இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 60 – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom (Cryptocurrency Company And Trade Centers) 59 - Suganthi Nadar. Book Day, Bharathi Puthakalayamஎண்ணியியல் செலவாணி வர்த்தக மையங்களும் அவற்றிற்கான எச்சரிக்கைகளும்

 உலகம் முழுவதும் எண்ணியியல் செலவாணி வர்த்தக மையங்கள் இருந்தாலும், புவியில் ஒரு இடத்திலிருந்து கொண்டு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டு இருந்தாலும் அமெரிக்காவின் பொருளாதார சூழலை முன்னிட்டு  அந்நாட்டிலுள்ள எண்ணியல் பரிவர்த்தனை மையங்களே இன்று  முன்னணியில் இருக்கின்றன.

Binance, Coinbase, Kraken, Robinhood ஆகியவை அமெரிக்காவில் பிரபலமாக உள்ளன. இவை தவிர Paypal போன்ற நிறுவனங்களும் எண்ணியியல் செலவாணி வர்த்தக மையங்களாகச் செயல் படத் தொடங்கியுள்ளன.WazirX இந்தியாவில் உள்ள பெரிய எண்ணியியல் செலவாணி வர்த்தக நிறுவனம் ஆகும்.

Binance 

இன்றைய எண்ணியல்  பொருளாதாரத்தில் ஒரு எண்கால் சிலந்தி மீனாய்த் தன் கால்களைப் பதித்து இது உருவெடுத்து உள்ளது. 2017ம் ஆண்டு சீன நாட்டில் சன் பெங்சாங்(Changpeng Zhao என்ற சீனக் கனேடியரால் உருவாக்கபப்ட்ட இந்நிறுவனம் Binance என்றும் Binance.com என்றும் இரு பெயர்களில் அமெரிக்காவில் இயங்கியது. Binance அமெரிக்க நாட்டின் சட்டதிட்டங்களால் ஒடுக்கப்பட்டதால் இன்று Binance.com என்ற பெயரில் தன் எண்ணியியல் பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்காவில் செய்து வருகின்றது. க்யூபா நாட்டின் தெற்கே உள்ள சிறிய தீவுக்கூட்டமான கேமன் தீவுகளில் இதன் அலுவலகம் உள்ளது. அன்றைய இங்கிலாந்து பேரரசின் ஒரு அங்கமாக இருந்த இத் தீவுகள் இன்று கடல் கடந்து பொருளாதார நிறுவனங்களை அமைக்க வல்ல வரிச்சட்டங்களைக் கொண்டது இந்தத் தீவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலையில் சீன நாட்டிலும் இங்கிலாந்திலும் கூட இந்த நிறுவனம் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியிலும் இப்போது சட்டங்களின் கெடுபிடிக்கு ஆளாகி உள்ளது.

ஆனால், தனக்கென்று தரவியல் பாளச்சங்கிலித் தொழில்நுட்பம் அதற்கான எண்ணியியல் பத்தாயம் அந்தத் தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி, புதிய எண்ணியியல் செலவாணி நிறுவன்ங்கஅள் தொடங்க உதவி செய்யும் தளம், அப்படி உருவாகும் நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்களின் கூட்டமைப்பு, எண்ணியியல் செலவாணீகளின் தகவல் களஞ்சியம் என்ணியியல் செலவாணி பற்றிய கல்விக்கூடம் எண்ணியியல் செலவாணி மையம் என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்கிறது இந்நிறுவனத்தின் தளம்

Coinbase

முழுக்க முழுக்க இணையம் வழி செயல்படும் இந்த நிறுவனம் 2012; ப்ரையன் ஆம்ஸ்ட்ராங்க் (Brian Armstrong), ப்ரெட் எர்ஷம் (Fred Ehrsam) என்ற இரு அமெரிக்கர்களால் தொடங்கப்பட்டது. இருவருமே கணினியாளர்கள் ப்புளூம்பர்க் கணினி தரவுத் தளத்தின் வழி அமெரிக்கப் பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ளது.

Graphical user interface, text, application, email Description automatically generated

இந்நிறுவனம் Bit coin எண்ணியியல் செலவாணியை பரிவர்த்தனை செய்ய உதவுகின்றது. சுரோஜித் சட்டர்ஜி மனீஷ் குப்தா என்ற இரு இந்தியர்கள் இந்த நிறுவனத்தின் நிருவாகக் குழுவில் இருக்கின்றனர். இந்தப்பரிவர்த்தனை நிறுவனம் அளிக்கும் சேவைகளில் முக்கியமானது, கணினி நிரல்கள் வழியாகவே வாடிக்கையாளர் தங்களுடைய எண்ணியியல் பொருளாதாரப் பரிவர்த்தனைகளைச் செய்து கொள்ள முடியும். அவர்கள் சுயமாகத் தங்களின் எண்ணியியல் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிவர்த்தனைக் கணக்கு ஏற்படுத்திக் கொள்ள இந்நிறுவனத்தில் வழியுண்டு தங்களுக்கென்று ஒரு எண்ணியியல் பாளத்தை உருவாக்கி அதன் மூலம் எண்ணியியல் பாளச்சங்கிலி கட்டமைப்பை உருவாக்கும் ரொசெட்டா என்னும்  திறவூற்று நிரல் தொகுப்பை இந்நிறுவனம்  வெளியிட்டு உள்ளது.

Kraken

பே வார்ட் (payward)என்ற நிறுவனத்தானலும் அதன் தலைவர் ஜான் பெளல்(John Powel) என்பவராலும் நிறுவகிக்க்ப்படும் ஒரு எண்ணியியல் பரிவர்த்தனை மையம் இது. ஸ்காண்டிநேவிய நாடோடிக்கதைகளில் வர்ணிக்கப்படும் ஒரு மந்திரக் கடல் பிராணியின் பெயரைக் கொண்டதாகும் இது 2011ல் தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. ப்புளூம்பர்க்  கணினி தரவுத் தளத்தின்  வழி, Coinbase நிறுவனத்தைப் போல அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனமாக இது மக்களால் அறியப்பட்டது.

வாடிக்கையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதும் அவர்கள் எண்ணியியல் செல்வத்தைப் பாதுகாப்பதையும் முதன்மைக் கொள்கையாய் கொண்டுள்ளதாக இந்தஎண்னியியல் பரிவர்த்தனை நிறுவனம் கூறுகின்றது பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் எண்ணியியல் செலவாணி பரிவர்த்தனை செய்ய வழி செய்வதோடு எண்ணியியல் செலவாணியை ஒரு பண்டகமாகப் பரிமாற்றமாகப் பங்குச்சந்தையில் விற்கவும் இந்நிறுவனம் வழி செய்கிறது,

Robinhood

Robinhood app controversy grows, with likely motive revealed - 9to5Mac

வால்ட் தென்வ் (Vlad Tenev )என்ற பல்கேரிய அமெரிக்கர் பைஜீபட் (Baiju Bhatt) இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஆகிய இருவரால் தொடங்கப்பட்ட பங்குச்சந்தை நிறுவனம். புதியதாகத் தொடங்கும் நிறுவ்னாங்களின் அறிக்கையை அதிவேகமாக வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் வசதி இந்தத் தொழில்நுட்பத்தில் உள்ளது. பங்குச்சந்தை பற்றி அதிக அனுபவமும் விவரமும் தெரியாத இளைஞர்களும் காலையில் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, மாலையில் விற்கும் வாடிக்கையாளர்களாக்கவும் இணையம் வழியும், அலைபேசியின் குறுஞ்செயலி வழியும் பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட உதவும் ஒரு கணினித் தொழில்நுட்ப நிறுவனமாக இது உருவாகியது. பொதுவாகப் பங்குச்சந்தை தரகர்கள் வாடிக்கையாளர்களுக்கும் பங்குச்சந்தைக்கும் இடையில் இருப்பர் அவர்களது தரகுக்கூலியைக் கொடுக்காமல் ஒரு தனிமனிதர், தானாகவே பங்குகளைப் பரிவர்த்தனை செய்ய இந்த நிறுவனம் உதவுகிறது, இளைஞர்கள் தங்கள் நிதியை நிர்வகிக்கும் ஒரு செயலியாகவும் இதைப் பயன்படுத்துகின்றனர்.பங்குகள் தவிர தற்போது எண்ணியல் செலவாணி வர்த்தகத்திலும் இந்நிறுவனம் ஈடுபடுகின்றது

கணினித் தொழில் நுட்பம் கொண்டு வந்த எதிர்மறை விளைவுகளைத் தவிர்த்து, எண்ணியல் செலவாணி தொழில்நுட்பம் ஒரு ஆக்க சக்தியாக வளர வேண்டுமெனில் பொது மக்களுக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு இத் தொழில்நுட்பத்தின் தொடக்கக் காலத்திலேயே இருக்க வேண்டும்.

கணினித் தொழில்நுட்பம் இராட்சசத் தனமாகவளர்ந்து, இன்றைய உலக நுகர்வோர் பயன்பாட்டில் முதல் இடத்தை பெற்று இருப்பதைப் போல எண்ணியியல் செலவாணி தொழில்நுட்பமும் நுகர்வோரின் கவனத்தைக் கவரும் என்று இந்நிறுவனங்கள் நினைக்கின்றன. அதனால் எண்ணியியல் செலவாணி தொழில்நுட்பத்தை மக்களிடையே சந்தைப் படுத்துதலில் எண்ணியியல் செலவாணி நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர் கணினித் தொழில்நுட்பம் ஒரு நுகர்வோர் பொருளாக மாறியக்காலக்கட்டத்தில் பொதுமக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பல பாதிப்புக்களை மக்கள் சந்தித்த பின்னாலேயே அனைத்து அரசாங்கங்களும் தங்களது கணினித் துறையைச் சீர்படுத்துவதில் இறங்கியுள்ளன. கணினித் தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையிலும் வணிகத்திலும் உலகப் பொருளாதாரத்திலும் ஏற்படும் சீர்கேடுகளையும் பாதிப்புகளையும் தவிர்த்து தங்களுடைய குடிமக்களைக் காப்பாற்றப் பல அரசுகள் புதிய சட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர்.

நிரலர்கள் விடுவிக்கும் புதிரால் உருவாகும் எண்ணியல் செலவாணி பொதுப் புழக்கத்தில் வர வேண்டும் என்றால் எண்ணியியல் செலவாணியை உருவாக்குபவர்களும் அதைப் பயன்படுத்தக் கூடிய நுகர்வோருக்கும் இடையில் இரு இடைத் தரகு தேவையாய் இருக்கிறது.பொதுமக்களுக்கும் ஒரு அரசின் கருவூலத்திற்கும் இடையே வங்கிகள் இருப்பது போல எண்ணியல் செலவாணி பரிவர்த்தனை நிறுவனங்கள் காளான்கலாய் முளைத்து உள்ளன. இந்தப் பரிவர்த்தனை நிறுவனங்களின் இணைய தள அறிவிப்புக்களையும் சமூக வலைத்தள செய்திகளையும்  உடனடியாக நம்பி விடாமல் Trust pilot Rediff போன்ற தளங்களிலும் வாடிக்கையாளர்களின் பின்னூட்டம் கருத்து ஆகியவற்றைப் படித்துத் தெரிந்து கொண்ட பின்னரே ஒருவர் இந்த எண்ணியியல் செலவாணியின் பயனாளராகவோ வர்த்தகராகவோ மாற வேண்டும். என்னதான் எண்ணியியல் செலவாணி என்று சொன்னாலும் இந்நிறுவனங்கள் தங்கள் தரகுக்கூலியாக  தட்டை செலவாணி என்று அழைக்கப்படும் அரசு செலவாணிகளையே பெறுகின்றன என்பதால் வாடிக்கையாளர்கள் நஷ்ட்டபடமால் இருப்பது அவர்கள்  கையில் தான் உள்ளது.ப

அமெரிக்காவின் Securities and Exchange Commission, Securities and Exchange Board of India, National Stock Exchange of India Limited என்ற அரசு நிதி சட்ட ஒழுங்கு ஆணையங்களை அணுகி  எண்ணியல் செலவாணி பற்றிய விவரங்களையும்  எச்சரிக்கைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 (எண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 49 (எண்ணியியல் செலவாணி ஒரு விபரீத விளையாட்டா? அல்லது எதிர்கால வர்த்தக முறையா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 50 (எண்ணியல் செலவாணி நிலைத்து இருக்க கூடிய சாத்தியக் கூறுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 51 (மறைக்குறியீட்டாக்க செலவாணியை ஒருவர் பெறுவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 52 (மறைக்குறியீட்டு செலவாணியில் walletஐப் பற்றிய விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 53 (மறைக்குறியீட்டு செலவாணியில் wallet தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 (அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 57 (Monero, Titcoin, Zcash) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 58 (எண்ணியியல் செலவாணி பரிவர்த்தனை மையங்களின் அடிப்படை என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 59 (எண்ணியல் செலவாணி வர்த்தக மையங்கள்) – சுகந்தி நாடார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.