Essential requirements for internet classroom (Online Education) 51 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam



மறைக்குறியீட்டாக்க செலவாணியை ஒருவர் பெறுவது எப்படி?

எப்படி கணினியும் இணையமும் பொதுமக்களின் புழக்கத்தாலும் பயன்பாட்டாலும் இன்று ஒரு இன்றியமையாத சேவையாக மாறியதோ அதே போல மறைக்குறியீட்டாக்க செலவாணியையும் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்த ஆரம்பித்தால் கண்டிப்பாக ஒரு இன்றியமையாத சேவையாக அமையும்.

இதுவரை மறைகுறியீட்டாக்கச் செலவாணியின் முக்கியமான கலைச்சொற்கள், பயன்பாட்டில் உள்ள சாதகபாதகங்கள் ஆகியவற்றைப் பார்த்தோம். மறைக்குறியீட்டாகக செலவாணியில் பாதகங்கள் அதிகமாக இருந்தாலும் அது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்து விட்டது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதனால் இந்த செலவாணியின் அன்றாடப் புழக்கப் பயன்பாட்டை நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு எண்ணியல் பண சந்தையைப் பற்றி பார்க்கும் போது நமக்கு இந்த புரிதல் வரும். ஒரு கணிநிரலரும் ஒரு சாதாரணக் குடி மகனும் வேறு வேறு முறையில் எண்ணியல் செலவாணியைப் பெறலாம். முதலில் ஒரு கணினிநிரலர் எண்ணிய செலவாணியை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.

சுருக்கமாகக் சொன்னால் எண்ணியல் புதிர்களைக் கணக்கீடு முறையில் தீர்க்கத் தெரிந்த ஒரு கணினி நிரலுக்கு எண்ணியல் செலவாணி பரிசாகக் கிடைக்கும் விடுவிக்கப் படும் ஒவ்வோரு கணிதப்புதிருக்கும் ஒரு நாணயம் கிடைக்கும் ஆனால் விடுவிக்க வேண்டிய கணிதப்புதிர் எவ்வளவு சிக்கலானது அது எப்படிச் சிக்கலாகின்றது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் அந்த சிக்கல் புதிரை விடுவிக்கும் கணினியிலிருந்து ஆரம்பிக்கின்றது.

கணிதப்புதிரை விடுவிக்கவென்று உருவாக்கப்பட்ட ஒரு கணினி நாம் பயன்படுத்தும் கணினியை விட வித்தியாசமானது.. integrated circuit (ஒருங்கிணைந்த மின்சுற்று (பொருந்தியுள்ள ஒருநிரல் எழுதி இயக்கக் கூடிய கணினித் தேவை. இந்தக் கணினி பொதுமக்கள் பயன்படுத்தும் கணினியை விட மிக வேகமாகச் செயல்படும் சக்தி உடையதாக இருக்க வேண்டும். கணித புதிர்களை அதிவேகமாக விடுவிக்கும் திறன் கொண்டதாக இருக்கவேண்டும்.எனவே இந்தக் கணினியைச் செயல் படுத்த மிக அதிமான மின்சாரம் தேவைப்படுகின்றது. இந்த சக்தியுள்ள கணினியைக் கொண்டு நாம் பங்கு கொள்ளப் போகும் எண்ணியல் நிறுவனத்தின் குழுவினரோடு p2p network வழியாக இணைய வேண்டும்.



அப்படி ஒரு கணினியாளர் இணைந்தால் அவர் இணைந்ததற்கு அடையாளமாக அவருக்கு எண்ணியியல் wallet கொடுக்கப்படும் private key, public key என்று இரு வேறு எண்களைக் கொண்ட wallet அதற்கான பிரத்தியேக மென்பொருளால் உருவாக்கப்படுகின்றது. எண்ணியல் செலவாணியை வாங்கவும் விற்கவுமே இந்த wallet மென்பொருள் பயன்படுகின்றது. public key ஒருவர் அவருக்கு செலவாணியை அனுப்பவும் private key அவர் பெற்றுக்கொண்ட செலவாணியைச் சேர்த்து வைக்கவும் உதவுகின்றது

இவர் கணினியாளராக முதன் முதலில் நுழைகின்றார் என்றால் அவர் தன் public key கொண்டு மற்றவர்களின் தரவுப் பரிமாற்றங்களைப் பார்க்கலாம் ஏற்கனவே. p2p தொடர்பில் உள்ள கணினியாளர் என்றால் அவரது public keyன் எண் குறியீட்டு விவரமும், அவர் பெற்ற நேரமும் இவர் யாரிடம் எவ்வளவு எண்ணியல் நாணயங்களை விற்றார்/ அல்லது வாங்கினார் என்ற விவரமும் மறைக்குறியீட்டாக்கம் செய்யப் பட்டு இருக்கும் அது தவிர இவருக்கு முன்னால் இணைந்தவரின் மறைக்குறியீட்டாக்கப் பட்ட விவரமும் இருக்கும் .

இந்தத் தகவல்கள் எல்லாம் p2p networkல் உள்ள ஒரு பொதுக்கணினியில் ledger எனப்படும் ஒரு பொதுத் தரவாகப் பதிவாகி இருக்கும். இந்த ledger ஒரு எண்ணியல் செலவாணி நிறுவனத்தின் எல்லாப் பரிவர்த்தனையும் கொண்ட ஒரு திறந்த எண்ணியல் பதிவேடு. இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் மறைக்குறியீடாக மாற்றப்பட்டு இருக்கும் என்றாலும் p2pல் இணைந்து இருக்கும் அனைவராலும் இந்தப் பதிவேட்டில் உள்ள தரவுகளைப் பார்க்க முடியும்.

ledgerல் உள்ள விவரங்கள் block என்ற தரவுத் தொகுப்பாக இருக்கும். p2p தொடர்பில் இணையும் கணினியாளர் ஒரு பரிவர்த்தனையை எடுத்துச் சரி பார்க்க வேண்டும்.

இப்படியாக ஒவ்வோரு பயனாளரும் அடுத்தவரது மறைக்குறியாக்கபப்ட்ட விவரங்களை எடுத்து அவை சரியானது தான? உண்மையானது தானா?என்பதைக் கணக்கீடு முறையில் கண்டறிய வேண்டும் மறைக்குறீட்டு எண் எழுத்துக்களாக இருக்கும் விவரங்களைக் கணினியின் கணக்கீடுகள் மூலமாகத்தான் சரிபார்க்க முடிம் இதுவே கனீதப்புதிரின் முக்கிய அங்கம் block ல் பயன்படுத்தப்படும் nounce என்ற எண்ணின் மதிப்பைக் கணிப்பதன் மூலம் இந்தக் கணிதப்புதிரை விடுவிக்கலாம் அப்படிக் கணிதப்புதிரின் விடையைக் கண்டறிந்தவுடன் அவருக்குப் பரிசாக ஒரு நாணயம் கொடுக்கப்படும்.

இப்படி ஒரு எண்ணியல் நாணயத்தைப் பெறுவது எண்ணியல் செலவாணியைத் தோண்டி எடுக்கும் mining என்று அழைக்கப் படுகின்றது பரிசு நாணயத்தைப் பெற்றவுடன் ஏற்கனவே மறைக்குறியிட்டாக்கப் பட்ட தரவுகளின் தொகுப்பை எடுத்து அதில் உள்ள எல்லாவிவரங்களையும் மீண்டும் ஒருமுறை மறைக்குறியீட்டாக்கம் செய்ய வேண்டும். அந்தத் தரவு விவரங்களோடு தான் பெற்ற எண்ணியல் செலவாணியின் விவரத்தையும் மற்ற தரவு விவரமான pubilc key தரவையும் அதைப்பெற்ற நேரத்தையும் nounce என்ற ஒரு எண்ணைக் கொடுத்து மீண்டும் அதை மறைக்குயீடாக மாற்றி ஒரு புதிய block உருவாக்க வேண்டும்.



இந்தக்கணிதப்புதிரை விடுவிக்க இந்தப்படி முறைகளைப் பார்த்தால் எண்ணியல் செலவாணியைப்பெறவும் கொடுக்கவும் ஒருவர் கணினி மூலம் தன்னுடைய விவரங்களின் தரவுகளை ஒரு block ஆக மாற்றிப் போட இவர் போட்ட விவரங்கள் சரிதான் என்று சரி பார்த்துக் கொடுப்பவருக்கு ஒரு எண்ணியல் செலவாணிக் கிடைக்கின்றது. சரிபார்த்துக் கொடுத்தவர் எண்ணியியல் செலவாணியைப் பெற்றவுடன் தனது விவரங்களையும் nounceஎன்ற பெயரிடப்பட்ட ஏதோ ஒரு எண்ணையும் இவர் செலவாணியைப் பெற்ற நேரத்தைக் குறிக்கும் time stampயும், தான் சரிபார்த்த விவரங்களின் தரவையும் இணைத்து மீண்டும் மறைக்குறியீடு எண்ணாக மாற்றி வெளியிட வேண்டும்

இப்படி ஒவ்வோரு கட்டமாக புதிய விவரங்கள் சேர்ந்து கொண்டே ஒரு சங்கிலி போல தொடர்ந்து போகும் ஒவ்வோரு கட்டத்திலும் ஒவ்வோரு தரவின் விவரங்களும் மீண்டும் சரிபார்க்கப் பட்டு மீண்டும் மீண்டும் மறைக்குறீட்டாக்கம் செய்யப் பட்டு ஒரு புதியக் கணிதப்புதிராக மாறி இருக்கும்.

இப்படி ஒரு புதிரை விடுவிக்கும் அனைத்து கணினியாளருக்கும் எண்ணியல் நாணயம் கிடைக்காது. அவர் ஒரு புதிரை விடுவித்து அடுத்த புதிரைத் தயாரிக்கும் வேகமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.

இப்படி கணினிவழி ஒரு பணப்பரிவர்த்தனை விவரத்தை, சரிபார்த்து, ஒரு புதிய விவரத்தை எண் எழுத்து விவரமாக மறைக்குறீட்டாக்கம் செய்ய ஒரு கணினியாளரின் கணினிக்கு ஏறத்தாழ பத்து நிமிடம் ஆகிறது. இது ஒரு பொதுவான வேகம். ஆனால் ஒரு நாணயத்தைப் பெறச் சாதாரணமாக ஒரு hashஐ உருவாக்கினால் மட்டும் போதாது. hash எவ்வளவு வேகத்தில் தயாரிக்கப் பட்டது என்பதும் கணினியின் வேலை செய்யும் சக்தியையும் வைத்துக் கணக்கிட வேண்டும் ஒரு வினாடிக்கு எத்தனை hash உருவாக்கப்படுகிறது என்பதையும் அதை யார் சரியான முறையில் முதலாவதாகக் கணித்துக் கொடுக்கின்றனரோ அவருக்கே அந்த ஒரு நாணயம் கிடைக்கும்

இப்படிச் சிக்கலான ஒரு தரவு முறையை மீண்டும் மீண்டும் மறைக்குறியீட்டாக்கம் செய்யும் போது விடுவிக்கவேண்டிய கணக்கு புதிரின் கடினத் தன்மை அதிகரித்துக் கொண்டே போகும்.

இவ்வளவு சிக்கலான முறையில் ஒருவர் எண்ணியல் நாணயத்தைப் பெறக் கணினி நிரலாகக் கணினியின் கணக்கீடு முறைகளில் தேர்ந்தவராக இருக்க வேண்டும் இப்படி கணினியாளர்களே நாணயத்தை அறுவடை செய்து பெற்றால் அது பொதுப்புழக்கத்திற்கு வராது.

கணினி அறிவு இல்லாத ஒரு பொது மனிதன் எண்ணியல் செலவாணியை பெற்று புழக்கத்தில் விட்டால் தான் அது பொது பணப்பரிவர்த்தனைக்கு உபயோகப்படும்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 (எண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 49 (எண்ணியியல் செலவாணி ஒரு விபரீத விளையாட்டா? அல்லது எதிர்கால வர்த்தக முறையா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 50 (எண்ணியல் செலவாணி நிலைத்து இருக்க கூடிய சாத்தியக் கூறுகள்) – சுகந்தி நாடார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *