Essential requirements for internet classroom (Cryptocurrency) 54 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam



வித விதமான எண்ணியல் செலவாணிகள்

இன்று உலகில் உலவிவரும் எண்ணியியல் செலவாணிகளில் சில பெயர்கள் முன்ணனியாவன Bitcoin, Dash, Dogecoin, Ethereum, Lite coin, monero, Titcoin Zcash, என்று பலவிதமான பெயர்களில் எண்ணியல் செலவாணிகள் உலாவி வருகின்றன.நுகர்வோர் வாங்கிப் பயன்படுத்தும் ஒவ்வோரு பொருளுக்கும் பல தயாரிப்பாளர்கள் இருப்பது போல எணியிஅல் செலவாணிக்கும் இன்று பல தயாரிப்பாளர்கள் உள்ளனர். அரசாங்க விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ இல்லாத நிலையில் இணையத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தது போல் இன்று எண்ணியல் செலவாணி நிறுவனங்கள் உருவாகியுள்ளன.

எண்ணியல் செலவாணியில் எழுதப்பட்ட நிரல் மொழி பொதுவாக C# அல்லது C++ நிரலர் மொழியில் எழுதப் பட்டுள்ளன. இன்றையத் தேதிக்கு சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணியியல் செலவாணிகள்சந்தையில் உள்ளன. இவற்றில் ஒரு சில செலவாணிகள் பிரபலமானதாகவும் , சில பொதுப்புழக்கத்தில் குறைவாகவும் உள்ளன.

இந்த ஒவ்வோரு எண்ணியல் செலவாணியும் சிறுசிறு விதங்களில் வேறுபடுகின்றன. இவை அனைத்தும் ஏறக்குறைய C++ நிரலர் மொழியில் எழுதப்பட்டு இருந்தாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் கணக்கீடு முறைகள் வேறுபடுகின்றன. எண்ணியல் செலவாணியின் கணக்கீடுகள் பொதுவாக Hash Algorithem என்று அழைக்கப்படுகின்றன. Hash Algorithem என்பது ஒரு தரவின் மதிப்பை மனிதர்களுக்கும் கணினிகளுக்கும் அடையாளப்படுத்த முடியாத வகையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள எண், எழுத்துக் கலவை கொண்ட மறைக்குறியீட்டுத் தரவாக மாற்றும் கணக்கீடு ஆகும் ஒவ்வோரு எண்ணியல் செலவாணியும் வேறு வேறு கணக்கீடுகளைப் பயன்படுத்துகின்றன. இன்றைய நிலையில் ஏறக்குறைய பதினைந்து கணக்கீட்டு முறைகள் உள்ளன. ஒரு எண்னியல் செலவாணியை உருவாக்க ஒரு குறிப்பிட்ட கணக்கீடு முறையையோ அல்லது இரு கணக்கீடு முறையை இணைத்தோ உருவாக்கப்படுகின்றன.

இன்று புழக்கத்தில் இருக்கும் எண்ணியல் செலவாணிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். BitCoin, Alt coin Tokens

Bit Coin என்பது முதல் முதலில் உருவாக்கப்பட்ட எண்ணியல் செலவாணியாகும் Satoshi Nakamoto என்றப் புனைபெயரில் ஒரு நிரலரோ அல்லது ஒரு நிரலர் குழுவோ முதல் உருவாக்கிய எண்ணியியல் பாளமே Bit Coin என்று அழைக்கப்படுகின்றது. 2008 உருவாக்கபப்ட்ட கணிதப்புதிர் 2009 ல் நடப்பிற்கு வந்து இன்று வரை கணிதப்புதிர்களை விடுவித்துக் கொண்டு விடுவித்து உருவாக்கப்பட்ட மறைக்குறியீட்டாக்க தரவுகளின் சங்கிலியாகும். முதல் முதலாக உருவாக்கப்பட்ட கணிதப்புதிர் பாளம் Block Zero என்று அழைக்கப்படுகின்றது

Alt coin என்பது Bit Coin அல்லாத மற்ற எல்லா எண்ணியியல் செலவாணி நாணயங்களையும் குறிக்கும்.

Essential requirements for internet classroom (Cryptocurrency) 54 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam

Tokens என்பது தன்னுடைய சொந்த மறைகுறீட்டாக்க தரவுப் பாளத்தை உருவாக்காமல், ஏற்கனவே உருவாக்கியுள்ள ஒரு பாளத்தின் புதிரின் மேலே உருவானது ஆகும். ஒரு நிரலர் ஒரு தரவுப்பாளத்தின் புதிரை விடுவிக்கும் போது அவருடைய விவரங்கள் அனைத்தும் அவர் விடுவிக்கின்ற பாளத்தின் தரவுகளோடு இணைந்து புதிய ஒரு தரவுப் பாளத்தை உருவாக்கும் அவ்வாறு உருவாகும் ஒரு புதிய தரவுப் பாளமே Tokens என்று அழைக்கப்படுகின்றது.

Bit Coin, Alt coin Tokens என்று எந்தப்பெயரில் அழைத்தாலும் அனைத்துமே மீண்டும் மீண்டும் மறைக்குறியீட்டாக்கபப்ட்ட எண்ணியியல் தரவுகளின் தொகுப்பேயாகும்

Alt coin வகைகளை விவரமாகப் பார்த்தால் எண்ணியல் செலவாணித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப்பற்றித் தெரியும்

எனவே ஒரு நுகர்வோராக நாம் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அதன் தரத்தை அதைத் தயாரிக்கும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களைப் பற்றி நாம் தெரிந்து கொண்டு நம்முடைய வசதிக்கு ஏற்ப அந்தப்பொருளை வாங்குவது போல, ஊரில் ஆயிரம் மளிகைக்கடைகள் இருந்தாலும் நமக்கு என்று ஒரு கடை இருப்பது போல ஒன்றுக்கொன்று பெயர் அளவிலும் கணக்கீட்டு முறையிலும் மாறுபட்டு இருக்கும். எண்ணியியல் செலவாணித் தொழில்நுட்பத்தின் அடிப்படை கூறு ஒரே மாதிரியாக இருந்தாலும்,செயல்படும் வகையில் ஒரு சிறு சிறு மாற்றங்கள் செய்து உள்ளதாலும் மூலக்கணிதப் புதிரை உருவாக்கிய நபரும் காலமும் வேறுபடுவதால் வேறு வேறுபெயர்கள் கொண்டு இந்தத் தொழில்நுட்பம் அழைக்கப்படுகின்றது.

எண்ணியல் செலவாணிகளை ஒன்று ஒன்றாகப் பார்ப்போம். பிட் Coin தான் முதல் எண்ணியல் செலவாணி என்பதால் மற்ற எண்ணியல் செலவாணிகளைப் பற்றி பார்க்கலாம்

Bit coin அல்லாத Alt coin வகைகளின் சிலவற்றை ஆங்கில அகரவரிசைப்படி பார்ப்போம்

dash Evan டுபிஎல்ட் என்பவரால் 2016 தொடங்கப்பட்ட ஒரு எண்ணியல் செலவாணி சங்கிலியே dash ஆகும். இதுவும் எல்லாவிதத்திலும் Bitcoin போன்றதே.

dash செலவாணியில் miners எனப்படும் எண்ணியல் சுரங்கர்களும் Master nodes என்ற முதன்மை கணினி முனைகளும் உருவாக்கப்படும் எண்ணியல் செலவாணிகள் இந்த இருவேறுபட்ட கணினி முனைகளுக்கு இடையில் பகிர்ந்து அளிக்கப் படும் முறையும் Bitcoin முறையிலிருந்து வேறுபட்டுள்ளது. இவ்வெண்ணியல் செலவாணியைச் சேமித்து வைக்கக் கருவூலக் கணினிகளையும் இந்த எண்ணியியல் செலவாணிக் கொண்டுள்ளது. Bit coin தொழில்நுட்பத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளதால் அந்த எண்ணியியல் நாணயத்திற்குப் பொருந்தும் அனைத்து விதிமுறைகளும் இதற்குப் பொருந்தும்

எண்ணியியல் செலவாணியை உருவாக்குவதும் சரிபார்ப்பதும் Bitcoin எண்ணியல் செலவாணியில் ஒரே கணினி முனையாக இருக்கக் கூடும்.

ஆனால் miners எனப்படும் சுரங்க கணினி முனைகள்களை இயக்கும் நிரல்கள் ஒரு குழுவினராகவும், முதன்மைக் கணினி முனை குழுவினரும் தனித்தனியாகப் பிரிந்து செயல்படுகின்றனர்.

Essential requirements for internet classroom (Cryptocurrency) 54 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam

Block chainல் உள்ள கணிதப் புதிர்களை விடிவிலக்கும் திறன் வாய்ந்த நிரலர்கள் கணிதபுதிர்கலை விடுவிக்கக்கூடிய சக்தி வாய்ந்த கணினிகளைக் கொண்டு miners என்ற சுரங்கக் குழுவினர் உருவாக்குகின்றனர்.

இந்த நிரலர்குழுவின் வேலை கணிதப்புதிர்களை விடுவித்து ஒரு செலவாணியை உருவாக்குவது மட்டுமே

இந்த செலவாணியின் miners என்ற சுரங்கக் குழுவினர் இணைந்துள்ள அதே p2p networkல் Master nodes என்று அழைக்கப்படும் முதன்மைக் கணினிகள் இணைந்துள்ளன.

Master nodeகள் தான் இந்த எண்ணியல் செலவாணியின் முதலில் இணைந்து p2p networkஐ உருவாக்கிய கணினிகளாக இருக்க வேண்டும். Master nodes என்று அழைக்கப் படும் இந்த முதன்மைக் கணினிகளில் Block chainல் உள்ள அனைத்துத் தரவு பாளங்களின் விவரங்களும் இருக்கும். Master nodes பரிவர்த்தனைகளைச் சரி பார்க்கும் வேலையைச் செய்கின்றது. இந்த வேலையைச் செவ்வனே செய்வதற்காக இந்த எண்ணியியல் செலவாணியில் இதுவரை நடந்த அனைத்து தரவுப்பளங்களின் Block chain விவர நகல்கள் இருக்கும்.இந்த முதன்மைக் கணினி முனைகளின் முக்கியக்கூறு ஒவ்வோரு முதன்மைக் கணினி முனையும் தங்களுடைய எண்ணியியல் பந்தயத்தில் 1000 dashகளை ஒருப்பிணையத் தொகையாக வைத்து இருக்கின்றன. Master nodeகள் இந்த 1000 செலவாணியையும் செலவழிக்க இயலாது. அப்படிச் செலவழித்தால் அவை Master node என்ற தகுதியை இழந்து விடும்.

கணிதப்புதிர்களை விடுவித்து உருவாக்கப் படும் நாணயங்களில் 45% எண்ணியல் தரவுப்புதிர்களை விடுவிக்கும் சுரங்கர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. அடுத்த 45% Master nodes முதன்மை முனைக்கணினிகளிடம் கொடுக்கப்படுகின்றது. மீதி இருக்கும் 10% ஒரு பொதுக்கருவூலத்தில் வைக்கப் படுகின்றது.

எண்ணியல் செலவாணியை உருவாக்கும் வேலைகளையும் பரிவர்த்தனைகளைச் சரிபார்த்தல் வேலைகளையும் பிரித்துச் செய்வதால் மிக விரைவாக இந்த எண்ணியல் செலவாணி உருவாக்கப்படுகிறது என்றும், அதனால் தனிமனிதர்களுக்கிடையிலான பரிவர்த்தனை வேகமாக நடைபெறுகிறது என்றும் இந்த நிறுவனத்தின் இணையதளம் கூறுகின்றது.

Essential requirements for internet classroom (Cryptocurrency) 54 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam

அது மட்டுமில்லாமல், எண்ணியல் செல்வாணிகளின் பரிவர்த்தனையைச் சரிபார்க்க பொதுவாக ஒரு மணிநேரம் எடுக்கிறது என்றால் சுமார் இருபது நிமிடங்களில் dash எண்ணியல் நாணயத்தின் பரிவர்த்தனை சரிபார்க்கப் படுகின்றது என்று இச்செலவாணியின் அறிக்கைக் கூறுகின்றது.மேலும் ஒருவர் தங்களுடைய எண்ணியியல் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பாக செய்ய முடியும் என்றும் நச்சு நிரலர்களால் எந்த ஒரு தொந்தரவு இருக்காது என்றும் இந்த எண்ணியல் செல்வாணியின் அறிக்கைத் தெரிவிக்கின்றது.

பொது மக்கள் இந்த நாணயத்தின் பரிவர்த்தனையை விலை கொடுத்து வாங்க அமெரிக்க நாணயத்தின் 1 cent ஐ விட குறைவான தொகையைத் தான் செலுத்த வேண்டும் என்பதால் இவை விரைவாக பொது மக்களின் புழக்கத்திற்கு வரும் என்று இந்த நிறுவனம் நம்புகின்றது. இதற்கான செயல் திட்டங்களில் dash எண்ணியியல் செலவாணியின் நிரலர் குழுவினர் ஈடு பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கும், இதைபற்றிய ஆங்கில அறிக்கையைப் படிப்பதற்கும் https://www.dash.org என்ற தளத்தைப் பயன்படுத்தலாம்.

அடுத்து வரும் மற்ற என்னியியல் செலவாணி விவரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 (எண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 49 (எண்ணியியல் செலவாணி ஒரு விபரீத விளையாட்டா? அல்லது எதிர்கால வர்த்தக முறையா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 50 (எண்ணியல் செலவாணி நிலைத்து இருக்க கூடிய சாத்தியக் கூறுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 51 (மறைக்குறியீட்டாக்க செலவாணியை ஒருவர் பெறுவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 52 (மறைக்குறியீட்டு செலவாணியில் walletஐப் பற்றிய விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 53 (மறைக்குறியீட்டு செலவாணியில் wallet தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *