களில் மட்டும் அமெரிக்கன்$ 21 மில்லியன் அளவிற்கான பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக block chain technologyல் முதலீடு செய்யும் Coin Share என்ற நிறுவனம் காட்டுகின்றது. நிலம் தங்கம், வெள்ளிப் பணம் என்ற செல்வங்களின் வரிசையில் எண்ணியல் செல்வம் என்ற ஒரு புதிய வணிக முறை உருவாக்கியுள்ளது. ஏறத்தாழ நாம் பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் போதும் விற்கும் போதும், நாம் நிறுவனத்தின் பங்குதாரராகப் பதிவேடுகளில் தான் இருங்கும். நாம் எவ்வாறு ஒரு ஜடப்பொருளாக பங்கு சந்தையின் பங்கை நம் ஆறரிவினால் உணரமுடியாதோ அதே போல இந்த எண்ணியல் செல்வத்தையும் நாம் உணர இயலாது. ஆனால் இந்த செல்வத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் பங்குச்சந்தையின் செல்வம் இன்று நடைமுறையில் இருப்பது போல எண்ணியல் செல்வமும் எதிர்காலத்தில் ஒரு செல்வமாகக் கருதப்படும். அமெரிக்காவிலிருந்து எல் சால்வடோர் நாடுவரை அனைத்து நாடுகளும் எண்னியியல் செல்வத்தை அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளன.
இந்த எண்ணியல் தொழில்நுட்பத்தின் கலைச்சொற்களைப் பற்றி அறியும் முன் இணையத்தில் தரவுகள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படை நமக்குப் புரிந்தால் நாம் இந்த வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அடிப்படை விவரங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது எளிதாக இருக்கும்.. எண்ணியலின் அடிப்படைப் பயன்பாட்டை நாம் தெரிந்து கொள்வது எதிர்கால கல்வியின் ஒரு முக்கியக் கூறாக அமையப் போகின்றது.