Ethereum
Dash செலவாணியை அடுத்து Ethereum செலவாணியைப் பற்றி பார்க்கலாம்.
நாம் எண்ணியியல் செலவாணி பற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது அதை ஒரு செலவாணியாகப் பார்க்காமல் ஒரு செயலியாய் கவனிக்கும் போது, ஒவ்வோரு எண்ணியியல் செலவாணி பற்றியும் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும். ஒரு சொற்செயலியின் வேலையை செய்ய, எவ்வாறு Microsoft word, Apple pages, Libre writer google docs என்று பல பெயர்களில் சொற்செயலிகள் புழக்கத்தில் உள்ளதோ, அதேபோல எண்ணியியல் செலவாணியின் எண்ணியியல் பாளச்சங்கிலி (block chain technology) என்ற ஒரு அடிப்படைத் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு அந்நிய செலவாணிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் Ethereum. Microsoft word, Apple pages, Libre writer google docs ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நாம் எவ்வாறு ஒரு கணக்கைத் தொடங்க வேண்டுமோ இந்த எண்ணியியல் செலவாணிக் கடமைப்புக்களை பயன்படுத்த ஒருவர் அதன் p2p தொடர்பில் இருக்க வேண்டும்.
Ethereum என்பதுவும் Bitcoinக்கு மாற்றாக வந்த Altcoin வகையைச்சார்ந்தது. Vitaly Dmitriyevich Buterin என்ற ரஷ்ய கனேடிய இளைஞரால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இச்செலவாணியின் மூல நிரல் எழுதப்பட்டது.
இந்த ஒரு செலவாணியின் முக்கிய கூறு இது ஒரு திறவூற்று எண்ணியல் கட்டமைப்பாக விளங்குகின்றதென்பதே. Dash எண்ணியல் செலவாணியில் பிரதான கணினி முனைகள் தரவுகளை நிர்வகிக்கும் உரிமை பெற்றவை என்றும் எண்ணியியல் செலவாணி சுரங்கர்கள் நாணயத்தை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பார்த்தோம். இதற்கு மாறாக Ethereum ஒரு திறவூற்று எண்ணியல் செலவாணி என்னும் போது, அதை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம் என்கிறது இச்செலவாணியின் வலைத்தளம். அதனால் தான் என்னவோ Bitcoin அடுத்து அதிகமான புழக்கத்தில் இருக்கும் எண்ணியியல் செலவாணியாக Ethereum விளங்குகின்றது.
இச்செலவாணி திறவூற்று முறையில் வெளியிடப்படுவதால், இதை அடிப்படையாகக் கொண்டு dapps என்று அழைக்கப்படும் மையகம் அல்லதா அமையக (decentralized) பண நிர்வாக செயலிகள் பலவற்றை உருவாக்க அடிப்படையாகின்றது. பண நிர்வாக நிறுவனங்களான Master card, Jp marganஆகியவை Ethereum கட்டமைப்பைச் சார்ந்த மென்பொருட்களை உருவாக்கியுள்ளன. Microsoft நிறுவனமும் இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிகின்றது.
இது தவிர அமையமாக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனங்களை (decentralized organizations) அமைக்கவும் இந்த செலவாணியின் கட்டமைப்பு உதவுகின்றது.
உலகமெங்கும் உள்ள நண்பர்கள் p2p தொடர்பின் வழி ஒரு குளமாகக் கூடி செயல்படுவதே அமையமாக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. நிறுவனத்தின் அங்கத்தினர் யார் எவர் என்ற விவர்னக்கள் தெரியாமலேயே ஒருவர் இந்நிறுவனங்களில் சேர முடியும்.
இந்நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள் என்பதையும் இவை எந்த ஒரு சட்டதிட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டது இல்லை என்பதையும் இந்த நிறுவனத்திற்குத் தலைமைப் பதவிப் பொறுப்பு கிடையாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிறுவனங்களை உருவாக்குவதும் நடத்திச் செல்வதும் கணினி நிரல்கள் மூலமாகவே நடைபெறும். ஒருவர் நிறுவனத்தில் உறுப்பினராக வேண்டும் என்றால் அவரது கணினி தானாகவே அவரது உறுப்பினர் படிவத் தேவைகளை நிரல்கள் மூலம் சரிபார்க்கும்.
நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் தானாகவே சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். இந்நிறுவனங்களில் சேர ஒருவர் தன் கணினி வழி தனது விருப்பத்தை ஒரு திட்டறிக்கையாகக் கொடுத்தோ, அல்லது Ethereum நாணயத்தைக் கொடுத்தோ நிறுவனத்தில் இணைந்து கொள்ளலாம், இந்நிறுவனங்களில் இணைந்து கொள்ள ஏதாவது ஒரு வழியில் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதாகத் திட்ட அறிக்கை அமைந்து இருக்க வேண்டும் ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறிவிடலாம்.
சாதாரணமாக எந்த ஒரு நிறுவனம் அமைக்க வேண்டுமென்றாலும் நிறுவனத்தை உருவாக்கும் நபர்கள் நிறுவனத்தின் சட்டதிட்டங்கள் உறுப்பினர்களின் பொறுப்பு உரிமைகள் பற்றி ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்து இடுவர். ஆனால் கணினி நிரல்கள் மூலமாகவே செயல்படும் அமையமாக்கப்பட்ட நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் உள்ள ஷரத்துக்களும் ஷரத்துக்களைச் சரி பார்ப்பதும் கணினி நிரல்கள் வழியாகவே நடக்கின்றது. இவ்வாறு இரும எண்ணியல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, நிரல்களாலேயே சரி பார்க்கப்பட்டு ஒத்துக்கொள்ளப்படும் ஒப்பந்தம் smart contract என்று அழைக்கப்படுகின்றது
இப்படி உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் கருவூலத் தரவுகள் பொதுக்கருவூலங்களாக செயல்படுகின்றன.
இந்தப் பொதுக் கருவூலத் தரவுகளை ஒருவர் சென்று பார்க்க வேண்டும் என்றால் குழுவில் உள்ள அனைவரின் அனுமதியும் தேவைப்படுகிறது. குழுவினரின் அனுமதியைக் கோரும் பணி, அனுமதி கொடுக்கும் பணி அனுமதியை மறுக்கும் பணி, கொடுக்கப்பட்டுள்ள அனுமதிகளைச் சரிபார்த்து ஒருவரை கருவூலத்தகவ்லை பார்க்க அனுமதிப்பது ஆகிய அனைத்து வேளைகளையும் கணினியே செய்யும் படி நிரல்கள் எழுதப்பட்டு இருக்கும். குழுவில் இருக்கும் அனைவரும் மனிதர்களாக இருந்த போதுமெல்லா செயல்பாடுகளும் கணினியின் நிரல்கள் வழியே நடந்து கொண்டிருக்கும். இதனால் நம்பிக்கையின் அடிப்படையில் பணப்பரிவர்த்தனை நடக்காமல் நிரல்களை நம்பி பணப்பரிவர்த்தனை நடைபெறும். நிரல்களால் பணபப்ரிவர்த்தனைநிருவகிக்க்ப்படும் போது கால நேர அளவுகள் இன்றி எந்நேரமும் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளின் விவரம் குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் பொதுவில் இருக்கும். எந்த விதமான மூடி மறைத்தல் நடக்க இங்கே வாய்ப்பில்லை
crowd funding என்று அழைக்கப்படும் வகையில் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி செயல்படும் அறக்கட்டளைகள், சுயத் தொழிலாகத் தனது திறமைகளைக் கோன்டு பொருள் ஈட்டும் குழுவினர் ஆகியோர் இந்தமாதிரியான அமையமாக்கபப்ட்ட நிதி நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிரக் காப்புறுதித் திட்டங்கள் இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி பண விநியோகத்தைத் தானியக்கமாக மாற்றலாம்.
திறவூற்று கட்டமைப்பாக Ethereum அறியப்படுவதால் அதன் மூல நிரல்கள் எப்படிச் செயல்படுவது போன்ற விவரங்கள் தெளிவாக நிரலர்கலூக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் பார்க்கலாம்!
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
காசு, பிழைப்பு, பெயர், புகழ், பாராட்டு இவற்றுக்கு அப்பாற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க மனிதர்கள் பாற்றுதலுக்கு உரியவர்கள்
எந்நாளும் போற்றுவோம்