இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 52 – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom (Online Education) 52 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayamமறைக்குறியீட்டு செலவாணியில் walletஐப் பற்றிய விளக்கம்

மறைக்குறியீட்டு செலவாணியைப் பற்றி பயனாளர் பார்வையில் சிறிது ஆழமாகப் பார்க்க வேண்டும் என்றால் நாம் wallet என்ற அடிப்படை செயல் முறை மென்பொருளைப் பார்க்கலாம். அதற்கு முன் எண்ணியல் செலவாணித் தொழில்நுட்பத்தின் கலைச்சொற்களைத் தமிழ் மொழிக்கு ஏற்றது போல மாற்றிக் கொண்டால் ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதுவதைத் தவிர்க்கலாம்.

wallet என்ற சொல் . நாம் அன்றாடம் பணத்தையும் கடன் அட்டைகளையும் எடுத்துச் செல்லும் ஒரு பணப்பையைக் குறிக்கும். purse என்ற ஆங்கிலச்சொல்லின் அமெரிக்கத் தழுவலே wallet என்று சொல்லப்படுகிறது. நாம் நமது பணப்பையில் முக்கியமாகப் பணத்தையும் அதைச் சார்ந்த கடன் அட்டைகளையும் கைக்கு அடக்கமாக, எளிதில் எடுத்துப் பயன்படுத்தக் கூடிய வகையில் அதே சமயம் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். நமது சிறு பணப்பையில் வைத்துக் கொள்ள முடியாத நகைகள், நிலப்பத்திரங்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்தோ,அல்லது, வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்தோ பூட்டி இருப்போம். மறைக்குறியீட்டாக wallet என்பது பணத்திற்கான ஒரு தொழில்நுட்பம் என்பதால், அது ஒரு பணப்பையைப் போலவும், பெட்டகம் போலவும் பயன் படுத்த முடியும். எனவே wallet என்ற கலைச்சொல்லைக் குறியீட்டுச் சாளிகை என்று தமிழில் பயன்படுத்திக் கொள்ளலாம். சாளிகை என்னும் சொல் கந்தரலங்காரத்தில் பணப்பையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. செலவாணியையும் அதன் உரிமையாளரின் அடையாளத்தையும் குறியீடாக் கொண்டு உள்ளதால் wallet என்ற கலைச்சொல்லுக்கு குறியீட்டுச்சாளிகை என்று கூறுவது சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

ஒரு மறைக்குரியீட்டாக்க walletல் private key, public key என்ற இரு விவரங்களை வைத்திருக்கும் என்று முன்பே பார்த்தோம்.

private key பிரத்தியேகக்குறியீடு, public key என்பதை பொது குறியீடு என்றும் நாம் ஒரு மறைக்குறியீட்டாக்கச் செலவாணித் தொழில்நுட்பத்ஹ்டின் தமிழ் கலைச்சொல்லாக நாம் இங்குப் பயன்படுத்தலாம்.key என்ற ஆங்கிலச் சொல் நமக்கு ஒரு திறவுகோலை , சாவியை குறிக்கும் என்று தெரியும் இந்தச்சொல்லைப்பார்த்தவுடன் அது எப்படி இருக்கும் என்று நம்மால் உருவகிக்க முடியும் அதே போல கணினியில் உள்ள பொதுவான விவரங்கள் எப்படி இருக்கும் என்றும் நமக்குத் தெரியும். கணினியில் இணைய தளம் என்றால்www என்ற எழுத்துக்களைக் கொண்டு வரும் என்றும் மின்னஞ்சல் என்றால்@ குறி இருக்கும் என்றும்,நமக்குத் தெரியும். அப்படி இருக்க, key என்ற ஒரு ஆங்கிலச்சொல்லிற்கு சாவி என்று பெயரிடாமல் ஏன் குறியீடு என்று சொல்ல வேண்டும்?

மறைக்குறியீட்டாக்க செலவாணியில் key என்பது அச்செலவாணியின்பெட்டகத்தைத் திறக்கும் திறவு கோலாக இல்லாமல், பயனாளரின் அடையாளத்தைக் குறிக்கின்றது. ஒருவரின் மின்னஞ்சலோ சமூகத்தளங்களில் பயன்படுத்தப்படும் பயனாளர் பெயரோ எப்படி அவரின் அடையாளமாகச் செயல்படுகின்றதோ அதே போல ஒரு அடையாளமாகவே இவைப் பயன்படுகின்றன,

அடையாளப்படுத்தும் ஒரு சொல்லாக வரைபடங்களில் key என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம். அதாவது வரைபடங்களின் இடப் படும் அடையாளக்குறியின் விவரமே வரை படத்தின் குறிப்பில் இருக்கும். வரை படக்குறிப்பு என்பது எந்த ஒரு மனிதராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் குறியீடு என்று சொல்லும் போது மனிதர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு விவரங்கள் மாற்றப் பட்டு இருக்கும் என்று பொருளாகின்றது.

கணினியியலில் ஒரு உதாரணத்தைத் தேடினால் ஒரு பயனர் அடையாளமும் கடவுச்சொல்லையும் கூறலாம்.

மின்னஞ்சலிலும் சமூகவலைத்தளங்களிலும் நாம் பயன்படுத்தும் பயனாளர் பெயர் குறிப்பு , அதே சமயம் நாம் நமது மின்னஞ்சலைத் திறக்கவோ, அல்லது ஒரு சமூக வலைத்தளத்தில் உட்புகவோ நாம் பயன்படுத்தும் கடவுச்சொல் ஒரு குறியீடு . நாம் ஒரு கடவுச்சொல்லை உருவாக்கும் போது எப்படி எண்களையும் எழுத்துக்களையும் வைத்து கடவுச்சொல்லை உருவாக்குகின்றோமோ அதேபோலத்தான் பிரத்தியேகக்குறியீடு. பொது குறியீடு ஆகிய இரண்டுமே இருக்கும். எனவே தான் இங்கு key என்ற சொல்லுக்கு மறைகுறியீட்டாக்கத்தின் செலவாணியின் கலைச்சொல்லாகக் குறியீடு என்று கொடுத்துள்ளேன்.பிரத்தியேகக்குறியீடு. பொது குறியீடு ஆகிய இரண்டுமே எண் எழுத்து கொண்ட குறியீடுகளாக இருக்கும். Key என்று சொன்னவுடன் அது எப்படி இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியும் ஆனால் private key , public key என்று சொன்னவுடன் அது எப்படி இருக்கும் என்று நம்மால் உருவகிக்க முடியாது. அதனால் ஒரு எண் எழுத்து கதம்பமான குறியீடு எப்படி இருக்கும் என்ற எடுத்துக்காட்டைக் கீழே கொடுத்துள்ளேன். இப்போது நம்மால் பிரத்தியேகக்குறியீடு, பொது குறியீடு இரண்டும் எவ்வாறு இருக்கும் என்று உருவகிக்கமுடியும்.

Tamil என்ற ஆங்கிலச்சொல 0a5BE4TsRvykD2Lo1ZfOBNnU85nXCxPSKci0Eaz7MDY= என்றக் குறியீட்டைக் கொடுக்கின்றது.

computer என்ற சொல் XDMQRaozEu+5fYs1eC/MA0RENKxtqlc6dBCa4eR/8aI= என்ற குறியீட்டைக் கொடுக்கின்றது.

Tamilcomputer என்ற சொல்லுக்கு 6u78/KaSL9uGJttgHK4YeJJHFwk16uQNrnKXd5y9ZqQ= என்ற முற்றிலும் மாறுபட்ட ஒரு குறியீட்டைக் கொடுக்கின்றது. முதல் இரண்டு குறியீட்டிலிருந்தும் இந்தக் குறியீடு கொஞ்சமும் பொருந்திப் போவதில்லை என்று பார்க்கவும்.

நாம் கடவுச்சொல்லை உருவாக்கும் போது, நமக்கு நினைவில் இருக்கக்கூடிய வகையில் நாம் எண் எழுத்துக் கலவையை உருவாக்குகின்றோம். மறைகுறியீட்டு செலவாணியில் பிரத்தியேகக்குறியீடு. பொது குறியீடு இரண்டையுமே ஒரு கணினி மென்பொருள் உருவாக்குகின்றது. மனிதன் உருவாக்குவதில்லை

மின்ஞ்னசலைப் போல ஒரு பயனாளி ஏன் தனக்குரிய பிரத்தியேகக்குறியீடு. பொது குறியீடு ஆகியவற்றை உருவாக்க முடியாது என்ற சந்தேகம் பலருக்கு வரலாம். மனிதர்களாகிய நாம் பொதுவாக எட்டு முதல் பதினாறு உருபுகளைக் கொண்ட ஒரு கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.. நாம் உருவாக்கும் கடவுச் சொல் நமக்கு நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவே சிரமப்பட்டு இந்தப் பதினாறு உருபுகளைக் கொண்ட ஒரு கடவுச்சொல்லை நாம் உருவாக்குகின்றோம்.ஆனால் நாம் அப்படி உருவாக்கும் கடவுச்சொல்லையும் நாம் கணினியில் தட்டச்சு செய்வதைக் கணக்கிட்டு நச்சு நிரல்களும், சில கணினி இயந்திரங்களும் கண்டுபிடித்து ஊறு விளைவிக்க முடியு, அதே சமயம் ஒரு கணினி கடவுச்சொல்லை உருவாக்கினால் அது ஒரு கணக்கீடு முறையில் கடவுச்சொல்லை உருவாக்கும் அதனால் மனிதர்களால் இந்தக் கடவுச்சொல்லை நினைவில் வைத்திருக்க முடியாது என்பதோடு கடவுச்சொல்லை உருவாக்கிய அதே கணக்கீடு தெரிந்த கணினியால் மட்டுமே அந்த அக்கடவுச்சொல்லின் இரகசியத்தை உடைக்கவும் முடியும். அதேபோலத்தான் இந்த பிரத்தியேக குறியீடும், பொதுக்குறியீடும் ஒரு கணினியால் உருவாக்கப்படும் போது அதன் பாதுகாப்புத்தனமை அதிகரிக்கின்றது.

அதைவிட முக்கியமானது, குறியீட்டு உருபுகளின் எண்ணிக்கை Tamil என்ற ஐந்தெழுத்துச் சொல்லுக்குக் கணினி 42 உருபுகள் கொண்ட குறியீட்டை உருவாக்கியுள்ளது. computer என்ற எட்டெழுத்து சொல்லுக்கு 48 உருபுகளைக் கொண்ட குறியீட்டைக் கணினி உருவாக்கியுள்ளது. Tamil computer என்ற பதிமூன்று எழுத்துச் சொல்லுக்கு 47 உருபுகலைக் கொண்ட ஒரு குறியீட்டைக் கணினி உருவாக்கியுள்ளது.

ஒரு விளையாட்டு மூலமாக மறைக்குறியீட்டுச்சொல்லுக்கே இவ்வளவு சிக்கலான குறியீடு இருக்கிறது என்றால் மறைகுறியீட்டாக்கச்செலவாணிக்கென தயாரிக்கப்படும் குறியீடுகள் எந்தமாதிரியான் சிக்கலான கணக்கீடு முறையைப் பயன்படுத்தி இந்தக் குறியீடுகளை உருவாக்குகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது கைக்கு அடங்கிய பணப்பையைப் போல கைக்கு அடக்கமாக நம் திறன் பேசியில் ஒரு செயலியாகவோ, அல்லது கணினியின் மென்பொருளாகவோ, அல்லது இணையத்தில் கிடைக்கும் கொளுமைக்கணினி முறையிலும் குறியீட்டுச்சாளிகைக் கிடைக்கும். அது தவிர நாம் கணினிக்கென்று பயன்படுத்தும் சேமிப்பகம் போல ஒரு மென் பொருளாகவும் கிடைக்கும்

இந்த ஒரு ஒரு வகையையும் விளக்கமாக தொடர்வோம்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 (எண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 49 (எண்ணியியல் செலவாணி ஒரு விபரீத விளையாட்டா? அல்லது எதிர்கால வர்த்தக முறையா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 50 (எண்ணியல் செலவாணி நிலைத்து இருக்க கூடிய சாத்தியக் கூறுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 51 (மறைக்குறியீட்டாக்க செலவாணியை ஒருவர் பெறுவது எப்படி?) – சுகந்தி நாடார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.