Essential requirements for internet classroom (Online Education) - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam



எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி

ஒரு மெய் நிகர் உலகில் நடக்கும் எத்தையோ விஷயங்களில் இணையக் கல்வியும் ஒன்று. இணையத் தொடர்பு இணைய ஊடகம், இணையக் களஞ்சியம் என்று மெய்க்கு நிகரான கணினி உலகில் இன்று பிரபலமாகிவரும் ஒரு தொழில்நுட்பம் மறைக்குறியீட்டாக்க வர்த்தக செலவாணி.

இந்தத் தொழில்நுட்பத்தைப்பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று யோசித்தால் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது கணினி நரலெழுதுதல் ஒரு அடிப்படை மொழியாக கற்றுக் கொள்ள வேண்டிய அவ்சையம் இரண்டாவது கணக்கீடு முறைகளின் அடிப்படை ஒரு கணக்குப் பாடம் போல் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான பாடமாக அமைய வேண்டியது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியர்கள் $200 மில்லியன் அளவிலிருந்து 40 பில்லியன் அளவிற்கு இந்த மறைக்குறியீட்டு நாணயங்களை வாங்கி விற்று இருக்கின்றார்கள் என்று Bloomberg பத்திரிக்கைக் கூறுகின்றது.இன்று முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் தன்னுடைய செயற்கை அறிவுத் திறன் கொண்டு எழுதப்பட்ட நிரல்களால் தங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நியமிப்பதும் கண்காணிப்பதும் வேலையை விட்டு நீக்குவதும் கணினி நிரல்களே என்ற ஒரு செய்தியும் வெளியாகி உள்ளது. கண்காணிக்கும் மனித மேலாளர் ஒருவர் இல்லாமல் ஒருவரின் வேலை செய்யும் திறன் வேலை செய்யும் வேகம், வேலையின் அளவு ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு அமேசான் பொருட்களை விநியோகம் செய்யும் தொழிலாளிகளை ஒரு கணினி மேலாண்மை செய்கின்றது. இதனால் ஒருவரின் வேலைத் திறனில் ஏற்படும் குறைபாடுகளை ஆராய்ந்து அறிய இயலாமல் போகின்றது. ஆனால் மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை இயந்திரங்கள் செய்வதால் நிறுவனத்தின் இலாபம் அதிகரிக்கின்றது. இவ்வாறாக கணினி மொழி நமக்குப் பிடிக்கின்றதோ இல்லையோ, நமக்குத் தெரிகின்றதோ இல்லையோ நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.நமது இன்றைய எண்ணியல் சுற்றுச்சூழலின் அடிப்படையை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பத்து ஆண்டுகளுக்கு முன் நாம் ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் அதற்கான காகிதப் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து, உரிய வணிகரிடம் கொடுத்து நமக்குத் தேவையான பொருளைப் பெற்றுக் கொண்டோம். நாம் செல்லும் உத்தியோகத்தில் சம்பளமாக வாங்கும் போது நமக்குக் காகிதப் பணமாகவே கொடுக்கப்பட்டது. அன்றாட வீட்டுச் செலவிற்கும் சேமிப்பதற்கும் நாம் காகிதப் பணங்களையும் உலோக நாணயங்களையும் பயன்படுத்தினோம். ஆபரண உலோகங்களான தங்கமும் வெள்ளியும் செல்வங்களாகக் கருதப்பட்டாலும் வர்த்தகத்திற்குப் பயன்படவில்லை. பணம் பெறுவதற்கும் சேமிப்பதற்கும் பெரும் தொகையைக் கடன் வாங்குவதற்கும் வங்கிகள் அரசிற்கும் பொதுமக்களுக்கும் இடையில் பணப்பரிமாற்றம் செய்யும் ஒரு கருவியாக இருந்து வந்தது. அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் உருவாகின. ஒருவர் வங்கியில் சென்று பணம் எடுக்க வேண்டும் என்றால் அவரது கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் இருந்தால் மட்டுமே அவருக்குப் பணம் கொடுக்கப்பட்டது. வங்கியில் பணம் இல்லாவிட்டால் வட்டிக்கு வெளியிடத்தில் கடன் வாங்கும் வழக்கம் இருந்தது. வங்கிகளின் வழி நாம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும் போது அடுத்து காசோலை வழி பணப்பரிமாற்றம் செய்ய வழி வந்தது.



காகிதப் புழக்கம் அதிகமாக இருந்த காலத்தில் கிழிந்த பணத்தையும், நுகர்வோரால் எழுதப்பட்ட காகிதப்பணங்களையும் வைத்து வர்த்தகம் செய்வதில் பிரச்சனைகள் வந்தன. அதைத் தவிர பெரிய சட்டப்பிரச்சனைகள் என்று சொல்லும் போது கள்ள பணமும் போலி பணமும் பிரச்சனையாக இருந்தது. ஒரு நுகர்வோர் வங்கிக் கணக்கு அவரது பற்றுவரவேட்டில் பதிவு செய்யப்பட்டது. ஒருவர் வங்கியில் ஒரு சில இடங்களில் காசோலையும் கொடுக்கப்பட்டது.

நாம் நமது வீட்டின் வரவு செலவுக் கணக்கை எழுதும் போது நமது வங்கியில் நாம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது காசோலையில் பணம் பரிமாறும் போது ஒருவர் தன் வங்கி இருப்பில் பணம் இல்லையென்றாலும் காசோலையைக் கொடுக்க முடியும் காசோலைக் கொடுத்தவரின் கணக்கில் பணம் இல்லை என்பது வங்கியில் காசோலையைக் கொண்டு கொடுக்கும் போது தான் தெரியவரும். வங்கியில் நாம் பணமாகப் பெற்றாலும் காசோலைக் கொண்டு வாங்கினாலும் பணத்தின் மதிப்பை அரசாங்கமே முடிவு செய்யும். அதே போல வங்கிகளுக்கும் ஏற்ப அரசாங்கம் சட்டதிட்டங்களைக் கொண்டு வரும் . தன்னி ஒருவர் நாட்டிற்கு வருமான வரி வேறு கட்ட வேண்டும். இது தான் இன்றைய பொதுவான நடைமுறை.

இந்தியாவில் பணப்பரிமாற்றமாகட்டும் அதைப் பதிவேடுகளில் குறித்து வைப்பதாகட்டும் காகிதத்திலும் கணினியிலும் பதிவேடுகள் இருக்கும் ஆனால் அமெரிக்க நாட்டில் வங்கிகளின் கணக்கும், வாடிக்கையாளரின் கணக்கும் எல்லாமே கணினி மூலம் நடைபெறும். ஒருவரது சம்பளம் பெறுவது, மின்சாரம் போன்ற சேவைகளுக்குப் பணம் கட்டுவது எல்லாமே கணினி வழி நடைபெறும். வாடிக்கையாளர்கள் காகித காசோலையை அனுப்பினாலும் அவை படமாகவே வங்கிப் பதிவேடுகளில் இருக்கும். ஒரு வாடிக்கையாளர்களுக்குத் தேவை என்றால் அவர்கள் தங்கள் கணினி வழியோ திறன்பேசி வழியோ வங்கியின் தளத்திற்குள் சென்று கணக்கைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டியது தான். சுற்றுச்சூழலைக் காக்கும் பொருட்டு காகிதங்களில் அச்சடிப்பது மிகவும் குறைந்த நிலையிலேயே இருக்கின்றது.

இந்த அடிப்படை வேலைகள் கடன் அட்டை வந்த பிறகு எல்லாவற்றையும் கடன் அட்டை வழியே செலுத்தி விட்டு மாத இறுதியில் கடன் அட்டை நிறுவனத்திற்கு மொத்தத் தொகையையோ அல்லது வட்டியுடன் சிறிது அசலையும் சேர்த்துக் கட்டுவது என்பது வழக்கமாக உள்ளது. ஒவ்வோரு நுகர்வோர் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொருட்களைக் கொடுப்பது வாடிக்கையாக நடக்கும் விஷயம். கடன் அட்டை பயன்படுத்தும் பழக்கம் வந்த பிறகு அந்த அட்டையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கொடுக்கும் வட்டித் தொகையும், வணிகர்கள் கடன் அட்டையைப் பயன்படுத்த நிறுவனங்கள் தரகுத் தொகையையும் கொடுப்பர்.

இவை எல்லாவற்றிற்கும் மாறாக மறைக்குறியீட்டாக்க செலவாணி என்பதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போது நுகர்வோருக்கும், அவர்கள் தேவையை நிறைவேற்றும் வணிகர்களுக்கும் இடையில் ஒரு வட்டிக் காரரோ வங்கியோ கடன் அட்டை நிறுவனமோ இருக்காது. ஏன் அரசாங்கங்கள் கூட இடையில் வர முடியாது. இது ஒரு கணினிக்கும் இன்னுமொரு கணினிக்கும் இடையில் மட்டுமே நடத்தப்படும் பரிவர்த்தனை. இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டுமானால், நாம் எழுதும் கடிதத்தைத் தபால் பெட்டியில் சேர்ப்பதற்கும் மின்னஞ்சல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு. தபால் பெட்டியில் போடப்பட்ட கடிதம் உரியவருக்குப் போய் சேருவதற்குள் பல கைகள் மாறுகின்றது. ஒரு தபால் நிலையம் இடையில் வேலை செய்கின்றது. கடிதம் சென்று அடையவும் கால அவகாசம் தேவையாய் உள்ளது. ஆனால் மின்னஞ்சல் அனுப்பும் போது அது உடனடியாக உரியவருக்குச் சேர்ந்து விடுகின்றது. அதே போலத்தான் ஒருவர் இந்த மறைக்குறிய்யிட்டாக்க செலாவணியை தன்னுடைய ஒரு கணினியிலிருந்து இன்னுமொரு கணினிக்கு உடனே மாற்றி விடலாம்.



இரு தொழில்நுட்பத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் மின்னஞ்சல் அனுப்பும் போது google, microsoft, yahoo போன்ற நிறுவனங்களின் சேமிப்பகம் இருக்கும். ஆனால் மறைக்குறியீட்டாகக்ச்செலவாணியைப் பயன்படுத்தும் போது, ஒரு கணினி நேரடியாக இன்னொரு கணினியிடம் பேசிக் கொள்ளும் . இடையில் எந்த ஒரு சேமிப்பகமும் இல்லை. அரசாங்கம் வங்கிகள் வணிக நிறுவனங்கள் என்று எத ஒரு கட்டமைப்பும் இல்லாமல் தன் சொந்த முயற்சியில் நிரல் எழுதும் நிரல்களின் சாதனை இந்த மறைக்குறியீட்டாக்க வர்த்தகத் தொழில்நுட்பம் என்றால் மிகையாகாது.

மறைக்குறியீட்டாக்க செலவானியின் சில பிரத்தியேக கலைச்சொற்களை நாம் விவரமாகத் தெரிந்து கொண்டால். நம்மால் இந்தத் தொழில் நுட்பத்தின் அடிப்படையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு கனினிநிரல் கணக்கீடு முறை( algorithm)ஒன்றை எவ்வளவுத் துல்லியமாக அமைக்க முடியும் என்றும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்

Nodes, என்ற ஆங்கிலச்சொல் ஒவ்வோரு பொருண்மையின் கீழும் பொருண்மைக்குத் தக்க பொருளை உணர்த்தும் ஒரு கலைச்சொல் ஆகும் கணிதம், ஆங்கில இலக்கணம் இயற்பியல் உயிரியை என்று எல்லாப் பொருண்மையிலும் வெவ்வேறு பொருளை உணர்த்தியிருக்கும் சொல், தமிழ் மொழியில் கணு, முடிச்சு, குமிழ் தமம் ஆகியப் பொருளைத் தந்து நிற்கின்றது. இங்குக் கணினி உலகில், தரவின் அடிப்படைக் கூறு nodes என்று அழைக்கப்படுகின்றது. இந்தத் தரவு ஒரு எண்ணாகவோ, அல்லது ஒரு எழுத்தாகவோ அல்லது ஒரு பண்பாகவோ இருக்கலாம். இந்த தரவுகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து இருந்தாலும் அவை nodes என்றே அழைக்கப்படுகின்றன.

எண்ணியல் செலவாணி என்ற த் துறையில்node என்ற சொல் மறைக்குறியீட்டாக்க செலவாணியைக் கேன பயன்படுத்தும் ஒரு கணினியைக் குறிக்கின்றது. இந்தக் கணினிப்பிணையத்தோடு இணைந்து இருக்க வேண்டும். ஒரு பிணையத்தில் குறைந்தது 2 கணினிகளாகுவது இணைந்து இருக்க வேண்டும், இன்று நாம் பொதுவாகப் பயன்படுத்தும் எந்தக் கணினிக் கருவியும் node ஆக மாறலாம். ஆனால் அவற்றின் இணையத் தொடர்பு குறைந்தது 50 kB யாவது இருக்க வேண்டும். 200 MB அளவிற்குக் கணினியில் இடம் இருக்க வேண்டும். இப்படி பிணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கணினியும் அதனுடைய Ip address வழியாக அடையாளம் காணப்படுகின்றது. இந்தக் கணினிகள் பணப்பரிமாற்ற பதிவேடுகளாகச் செயல்பட வேண்டுமென்றால் அந்தக் கணினியில் அதற்கான உரிய மென்பொருளை நாம் நிறுவி இருக்க வேண்டும்.

nodes என்று அழைக்கப்படும் இந்தக் கணினிகள் இருவகைப்படும் ஒன்று regular nodes, lighter nodes. regular nodes என்று சொல்லப்படும் கணினிகளில் block chain என்று சொல்லப்படும் முழுப்பதிவேடும் இருக்கும். Lighter nodes, block chain பதிவேட்டில் உள்ள அனைத்து தகவல்களும் சுருக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கும் regular nodes கணினிகளில் உலகில் நடக்கும் மொத்த எண்ணியல் செலவாணியின் கணக்கு வழக்குகள் இருக்கலாம், அல்லது அந்த கணினிவழி நடைபெறும் பணப்பரிமாற்றத்தின் கணக்கு வழக்குகள் மட்டும் இருக்கலாம் இன்னும் தொடர்வோம்.



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *