இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom (Online Education) 48 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayamஎண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்

சிறப்புக்காரணிகளுக்காக இருவரோ அல்லது ஒரு குழுவினரோ தங்களுக்குள்ளான செய்தியைக் குழுவில் உள்ளவர்களே புரிந்து கொள்ளும் படியும், சுற்றியுள்ளவர்களுக்கும் பொது மக்களுக்கும் புரியாத படியும் மாற்றி சங்கேத மொழியில் சொல்வது ஆங்கிலத்தில் cryptography என்று அழைக்கப்படுகிறது தமிழில் ஒரு குழுவினருக்கான வணிக சங்கேதமொழி குழுவுக்குறி என்று அழைக்கப்படுகின்றது.. ஆனால் ஆங்கிலத்துச் சொல்லைத் தமிழாக்கம் செய்யும் போது அது மறைக்குறியீட்டாக்கம் எனப்படுகின்றது. வர்த்தக பணபரிமாற்றத்தை கணினித் தொழில்நுட்பத்தின்வழி செய்வதே மறைக்குறியஈட்டாக்க செலவாணியாகும். அதுவே ஒருத் தனித் தொழில்நுட்பமாக இன்று பயனில் பிரபலம் அடைந்து வருகிறது. இத்தொழில்நுட்பத்திலுள்ள கலைச்சொற்களை வரிசையாகப் பார்த்து வருகின்றோம்.

ஒருவர் மறைகுறியீட்டாக்க செலவாணியில் பணப்பரிவர்த்தனை செய்ய விரும்பும் ஒரு பயனாளி தனது எண்ணியியல் செலவாணியை வைத்துக் கொள்ள wallet என்ற மென்பொருளை தங்கள் கணினியில் வைத்துக் கொள்ள வேண்டும் ஒருவர் இந்த wallet மென்பொருளைத் தங்கள் nodes என்று அழைக்கப்படும் கணினியில் நிறுவியவுடன் இந்த மென்பொருள் அவர்களுக்கு இரண்டு விதமான குழுக்குறியிலான எண்ணும் எழுத்தும் கலந்த குறியீடுகளைக் கொடுக்கின்றது குரியீடில் எண்கள் இருந்தாலும் அவற்றைக் கணினி எழுத்தாகவே புரிந்து கொள்ளும் என்பது முக்கியமானது. எண், எழுத்து இரண்டையும் கலந்து தருவதனால் குறியீட்டை எளிதாக உடைக்க இயலாது.முதல் குறியீடு Public keyஎன்றும், இரண்டாவது குறியீடு private key என்றும் அழைக்கப்படுகின்றது. முதலில் private key உருவாக்கப்பட்டு அதிலிருந்து Public key உருவாகின்றது.

Public key என்பது எண்ணியியல் செலவாணியை ஒருவர் பெற்றுக்கொள்ள உதவும் ஒரு முகவரியாகப் பயன்படுகின்றது இந்தை நாம் பொது குழுவுக்குறி குறியேடு என்று அழைக்கலாம் இந்தக் குறியீட்டு எண் எண்ணியியல் செலவாணியின் பங்கேற்பாளராக PtoP Network,ல் அடையாளம் காட்டுகின்றது. இந்த முகவரியைப் பயன் படுத்தி அவருக்கு எண்ணியியல் செலவாணியை அனுப்பலாம். இந்த Public keyஅடையாளத்தைக் குறிப்பாக அடையாளம் காட்டப்படாவிட்டாலும் இந்தக் குழுவுக்குறியீட்டின் கீழ் செய்யப்படும் பணப்பரிவர்த்தனை குழுவுக்குறியீட்டு வலையத்தில் அனைவருக்கும் தெரியும்.இந்தப் பொது குறீடயீட்டு விலாசத்திற்கு குழுவுக்குறியீட்டில் தகவல்கள் அனுப்பலாம்.private key என்பது பயனாளருக்கு வந்த குழுவுக்குறியீட்டை பிறர் படிக்கும் சாதாரண தகவலாக மாற்றித் தருகின்றது. இந்த prவுக்குறியivate key ஒருவரின் கடவுச்சொல்லைப் போல மிக முக்கியமானதும் இரகசியமாகக் காப்பாற்றப்பட வேண்டியதுமாகு,ம் இதை நாம் இரகசிய குழுவுக்குறி குறியிடு என்று அழைக்கலாம் ஒரு பொது குழுவுக்குறி அடையாளத்திற்கு ஒரு இரகசிய குழுவுக்குறி அடையாளம் தான் இருக்கும். இந்த இருகுறியீடுகளையும் மீண்டும் கதம்பக்கூளமாக்கி ஒரு புதிய குழுவுக்குறி அடையாளம் உருவாக்கப்படுகின்றது. இந்த குழுவுக்குறி அடையாளமே PtoP Network,ல் ஒருவரின் விலாசமாக அமைகின்றது இந்த விலாசத்திற்குத்தான் ஒருவரால் எண்ணியல் செலவாணியை அனுப்ப இயலும்.

genesis என்றால் முதல்முதலாக உருவாக்கப்பட்டது என்று பொருள் மறைக் குறியீட்டாக்கத் தொழில்நுட்பத்தில் genesis block என்பது Satoshi Nakamoஎன்பவரால் முதன் முதலாக உருவாக்கப்பட்ட கணிதப் புதிரைக் குறிக்கின்றது.

Block Zero என்றும் இது அழைக்கப்படுகின்றது. இந்தக் கணிதப்புதிர்ன் மதிப்பு 50 மறைக்குறியஈட்டாக்க நாணயங்களாகும். இந்த நாணயங்களை எவராலும் செலவழிக்க முடியாது.

timestamp என்பது ஒரு உருவாக்கப்பட்ட நேரத்தை ஒரு தரவாக கொடுப்பதாகும். ounce என்று சொல்லப்படும் மறைக்குறியீட்டாக்க எண் புதிரை விடுவித்த நேரத்தையும், ஒரு பணப்பரிவர்த்தனையின் உண்மைத்தன்மையையும் மதிப்பிட்டும் கூறப்படும் ஒரு தரவையும் இந்த தரவும் கொண்டதாகும்

block என்பது மறைக்குறியிட்டாக்கபப்டத் தரவுகளின் தொகுப்பேயாகும்., இந்தத் தொகுப்பு c++ கணினி மொழியில் எழுதப்பட்ட ஒரு மென்பொருளாகும். ஒரு சிக்கலானக் கணிதப்புதிரை விடுவிக்கும் போது பிளாக் உருவாகிறது. private key public key nounce , செய்யப்பட்ட முந்தைய blockன் விவரம், எண்ணியியல் குழுவுக்குறியாக மாற்றப்பட்ட பணப்பரிவர்த்தனை விவரங்கள், block உருவாக்கப்பட்ட நேரம் ஆகிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒரு மறைக்குறியீட்டாக்க எண்ணியியல் தொகுப்பு ஆகும். முதல் முதலாக உருவாக்கப்பட்ட genesis block விவரத்திலிருந்து இந்தக்கணம் வரை உருவாக்கப்பட்ட ஒவ்வோரு blockக்கும் அதற்கு முந்தைய blockன் விவரங்களைக் கொண்டுள்ளதால் இது block chain என்று அழைக்கப்படுகின்றது.. அத்தனை விவரங்களும் ஒரு கணிதப்புதிராக இருக்கும் இந்தக் கணிதப்புதிரை ஒரு கணக்கீடு Algorithm) கொண்டே விடுவிக்க முடியும்

mining என்பது ஒவ்வோரு block chainல் உள்ள கணிதப்புதிர்கலை விடுவித்து ஒரு மறைக்குறியீட்டு நாணயத்தை உருவாக்குவது ஆகும் ஒரு கணிதப் புதிரை விடுவித்தவுடன் உடனே ஒரு புதிய block உருவாகும். block chainல் உள்ள கணிதப்புதிர் என்பது p2p networkல் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளைச் சரிபார்ப்பது ஆகும் . ஒரு block ல் பணப்பரிவர்த்தனைகளோடு இன்னும் பல விவரங்களும் தனித் தனியாகவும், மொத்தமாகவும் hash செய்யப்பட்டு எண்ணியல் குழுவுக்குறியீடுகளாக மாற்றப்பட்டு இருப்பதனால் ஒருblock ல் உள்ள பரிவர்த்தனைகளும் மற்ற விவரங்களும் ஒரு சிக்கலான கணிதப்புதிரை உருவாக்குகின்றன. இந்தக் கணிதப் புதிரை விடுவிக்க, பலர், ஒரு node என்ற தங்களுடைய கணினி வழி முயல்கின்றனர். ஒவ்வொரு கணினி புதிதாக p2p networkல் இணையும் போதும் கணிதப்புதிர் மேலும் சிக்கலாகவும் பெரியதாகவும் மாறுகின்றது. ஒரு blockல் உள்ள புதிரை முதலில் விடுவிப்பவர்களுக்கு ஒரு மறைக்குறியீட்டாக செலவாணி கொடுக்கப்படுகின்றது.லெட்ஜ்ர் ஒரு blockல் உள்ள புதிரை முதலில் விடுவிப்பவர்களுக்கு ஒரு மறைக்குறியீட்டாக செலவாணியின் பரிவர்த்தனையும் , அமெரிக்க டாலர் மதிப்பில் பணம் கொடுத்து மறைகுறியீட்டாக்க செலவாணியை வாங்குபவர்களின் பரிவர்த்தனையும், மறைக்குறியீட்டாக்க செலவாணி வழி பிற பொருட்களை வாங்கும் பரிவர்த்தனையும் ஒரு எண்ணியியல் பதிவேட்டில் இடப்படும். இந்தப்பதிவேடு ledger என்று அழைக்கப்படுகின்றது. இந்த ledger வங்கிகளில் இருப்பது போல இரகசியமாகவோ பாதுகாப்பானதாகவோ இருக்காது. இந்தப் பதிவேடு ஒரு மையக்கணினியிலும் இந்தப் பதிவேட்டின் நகல்கள் p2p networkல் இணைக்கப்பட்டுள்ள அனைத்து nodes என்று அழைக்கப்படும் கணினிக் கருவிகளிலும் இருக்கும். எந்தக்கணினி ஒரு குறிப்பிட்ட பணப்பரிவர்த்தனையைச் சரி பார்த்து மதிப்பிட்டு கணிதப்புதிரை விடுவிக்கின்றதோ அந்த பரிவர்த்தனை விவரமே உண்மையான விவரமாக பதிவேடுகளில் ஏற்றப்படும்

எண்களை வைத்து விளையாடும் ஒரு புதிர் விளையாட்டாகத் தொடங்கிய இந்த முனைப்பு தற்போது உலகமெங்கும் ஒரு வர்த்தக முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த எண்ணியியல் செலவாணியின் அடிப்படை கணினித் தொழில்நுட்பமும் அதிவேகமாகச் செயல் படும் கணிதக் கணக்கீடுகளும் தான்.

எண்ணியல் செலவாணி தனிநபர்களால் உருவாக்கப்பட்டுக் கடந்த பதினோரு ஆண்டுகளில், ஒரு பிரபலமான நிலையை அடைந்து இருப்பதோடு, பொதுவான வணிகப்புழக்கத்திலும் வர ஆரம்பித்து உள்ளது. சில நாடுகளிலேயே அது ஒரு சட்டப்பூர்வமான செலவாணியாக அறிவித்து இருக்கின்ற நிலையில் பல அரசுகள் அவர்களே எண்ணியியல் செலவாணியை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள், எண்ணியியல் செலவாணியை விட காகிதப்பணம் உலோக நாணயங்கள் கடன் அட்டை ஆகியவற்றை உருவாக்குவதும் வெளியிடுவதும் இலகுவான ஒன்று. ஒரு அச்சடிக்கும் இயந்திரம் எப்படி வேலைப்பார்க்கும் என்று ஆராய்ந்து ஒருவரால் இன்னோரு இயந்திரத்தை உருவாக்க இயலும். அதற்கான தொழில்நுட்பங்களும் அறிவும் பரவி இருக்கின்றது. ஆனால் எண்ணியியல் செலவாணி என்பது ஒரு சிக்கலான நூதனமான கணித வியல் சார்ந்த கணக்கீடு. அந்த மூலக்கூறுகளை உருவாக்கியவருக்கே அந்தக் கணக்கீடுகளின் காப்புரிமை இருக்கின்றது. இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்திய கணக்கீட்டு முறையையே மீண்டும் எடுத்துப் பயன்படுத்தினால் அந்த நிரலுக்குள் நச்சுத்தனமாக புகுந்து நிரலை மாற்றவோ அல்லது அழிக்கவோ ஒரு சிறந்த கணினியாளரால் முடியும்.

எப்படி செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தில் சீன நாடு முன்னணியில் உள்ளதோ , இந்திய எண்ணியல் செலவாணித் தொழில்நுட்பத்திலும் சீன அரசு முன்னிலையில் உள்ளது சீன அரசு அதற்கானத் திட்டங்களை வகுத்து இப்போது அந்தத் திட்டங்களை ஒரு பரிசோதனை ஓட்டமாக நடத்தத் தயாராகிக் கொண்டு இருக்கின்றது.. சீனா போல உலக வரத்தகத்தில் முன்னணியில் இருக்கும் நாடு எண்ணியியல் செலவாணியை நடைமுறை வர்த்தகத்தில் பயன்படும் மதிப்பையும் சட்ட அனுமதியையும் கொடுக்குமானால் அது உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை விரைவிலேயே கொண்டு வரும். வர்த்தக முறைக் கொடுக்கல் வாங்கல்களுக்கு எண்ணியியல் செலவாணியைப் பயன் படுத்தத் தொடங்கும் நாடுகள் அதற்கு ஏற்ப தங்களுடைய பண மதிப்பையும் சட்ட திட்டங்களையும் மாற்ற வேண்டியிருக்கும்

மெக்ஸிக்க நாட்டு Banco Azica என்ற தனியார் வங்கியின் உரிமையாளரான Ricado SalinasPliego தனது வங்கி Bit coin என்று சொல்லப்படும் எண்ணியியல் செலவாணியை தனது வங்கி கொடுக்கல் வாங்கலுக்காக ஏற்றுக் கொள்ளும் என்ற நிலையில் அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் என்று மெக்ஸிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே நேரம் எல்சால்வடோர் அரசு செப்டம்பர் மாதத்திலிருந்து எண்ணியியல் செலவாணியை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தமுடியும் என்று கூறியுள்ளது.சுற்றுலாப் பயணிகளையும், அயல்நாட்டிலிருந்து வந்து அங்குக் குடியிருக்கும் மக்கள் கொண்டுவரும் அந்நியசெல்வாணியை அதிகரிக்கச்செய்யும் வகையில் சட்டப்பூர்வமான எண்ணியியல் செலவாணியை எல்சால்வடோர் அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பேரிடர் காலத்தில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் பொருளாதாரம் தடுமாறத் தொடங்கிய போது 2019ம் ஆண்டு தனிநபர் ஒருவரால் El Zonte என்ற நகரத்தில் உள்ள குறிப்பிட்ட குடும்பங்களுக்கு $100க்கும் குறைவான மதிப்புள்ள எண்ணியல் நாணயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பொதுமக்கள் பயன்படுத்த ஆரம்பித்த காரணத்தால் சிறுசிறு வணிகர்களும் அதைப்பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதைத் தொடர்ந்து எல்சால்வடார் அரசும் எண்ணியல் பணத்தை சட்டப்பூர்வமாக்கியது.

இன்று தேடுபொறிக்குக் கூகுள், சமூக வலைத்தளத்திற்கு முகநூல் இருப்பது போல Bitcoin என்ற எண்ணியல் நாணயம் முன்னணியில் உள்ளது எப்படியும் வருங்காலத்தில் அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடிய கணினிகளின் பயன் பாடு அதிகரிக்கும் நிலை உருவாகும். ஏற்கனவே கணினிக்குத் தேவையான மின் கடத்தி தகடுகளுக்கும் அவற்றை உருவாக்கத் தேவையான கனிமங்களுக்கும் பற்றாக்குறை இருக்கின்ற நிலையில் வருங்கால கணினியின் பயன்பாடு எந்த அளவு மாற்றங்களை, பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. கணினிகளையும் திறன்பேசிகளையும் இயக்கவல்ல மின்கலங்களுக்குத் தேவையான தாதுப் பொருளான நிக்கலின் தேவையும் அதிகரிக்கும் அதனால் ஆஸ்திரேலியா அமெரிக்கா கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகத்தின் ஒவ்வோரு மூலையிலும் கிடைக்கும் கனிமங்களின் வரைபடம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன

தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்பதை நாம் இன்றைய நடப்புக்கள் வழியாகப் பார்க்கும் போது நம் மாணவர்களை எப்படிப்பட்ட வேலை வாய்ப்பிற்கு நாம் தயாராக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.