இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 53 – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom (Online Education) 53 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam
Contentsமறைக்குறியீட்டு செலவாணியில் wallet தொடர்ச்சி

எண்ணியல் செலவாணியின் வால்ட் என்பது private key பிரத்தியேகக்குறியீடு, public key என்பதை பொது குறியீடு ஆகிய இரண்டையும் உள்ளே கொண்டிருக்கும் ஒரு செயலி என்று பார்த்தோம்.

இன்னும் விளக்கமாகச்சொல்லப்போனால் ஒரு வங்கி இங்கு செய்யும் வேலையை இந்த wallet செய்கின்றது. ஒரு வங்கி எவ்வாறு நமது காகிதப்பணத்தை சேமித்து வைக்கவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றதோ அதே போல மறைகுறியீட்டுப்ப் பத்தாயம்*wallet) எண்ணியல் செலவாணிக்கான ஒரு தனிப்பட்ட நபரின் எண்ணியல் வங்கியாகச் செயல்படுகின்றது. வங்கி நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுத்த ஒரு எடுத்துக்காட்டு என்றால், கடவுச்சொல் மேலாண்மைக்காக இருக்கும் மேலாண்மை செயலிகள் (password mangers) மறைகுறியீட்டுப்ப் பத்தாயத் தொழில்நுட்பங்களுக்கு ஒரு முன்னோடி என்று சொல்லலாம்.

எப்படி ஒரு கடவுச்சொல் மேலாண்மை செயலி எப்படி கடவுச்சொற்களை உருவாக்கவும் பயனாளிகள் உருவாக்கி வைத்திருக்கும் கடவுச்சொற்களைப் பாதுகாக்கவும் பயனாளர்களால் பயன்படுத்தப்படுகின்றதோ அதே போல் மறைகுறியீட்டுப்ப் பத்தாய செயலி வேலை செய்கின்றது. இந்த செயலிக்கான கணினிக் கோப்பின் நீட்சி. dat என்று வரும். dat என்னும் நீட்சி பொதுவாகத் தரவுகளைக் கொண்ட கோப்பு என்பதைக் கணினிக்கும் பயனாளருக்கும் தெரிவிக்கின்றது. குறியீட்டுப்பத்தாய செயலியின் தரவுகள் அனைத்தும் எண்களும் எழுத்துக்களாலும் ஆனதென்பது குறிப்பிடத்தக்கது இங்கு நீட்சியை குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் இந்த ஒரு கணினி செயலி என்பதே இது ஒரு கணினியின் செயலி என்பதால் ஒரு கணினிப் பயனாளர், தங்கள் மற்ற கணினிக் கோப்புகளை எந்தெந்த முறையில் பாதுகாப்பு செய்வாரோ அந்தந்த வகையில் பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் இந்த செயலிகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டும் பொதுகணினியின் விவரங்களோடு ஒத்துப்போகின்றதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொண்டும் இருக்க வேண்டும்.

ஒரு மறைக்குறியீட்டு பந்தயத்தின் முக்கிய கூறுகள்

  • பிரத்யேகக்குறியீடு
  • பொதுக்குறியீடு
  • மறைக்குறியீட்டு பந்தயத்தின் பயனாளர் விலாசம்
  • பந்தாயப்பயனாளரின் தொடர்புகளின் விலாசம்
  • பயனாளரின் விருப்பத் தெரிவுகள் ஆகியவை ஆகும்.

ஒரு எண்ணியல் மறைகுறியீட்டு பந்தயத்தின் உள்ளே முதலில் பிரத்தியேகக் மறைகுறியீடு உருவாக்கப்பட்டு, அது மறைக்குறியீட்டாக்கம் செய்யப்பட்டு அந்த எண்ணிலிருந்து பொது குறியீடு எண் உருவாக்கப்படுகின்றது. பொதுக் குறியீடு பிரத்தியேக க் குறியிடு இரண்டும் எறத்தாழ 256 (256 bits) உருபுகளைக் கொண்டிருக்கும் பூஜ்ஜியத்திலிருந்து ஒன்பது வரை உள்ள எண்களையும் ஆங்கில எழுத்துக்கள் A -F எழுத்துக்களும் அவை இரண்டுக்கும் இடைப்பட்ட எழுத்துக்களையும் கொண்ட ஒரு பதினாறு இலக்க எண் (160 bits), கணினியால் பொது குறியீடு பிரத்தியேகக்குறியீடு ஆகிய இரண்டுக்கும் தனித்தனியாக உருவாக்கப் படுகின்றது. இந்த இரு எண்களும் மறைக்குறீட்டாக்கம் செய்யப்பட்டு குறியீட்டுப் பத்தாயத்தின் விலாசமாக மாறுகின்றது. ஒரு மறைக்குறியீட்டு பத்தாயத்தின் விலாசம் என்பது வங்கியில் நமக்குக் கிடைக்கும் வங்கிச்சீட்டு எண்ணை (bank account number) போன்றது.

ஒருவர் தன்னுடைய விலாசத்தை மறைக்குறியீட்டு பத்தாய மென்பொருளை நிறுவும் போது பெற்றுக் கொள்கின்றார்.

ஒருவர் தன் கணினியில் தனக்கான மறைக்குறியீட்டாக்கப் பந்தயத்தை நிறுவச் சிறிது நேரம் எடுக்கலாம். ஏன் எனில் 2009லிருந்து இதுவரை உருவாக்கப்பட்ட அனைத்து எண்ணியல் செலவாணியின் விவரத்தரவுகளையும் கணினிக்குள் தரமிறக்க வேண்டியிருக்கும்.

அவரது மறைக்குற்யீட்டுப்பந்தாய விலாசம் கிடைத்தவுடன் தன்னுடைய பொதுக்குறியீட்டைப் பயன்படுத்தி மற்றவர்களிடமிருந்து எண்ணியல் செலவாணியைப் பெற்றுக்கொள்ளலாம், அல்லது தன்னிடம் இருக்கும் எண்ணியல் செலவாணியை மற்றவர்களுக்கு அனுப்பலாம். இவ்வாறு மற்ற பயனாளிகளுக்கு அனுப்புவதற்கு அந்தப் பயனாளிகளின் பொது விலாசங்களைப் பயனாளரே இட வழிமுறைகள் உள்ளது. அதே போல ஒரு மறைக்குறிய்ய்ட்டு பந்தாக்கம் எவ்வாறு செயல் பட வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத் தெரிவுகள் பயனாளர் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.

ஒரு மறைக்குறியீட்டுப் பந்தயத்தின் உள்ளே இருக்கும்.

பிரத்யேகக்குறியீடு பொதுக்குறியீடு மறைக்குறியீட்டு பத்தாயத்தின் விலாசம் ஆகிய மூன்று எண்களில் பிரத்யேகக்குறியீடு இரகசியமாகப் பாதுக்காகக் வேண்டியது ஆகும்.

மறைக்குறியீட்டு பத்தாயத்தின் வகைகள்

  • மறைக்குறியீட்டு பத்தாய மென்பொருள்
  • மறைக்குறியீட்டு பத்தாய திறன்பேசிக்கான குறுஞ்செயலி
  • மறைக்குறியீட்டு பத்தாய வன்பொருள்
  • மறைக்குறியீட்டு பத்தாய காகிதம்
  • இணைய மறைக்குறியீட்டு பத்தாயம்

மறைக்குறியீட்டு பத்தாய மென்பொருள்: இது ஒருவர் தன்னுடைய மேஜைக்கணியில் தரமிறக்கி வைத்துக் கொள்வது ஆகும். இந்த வகை மறைகுறியீட்டுப் பத்தாக்கும் பயனாளரின் கணினியில் இருப்பதால் இது மிகவும் பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த பத்தாயத்தை வைத்திருக்கும் கணினிகள் எந்நேரமும் இணையத்தில் இணைந்தே இருக்கும் என்று கருதப்படுவதால் இவை நிகழ்வணி சேமிப்பகம் என்றும் அழைக்கப்படுகின்றன. இணையத்தில் இணைந்து இருப்பதால் இந்தப் பத்தாயம் இணையத்திலிருந்து அனைத்து எண்ணியல் பரிவர்த்தனை விவரங்களை எடுத்தபடி இருக்கும், இந்த வகைப் பத்தாயங்களைக் கொண்டுள்ள கணினிகள் பொதுவாக p2p வலையத் தொடர்பில் இருக்கும்.

இணையக் குறியீட்டு பந்தாயம்: ஒரு சில பயனாளிகள் தாங்கள் எந்த நிறுவனத்தின் மூலமாக எண்ணியல் செலவாணிப் பரிவர்த்தனை செய்கின்றனரோ அந்த இணையத்திலேயே தங்களுடைய மறைக்குறியீட்டுப் பந்தாக்க விவரங்களை வைத்துக் கொள்ளலாம். இவையும் நிகழ்வணி சேமிப்பகங்களாகக் கருதப்படுகின்றன. ஒரு பயனாளியின் மறைக்குறீட்டு பத்தாய தரவு விவரங்களைச் சேமிக்கும் சேவைக்காகப் பரிவர்த்தனை நிறுவனம் ஒரு தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் இப்போது பயன்படுத்தும் நமது விரலி சேமிப்பகங்களைப் போல ஒரு சிறு கருவியாகவும் மறைக்குறியீட்டாக்க பந்தாய விரலி சேமிப்பகங்கள் சந்தையில் உள்ளன இந்த பந்தாயங்கள் இணையத்தில் இணைக்கப்படாமல் இருப்பதால் இவை cold storage (உறைந்த சேமிப்பகம்) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை இணையத்தில் இருக்கும் கணினியில் இணைத்து வேலை செய்யலாம். பயனாளர்கள் தங்கள் நிகழ்வணி சேமிப்பக விவரங்களைப் பத்திரப்படுத்த இந்த சேமிப்பகங்களைப் பயன்படுத்தலாம்.

காகித மறைக்குறீட்டுபத்தாக்கம் என்பது இணையத்தில் இருக்கும் பத்தாக்க செலவாணியின் விவரங்கள் ஒரு QR code ஆக உருவாக்கப்பட்டு அதை PDF ஆவணமாகவோ அல்லது அச்சிட்டோ வைத்துக் கொள்ளலாம். ஒருவர் தான் தன்னுடைய எண்ணியல் நாணயத்தைச் செலவழிக்காத வரை இந்த பத்தாய முறை உதவியாக இருக்கும், இந்த முறை இணையத்தில் இல்லாமல் இருப்பதால் இதுவும் உறைந்த சேமிப்பகம் என்று அழைக்கப்படுகிறது. பயனாளர் இந்த பத்தாய முறையைப் பயன்படுத்த இணையத்தில் இணையும் போது தங்களுடைய பிரத்யேகக்குறியீட்டு விவரத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். நச்சு நிரலர்களால் இத்த விவரங்களை எளிதாகக் கைப்பற்ற முடியும்

மறைகுறியீட்டு பந்தாய விவரங்கள் dat க்ப்புக்கள் என்பதாலும் அவற்றில் எண்ணும் எழுத்துக்களுமே தரவுகளாக இருப்பதாலும் ஒரு சாதாரண உரைதிருத்தி செயலி மூலமாகவே இதன் மூலநிரல்களைக் காணமுடியும்.

அதே போல இந்த மறை குறியீட்டுப் பத்தாயத்தைவாங்க ஒருவர் எண்ணியல் செலவாணி பரிவர்த்தனை நிறுவனங்களை அணுக வேண்டும். இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இங்கு தங்கள் காகிதப்பணத்தைக் கொண்டு பத்தாக்கச் செயலியைப் வாங்கி அதன் மூலம் எண்ணியல் நாணயங்களை வாங்கலாம் விற்கலாம் என்று அந்தத்தந்த பரிவர்த்தனைத் தளங்கள் கூறுகின்றன.

ஆனால் எந்த பரிவர்த்தனை நிறுவனம் என்றாலும் எண்ணியல் நாணயத்தை வாங்கவோ, விற்கவோ விரும்பும் எந்த ஒரு நுகர்வாரும் எண்ணியல் செலவாணியினால் வரும் எந்த ஒரு இழப்பையும் சந்திக்கத் தயாராய் இருக்க வேண்டும். பரிவர்த்தனை தளங்கள் அந்நிய செலவாணியை வாங்குவதாகவும் விற்பதாகவும் கூறினாலும் எண்ணியல் செலவாணியின் அடிப்படைக்கூறு, அந்நிய செலவாணியின் மூலம் இலாபம் பெறுவதும் நட்டம் பெறுவதும் அவர்களுடைய சொந்த பொறுப்பாகவே ஏற்றுக் கொள்ள வேண்டிய புரிதல் இருக்க வேண்டும். இந்த செலவாணிக்கு சொந்தக்காரர் யாரும் பரிவர்த்தனை நிறுவனங்கள் செலவாணியை வாங்குகின்றோம் விற்கின்றோம் என்று சொன்னாலும் அவர்களிடம் நாம் செலவாணியை வாங்கிய பின் அவர்கள் மூலமாக விற்க முடியாமல் போகலாம். மேலும் இந்த செலவாணி எந்த ஒரு விதிமுறைக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு இருக்காது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 (எண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 49 (எண்ணியியல் செலவாணி ஒரு விபரீத விளையாட்டா? அல்லது எதிர்கால வர்த்தக முறையா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 50 (எண்ணியல் செலவாணி நிலைத்து இருக்க கூடிய சாத்தியக் கூறுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 51 (மறைக்குறியீட்டாக்க செலவாணியை ஒருவர் பெறுவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 52 (மறைக்குறியீட்டு செலவாணியில் walletஐப் பற்றிய விளக்கம்) – சுகந்தி நாடார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.