எண்ணியல் செலவாணி வர்த்தக மையங்கள்
எண்ணியல் செலவாணி நிறுவனங்கள், தங்களுடைய இணைய தளத்திலேயே எண்ணியியல் செவாணியை வைப்பதற்குப் பத்தாயங்களை விற்றாலும், ஒரு எண்ணியியல் செலவாணியிலிருந்து இன்னொரு செலவாணிக்கு மாற்றும் வசதியைச் செய்து தரவில்லை. இந்தக் குறையைப் போக்கவே எண்ணியியல் பரிவர்த்தனை நிறுவனங்கள் தோன்றியுள்ளன.
எண்ணியியல் செலவாணி வர்த்தக மையம் என்பது இருவகையானப் பரிவர்த்தனைகளைச் செய்கின்றது. முதலாவது, ஒரு எண்ணியியல் செலவாணியிலிருந்து இன்னொரு எண்ணியியல் செலவாணிக்கு மாற்றிக் கொடுக்கின்றது. இரண்டாவது ஒரு நாட்டின் செலவாணியை வாடிக்கையாளருக்கு அவர் விருப்பப்பட்ட எண்ணியியல் செலவாணியாக மாற்றித் தருகிறது.
ஒரு வாடிக்கையாளர் எந்த ஒரு எண்ணியியல் செலவாணியை வைத்து இருக்கின்றாரோ அதன் நிரல் முறைத் தொடர்பான எண்ணியியல் பத்தாயத்தையே அவர் தனது கணினியில் வைத்து இருக்க முடியும். தன்னிடம் இருக்கும் ஒரு எண்ணியியல் பத்தாயத்தை அந்தப்பத்தாயத்தைச் சார்ந்த எண்ணியியல் செலவாணியைத் தான் வைத்து இருக்க இயலும் அதனால் இன்னுமொரு எண்ணியியல் பத்தாயத்திற்கு மாற்ற வேண்டுமானால் முதலில் எண்ணியியல் வர்த்தக மையங்களில் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும் இரண்டாவது எண்ணியியல் செலவாணிக்கென தனியாக எண்ணியியல் பத்தாயம் வைத்து இருக்க வேண்டும், அல்லது கணக்கு வைத்திருக்கும் எண்ணியியல் வர்த்தக மையங்களில் இணையப் பத்தாயம் ஒன்றை வாங்கி வைத்து இருக்க வேண்டும்.
எண்ணியியல் வர்த்தக மையங்கள் இணையம் வழியாக மட்டுமே செயல்படுவதால், ஒரு எண்ணியியல் பரிவர்த்தனை மையத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணியியல் பத்தாயம் இணையத்திலேயே இருக்கும்.
எந்த ஒரு எண்ணியியல் பரிவர்த்தனை மையத்தில் வாடிக்கையாளர் கணக்கு வைத்திருந்தாலும் அங்குக் கணக்கு வைத்திருப்பதற்கு ஒரு தொகையைக் கொடுத்து கணக்கைத் தொடங்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தன்னிடம் இருக்கும் எண்ணியல் செலவாணியை இந்த சந்தைகளில் விற்க வேண்டுமென்றால் அவற்றைச் சந்தையில் பட்டியலிட வேண்டும். அப்படி ஒரு குறிப்பிட்ட சந்தையில் பட்டியல் இடவும் ஒரு கூலித் தொகை வசூலிக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வோரு முறை ஒரு எண்ணியியல் நாணயத்திலிருந்து இன்னொரு எண்ணியல் நாணயத்திற்கு மாற்றும் போதும் ஒரு அரசின் செலவாணியாக மாற்றும் போதும் அதை மாற்றிக் கொடுப்பதற்கான பணத்தையும் தரகுக் கூலியாக கொடுக்க வேண்டும். இந்த எல்லாக் கூலி வகைகளும் ஒரு நாட்டின் செலவாணியில் கொடுக்க வேண்டும். இந்த வர்த்தக மையங்களில்
இந்த செயல் முறைகளைப் பார்க்கும் போது ஒரு எண்ணியியல் வர்த்தக மையம் ஒரு பங்குச்சந்தை போலவும் வங்கி போலவும் ஒரே நேரத்தில் வேலை செய்கின்றது. பண்டங்களின் சந்தை போல எண்ணியியல் செலவாணிகளின் கொடுக்கல் வாங்கல் இந்த வர்த்தக மையங்களில் நடைபெறுகின்றது, இந்த எண்னியியல் வர்த்தக மையங்களில் ஒரு செலவாணியின் விலை பங்குச்சந்தை செய்திகளிலும், ஒரு முதலீட்டுச் செல்வமாகவும் பொருளாதார வல்லுநர்களால் பேசப் படுகின்றது. ஆனால் இன்றைய நிலையில் எண்ணியல் செலவாணியைக் கைவசம் வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர்களை விட இந்த வர்த்தக மையங்களே அதிக வருவாயை ஈட்டுகின்றன.
வர்த்தக மையங்கள் என்று சொன்னவுடன் நமக்குப் பங்குச்சந்தை போன்ற ஒரு கட்டமைப்பு கண்ணுக்குள் வரும். ஆனால் எல்லா வர்த்தக மையங்களும் ஒரு குறிப்பிட்ட நிரல் வரைமுறையைக் கையாளும் ஒரு கணினி சேமிப்பகங்களே ஆகும்.
எண்ணியியல் அனைத்துமே ஒரே மாதிரி சேவைகளைப் பல விதமான பெயர்களில் அழைத்துக் கொள்கின்றன வாடிக்கையாளர்களைத் தரம் பிரித்து ஒவ்வோருக்கும் ஏற்ப விற்பனை உத்திகளையும் சேவைகளையும் வழங்குகின்றன. எப்படி கணினி தொழில்நுட்பம் புழக்கத்திற்கு வந்த போது பல்வேறு இயங்குதளங்கள் இருந்தனவோ அது போல இன்று புழக்கத்தில் இருக்கும் தனித்துவம் வாய்ந்த ஒவ்வோரு எண்ணியியல் செலவாணியும் பொதுவாகப் புழங்கப்படும் இடமாக இந்த எண்ணியியல் வர்த்தக மையங்கள் விளங்குகின்றன.
ஒரு வாடிக்கையாளர், ஒரு எண்ணியியல் பரிவர்த்தனை நிறுவனத்தை உருவாக்கும் போது எண்ணியியல் செலவாணி பற்றிய அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களைத் தெரிந்து கொண்டும், எண்ணியியல் செலவாணி வர்த்தக மையங்களின் இணையப் பாதுகாப்பு வழி முறைகளையும் தெரிந்து கொண்டு ஒரு விழிப்புணர்வோடு தங்கள் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். இந்தியாவில் எண்ணியியல் செலவாணியின் வர்த்தகம் சட்டத்திற்குப் புறம்பானது இல்லை.அமெரிக்காவில் ஒரு சில நிறுவனங்களுக்குச் சட்ட அனுமதி உண்டு. தொழில் நுட்பத்தில் இன்று முன்னணியில் இருக்கும் சீன நாட்டில் இந்த வர்த்தகமும் தொழில்நுட்பமும் சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணியல் செலவாணி வர்த்தக மையங்களின் இன்றைய நிலை :
ஜப்பானிய எண்ணியியல் சந்தை Liquid அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எண்ணியியல் பத்தாயங்கள் களவாடப்பட்டுள்ளன என்று தெரிவித்து உள்ளது. இந்த எண்ணியியல் செலவாணியை Liquid வர்த்தக மையம் முடக்கி விட்டது சில வாரங்களுக்கு முன்பு $611 மில்லியன் டாலர் அளவிலான Ethereum செலவாணித். poly network என்ற வர்த்தக மையத்திலிருந்து சூறையாடப்பட்டது, Liquid சந்தையிலிருந்து சூறையாடப்பட்ட தொகை ஏறத்தாழ 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்… Poly network சந்தையிலிருந்து திருடப்பட்ட தொகையில் பாதியைத் திருடிய நச்சு நிரலர் திருப்பித் தந்து விட்டார். ஆனால் மீதித் தொகையைத் திரும்பித்தருவதற்காக அந்த நிறுவனம் $500,000 அமெரிக்க டாலர்களைப் பரிசுத் தொகையாக அறிவித்து உள்ளது. (அவர்களின் வர்த்தக மையத்திலிருந்த பாதுகாப்புக் குறைபாட்டைச் சுட்டிக் காட்டியதற்காம்)
கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு விளையாட்டுத் திடலில் ஒருபகுதியில் தன்னுடையப் பெயரை வைப்பதற்காக ஒரு எண்ணியியல் செலவாணி வர்த்தக மையம் ஏறத்தாழ 18 மில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்புள்ள எண்ணியியல் செலவாணியைக் கொடுத்துள்ளது.
இன்றைய வங்கிகளைப் போலச் செயல்படுவதாலும் பங்குச் சந்தைகளின் பல கூறுகளை தன்னுள் அடக்கி வைத்திருப்பதாலும் மிகப் பெரிய தொகையில் வர்த்தகங்கள் செயல்படுவதாலும் எண்ணியியல் செலவாணி பிரபலமடைந்து வருவதோடு அன்றாடப்புழக்கத்திலும் கலந்து விட்டது.
ஒவ்வோரு செலவாணியும் அந்தந்த நாட்டின் அரசுச்சட்டங்களுக்கு ஏற்ப நிறுவப்பட்டுள்ளன என்பது ஒரு நிம்மதி என்றாலும் எண்ணியியல் செலவாணியின் நடைமுறையை உணர்ந்து அதற்கான சட்டங்கள் உண்டா என்பது சந்தேகம் தான்.
1790களில் அமெரிக்காவில் வங்கிகளின் வசதி வந்தது. அவற்றின் விதிமுறைகளைக் கொண்டுவர The Federal Reserve System1913 ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.1770களிலேயே இந்தியாவில் வங்கி வசதிகள் வந்து விட்டன. இவற்றை ஒழுங்குமுறைப்படுத்த 1934ம் ஆண்டு நமது ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது.
1792ம் ஆண்டு அமெரிக்காவில் நீயுயார்க் நகரில் Wall Street என்ற பகுதியில் முதன் முதலாகப் பங்குச் சந்தை தொடங்கப்பட்டது securities and Exchange Commission அமெரிக்கப் பங்குச் சந்தையின் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் காலத்திற்கும் குடிமக்களின் தேவைக்கும் ஏற்ப 1934 சட்டப்படி உருவாக்குகின்றது.
இந்தியாவில் மும்பாய் நகரத்தில் முதன் முதலாகப் பங்குச் சந்தை 1875ல் தொடங்கப்பட்டது அதை அடுத்து கல்கத்தா சென்னை நகரங்களிலும் பங்குச் சந்தைத் தொடங்கப்பட்டது. 1988ம் ஆண்டு Securities and Exchange Board of India என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி பங்குச் சந்தைக்கான விதிமுறைகளையும் ஒழுங்கு முறைகளையும் கொண்டு வந்தது. 1992ம் ஆண்டு National Stock Exchange of India Limited என்ற நிறுவனம் உலகத்தரத்திற்கு ஏற்ப மின்னியல் வசதிகளுடன் பங்குச்சந்தையை உருவாக்கியது. இந்த பொருளாதார வரலாற்றைப் பார்க்கும் போது வங்கிகளும் பங்குச்சந்தைகளும் புழக்கத்திலிருந்து இரு நூற்றாண்டுகள் கழித்துத் தான் இவற்றை ஒழுங்கு முறைப்படுத்த அரசுகள் சட்டம் இயற்றி உள்ளன.
கணினித் தொழில்நுட்பம் 1990களில் பிரபலமடைந்து அண்மையில் தான் அனைத்து அரசுகளும் இவற்றை ஒழுங்கு முறைப்படுத்தச் சட்ட திட்டங்களை இயற்றி வருகின்றன
அப்படியானால் இன்று பிரபலமடைந்து வரும் எண்ணியல் செலவாணியும் எண்ணியல் ஒரு பங்குச் சந்தையாகவும் வங்கிகளாகவும் செயல்படும் செலவாணி வர்த்தக மையங்கள் எப்போது ஒழுங்கு முறைப்படுத்தப்படும்?.
யோசிக்க வேண்டிய விஷயம்
தொடர்வோம்
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 (அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 57 (Monero, Titcoin, Zcash) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.