மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்
நாம் மறைக் குறியீடாக்க செலவாணியைப் பற்றித் தெரிந்து கொள்வதின் மூலம்,கணினி நிரல் எழுதும் திறமை எதிர்காலத்தில் எவ்வளவு முக்கியமானது என்று பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். மறைக்குறீட்டு செலவாணித் தொழில்நுட்பத்திற்கென்ற கலைச்சொற்களை நாம் தெரிந்து கொண்டால் நம்மால் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும் சென்ற வாரம் Nodes என்ற கலைச்சொல்லின் வேலையைப் பார்த்தோம்.
Nodes என்பது மறைக்குறீட்டாக்க தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கூறு ஆகும். மறைகுறியீட்டு செலவாணிக்கென்று பயன்படுத்தும் கணினிகள் திறன்பேசிகள் தான் Nodes என்று குறிக்கப்படுகின்றன. அவை ஒரு சேமிப்பகத்தின் துணை கொண்டு இயங்காமல் நேரடியாக ஒன்றோடு ஒன்று தொடர்பு நேரடியாகத் தொடர்பை வைத்துக் கொள்ளும். ஒரு தாவரத்தின் தண்டில் இடை இடையில் உள்ள கணுக்கள் போல மறைகுறியீட்டாக்கத் தொழில்நுட்பத்திற்கென்று ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் எண்ணியியல் கருவிகளே Nodes என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வோரு கணினியும் மறைக்குறியீட்டாக்க இணைந்து இருப்பவை என்பதை உறுதிப்படுத்தவும்பண பரிமாற்ற தகவல்களைப்பகிர்ந்து கொள்ளவும் பயன் படுத்தப்படுகின்றன.
Hash என்பதன் தமிழ் பொருள் விளக்கம் கதம்பக் கூளம் என்று எடுத்துக் கொள்ளலாம். கணினித் தொழில்நுட்பத்தில் hash என்பது ஒரு தரவின் மதிப்பை மனிதர்களுக்கும் கணினிகளுக்கும் அடையாளப்படுத்த முடியாத வகையில் இன்னொரு மதிப்பாக மாற்றுவதே ஆகும் பயனர் கொடுக்கும் ஒரு சொல்லையோ அல்லது மற்ற விவரஙளையோ கணக்கிட்டு முறையை வைத்து மாற்றி எண் எழுத்துக் கலவையாக கொடுக்கப்படும் செயல் Hash என்று அழைக்கப்படுகின்றது. ஒரு பயனர் கொடுக்கும் தரவுச் சொல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் எழுத்துக்களையும் எழுத்துக்களையும் கொண்ட ஒரு குறியீடாக மாற்றி விடுவதே Hash எனப்படும்.
மேலும் ஒருமுறை Hash செய்து எண் எழுத்துக் கலவைக் குறியீடாக மாற்றப்பட்ட தரவை பயனரால் குறியீட்டு எண்ணிலிருந்து மீண்டும் மூலத் தரவாக மாற்ற இயலாது. அதனால் இந்த முறை இனையப் பாதுகாப்பிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இணையத்தில் பயனர்கள் சேமிக்கும் அனைத்து விவரங்களும் Hash செய்யப்பட்டு தான் அந்தந்த சேவை நிறுவனங்களின் சேமிப்பகத்தில் சேமிக்கப்படுகின்றன. பயனாளர் கொடுக்கும் இரு தரவுகளிலொரு சிறு மாற்றம் இருந்தாலும் வெளியிடப்படும் குறியீடு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவே இந்த முறை பொதுவாக இரு ஆவணங்களை ஒப்பிட்டிப்பார்க்கவும் , ஆவணத்தின் முக்கியக்கூறுகள் மாற்றப்பட்டு இருக்கின்றனவா என்று சோதிக்கப் பயன்படுத்தப்படுகின்றது
நாம் கொடுக்கும் விவரங்கள் அதிகப்படியாக 128 bit அளவில் சேமிக்கப்படும். இணையப்பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் hash Mdi 5 என்று அழைக்கப்படுகின்றது.
மறைக்குறியீட்டாக்க செலவாணியில் SHA256 என்ற கணக்கீடு கொண்டு உருவாக்கப்படுகின்றது. இந்த குறியீடுகளை உடைப்பது மிகவும் கடினம். அது மட்டும் இல்லாமல் மறைக்குறியீட்டு செலவாணியில் ஒரு தரவு ஒரு முறை hash செய்யப்பட்டவுடன், இரு hashகளைத் தரவுகளாகக் கொண்ட அடுத்த நிலை hash உருவாக்கப்படுகின்றது.
Nonce என்பது குழுக்குறியியல் (cryptography) தொழில்நுட்பத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றது. கொடுக்கப்பட்ட தரவு ஏறுக்குமாறாக எந்த ஒரு விதிகளும் இல்லாமல் நேரிடப்பட்ட ஒரு எண் எழுத்துக் கலவைக் குறியீடு ஆகும். இதை ஒரே ஒரு முறைதான் பயன்படுத்த முடியும். ஆங்கிலத்தில் எண்களைக் குறிக்கும் number என்ற சொல்லின் முதல் எழுத்தான N உம் once என்ற சொல்லும் சேர்ந்ததே Nonce என்ற சொல்லாக்கத்தின் அடிப்படையாகும்
Block Wallet மறைக்குறியீட்டாக்கத் தொழில்நுட்பத்தில் இது போல எந்த ஒரு குறுஞ்செயலியும் இல்லாமல் கணினிகளே தங்களுக்குள் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்கின்றன. எனவே ஒரு கணினி தனக்குள்ளே மரைக்குறியீட்டாக்க செலவாணியை வைத்துக் கொள்ள ஒதுக்கி வைத்திருக்கும் இடமே Wallet என்று அழைக்கப்படுகின்றது.
Google Pay, Apple Pay, Pay TM, Paypal, Venmo என்று நாம் அனைவரும் என்று கேள்விப்பட்டு இருக்கின்றோம். நம் கணினியில் உள்ளக் குறிப்பிட்ட குறுஞ்செயலியிலிருந்து இன்னொருவரின் குறுஞ்செயலிக்கு நாம் பணத்தை அனுப்புகின்றோம். இந்தக் குறுஞ்செயலிகள் செயல் பட நாம் நம் வங்கிக் கணக்குகளையோ, கடன் அட்டைக் கணக்குகளையோ இந்தக் குறுஞ்செயலியில் பதிவு செய்து இருக்க வேண்டும். நம் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து அவை இன்னோருவின் குறுஞ்செயலிக்கு அனுப்பப் பெறுவோரின் குறுஞ்செயலி அதை அவரது வங்கிக் கணக்கிலோ அல்லது கடன் அட்டைக்கணக்கிலோ சேர்த்து விடும்.
பணம் அனுப்பப்பட விவரம் நமக்குக் குறுஞ்செய்தியாகவே அல்லது மின்னஞ்சலாகவோ வரும் காகிதப் பணத்தின் மதிப்பு ஒரு அரசினால் நிர்ணயிக்கப்படுகின்றது இரு குறுஞ்செயலிக்கு இடையிலும் ஏற்படும் பணப்பரிமாற்றம் கணக்குகளில் பதிவாகியிருக்குமேத் தவிர நாம் பணத்தைக் கண்ணில் பார்ப்பது இல்லை. ஆனால் தேவையென்றால் காகிதப்பணமாக மாற்றிக் கொள்ளலாம் நாம் தற்போது பயன் படுத்தும் இந்த சேவைகளைப் போன்றதே மறைக்குறீட்டாக்க wallet என்பதும்.. Google, Apple, Paypal, Venmo என்று எந்த ஒரு இடை நிறுவனமும் இல்லாமல் ஒரு கணினி தன்னிடமிருந்து இன்னொரு கணினிக்கு செலவாணியை நேரடியாக செலவாணியை அனுப்பும்.
அப்படி அனுப்பப் படும். பணமும் நம் வங்கிகளில் இல்லாமல் நம் கணினியிலேயே இருக்கும். இப்படி நம் கனிணிக்குள்ளே நமது செலவாணியை பாதுகாப்பாக வைத்து இருக்கும் இடம் தான் wallet ஆகும். இந்த wallet பயனாளருக்கு என்று ஒரு விலாசத்தை உருவாக்கும். இந்த விலாசத்தைப் பயன்படுத்தித் தான் ஒருவர் பயனாளியிடம் பணம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ முடியும்.. நம் கணினியில் நமதுக் கடவுச்சொல்லைச் சேர்த்துவைக்க உதவும் மென்பொருள்கள் போல இந்த wallet வேலை செய்கின்றது.
PtoP Network, என்பது மறைக்குறியீட்டாக்க செலவாணியை பரிமாறிக்கொள்ளும் கணினிகளிடையே உள்ளத் தொடர்ர்பஇக் குறிக்கின்றது. தங்களுக்குள்ளே இருக்கும் மறைக்குறீயீட்டு செலவாணியை பரிமாறிக்கொள்ள மட்டுமே இந்த வலையமைப்புப் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது ஒரு கணினியே வாடிக்கையாளராகவும் வியாபாரியாகவும் செயல் படுகின்றது.
ஒரு காகித செலவாணியைப் பகிர்ந்து கொள்ள வங்கிகள் இடையில் செயல்படுவது போல எந்த ஒரு இடைத் தரகர்களும் இல்லாமல் மறைக்குறியீட்டாக்க செலவாணியைக் கொண்ட ஒரு எண்ணியியல் கருவி அதே போல மறைக்குறியீட்டாக்க செலவாணியைக் கொண்டுள்ள இன்னுமொரு எண்ணியியல் கருவிடம் உள்ள மறைக்குறியீட்டாக்க செலவாணியை நேரடியாகப் பரிமாறிக் கொள்வதே PtoP Network, ஆகும் இவை நேரடியாக ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்வதால் அவை அதிவேகமாகச் செயல்படும். அதுமட்டுமில்லாமல் இருவருக்குமான பணப்பரிவர்த்தனை வினாடிக்குள் நடந்துவிடும்.
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.