எண்ணியியல் செலவாணி பரிவர்த்தனை மையங்களின் அடிப்படை என்ன?
எண்ணியியல் செலவாணி பரிவர்த்தனை மையங்களைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், எப்படிப் பணம் என்பது ஒரு செல்வமாக மாறுகிறது என்ற அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் பணத்தை ஒரு செல்வமாக நினைத்து முதலீடு செய்யும் முறையின் அடிப்படைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் தான் இனி வரும் காலத்தின் பொருளாதார தொழில்நுட்பத்தின் கூறுகளைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியும்.
ஊதியம் என்பது நாம் செய்யும் வேலைக்குப் பணமாகப் பெறுவது. அந்தப் பணத்தைக் கொண்டு நாம் நம் அன்றாட செலவுகளைச் செய்கின்றோம். அந்நிய செலவாணி முறையைப் பயன் படுத்தி ஒரு நாட்டு நாணயத்தை இன்னொரு நாட்டு நாணயமாக மாற்றுகின்றோம். இன்று தமிழர்கள் கடல் கடந்து அந்நிய நாடுகளில் அதிகமாக வசிப்பதாலும் அந்நிய செலவாணி மாற்றம் என்பது பற்றிய விழிப்புணர்வு நமக்கு அதிகம் உண்டு ஆனால் பணத்தையே செல்வமாக எப்படி நாம் யோசிக்கின்றோம் என்றால் நாம் சேமித்து வைக்கும் பணத்தில் ஒரு நிலத்தையோ வீட்டையோ நகைகளையோ வாங்குகின்றோம். அது தவிர நமது வங்கியில் ரொக்கப்பணமாக சேமித்து வைக்கின்றோம். இது தான் தமிழகத்தில் ஏன் இந்தியாவில் செல்வம் என்ற சொல்லுக்குப் பொதுமக்களுடைய அகராதியில் பொருள்.
ஏன் எனில் நாம் பண்ட மாற்று முறையில் முக்கிய கூறாக இன்னும் பயன்படுத்துவது ரொல்லப்பணத்தைத் தான். இன்று மேலைநாடுகளைப் போல வங்கிகளின் கணினி வழி பணப்பரிமாற்றம் நடந்தாலும் கடன் அட்டைகளைப் பலர் பயன்படுத்தினாலும் திறன்பேசி செயலிகள் வழி நாம் பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக் கொண்டாலும் பணத்தைச் சேமித்து செல்வத்தைப் பெருக்குவது நாம் கடைப்பிடிக்கும் முக்கியமான வழியாகும்.
எண்ணியியல் செலவாணி நிறுவனங்களும் அதன் பரிவர்த்தனை மையங்களும் அமெரிக்காவில் தோன்றி இருப்பதால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சாரத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் ரொக்கப்பணப் புழக்கத்தை விட, கடன் அட்டைகளைக் கொண்டே அன்றாடப் பொருளாதாரம் நடைபெற்றுவருகின்றது. இப்போது திறன்பேசி செயலிகள் வழியாகவும் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. ரொக்கப்பணமாக பலர் கையில் நூறு ரூபாய்க்கும் குறைந்த அளவிலேயே வைத்து இருப்பர். ரொக்கப்பணத்தைக் கொண்டு செலவழிப்பவர்கள் பெரும் பாலும் கடன் அட்டை பெறத் தகுதி அற்ற பெரிய கடனாளிகளாக இருப்பர்,
கடன் அட்டை பெற இயலாதவர்களைப் பற்றிய சிறு குறிப்பு உங்கள் புரிதலுக்காக!
அமெரிக்காவில் நாம் தன் விருப்ப பணி முறையே நிலவுகிறது. அதாவது முதலாளியாக இருந்தாலும் சரி தொழிலாளராக இருந்தாலும் சரி அவர்களின் விருப்பத்திற்கேற்ப வேலை செய்யலாம். அதாவது சட்டத்திற்குப் புறம்பான காரணங்கள் தவிர எப்போது வேண்டுமானாலும் முதலாளி தொழிலாளியை வேலையை விட்டுத் தூக்கலாம். அதே போலத் தொழிலாளியும் எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து வெளியேறலாம். அதற்கு அவர்களுக்குக் குறைந்த பட்சம் இரண்டு வார அறிவிப்புக் கொடுக்கப்படும். தினக்கூலிக் கொடுப்பவருக்கு அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வர வேண்டிய தேவையில்லை என்று முதல் நாள் கூறுவார்கள் அதனால் இந்தியாவில் இருப்பது போல மாத சம்பளம் என்று இல்லாமல் தினக்கூலியாகவோ அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை ஊதியத்தைப் பெறும் வகையில் இருக்கும், அரசுப்பணிகளும் இவ்வாறே நடைபெறுகின்றன.
அதே போல கடன் அட்டையில் பொருட்களை வாங்கி விட்டு, அதன் அசலைக் கட்டாமல் வட்டியை மட்டுமேக் கட்டிக் கொண்டு வருபவர்கள் ஒரு காலகட்டத்தில் அசலைக் கட்ட இயலாமல் கடனில் மூழ்கி விடுவர் இப்படிக் கடனாளியாக மாறுபவர்களுக்கு வங்கிகளோ , கடன் அட்டை நிறுவனங்களோ வீடு கட்ட கடன் கொடுப்பதில்லை. வீட்டைக் கடன் வாங்கிக் கட்டியவர்கள் கடன் தொகையைக் கட்ட முடியாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவது உண்டு
பணியில் அமர்வதற்கும். இந்தியாவில் இருக்கும் ஒரு ஆதார் அட்டை போல ஒரு எண் அடையாள அட்டை இருக்கும். இந்த அடையாள அட்டை இல்லாதவர்கள் எந்த பணிக்கும் செல்ல இயலாது. ஒருவருக்கு வீட்டு விலாசம் இல்லை எனில் அவரால் அந்த அட்டையை வாங்க இயலாது.
இப்படி எந்த ஒரு வருமானமும் இல்லாமல், அல்லது வாங்கிய கடன்களை அடைக்க இயலாதவர்களுக்குக் கடன் அட்டைகள் கிடிஅப்பது சிரமம். இவர்கள் மட்டுமே அமெரிக்காவில் ரொக்கப்பணத்தைப் பயன்படுத்துகின்றனர்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வரும் ஊதியம் உடனுக்குடன் ஏதாவது ஒரு காரணத்தால் செலவாகி விடுகின்றது. இதனால் சேமிக்கும் பழக்கம் அமெரிக்கர்களிடையே சேமிக்கும் பழக்கம் மிகக் குறைவு. கல்லூரிக் கல்வி முதல் வீடு வரை கொண்டு எதைப் பெற வேண்டும் என்றாலும் கடன் வாங்கித் தான் செய்ய வேண்டும். ஒரு சில கடன்களுக்கு வரிவிலக்கு உண்டு என்பதாலும் கடன் அட்டை ஒரு சிறந்த வியாபார உத்தி என்பதாலும் கடன் இல்லாமல் வாழும் அமெரிக்கர்கள் மிகக் குறைவு.
ஒரு நிறுவனத்தில் விருப்பத்திற்கேற்ப வேலை என்று இருக்கும் போது ஒரு நிறுவனம் நல்ல, திறன் வாய்ந்த தொழிலாளர்களைப் போட்டியாளர்களிடம் இழந்து விடக்கூடும். அதனால் பணியாளர்களுக்கு அவர்களின் ஓய்வூதியத் தொகையாக நிறுவனங்கள் பங்குச்சந்தை முதலீடு செய்யும் வழக்கத்தை நிறுவனங்கள் செய்கின்றன. இந்தப்பங்குச் சந்தை முதலீட்டில் ஒருவர் தன்னுடைய வருமானத்திலிருந்து ஒரு தொகையை ஓய்வூதிய தொகையாகச் சேமித்தால் அதே அளவு அந்த நிறுவனமும் பணியாளரின் ஓய்வூதியத் தொகைக்குக் கொடுக்கும். இந்த ஓய்வூதிய சேமிப்பிற்கு அரசாங்கம் வரிவிலக்கு அளிப்பதால் இந்த சேமிப்பு முறையை அமெரிக்கர்கள் விருப்பத்தோடு பார்க்கின்றனர். இது ஒரு முக்கிய சேமிப்பு முறையாக உள்ளது இதனாலேயே இந்தியாவோடு ஒப்பிடும் போது அமெரிக்கப் பங்குச்சந்தையில் செல்வம் சேர்ப்பது மிக முக்கியமான ஒரு வழியாகும்
அடிப்படையில் சேமிப்பு இல்லாமல், கடன் வாங்கிச் செயல்படும் ஒரு பொருளாதாரத்தில் இயங்கும் எந்த ஒரு நிறுவனமும் தான் செயல்பட முதலீட்டை வங்கிகளிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் பெறுகின்றன. அப்படி முதலீட்டைப் நிறுவனத்தின் பங்கைப் பங்குச் சந்தையில் விற்கின்றன
பங்குச் சந்தை என்றால் என்ன? அது எப்படிச் செயல்படுகின்றது என்று நம் அனைவருக்கும் ஒரு புரிதல் இருக்கிறது,. இருந்தாலும் பங்குச் சந்தையின் ஒரு சில அடிப்படைகளை இங்குச் சொல்வது எண்ணியியல் செலவாணியைப் பற்றிய ஒரு எதிர்கால நோக்கை நமக்குக் கொடுக்கலாம்.
பங்குச் சந்தை என்று பார்க்கும் போது ஒரு நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்குவது, கடனீட்டுத் தொகையாக முதலீடு செய்வது, பண்டங்களின் எதிர்கால விலையின் உத்தேசத்தின் மேல் முதலீடு செய்வது. அந்நிய செலவாணியில் முதலீடு செய்வது என்ற நான்கு வகைகளும் பங்குச் சந்தையில் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.
ஒரு நிறுவனம் தனக்குத் தேவையான முதலீட்டைப் பெற பொது மக்களுக்கு அவர்களுடைய நிறுவனத்தின் சொத்துரிமையில் பங்கு கொடுத்து அதற்கு விலையாக அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வர். இந்த பொது முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் ஒரே ஒரு பங்கை வாங்கினாலும் அவர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளராக் கருதப்படுகின்றார். அந்நிறுவனம் தொடர்ந்து இலாபம் ஈட்டித் தருமேயானால் அல்லது எதிர்காலத்தில் அதிகமான வளர்ச்சிக்குக் காரணிகள் இருக்குமேயானால் அந்த நிறுவனத்தின் பங்கின் விலை அதிகரிக்கும். எனவே குறைந்த விலையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதிக விலைக்கு விற்கும் போது ஒரு தனிநபர் இலாபம் சம்பாதிக்கின்றார். ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்பவர் அந்த நிறுவனத்தின் சலுகைப் பெற்ற முதலீட்டாளராய் இருந்தால், நிறுவனத்தின் இலாபத்திலிருந்து ஒரு பங்கைக் காலாண்டுக்கு ஒரு முறை பங்கு தாரருக்குக் கொடுக்கின்றார். ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்க நாம் பங்குச்சந்தையை அணுக வேண்டும்.
கடனீடு என்னும் போது பங்குகளை வாங்குவதற்குப் பதிலாக நிறுவனங்களுக்கு ஒரு தனி மனிதர் ஒரு தொகையைக் கடனாகக் கொடுக்கின்றார். தாங்கள் பொது மக்களிடமிருந்து வாங்கிய கடனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பதில் திருப்பிக் கொடுத்து விடுவர். கடனைத் திருப்பிக் கொடுக்கும் வரை அவர்களுக்குக் கடன் கொடுத்தவர்களுக்குக் கடன் தொகையின் மேல் வட்டிக் கொடுக்கப் படும்.அரசாங்கமும் பல நிறுவனங்களும் இவ்வாறும் முதலீட்டைத் திரட்டுகின்றன அப்படி கடன் கொடுக்க ஒரு பொது முதலீட்டாளரிடம் ஒரு குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டும். அமெரிக்கப் பங்கு நிறுவனத்தில் கடனீட்டாளராக இருக்க அவரிடம் $1000 இருக்க வேண்டும்.. இந்தியாவில் ஒருவர் 10000 ரூபாய் கொடுத்து கடனீடு செய்யலாம். அரசாங்க கடனீடுப் பத்திரங்களை அரசாங்கத்திடமும் நிறுவனங்களின் கடனீடு பத்திரங்களைப் பங்குச் சந்தையிலும் ஒருவரால் பெற முடியும்.
பண்டங்களின் சந்தை என்று சொல்லும் போது, கனிமங்கள் எரிசக்தி வகைகள் விவசாயப்பொருட்கள் ஆகியவற்றின் எதிர்கால விலையின் அடிப்படையில் செய்யப்படும் முதலீடு ஆகும். இது தொன்று தொட்டு வரும் ஒரு சந்தை முறை என்றாலும் , இப்போது காலத்திற்கு ஏற்ப நவீனபடுத்தபப்ட்டுள்ளது.
அந்நிய செலவாணி சந்தை என்பது ஒரு நிறுவனம் இன்னொரு நாட்டு நாணயத்தை வாங்குவது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு நாட்டின் செலவாணியின் விலை மாற்றம் எவ்வாறு இருக்கும் என்று பந்தயம் கட்டுபவர்களாலும் இங்கே இலாபம் சம்பாதிக்க முடியும்.
பங்குச் சந்தையைத் தவிரக் காலத்தின் பங்கு (time share) என்ற ஒரு விதியில் விடுதிகளின் கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. ஒரு சுற்றுலா விடுதியைக் கட்டுபவர் தனக்குத் தேவையான முதலீட்டைப் பொதுமக்களிடமிருந்து பெற இந்த காலப் பங்கை விற்கின்றார். பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஈடாக அவர்கள் அந்த விடுதியில் குறிப்பிட்ட காலத்தில் அந்த விடுதியில் இலவசமாகத் தங்கலாம். அதே நேரம் அந்தப்பங்கை மற்றவர்களுக்கும் விற்கலாம்
இவையே இன்று உலக நடைமுறையில் இருக்கும் முதலீட்டு வகை செல்வங்களாகும். இந்த செல்வங்களை மனிதன் தன் புலன்களால் தொட்டு உணர முடியாது
மேலே சொன்ன எல்லா முதலீட்டு முறைகளும் காலம் காலமாக நடந்து வருபவை அதனால் அவை ஒழுங்கு படுத்தப்பட்டு அவற்றிற்கு என்று ஒரு வரலாறும் உண்டு இந்த சந்தையின் குளறுபடிகள் மோசடிகளிலிருந்து குடிமக்களைக் காப்பாற்ற அரசாங்கங்கள் பல சட்டதிட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் இப்படி எந்த ஒரு வரலாறும் அறிக்கையும் இல்லாத நிலையில். எண்ணியியல் செலவாணிகள்பண்டமாகவும் பணமாகவும் காலப் பங்காகவும் சந்தையில் விற்கப்படுகின்றன. இந்த சந்தைகள் தற்போது தனியார் நிறுவனங்களால் நடத்தப் படுகின்றன. இந்தத் தனியார் நிறுவனங்களே எண்ணியியல் பரிவர்த்தனை மையங்கள் என்று அழைக்கப் படுகின்றன,
பங்குச்சந்தையின் கூறுகளின் அடிப்படையில் தான் எண்னியியல் செலவாணி பரிவர்த்தனை மையங்கள் இயங்குகின்றன, ஒருதனிநபர் நிறுவனத்தின் பங்குகளை எப்படி பங்குச்சந்தைகளில் தான் வாங்க இயலுமோ அதே போல இந்த எண்னியியல் வர்த்தக மையங்கள் வழியாக த் தான் எண்ணியியல் செலவாணியில் ஒரு தனிநபர் முதலீடு செய்ய இயலும்
ஒருவர் எண்ணியியல் செலவாணியில் முதலீடு செய்ய அவருக்கு ஒரு எண்ணியியல் பத்தாயம் தேவை, எண்ணியியல் வர்த்தக மையங்களின் உதவி தேவை, கடைசியாக எண்ணியியல் செலவாணியை வாங்க ஒரு நாட்டில் அரசு செலவாணித் தொகை தேவை.
ஒருவர் கணினி நிரல்கள் மூலம் எண்ணியியல் செலவாணியை கடைந்து எடுக்கும் தரவு அகழ்வராகவே இருந்தாலும் , எண்ணியியல் செலவாணியைக் கொண்டே செல்வந்தர் ஆக முடியாது.அவர் அகழ்ந்தெடுக்கும் எண்ணியியல் செலவாணியைப் பங்கு சந்தையில் கொண்டுவந்தால் மட்டுமே கடன் அட்டை போலப் பொருளாதாரத்தின் அடிப்படையாக அதை பொது மக்களிடையேக் கொண்டு வர முடியும். எனவே தற்போது எண்ணியியல் செலவாணி சந்தைகள் காளான்கள் போல முளைத்து வருகின்றன
எண்ணியியல் செலவாணித் தொழில்நுட்பத்தைப் பற்றிய தெளிவான புரிந்துணர்வு இருக்க வேண்டும். அதன் சந்தையைப் பற்றிய சரியான தெளிவு என்பதாலும் இந்த தொழில்நுட்பம் எதிர்கால சந்ததியினரின் வேலைவாய்ப்பிற்கும் அவர்களின் பொருளாதாரத்திற்கும் ஒரு பெரிய அடிப்படையாக அமையும் என்பதால் தான். எண்ணியியல் செலவாணியில் தொடங்கி அமெரிக்க அடிப்படை பொருளாதாரத்தை விளக்கியுள்ளேன்
அடுத்து எண்ணியியல் செலவாணி வர்த்தக மையங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 (அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 57 (Monero, Titcoin, Zcash) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.