குறிப்பு எடுத்தல்

பாடப்புத்தகங்களிலிருந்தும் வகுப்பு விரிவுரையிலிருந்தும் குறிப்புக்கள் எடுத்துக் கொள்ளும் திறன், மாணவர்களை தேர்விற்குத் முறையாகத் தயார் செய்வதோடு அவர்களின் படைப்புத் திறனும் அதிகரிக்கின்றது. இணைய வகுப்பறை சீரிய முறையில் செயல்பட மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது.வகுப்பறைக்கு வரும் முன் மாணவர்கள் எப்படித் தங்கள் பாடங்களை படித்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு வர வேண்டுமோ, அதே போல வகுப்பறையில் நடக்கும் விரிவுரைகளைக் குறிப்பு எடுப்பதும் முக்கியமாகும். நம்மில் பலர் மாணவராக இருந்த போது பலகையேடுகளை வாங்கித் தேர்விற்குத் தயார் செய்து இருக்கின்றோம். பல சிறந்த கையேடுகள் நம்மைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கும் உதவி செய்து இருக்கின்றன. இன்றும் மாணவர்களில் பலர் தேர்வுக்குத் தயார் ஆவதற்குக் கையேடுகளை நம்பி இருக்கலாம்.

ஒரு பாரம்பரிய கையேடுகளை நம்பிய மாணவர்கள் தங்கள் பாடத்தின் மையப் பொருளில் சந்தேகம் வந்தால் மற்ற மாணவர்களிடமோ அல்லது ஆசிரியரிடமோ சந்தேகங்களைக் கேட்கலாம். ஆனால் இணைய வகுப்பறையில் மாணவர்களுக்குச் சந்தேகம் வந்தாலும். அதைத் தெளிவு படுத்திக் கொள்ள முடியாத சூழல் உருவாகலாம்.அதனால் இணைய வகுப்புக்களில் ஆசிரியர்களின் விரிவுரையைத்தான் தான் மாணவர்கள் நம்பி இருக்கின்றனர்.

பல இணைய வகுப்புக்களில் அது மாணவர்களுக்குத் தேர்வு சமயத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், ஆசிரியர் தன்னுடைய நழுவல் காட்சிகளை மாணவர்களுக்கு ஒரு ஆதார வலமாக அனுப்பி வைப்பர். ஆனால் மாணவர்களின் நினைவுத் திறன் மிக மிகக் கூர்மையாக இல்லாத நிலையில் , கொடுக்கப்படும் நழுவல் காட்சிகள் மாணவர்களுக்குப் பயனளிக்காது. அதன் காரணங்கள் நான்கு

 • பெரும்பாலும் நழுவல் காட்சிகளை ஆசிரியர்கள் இணைய வகுப்பறையின் கரும்பலகைகளாகக் காட்டுகின்றனர்.

 • நழுவல் காட்சிகளை மாணவர் தயாரிக்கவில்லை.

 • நழுவல் காட்சிகள் விரிவுரையில் பயன்படுத்தப்பட நேரத்திற்கும், அது மாணவர்களின் கையில் வந்து சேர்ந்து அவர்கள் அதை மீண்டும் பார்ப்பதற்கும் இருக்கும் நேர இடைவெளியில் மாணவர்கள் விரிவுரையை மறந்து இருக்கக் கூடும்.

 • தேர்வு நேரங்களில், நேரச் சேமிப்புக் கருதி விரிவுரையைப் படித்து மீண்டும் புரிந்து கொள்வதை விட, மாணவர்கள் பாடப்புத்தகத்தைப் படிக்க முற்படலாம்.இந்த சிக்கல்களைக் கலைய மாணவர்களுக்கு உதவுவது குறிப்பெடுத்தல் திறனாகும். பாடப்புத்தகத்திலிருந்தும், ஆசிரியரின் விரிவுரையிலிருந்தும் குறிப்பு எடுக்கும் கலையை மாணவர்கள் அறிந்து இருப்பதோடு, அதைச் செயல்படுத்தவும் ஆரம்பிக்க வேண்டும். வகுப்பின் இறுதியில் மாணவர்கள் தாங்கள் எடுத்த குறிப்புக்களை வீட்டுப்பாடமாக சமர்ப்பிக்கும் படி ஆசிரியர்கள் கேட்கலாம்.

நம்மில் பலரின் நினைவுத் திறன் சராசரி என்ற நிலையில் நாம் குறிப்பு எடுப்பது, பாடத்தை மனனம் செய்வதற்கு ஒப்பானது ஆகும் என்பதைப் புரிந்து கொண்டால் நாம் புத்தகங்களைப் படிக்கும் போதும், விரிவரை

நான் அமெரிக்காவில் எனது பட்டங்களை வாங்கியதற்கு முக்கியக் காரணம் இணைய வகுப்புக்களே. என்னுடைய வகுப்பு பாடங்களைப் படிக்க நான் கையாண்ட சில குறிப்பு முறைகளை நான் இங்கே குறிப்பிட்டு விளக்குகின்றேன்.

இதை ஒவ்வோரு மாணவரும், அவரவருக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம்

 1. bullet journal note taking அறிக்கைக் குறிப்பு

 2. colour coded note taking நிறங்களைக் கொண்ட குறிப்பு

 3. Visual note taking படங்களுடன் கூடிய குறிப்பு

 4. Cornell Note Taking Cornell பல்கலைக்கழக முறை குறிப்பு

பாடப்புத்தகத்திலிருந்து குறிப்பு எடுத்தல் என்று பார்க்கும் போது, நாம் பொதுவாகப் புத்தகத்தில் எழுதுவதில்லை.ஆனால் அமெரிக்காவில் புத்தகத்தை நாம் படிக்கும் போது நூலாசிரியரோடு உரையாடுவதாய் எண்ணிக் கோன்டு, நமது கருத்துக்களையும் கேள்விகளையும் காகிதத்தின் ஓரத்தில் எழுதச் சொல்வர்.

புத்தகத்தில் நேரடியாக ,எண்களை இடுவதற்குப் பதிலாக ஒரு தனி கோடிட்ட நோட்டுப்புத்தகத்தில், புத்தகத்தின் பெயர், அத்தியாயத்தின் எண், பக்க எண் தேதி ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு நமது கேள்விகளையும் கருத்துகளையும் நாம் எழுதிக் கொள்ளலாம்,புத்தகங்களை வாசிக்கும் போது கணினியிலும், விரிவுரைகளைக் கேட்கும் போது கையிலும் நாம் எழுதிக் கொள்ளலாம்.சாதாரண குறிப்புப் பக்கத்தின் எடுத்துக் காட்டு

தேதி

புத்தகத்தின் தலைப்பு. ஆசிரியர்

புத்தகத்திலிருந்து எடுக்கப்பட மேற்கோள்கள்

அடிக்கோடிட்ட விவரங்கள்

முக்கிய சொற்கள், கேள்விகள்

அத்தியாய எண், பக்க எண்

“புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்”

* முக்கியச் சொல்

நூலாசிரியரிடம் மாணவர்கள்க் கேட்க வேண்டிய கேள்விகள்

நூலாசிரியரின் பதிலாக மாணவர்களின் யூகங்கள்

ஏன்?, எதற்கு ? எப்படி? யார்?எப்போது என்ற கேள்விகளும் அதற்கான விடையும்

( நம்முடைய சொந்தக் கருத்துக்களில்)

சந்தேகங்கள்

ஆதார வளங்களின் விவரம்

பொருண்மையின் சுருக்கமான விவரம்

நிறங்களைக் கொண்ட குறிப்பு எடுக்கும் போது ஐந்து நிறங்களையும் ஒன்றாகக் கொண்ட பால்பாயிண்ட் பேனா ஒன்றைப் பயன்படுத்தினால், குறிப்பு எடுப்பதற்கான நேரம் குறையும். கீழேக் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை நிறங்களை வைத்து கருத்துக்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு உதாரணமாக உள்ளது.

தேதி

புத்தகத்தின் தலைப்பு. ஆசிரியர்

புத்தகத்திலிருந்து எடுக்கப்பட மேற்கோள்கள்

அடிக்கோடிட்ட விவரங்கள்

முக்கிய சொற்கள், கேள்விகள்

அத்தியாய எண், பக்க எண்

முன்னுரை

* முக்கியச் சொல்

“புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்”

அடிக்கோடிட வேண்டிய விவரங்கள்

ஏன்?, எதற்கு ? எப்படி? யார்?எப்போது என்ற கேள்விகளும் அதற்கான விடையும் 

( நம்முடைய சொந்தக் கருத்துக்களில்)

மொருண்மையின் முக்கியக் கருத்து

சந்தேகங்கள்

முடிவுரை

ஆதார வளங்களின் விவரம்

பொருண்மையின் சுருக்கமான விவரம்

சந்தேகங்களின் பதில்கள்

பிடிக்கும் புத்தகங்களிலிருந்து குறிப்புக்கள் எடுக்க இந்த இரு முறைகளையும் நாம் பயன்படுத்தலாம். வாரத்திற்கு ஒரு முறை நாம் நோட்டுப் புத்தகத்தில் இவ்வாறு வரைந்து வைத்துக் கொண்டால் குறிப்பு எடுப்பதற்கு மிக எளிதாக இருக்கும்.

ஒவ்வோரு பாட வகைக்கும் ஒரு தனி நோட்டுப்புத்தகம் போட்டு நாம், குறிப்புக்கள் எடுக்கலாம். ஆசிரியர் விரிவுரை யை நடத்தும் போது நமது குறிப்புப்புத்தகத்தில் ஏற்கனவே அந்தக் குறிப்புச்சொல்லோ விவரமோ இருக்குமானால் அதை சரிகுறியிட்டு குறித்துக் கொள்ளலாம். முக்கியக்குறியையும் நான் அத்தோடு இணைத்துக் கொள்ளலாம். பாடப்புத்தகத்திலிருந்து நாம் கவனிக்கத் தவறிய விவரங்களை ஆசிரியர் கொடுக்கும் போது. அதை நாம் கையஐ ஒரு சொல்லாக விரைவாக எழுதித் தவறு என்று குறியிட்டு அடிக் கோடிட்டுக் கொள்ள வேண்டும்.

பாடங்களைப் படிக்கும் முன் புத்தகத்திலிருந்து நாம் குறிப்பு எடுப்பது விரிவுரையின் போது நாம் அவசராவசரமாக குறிப்பு எடுப்பதைக் குறைக்கின்றது.

ஆனால் பல சமயங்களில் மாணவர்கள் வகுப்பறைக்குத் தயார் நிலையில் இல்லாமல் வரும் போது முக்கியமாக அலைபேசிகளின் வழி இணைய வகுப்பில் மாணவர்கள் இணையும் போது bullet journal note taking (அறிக்கை குறிப்பு) Visual note taking படங்களுடன் கூடிய குறிப்பு,Cornell Note Taking Cornell பல்கலைக்கழக முறை குறிப்பு ஆகிய மூன்றுக் குறிப்புக்களும் உதவி செய்யும்.

bullet journal note taking (அறிக்கை குறிப்பு) என்பது பொதுவாக நாட்காட்டி குறிப்புக்களுக்காகவோ அல்லது செய்ய வேண்டிய வேலைப்பட்டியலையோக் குறிக்கும்

அதாவது நாம் செய்யப் போகும் செயல்களை ஏன் எப்படி எப்போது என்று நமது தர வரிசைப்படுத்தி நமது செயல்களை நாட்காட்டியின் உதவி இல்லாமல் திட்டமிட்டுச் செய்ய இந்த வகை குறிப்புக்கள் பயன்படுகின்றன. மாணவர்கள் தங்கள் வகுப்பு பற்றிய விவரங்கள், வினாடி வினாக்கள் செய்முறைப் பயிற்சிகள் அறிக்கைகள் சமர்ப்பித்தல் தேர்வுகள் ஆகியவற்றைக் குறித்துக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர்.

கோடிடாத எந்த ஒரு நோட்டுப் புத்தகத்தையும் நாம் இதற்குப் பயன் படுத்தலாம். சுருக்கமாகச் சொல்லப்போனால் நமக்கான தனிப்பட்ட நாட்காட்டியை நாமே உருவாக்குவது தான் அறிக்கை குறிப்பு எடுத்தல்

bullet journal note taking (அறிக்கை குறிப்பு)ன் முக்கியக் கூறுகள்

 • வரிசைப்படுத்தப்பட்ட உள்ளடக்கம்

 • எதிர்கால செயற்பதிவேடு

 • மாதப் பதிவேடு

 • பாடப் பதிவேடு

 • நாள் பதிவேடு

  • பாடங்கள்

   • விரிவுரை’

   • வீட்டுப்பாடம்

   • வினாடி வினா

   • செய் பயிற்சி

   • தேர்வுகள்

   • பிற

   • வகுப்பு குறிப்புக்கள்

    • முக்கிய சொற்கள்

    • கேள்விகள்

    • சந்தேகங்கள்

    • பாடச்சுருக்கம்

    • முக்கியப் பொருண்மை

நாம் இந்த குறிப்பேட்டை அவ்வப்போது தயார் செய்தோமேயானால் வகுப்புக்களுக்குத் தயார் ஆவது எளிது. ஆனால் ஒவ்வோரு பாடத்திற்கும், ஒவ்வொரு வகுப்பிற்கும் நாம் தயார் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் வெறும் வெள்ளைத்தாள் நோட்டுப்புத்தகங்கள் என்பதால் வரிசைப்படுத்தப்பட்ட உள்ளடக்கம்

 • எதிர்கால செயற்பதிவேடு

 • மாதப் பதிவேடு

பாடப் பதிவேடு ஆகியவற்றை முதலிலேயேத் தயார் செய்து வைத்துவிட்டால் நாள் பதிவேட்டையும், பாட பதிவேட்டையும் அவ்வப்போது நாம் தயாரித்துக் கொள்ளலாம்.


பாடங்களில் தாங்கள் செய்ய வேண்டிய செயல்களை கீழ்கண்டவாறு அடையாளக் குறியீடு இட்டுக் கொள்ளலாம்.,

செய்யவேண்டிய செயல்கள்

0 மிக முக்கியமாகச் செய்ய வேண்டிய செயல்கள்

* உதவி தேவை

<< முந்தைய பாடங்களைத் திருப்பிப்பார்த்தல்

>> தயாராக ஆரம்பித்தல்

பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்படும் நாட்குறிப்பைக் கூட மாணவர்கள் இவ்வாறு மாற்றி அமைத்துப் பயன்படுத்தலாம்.

Visual note taking படங்களுடன் கூடிய குறிப்பு என்பது மாணவர்கள் தங்களுக்குத் தோன்றிய படங்களைக் குறிப்புச்சொற்களோடோ அல்லது பாடப் பொருண்மையின் மையக்கருத்தோடு இணைத்துப் பார்க்கும் விதமாக வடிவமைத்துக் கொள்வது. நம்மில் பலர் நம்முடைய நோட்டுப்புத்தகங்களின் ஓரத்தில் பல கிறுக்கல்கள் செய்கின்றோம். இவற்றைப் பார்ப்பவர்கள் நாம் பாடத்தைக் கவனிக்காமல் கவனத்தைச் சிதறடிக்கின்றோம் என்று தவறுதலாக எண்ணிக் கொள்கின்றனர். உண்மையில் புதிய பாடத்தைக் கற்கும் போது மனித மூளையின் வலது பக்கம் செயல்படத் தொடங்குவதையே நம் கிறுக்கல்கள் குறிக்கின்றன. எனவே பாட விளக்கத்தை நாம் படங்களாக வரைந்து கொண்டால் நம் மனதில் நாம்கேட்க்கும் கருத்துக்கள் ஆழப் பதியும். ஆனால் மனதில் பதிந்த ஒன்றைத் திரும்பப்பெற உதவுவது, நம் படங்களுடன் எழுதும் குறிப்புச்சொற்கள். மனதில் ஒரு பாடத்தைப் பதிய வைப்பது ஒரு கற்றல் திறன் என்றால், பதிய வைத்த செய்தியை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவது இன்னும் ஒரு முக்கியக் கற்றல் திறன் ஆகும். ஆங்கிலத்தில் இதை recall என்று கூறுவார்கள். recall கற்றல் திறனை அடையப் படங்களுடன் கூடிய குறிப்பேடு உதவுகின்றது.

இறுதியில் நாம் பார்க்கப் போகும் குறிப்பெடுக்கும் முறை .Cornell Note Taking Cornell பல்கலைக்கழக முறை குறிப்பு. இந்தக் குறிப்பெடுக்கும் முறை மிக முக்கியமாக கருதப்படுவதற்குக் காரணம் குறிப்பெடுத்தலிலேயே இருவகை மீள் பார்வைகள் அடங்கி விடுகின்றன

இது வகுப்பு முடிந்தபின் மீள் பார்வையின் போது பட்டியலிட வேண்டிய முக்கியக் கருத்துக்கள், விவரப்படங்கள் கேள்விகள்

குறிப்பு எடுக்கும் தேதி

பாட விவரம் ஆகியவை வரும்

வகுப்பறை விரிவுரைக் குறிப்புக்கள் இந்தப்பகுதியில் இடம் பெறும். குறிப்புக்கள் சிறு சிறு வாக்கியங்களாக இருக்கவேண்டும் முக்கியச் சொற்கள், விதிகள் எழுதப்பட வேண்டும். இந்தப்பகுதியில் வகுப்பு நேர விரிவுரையை மாணவர்கள் குறிப்பு எடுக்க வேண்டும்.

பாடப் பொருண்மையின் சுருக்கம்

ஆதார வளங்கள் ஆகி விவரங்கள் வகுப்பு முடிந்ததும் மீள் பார்வையின் போது எழுத வேண்டும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை ஒரு காகிதத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து உள்ளது. வகுப்புத் தொடங்கும் முன் ஒரு மாணவன் தன் பாடத்திற்கான நோட்டுப்புத்தகத்திலேயே விரைவாக இரு கோடுகளைக் கிழித்து இவ்வாறு அட்டவணை செய்து கொள்ளலாம்

நீளவாட்டத்தில் 2 அங்குல இடமுள்ள பகுதியில் பாடவிவரங்கள் தேதி ஆகியவற்றைக் குறித்துக் கொள்ள வேண்டும். பாடத்தின் மிக முக்கியமான மையக்கருத்து தலைப்புக்கள் விவரங்கள் ஆகியவற்றையும் இங்குப் பதிவு செய்யலாம். விடிவான பகுதியில் மாணவர்கள் விரிவுரையின் குறிப்புக்களைத் தங்கள் வசதி படி எடுத்துக் கொள்ளலாம். ஆசிரியர் சொல்வதைப் பதிவு செய்தலும், பாடங்களில் வரும் கேள்விகளையும் பிரதிபலிப்புக்களையும் மனனம் செய்ய வேண்டிய விவரங்களையும் மீள் பார்வை பார்க்க வேண்டிய விவரங்களையும் இந்தப் பகுதியில் கொடுக்க வேண்டும்

அடிப்பகுதியில் இருக்கும் 3 அங்குல இடைவெளியில் வகுப்பு முடிந்து வெளியே வரும் முன் அன்று நடந்த பாடத்தின் சுருக்கத்தை ஓரிரு வரிகளில் முக்கிய கருத்துக்களை எழுதி வைக்க வேண்டும்.

வகுப்பிற்குத் தயாராகி வரும் போதும் வகுப்பு முடிந்தபின்னும் ஒரு மாணவர் குறிப்பு எடுத்துப் பழகினால் அவரது வாழ்க்கைக்கு அது மிகவும் பயனுள்ள ஒரு திறனாகும். இந்தத் திறனை வளர்ப்பதன் மூலம், ஒருவரின், நினைவுத் திறன், சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் திறன் ஆகியவை மேம்படுத்தப்படுகின்றது.

இந்தக் குறிப்புக்கள்: உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். அடுத்தவாரம் சில கணினி சார் கொசுறு ஆலோசனைகளைப் பார்ப்போம்.

தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

 தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *