எண்ணியல் செலவாணிகளை அகழ்தல்
ஒரு பொது மனிதனாக நீங்களும் நானும் எண்ணியியல் செலவாணிகளை அகழ்ந்து பொருளாதார முன்னேற்றம் காணப்போவதில்லை. ஆனால் நம் மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்பைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் போது கணினியின் மறுசுழற்சியும் கணக்கியல் முறைகளை ஆழமாகக் கற்றுக் கொள்வதாலும் எவ்வளவு முக்கியம் என்று பார்த்தோம். அதற்கு ஒரு ஆதாரமாக இந்த எண்ணியியல் அகழ்தலைக் (Cryptocurrency) கொள்ளலாம். எண்ணியியல் அகழ்தல் என்பது ஒரு எண்ணியியல் செலவாணியை எவ்வாறு உருவாக்குவது என்பதே!
எங்கள் இணைய வகுப்புப் பேராசிரியர் அடிக்கடி சொல்வார், ஒரு வண்டியைத் தேசிய சாலையில் ஓட்டிச் செல்பவருக்கு அந்த வண்டியைப் பழுது பார்க்க அவசியம் தெரிந்து இருக்க வேண்டும். அதே போலக் கணினியைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது ஒரு கணினி எவ்வாறு வேலை செய்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் எளிதாகக் கற்றுக் கொள்வதோடு அந்த தொழில்நுட்பத்தை நம் தேவைக்கு ஏற்ப அதை வளைத்துக் கொடுக்கலாம்.
உதாரணத்திற்கு நாம் இன்று பயணம் போகப் பயன்படுத்தும் GPS தொழில்நுட்பத்தின் அடிப்படை விண்கலம் வழி புவியை ஆராய்ந்து அதன் வடிவங்களை அடையாளப்படுத்தி தரவுபடுத்துவதுதான். அப்படித் தரவுப்படுத்துதல் ஒரு நாட்டின் இராணுவத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒரு போர்க்காலத் தொழில்நுட்பமாகக் கண்டு பிடிக்கப்பட்ட தரவுத் தளம், இன்று உலகில் உள்ள அனைவருக்கும் ஒரு பயண வழிகாட்டியாக அமைந்துள்ளது. பல அரசுப்பணிகளில் இது முக்கியமான தரவாகக் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகின்றது. என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இன்று பல காப்புறுதி நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாக வளர்ந்து விட்டது. அமெரிக்காவில் நாம் மனிதர்களுக்குக் காப்புறுதி வாங்குவது போல, அவர்களின் உடைமைகள் நிலம் வீடு ஊர்திகள் மருத்துவம் அனைத்திற்கு காப்புறுதி வாங்க வேண்டும். ஏதாவது பேராபத்தில் ஏற்படும் இழப்பைச் சரி செய்ய இந்த காப்புறுதி பணம் பயன்படும். காப்புறுதி என்று ஒன்று இல்லாமல் ஏற்படும் பொருள் நஷ்டத்தை ஒரு தனிநபரால் கண்டிப்பாய் சமாளிக்க முடியாது.
இன்றையக் கணினித் தொழில்நுட்பத்தில், அன்டித்து நிறுவனங்களுக்கும் எங்கே எப்போது எப்படியான பேராபத்து நிகழ இருக்கின்றது என்று முன்கூட்டியே அறிய முடியும். இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து வெள்ள அபாயத்தில் இருக்கும் அஞ்சல் குறியீட்டு எண் பகுதிகளில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் அசையாச் சொத்துக்களைக் காப்புறுதி செய்வதற்குக் காப்புறுதி நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இதனால் பேராபத்து அடிக்கடி நிகழும் பகுதியில் வாழும் பலர் காப்புறுதி செய்ய வசதி இருந்தும் காப்புறுதி செய்ய இயலாமல் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.
இந்தப் பிரச்சனையைக் களைய விண்கலத்தின் படங்கள் தரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வீட்டின் அல்லது கடையின் உட்புற அமைப்பைத் துல்லியமாக அளந்து, வீட்டின் கட்டமைப்புக்களையும் துல்லியமாக அளந்து ஒவ்வோரு வீட்டுச்சொந்தக்காரரும் பேராபத்திலிருந்து தனது வீட்டைப் பாதுகாக்க என்ன செய்து இருக்கின்றார் என்று தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுவாக ஒரு அஞ்சல் குறியீட்டு எண்ணின் கீழ் இருக்கும் அனைவருக்கும் காப்புறுதி மறுப்பதை விட ஒவ்வோரு வீட்டின் பாதுகாப்பு விவரங்களை வைத்துத் தனித் தனி நபருக்குக் காப்புறுதி பெற்றுக் கொள்ள உதவும் தொழில்நுட்பம் இன்று பயன்படுத்தப்படுகிறது. அதைப் போலவே இன்றைய எண்ணியியல் செலவாணித் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தைத்திறமையாகக் கையாண்டு எதிர்காலப்பிரச்சனைக்கான தீர்வின் அடிப்படையாக எண்ணியியல் செலவாணித் தொழில்நுட்பம் அமையலாம்.
எங்கள் பேராசிரியர் சொல் பின்பற்றி ஒரு எண்ணியல் தொழில்நுட்பத்தின் உயிர் நாடியான அகழ்தல் முறை பற்றிப் பார்ப்போம் பாளச் சங்கிலியில் உள்ள தரவுகளை அகழ்தல் நடைபெறாமல் நின்றுவிட்டால் எண்ணியியல் செல்வாணி என்ற ஒரு தொழில்நுட்பமே நின்று விடும்.. வளர்ந்து வரும் எதிர்காலப் பொருளாதாரத்தின் அடிப்படையே நிரல்கள் தான் என்னும் போது அகழ்தல் வகைகளைப் புரிந்து கொண்டால் அடுத்து எண்ணியியல் அகழ்தலைப் பற்றி ஆழமாகப் பார்க்கலாம்
எண்ணியியல் அகழ்தல் செய்ய ஒரு சில கருவிகள் முக்கியமானவை இன்று பயன்பாட்டில் இருக்கும் அனைத்து எண்ணியியல் செலவாணிகளுக்கும் அடிப்படைத் தொழில்நுட்பம் மறைக்குறியாக்கபப்ட்ட எண்ணியியல் பாள சங்கிலிதான் என்றாலும் ஒவ்வோரு எண்ணியியல் செலவாணியையும் அகழும் கணக்கீடு முறை மாறுபடுகின்றது. எண்ணியல் செலவாணியின் அகழும் நிரல்கள் செய்யும் பணியிலும் வேறுபாடுகள் இருக்கிறது. ஒவ்வோரு எண்னியியல் செலவாணி அகழ்வதில் ஒற்றுமைகள் இருந்தாலும் வேறுபாடுகளும் உள்ளன. என்ன வேறுபாடான கணக்கீடு முறைகளைக் கொண்டிருந்தாலும் எல்லா செலவாணிகளின் அடிப்படை உபகரணங்கள் ஒன்றே.
- அதிக அளவு மின்சாரம்
- GPU கணினிகள்
- அகழ்தல் செயலைச்செய்யும் கணக்கீடுகள்
ஆகிய இவை மூன்றும் எண்ண்னியியல் அகழ்தலின் கருவிகள், பயன்படுத்தும் உபகரணங்களையும் பாளச்சங்கிலியின் அளவையும் கொண்டு எண்ணியியல் அகழ்தலின் வகைகள் அமைக்கின்றன
அதிக அளவு மின்சாரம்
ஒரு எண்ணியல் செலவாணியை இன்றைய நிலையில் உருவாக்கத் தேவையான மின்சாரம் அமெரிக்க வீடுகளில் ஏறத்தாழ பத்து வீடுகளின் மின்சார தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. பொதுவாக அமெரிக்க வீடுகளில் 24 நான்கு மணிநேரமும் நிறுத்தாமல் மின்சாரம் வந்து கொண்டு இருக்கும் தோராயமாக ஒரு அமெரிக்க வீட்டில் 870 KW மாதத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.எண்ணியியல் செலவாணீயை இயக்கும் ஒரு கணினி இயங்க ஏறத்தாழ ஒரு நாளுக்கு 8700 KW தேவைப்படுகின்றது.இதை வைத்து ஒரு எண்ணியியல் செலவாணையை உற்பத்தி செய்ய எவ்வளவு மின்சாரத்தை ஒரு கணினி உறுஞ்சுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எண்ணியியல் செலவாணியை அகழ உதவும் கணினிக்கான மின்சாரத்தை வைத்து ஏறத்தாழ 35 வீட்டுச் சலவை இயந்திரங்களை ஒரே நேரத்தில் இயக்கலாம்.BBC நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏறத்தாழ121.36TWh அளவு மின்சாரத்தை 2020ம் ஆண்டில் மட்டும் bitcoin எண்ணியியல் செலவாணி அகழ்தல் பயன்படுத்துகின்றது.. உலகின் பல நாடுகளின் வருடாந்திர மின்சார நுகர்வு இதை விடக்குறைவு தான். வருடத்திற்கு இந்தியா ஏறத்தாழ 1000TWh மும் அமெரிக்கா 5000TWhமும் மின்சாரத்தை நுகர்கின்றன. இலங்கையின் மின்சார நுகர்வு ஏறத்தாழ 13 Twh தான்.எண்ணியல் செலவாணி அகழ்வதற்கு ஏன் இவ்வளவு ஆகின்றது என்று அகழ்தல் வகைகளைப் பற்றிப் பார்க்கும் போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து எண்ணியியல் அகழ்தலுக்கான கணினி எப்படிப் பட்ட தாக இருக்க வேண்டும்.என்று காணலாம்.
GPU கணினிகள்
இந்த வகைக் கணினிகள் நாம் பயன்படுத்தும் அன்றாட மேஜைக் கணினிகளிலிருந்தும் மடிக்கணினிகளிலிருந்தும் வேறுபடுகின்றன. CPU என்பது நமது அன்றாட வேலைகளைச்செய்யப்பயன்படுத்தும் கணினியாகும் GPU என்பது அன்றாட பயன்பாடுகளை விட அதிகமான தரவுகளை விரைவாகச்செய்ய வல்ல திறன் கொண்ட கணினிகள் ஆகும் இவை முப்பரிமாணப்படங்கள் விளையாட்டுக்கள்,காணொளிகளை உருவாக்கி வெளியிடுதல் திரைப்படத்துறை ஆகிய துறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவை இக்கணினி தன்னுடைய அன்றாட வேலையைச்செய்யும் அதேநேரம், முப்பரிமாணப்படங்கள் அசைவூட்டங்கள் ஆகிய வேலைகள் கொடுக்கும் அதிகபட்ச வேலைகளையும் விரைவாகச் செய்து கொடுக்கின்றன. தற்போது கணினி நிறுவனங்களும் எண்ணியியல் அகழ்தலுக்கான பிரத்தியேக கணினிகளை உருவாக்குகின்றனர். இவை ASIC Application specific integrated circut என்ற மின் சுற்றுக்கள் கொண்டு அமைந்துள்ளன. இது தவிர Field-programmable gate array என்ற மின்ச்சுற்றுக்கள் கொண்டும் கணினிகளும் உருவாக்கப் படுகின்றன. இந்தவகை மின்ச்சுற்று இருந்தால் கணினி பயனர் தங்கள் கணினியைத் தங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். இத்தகைய கணினி வன்பொருட்களை உருவாக்குவதில் சீன நாடு முன்னிலையில் உள்ளது.
எண்ணியியல் செலவாணியை அகழ்வோரின் வகைகள் ஒரு சில காரணிகள், ஒருவரின் உபகரணங்களைப் பொறுத்தும், கணினி நிரலியல் அறிவையும் அனுபவத்தைப் பொறுத்தும், கணிதப்புதிரின் சிக்கலைப் பொறுத்தும் எவ்வளவு வேகமாகப் புதிர்களை விடுவிக்க வேண்டியுள்ளது என்பதைப் பொறுத்தும் வகைப்படுத்தப்படுகின்றது
எண்ணியியல் அகழ்தல்
- தனிநிரலர் அகழ்தல் (individual mining)
- கூட்டு அகழ்தல் (Pool mining)
- கொளுவுவழி அகழ்தல் (cloud mining) என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
எண்ணியியல் செலவாணி கண்டுபிடிக்கபப்ட்ட 2009களில் ஒரு கணினி நிரலர் தனது அன்றாடக் கணினியையே எண்ணியியல் செலவாணியைப் பயன்படுத்தினார். இப்படி ஒரு தனிமனிதன் தன் கணினி கொண்டு ஒரு எண்ணியியல் பரிவர்த்தனையைச் சரி பார்த்தால் அது தனிநிரலர் அகழ்தல் என்று அழைக்கப்பட்டது.
பல நிரலர்கள் சேர்ந்து சேர்ந்து கணிதப்புதிர்கலை விடுவிக்கும் போது அதைக் கூட்டு அகழ்தல் என்று கூறிக்கொள்ளலாம். இத்தகைய குழு அகழ்தலும் சீன நாட்டிலேயே அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த குழுக்களுடன் இணைந்து ஒருவர் தனது கணினியின் சக்தியைப் பங்கு போட்டுக் கொள்வதோடு கணிதப் புதிர்களையும் விடுவிக்கின்றார் இவர்கள் தங்களுக்குப் பரிசாகக் கிடைக்கும் எண்ணியியல் செலவாணியை தங்களூக்குள்ளே பங்கிட்டு கொள்கின்றனர். ஒருவர் கூட்டு அகழ்தல் முறையில் அகழ்தலை மேற்கொள்ள நினைத்தால் அதை ஒரு பொழுது போக்காகச் செய்ய இயலும். எண்ணியல் அகழ்தல் குழு ஒன்றில் தன்னை அவர் இணைத்துக் கொண்டு. அந்தக் குழுவுக்கான மென்பொருளைத் தனது கணினியில் தரவிறக்கிக் கொள்ள வேண்டும். இப்படிக் குழுவில் சேரும் போது எண்ணியியல் செலவாணியின் பிணைப்பில் (p2p network) ஏற்கனவே இருக்கும் ஒரு கணினியின் (node) கிளையாகச் செயல்பட முடியுமே அன்றி தனித்தொரு node ஆக மாற இயலாது. இந்தக் கணினியில் உள்ள எண்ணியியல் பத்தாயத்தையும் (wallet) மற்ற பொது மக்களின் எண்ணியியல் செலவாணியின் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணியியல் செலவாணியின் பிணையத்தில் இணையும் எந்த ஒரு கணினிக்கும் எண்ணியியல் பத்தாயம் இருக்கும் என்பதை நினைவு கொள்வது நலம். இவ்வாறு ஒரு குழுவில் இணைந்த பின் கூட்டு அகழ்தலில் இணைந்தவருக்கும் அவரது பங்கினைப் பொறுத்து பரிசுத் தொகை பிரித்துக் கொடுக்கப்படும். இந்த கூட்டு அகழ்தலின் பிணைப்பில் இணைந்து இருப்பவர்கள் தங்கள் குழுவிற்கான விதிகளை அடிக்கடி சரிபார்த்துக் கொள்வது நல்லது. ஏன் என்றால் ஒரு குழுவின் இன்றைய தேவைகளும் விதிகளும் நாளையே மாறிப்போகலாம்.
புதிய எண்ணியியல் செலவாணிகள் உருவாக உருவாக கணிதப்புதிரின் சிக்கல் அதிகமாகிறது. ஒரு கணினிக் கையாளவேண்டிய தரவுகளின் சுமையும் அதிகமானது, அதனால் இப்போது எண்ணியியல் செலவாணியை அகழ்வதற்குப் பயனாளரே தன் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கக் கூடிய கணினி மின் சுற்றுக்களும்,பயன்பாடுகள் சார்ந்த ஒருங்கிணைந்த மின்ச்சுற்றூக்களும் கொண்ட கணினிகள் தேவை. கணினிகளுக்கான வன்பொருட்களின் தேவையும் அதிகரிக்கின்றது. இவற்றின் அளவும் விலையும் அதிகம்.எனவே சில நிறுவனங்கள் இந்த சக்தி வாய்ந்த கணினிகளையும் மற்ற வன்பொருட்களையும் ஒரு பெரிய இடத்தில் வைத்து அதை அகழும் குழுக்களுக்கென்று வாடகைக்கு விடுகின்றனர். இப்படி வன்பொருட்களை வைக்கும் இடம் மின்சாரத்திற்குக் குறைவான கட்டணத்தை வசூலிக்கும் நாடுகளில் தங்கள் நிறுவனங்களை நிறுவுகின்றனர்.அமெரிக்க கனேடிய நிறுவனங்கள் சீன நாட்டில் இது போன்ற நிறுவனங்களை நிறுவியுள்ளனர்.
இந்த எண்ணியியல் வன்பொருள் நிறுவனத்தோடு இன்னும் சில கணினிகள் (nodes) இணைந்து உருக்கலாம் எண்ணியியல் அகழ்விற்கான வன்பொருட்கள் ஓரிடத்திலும் எண்ணியிலின் சொந்தக் காரர் இன்னொரு இடத்திலும் இருப்பதால் இது கொளுவு அகழ்தல் என்று அழைக்கப்படுகின்றது
இன்னும் பார்க்கலாம்…
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 (அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 57 (Monero, Titcoin, Zcash) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 59 (எண்ணியல் செலவாணி வர்த்தக மையங்கள்) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.