Essential requirements for internet classroom (Online Education) 50 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam



எண்ணியல் செலவாணி நிலைத்து இருக்க கூடிய சாத்தியக் கூறுகள்

புதிதாக வரும் எந்த ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றி ஆழமாக முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் விளையும் சாதக பாதகங்களை நாம் உணர வேண்டும். அப்படி எண்ணியல் செலவாணியை ஆராய வேண்டும் எனில் இதுவரை மறைக்குறீட்டாக செலவாணின் பாதங்களையும் பற்றாக்குறையாய் இருக்கும் மின்கடித்தித் தகடுகள் மின்சாரம் ஆகியவற்றின் காரணமாக மறைக்குறியீட்டாக்க செலவாணியின் நடைமுறை புழக்கம் எதிர்காலத்தில் குறைவாகவே இருக்கும் என்பதற்கான காரணங்களைப் பார்த்தோம்

அப்படிப்பட்ட ஒரு எதிர்மறையான சூழ்நிலையிலும் இன்று உலகில் Bitcoin தவிர இன்னும் alt coin, Ethereum, Litecoin, Cardano, Polkado, Binance Coin, Zcash போன்ற நிறுவனங்கள் தங்களுக்கே உரிய முறையில் மறைக்குறியீட்டாக்க செலவாணிகளை தயாரித்து வெளியிடுகின்றன. அதாவது Bitcoinஐத் தொடர்ந்து ஒரே மாதிரியான நிறுவனங்கள் உருவாகின்றன என்றால் அந்த நிறுவனங்களுக்கு இலாபம் இருக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்து இருப்பது தான் காரணம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற ஊகத்தோடு செய்யப்படும் புத்தாக்க முயற்சிகள் பொது மக்களிடையே ஒரு பயத்தை எற்படுத்தைவிடும்,. ஆனாலும் ஒரு புத்தாக்க சிந்தினையின எதிர்கால ஆரூடம் எதன் அடிப்படையில் இருக்கின்றது என்று தெரிந்து கொண்டால்மபொது மக்களிடையே அந்தப் புத்தாக்க சிந்தனையின் பயன்பாடு பற்றிய அச்சம் விலகிவிடும்.



மறைக்குறியீட்டாக்க எதிர்கால ஆரூடத்தின் அடிப்படைகள் என்று பார்க்கும் போது சில காரணிகள் முன்னணியில் இருக்கின்றன, அவையாவன

தொழில்நுட்பப்புரட்சி
இலாபம் தரும் முதலீடு
தனியார் நிறுவன சேவை
பொதுப்பயன்பாட்டுப் புழக்கம்
பாதுகாப்பான பணப்பரிமாற்றம்
கட்டுப்படுத்த முடியாத நிலை
இடைத் தரகுகள் குறைவு

தொழில்நுட்பப் புரட்சி இன்று கணினியல் நம் அனைவரின் வாழ்விலும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்து இருக்கின்றது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். கணினித் தொழில்நுட்பமே நம் வாழ்க்கையின் அஸ்திவாரம் ஆகிவிட்டால் அதில் வரும் முன்னேற்றங்களின் ஒரு பிரிவே இந்த எண்ணியியல் செலவாணி, இதன் பயன்பாட்டைத் தவிர்க்க முடியாதது இன்று எப்படி திறன்பேசிகளும் இணையத் தொடர்பும் மின்னஞ்சலும் ஒருவரின் வாழ்க்கையின் அங்கமாக இருக்கின்றதோ அந்த அளவு எண்ணியியல் செலவாணி புழக்கத்தில் கண்டிப்பாய் வரும் என்று எண்ணியில செல்வாணி நிறுவனர்களால் நம்பப்படுகின்றது இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், முகநூல் அமேசான் ஒரு காலகட்டத்தில் தேவையில்லாதத் தொழில்நுட்பமாக இருந்த போதிலும் இன்று நம்முடைய வாழ்வில் ஒரு பகுதி என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தத் தொழில்நுட்பங்கள் தொடங்கப்பட்ட காலத்தில் இவற்றைத் தேவையில்லாத தொழில்நுட்பம் என்றும் பித்துப்பிடித்த ஒருசிலாரால் புழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டு இருப்பதால் இவை காலப்போக்கில் மறைந்து விடும் என்ற கருத்து, தொழில்நுட்பத்தின் ஆரம்பகாலக்கட்டத்தில் இருந்தது. இன்றைய நிலை அந்தக் கருத்துக்கு எதிராக உள்ளது.slack, Pinterest tumbler reddit linkedin Twitter என்ற நிறுவனங்கள் முகநூலின் அடிப்படைத் தொழ்ல்நுப அறிவைக் கொண்டு உருவாக்கப்பட்டன. ஆனாலும் உலகில் ஒரே ஒரு முகநூல் ஒரே ஒரு கூகுள் என்று இருக்கின்றது. மேலும் கூகுள் மட்டுமே பிரபலமாக இருக்கிறது என்றாலும் இன்று பல தேடுபொறிகளும் புழக்கத்தில் உள்ளன Bing Yahoo என்றத்தேடுபொறிகளும் உள்ளன. தமிழுக்கென்று கூட பல தேடுபொறிகள் இருந்த போதும் தமிழ் கணினி பயன்பாட்டின் குறைவினால் அவை மலிந்து விட்டன.



இலாபம் தரும் முதலீடு:

எண்ணியியல் செலவாணி என்பது கணினித் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியே எனவே தற்போது பங்குச் சந்தையில் அவற்றின் விலை குறைவாக இருக்கும் போது முதலீடு செய்வது நல்லது என்ற கருத்து அமெரிக்கப் பங்கு சந்தையில் நிலவி வருகின்றது. David Rubenstein என்னும் முதலீட்டாளர் கூறுவது என்ன வென்றால் எண்ணியியல் செலவாணித் தொழில்நுட்பம் கண்டிப்பாய் எதிர்காலத்தில் அன்றாட புழக்கத்தில் இருக்கக்கூடிய தொழில்நுட்பம். எப்படி தங்கம் ஒரு முதலீடாகக் கருதப் படுகின்றதோ அதே போல் எண்ணியியல் செலவாணியையும் மக்கள் பயன்படுத்தக் கூடிய நிலை வரும் என்று இவர் எதிர்பார்க்கின்றார். நேரடியாக எண்ணியியல் செலவாணி நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் அவற்றைப் பரிவர்த்தனை செய்யப் பொதுமக்களுக்கு உதவி செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றார். பல முதலீட்டாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் பங்குச் சந்தை மூலமாக முதலீடு செய்வதால் இனி இந்தத் தொழில்நுட்பம் பயன் பாட்டில் இல்லாமல் போகாது என்று Goldman Sachs நிறுவன அதிகாரிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

பல வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எண்ணியியல் செலவாணியை ஒரு செல்வத்தின் அடையாளமாகக் காட்டி அதில் முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றனர் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர் முதலீட்டாளர்கள் இந்தப் புது தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதால், மக்களின் தேவைக்கு ஏற்ப இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தும் வகையில் ஒரு வளைந்து கொடுக்கும் ஆரம்பக் கட்ட தொழில்நுட்பமாகவே முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

தனியார் நிறுவன சேவை:

அரசாங்கத்தின் ஒரு முக்கியமான சேவையாகப் பணப்பரிமாற்றமும் செலவாணிகளைத் தயாரிப்பதும் இருந்து வந்தது. வங்கிகள் அரசிற்கும் பொது மக்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக இருந்து வந்தது. ஆனால் எண்ணியல் செலவாணித் தொழில்நுட்பம் பணப்பரிவர்த்தனையைத் தனியார் வசம் கொண்டு வருகின்றது. அரசு , வங்கிகள் இல்லாத ஒரு கட்டுப்பாடற்ற சூழ்நிலையில் பொது மக்கள் பலர் இந்தத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டுவர். கணினி நிரல்களால் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தில் வேலை செய்ய முடியும் என்றாலும் அவர்களை வேலைக்கு வைத்து , நிருவகித்து பொதும்மக்ளுக்கு இந்த சேவையை வழங்கும் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். அதாவது பொருட்களை வாங்கப் பயன்படுத்தப்படும் பணமே சந்தையில் விற்கப்படும் பொருளாகவும் மாற அதிக வாய்ப்புகள் உண்டு.



பொதுப்பயன்பாட்டு புழக்கம்:

எந்த ஒரு சட்டதிட்டனக்களும், புவியியல் எல்லைகளும் இல்லாத நிலையில் பொதுமக்களின் பயன்பாடு அதிகரிக்கும். மின்சாரமும் தண்ணீரும் இல்லாத இடங்களில் கூட இன்று இணைய வசதி இருப்பது போல உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ளவர்களால் பண பரிவர்த்தனைக்கும் இந்த தொழில்நுட்பம் தபயனபடும் . பணப்பரிமாற்றம் பொதுவான எண்ணியியல் பதிவேட்டிலிருந்தாலும், யார் வாங்குகின்றார் எதற்காக வாங்குகின்றார் என்ற விவரம் கணினியால் மறைக்குறியீடாக மாற்றப்படுகின்ற காரணத்தால் பலவிதங்களில் பலரால் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வாய்ப்புக்கள் உள்ளது. நம் கிராமங்களில் மாடு விற்பதற்காக துண்டின் மறைவில் பேரம் பேசுவதைப் போல உலகமெங்கும் கணினிமூலம் பயன்படுத்தபப்டும் ஒரு இரகசியக் குறியீடாக இந்த பணப்பரிவர்த்தனை தொழில்நுட்பம் பயன்படலாம் ATM வதிகளைப் போல எண்ணியியல் செல்வாணிகளை அந்தந்த நாட்டு செலவாணியாக மாற்றும் தொழில்நுட்பமும் அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அத்தகைய சேவையைத் தரும் நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றன. வங்கியில் கணக்கு வைத்திருக்க ஒரு சில நாடுகளில் வயது வரம்பு இருப்பது போல இல்லாமல் குழந்தைகளும் கணினி வழி எண்னியியல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

கணினி நிரலர்மொழி என்பது ஒரு மொழியாகப் பல தேசங்களில் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றது கூடிய சீக்கிரத்தில் பள்ளிகளில் நடத்தப்படும் மொழியாக இந்தியாவிலும் வரலாம். எண்ணியியல் செலவாணி என்பது நிரலர் மொழியால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் என்பதால் கணினி நிரலர் மொழி ஒரு சாதாரண மொழியாகும் போது விளையாட்டுப் போல இந்த பரிவர்த்தனை நடைபெறலாம். இப்போதும் இந்த் தொழில்நுட்பத்தின் மூலநிரலகள் திறவூற்றுத் தளத்தில் கிடைக்கலாம்.

பாதுகாப்பான பணப்பரிமாற்றம்:

இன்றையப்பணப்புழக்கத்தில் இருக்கும் திருட்டு , கொள்ளை,வழிபறி, கடன் அட்டைகளிலிருந்து திருட்டு என்பது குறைந்து விடும் எண்னியியல் செலவாணியைத் திருட கணினிநிரலலில் திறமை வாய்ந்த வல்லுநர்களாலேயே களவாட முடியும் எந்த ஒரு முக்கியக் காரணம். அப்படித் திருட்டு செய்பவர்களையும் கண்டுபிடித்தல் எளிது.

கட்டுப்படுத்த முடியாத நிலை பொதுமக்களால் பாதுகாப்பான பரிவர்த்தனையாக என்னியியல் செலவாணி புழக்கத்திற்கு வர ஆரம்பித்தால் இன்று இருக்கும் கூகுள் முகநூல், போன்ற பெரிய நிறூவனங்கள் உருவாக வாய்ப்பு இருக்கின்றது. இன்றைய இராட்சத கணினிநிறுவங்ன்கள் எப்படி மக்களை தங்களின் சேவைக்குப் பழக்கப்படுதினரோ, அதே போல எண்ணியியல் செலவாணிஅயை பயன்பாட்டில் கொண்டுவர, மக்களுக்கு பழக்கப் படுத்த நிறுவனங்கள் எல்லாவித முயற்சிகளையும் செய்யும்.. சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு முக்கியமான பொறுப்பாக இன்றைய சமுதாயம் உணருகின்ற காரணத்தால் இயற்கையைப் பாதுகாக்கும் ஒரு தொழில்நுட்பமாக எண்ணியியல் செலவாணித் தொழில்நுட்பம் மக்களின் கவனத்தை ஈர்க்கும்.

இடைத் தரகுகள் குறைவு எண்ணியல் செலவாணியை உருவாக்கும் ஒரு நிறுவனம், பொதுமக்களுடன் நேரடியாகக் கணினி வழி தொடர்பில் இருக்க முடியும் என்ற காரணத்தால் வங்கிகள் தங்களுடைய செல்வாக்கை இழக்க நேரிடலாம். இத்தகைய அச்சுறுத்தலைச் சமாளிக்க வங்கிகளும் எண்னியியல் செலவாணி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக மாறலாம். இன்று எப்படி நாம் கணினி நிறுவனங்கள் விதிகள் படி அவர்களின் சேவையைப் பயன்படுத்துகின்றோமோ அது போல வங்கிகள் இந்தத் தனியார் நிறுவனங்களின் உட்பட்டு செயல் பட வேண்டியிருக்கும். chase, master card, discover ஒவ்வோரு பெரிய பரிவர்த்தனை நிறுவனங்களும், எண்னியியல் செலவாணியை தங்கள் நிறுவனத்தின் சேவையாக தங்களுக்கென்று ஒரு எண்ணியல் செலவாணி முறையைக் கொண்டுவரலாம், அல்லது இன்று இருக்கும் எண்ணியல் செல்வாணிநிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். இதனால் வங்கிகளும் பணப் பரிவர்த்தனை நிறுவனங்ளும் எண்ணியல் செலவாணி நிறுவனர்களின் பங்கு தாரர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ மட்டுமே இருக்க இயலும். மேற்கூறிய காரணங்களால் எண்ணியல் செலவாணி என்ற தொழில்நுட்பம் பொதுமக்களின் அன்றாட வாழ்வின், புழக்கத்தில் வரும் நாள் விரைவில் வரும்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்



இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 (எண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 49 (எண்ணியியல் செலவாணி ஒரு விபரீத விளையாட்டா? அல்லது எதிர்கால வர்த்தக முறையா?) – சுகந்தி நாடார்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *