இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom (Online Education) - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayamமறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை

தங்கத்தைப் போல், நிலத்தைப் போல், ரொக்கப்பணத்தைப் போல் இன்று மறைக்குறியீட்டாக்க செலவாணியும் (cryptocurrency) ஒரு செல்வம் தான். இது ஒரு எண்ணியியல் செலவாணி என்பதனால், இதன் மதிப்பும் பூஜ்ஜியம் அல்லது ஒன்று என்ற வகையில் தான் குறிக்கப்பட்டு இருக்கும். மறைக்குறியீட்டாக்க செலவாணி என்றாலே பூஜ்ஜியமும் ஒன்றும் இணைந்துள்ள கணினி கணக்கீட்டுமுறை தான்.. இன்று உலகில் மொத்தமே 21 மில்லியன் மறையீட்டுக்குறி செலவாணிகள் தான் உள்ளன. அதில் 18.587 மில்லியன் செலவாணிகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. அதனால் அதன் இன்றைய மதிப்பு அமெரிக்கன் டாலரில் $ 38,986.40 ஆகும். 2008ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த செலவாணி இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் கனடா ஐரோப்பிய ஒன்றியம் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒரு செலவாணியாகும். இதன் மூலம் பரிவர்த்தனை செய்பவர்கள் மறைமுகமாகச் செயல் படுவதால் இதற்கு என்று ஒரு மத்திய வங்கியோ விதிகளோ வரைமுறையோ இல்லை. அதனால் உலகின் பல நாடுகளில் இவை அங்கீகரிக்கப்படவில்லை

கூகுள் தொழில்நுட்பத்தின் தரவுகள் உலகின் எல்லா மொழிகளிலும் இருக்கும் கூகுளின் தரவுத் தளங்களை இணையத்தில் இணைந்திருக்கும் எவர் என்றாலும் கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி தேடிக் கொள்ள முடியும். ஒரு கணினி வழி ஒரு பயனர் தேடும் போது அவருக்கு அந்த தரவின் விவரங்கள் அவருக்குத் தெரியும், அதை அவரால் ஓரளவு பயன்படுத்த முடியும் என்றாலும் அந்தத் தரவுகள் அனைத்தும் கூகுளுக்குச் சொந்தமானவை. கூகுளின் அனைத்துத் தரவுகளும் ராட்சத சேமிப்பக்கங்களில் உலகமெங்கும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நாம் தேடும் தரவுகளின் விவரங்களை எல்லாராலும் கண்டுபிடிக்க இயலாது. அதைப் பெறுவதற்கு நாம் ஒரு சட்ட திட்டங்களின் உதவியை நாட வேண்டும் கூகுளில் ஒருவர் ஒரு தரவைத் தேடுவது சட்டபடிக் குற்றமாகாது.

கூகுள் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடும் போது இந்த மறைக்குறியீட்டு செலவாணி எண்களால் உருவான ஒரு கணக்கீட்டு முறை மட்டுமே. இதை வாங்கவும் சேமித்து வைக்கவும் பயன்படுத்தப்படும் கணினிகள் அனைத்தும் நம் கல்விக் கூட கணினி செயலரங்கம் போல ஒன்றோடு ஒன்று இணைந்த கணினிகள் தான். இவற்றின் விலை மதிப்பின் காரணமாக இவற்றை வாங்குவதும் சேமித்து வைப்பதும் மிக பாதுகாப்பான முறையில் செயல்படுகின்றது. இந்த கணக்கீட்டுமுறை செலவாணியை யார் வாங்குகின்றார்களோ அவர்களுக்கே அது உரிமை. இந்த செலவாணியின் பரிவர்த்தனையின் பதிவேடு மட்டுமே அனைவராலும் பார்க்கப்படும். இந்த செலவாணி பல சட்டதிட்டங்களுக்கு உட்படாத காரணத்தால் இருட்டு இணையத்தில் நடைபெறும் பல குற்றவியல் செயல்களின் பணப்பரிவர்த்தனைக்கு இவை பயன்பட்டன. இன்று நமக்குக் கந்துவட்டி எவ்வளவு தீமையானதோ அந்த அளவு இந்த மறையீட்டுக்குறி செலவாணியும் ஆபத்தானதாக முடியும் என்று பல பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த செலவாணி நிரந்தர பொருளாதாரத்தின் அடிப்படையாகமுடியாது என்றும் இது காலப்போக்கில் மறைந்து விடும் ஒருவகை வாடிக்கையாளர் பித்து என்றும் கூறப்படுகின்றது இருந்தாலும் இன்றைய பொருளாதார நடவடிக்கைகளிலும் வணிக செய்திகளிலும் பங்குச்சந்தையிலும் ஒரு பிரதான இடத்தைப் பெற்றுள்ளது.இந்த மறைக்குறியீட்டாக்க செலவாணியைப் பெறுவது எப்படி?

ஒருவர் பொதுவாக ஒரு மறைக்குறியீட்டாக்க செலவாணியை பெற வேண்டும் என்றால் ஒரு கணிதப் புதிரை வேகவேகமாக விடுவிக்க வேண்டும். ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு அதிவேகமாக ஒரு கணிதப் புதிரைத் தீர்க்கின்றாரோ அவருக்குத் தான் இந்த நாணயம் கிடைக்கும். இந்த கணிதப்புதிரை உருவாக்குவது ஒரு கணிதக் கணக்கீட்டு முறையே. இந்தக் கணிதப்புதிருக்கான முதல் முதல் கணக்கீட்டை சட்டோஷி நகமோடோ என்ற புனைபெயரைக் கொண்ட ஒருவராலோ அல்லது ஒரு குழுவினராலோ 2001ல் நாசா வெளியிட்ட ஒரு கணக்கீட்டு(algorithm) முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்தக் கணிதப்புதிர்களை விடுவிக்க உலகின் பல மூலையிலிருந்து பலரிந்த முறையில் இந்த நாணயத்தைப் பெற முயற்ச்சிக்கின்றனர். சீனாவில் இதற்கென்று பல சட்டவிரோதமான நிறுவனங்களும் செயல்படுகின்றன இதே போல பல நாடுகளில் பல மூலைகளில் இந்த நாணயத்தைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். இப்படி நாணயங்களை உருவாக்க வேண்டி கணிதப்புதிர்களை விடுவிக்க வேண்டி அதிவேகமாகச் செயல்பட ஒரு வலிமை மிக்க மைய செயலகமும் அந்தககணியை வேலை செய்ய வைக்க அதிக அளவு மின்சாரமும் தேவைப்படுகின்றது. இதனால் பல இணையதளங்கள் மூலம் ஏதாவது ஒரு பயனரின் கணினிக்குள் புகுந்து அந்தக்கணினியின் மையச் செயலகத்தைப் பயன் படுத்தும் திருட்டு வேலைகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இது தவிர இந்தக் கணிதப்புதிர்களை விடுவிக்க அதிகமான மின்சாரமும் தேவைப்படுகின்றது. வருடத்திற்கு 129 terawatt-hours அளவு மின்சாரத்தை இந்த மறைக்குறியீட்டாக்க சுரங்கத் தோண்டுதல் பயன்படுத்தப்படுகின்றது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.1000ம் வாட்ஸ் என்பது ஒரு கிலோ வாட்ஸ் என்றால் 1டெரா வாட்ஸ் என்பது பதினாயிரங்கோடி கோடிவாட்ஸ் என்று நாம் புரிந்து கொள்ளலாம். பொதுவாக நாம் ஒரு மணிநேரத்தில் 1000 கிலோ வாட்பயன்படுத்தினால் அது ஒரு அலகு என்று கணக்கிடப்படுகின்றது.

உலகின் 13% மக்கள் தொகைக்கு இன்னும் மின்சார வசதியே இல்லை.அதாவது ஏறத்தாழ 1 பில்லியன் மக்களுக்கு உலகில் மின்சாரம் இல்லை. அதுவும் ஆப்பிரிக்கக் கண்ட நாடுகள் இன்னும் பல மாலையில் இருட்டில் மூழ்கிக் கிடக்கின்றன.சூரிய சக்தியினால் உருவாக்கப்படும் மின்சாரத்தையும் கடலின் உப்பு நீரையும் கொண்டு வேலை செய்யும் கை விளக்குகளை வைத்து இன்னும் பல பின் தங்கிய நாடுகளில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்யப் பயன் படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிடைப்பதற்குரிய செல்வமாய் பொதுமக்கள் நினைக்கும் ஒரு செல்வத்தைத் தேடிக் கூடுதல் மின்சாரமும் அதிக சக்திவாய்ந்த கணினிகளும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது கவலைக்குரியதும் அச்சத்திற்குரியதும் என்றாலும் இந்த மறைக்குறியீட்டாக்க செலவாணி அடுத்து வரும் எதிர்காலங்களில் பன்னாட்டு வாணிகத்திலும் பல நாட்டுப் பொருளாதாரத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இந்த கணினித் தொழில்நுட்பத்தின் அடிப்படைகளை இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 

https://bookday.in/essential-needs-for-internet-classroom-39-suganthi-nadar/

https://bookday.in/essential-needs-for-internet-classroom-40-suganthi-nadar/

https://bookday.in/essential-needs-for-internet-classroom-41-suganthi-nadar/

https://bookday.in/essential-needs-for-internet-classroom-42-suganthi-nadar/

https://bookday.in/essential-needs-for-internet-classroom-43-suganthi-nadar/

https://bookday.in/essential-needs-for-internet-classroom-44-suganthi-nadar/இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.