இன்றைய கொளவு எண்ணியியல் – ஒரு பார்வை
கொளவு எண்ணியியல் அகழ்தல் அதிவேக தொழிலாக தற்போது பார்க்கப்படுகின்றது. இன்றைக்கும் பல நாடுகளில் எண்ணியியல் செல்வாணியைப் பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது . பல நாடுகள் எண்ணியியல் செலவாணியை ஒழுங்குபடுத்த இன்னும் சரியான விதிமுறைகளையும் சட்டங்களையும் கொண்டு வரவில்லை. ஆனாலும் கொளுவு அகழ்தல் பல நாடுகளில் நடந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் எண்ணியியல் செலவாணியை ஒரு செலவாணியாய் பயன்படுத்துவதை விட ஒரு சொத்தாக பொது மக்கள் நினைப்பது தான். அகழப்படும் எண்ணியியல் செலவாணியில் Bitcoinனின் அகழ்தல் முன்னணியில் உள்ளது. அதை அடுத்து ethereum இருக்கின்றது.
சீன நாடு கொளுவு எண்ணியல் அகழ்தலில் முன்னணியில் நடந்து கொண்டு இருந்தது உலகின் எண்ணியியல் அகழ்தலில் ஏறத்தாழ 50% சீன தேசத்திலிருந்தது.சீன தேசத்தின் வளர்ச்சிமற்றும் சீர்திருத்த ஆணையம். (National Development and Reform Commission) இந்நடவடிக்கைகளை சட்டப்படி தடுக்க ஆலோசித்து அதை 2021ம் வரும் ஜீலை மாதத்தில் செய்தது. எண்ணியியல் செலவாணியின் அகழ்தலை மட்டும் நிறுத்தாமல் அது பொருளாதாரத்தின் ஒரு செலவாணியாக இருக்கக் கூடாது என்றும் தடை விதித்தது. இவ்வாறு தடை விதிக்க முதல் காரணம் நாட்டின் பொருளாதாரம் சீர் குலையக் கூடாது. அதே போல எண்ணியியல் அகழ்தல் சுற்றுச் சூழலுக்குப் பேராபத்தை விளைவிக்கும் என்றும் சீன அரசு யோசித்து இருக்கிறது. ஒருவேளை தங்கள் நாட்டு எண்ணியியல் செலவாணியையே தானாக உருவாக்க வேண்டும் என்று கூட சீன அரசு நினைத்திருக்கலாம்.
என்ன காரணமாய் இருந்தாலும் இப்படி சீன அரசு விதித்த சட்டப்பூர்வமான தடையால் சீனாவிலிருந்து பல தேசங்களுக்கு இந்த கொளுவு அகழ்தல் இடம் பெயர முயற்சிக்கின்றது. ஒரு எண்ணியியல் கொளுவு மையத்தில் பத்தாயிரம் கணினிகளுக்கு மேலே இருக்கக் கூடும். ஆனாலும் மிகக் குறுகிய காலத்திலேயே இந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் இடம் பெயரக் காரணிகளாகப் பார்ப்பது மின்சாரக் கட்டணமும், அந்த நாட்டின் சட்டதிட்டங்களையும் தான் சீன நாட்டிலிருந்து வெளியேறிய நிறுவனங்கள் காசிக்ஸ்தான் (Kazakhstan), ஐஸ்லாந்து ( Iceland), ஜார்ஜியா (Georgia), கனடா அமெரிக்கா, ரஷ்யா, வெனிஸ்வேலா, மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று இருப்பதாகத் தெரிகின்றது. இலங்கை , மியான்மார், குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுக இந்த நாடுகளில் நிறுவனங்கள் அமையத் தகுந்த வசதிகளைக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் இந்த எண்ணியியல் அகழ்வுக் கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அவ்வளவு ஏன்? எங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்திலேயும் ஒரு கிடங்கு கட்டுமானம் தொடங்கப்படுவதாகத் தெரிகிறது. நாங்கள் வசிப்பது அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் தலைநகருக்கு அருகில். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து 45 நிமிடப் பயணத் தூரத்தில் Three mile island என்ற சிறு தீவில் வேலை செய்யாத ஒரு அணு மின்நிலையமிருக்கின்றது. அதில் இரண்டு உலைகள் உள்ளன. முதல் உலை 1968ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு General Public Utilities என்ற தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு 1974ல் அணு மின்சக்தியை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. அதன் இரண்டாவது உலை 1968ல் கட்டப்பட்டு 1978ல் மின் சக்தியை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. இந்த இரு உலைகளின் வெப்பத்தைத் தனிக்கத் தீவைச்சுற்றி ஓடும் நதி நீர் பயன்படுத்தப்பட்டது 1979ல் இரண்டாவது உலையில் விபத்து ஏற்பட்டு கதிரியக்கம் கசிய ஆரம்பித்ததால் அது இழுத்து மூடப்பட்டது. முதல் அலை நிதிப்பற்றாக்குறையால் 2019ல் இழுத்து மூடப்பட்டது. இப்போது இரு உலைகளும் தனியார் நிறுவனத்திடம் உள்ளன. இந்தத் தனியார் நிறுவனங்கள் Bitcoin அகழ்வு மையத்தை தற்போது மூடியிருக்கும் தீவில் அமைக்கப் போவதாகத் தெரிவித்து உள்ளது.
2013லிருந்து ஐஸ்லாந்தில் எண்ணியியல் அகழ்வுகள் தொடங்கியது. எரிமலை லாவாவிலிருந்து ஐஸ்லாந்து மின்சாரம் எடுப்பதாலும், பனிப்பிரதேசம் என்பதால் கணினிகளைக் குளுமையாக வைத்துக் கொள்ள நிதி செலவழிக்க வேண்டியதில்லை என்பதாலும் இங்கு அதிக அளவில் எண்ணியியல் அகழ்வகங்கள் அமைக்கப் பட்டன ஐஸ்லாந்தின் வீடு சராசரியாக 700 Gwts மின்சாரத்தை உபயோகிக்கும் வேளையில் ஒரு எண்ணியல் அகழ்வு மையத்திற்கு எண்ணூற்றுக்கும் அதிமான Gwts மின்சாரம் செலவிடப்படுவதாக பிபிசி அறிக்கை அறிவிக்கின்றது. அப்படியானால் இங்கு நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணியியல் அகழ்வகங்களுக்காக தன்னுடைய மின்சார உற்பத்தியை ஐஸ்லாந்து அதிகரிக்குமா? அப்படி அதிகரிக்க வேண்டுமானால் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்க அவர்கள் அவர்களது இயற்கை சூழலை அழித்துத் தான் மின் நிலையங்களைக் கட்ட வேண்டும். அவர்கள் இத்தனைக் காலமாகப் பாதுகாத்து வந்த இயற்கை வளம் அழிவதோடு மட்டுமல்லாமல், மின் நிலையங்களை அமைக்கத் தேவையான நிதி எங்கிருந்து வரும்?
ஏறக்குறைய 10 சென்ட் நிலப்பரப்பில் இருக்கும் கிடங்குகளில் அடுக்கடுக்கான கணினிகள் நாள் முழுவதும் வேகவேகமாக வேலை செய்து கொண்டே இருக்கும். அங்கே மனிதர்களுக்கே வேலையில்லை. ஆனால் நமது வாகனம் ஒன்றை ஒரு இடத்தில் நாம் நிறுத்திவைத்து விட்டு வர அரை மணி நேரத்திற்கு நாம் கட்டணம் கட்டுகின்றோம். பத்து சென்ட் நிலத்தில் நான்கு பேர் குடும்பம் தங்கும் வசதி உடைய இரு வீடுகளையாவது கட்டலாம். இங்கே உயிரற்ற இயந்திரங்கள் ஒரு கம்பட்டக்கூடமாக கண்ணுக்குத் தெரியாத பணத்தை உருவாக்குகின்றேன் என்று மின்சாரத்தை இராட்சச வேகத்தில் குடிக்கின்றது. ஆனால் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு அரசிற்கு வரி கூட கட்டுவதில்லை. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை எப்படி உயர்த்தும் ? மக்களின் வாழ்வு நிலை இதனால் எவ்வாறு உயரும்? இதில் எந்த விதிகளையும் சார்ந்ததில்லாத செலவாணி என்ற புகழ் வேறு!
2021ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி எல்சால்வடோர் நாட்டில் எண்ணியியல் செலவாணி சட்டப்பூர்வமாகப் புழக்கத்தில் வருகின்றது. ஆனால் அது பற்றி விழிப்புணர்வு இல்லாத பொது மக்கள் பல பிரச்சனைகளைச் சந்தித்து உள்ளனர். Bitcoin செயல்பாடு முழுவதையும் திறன்பேசியில் வேலை செய்யும் ஒரு குறுஞ்செயலியாக அந்த நாடு வெளியிட்டு உள்ளது.. மக்களை எண்ணியியல் செலவாணிக்குப் பழக்கபப்டுத்த $30 மதிப்புள்ள Bitcoin செலவாணியை இலவசமாகக் கொடுத்துள்ளது. இதனால் $400 மில்லியன் பணத்தை தன் அரசு மிச்சப்படுத்தும் என்று அந்நாட்டு அதிபர் Nayib Bukele கூறுகிறார்.
ஆனால் அந்நாட்டில் Bitcoinனின் பத்தாயமாக செயல்படும் Chivo-வும், Huawei என்ற திறன்பேசியிலும் தொழில்நுட்பச் சிக்கல்களால் சரியா வேலை செய்யாமல் அதன் பின் சரி செய்யப்பட்டது. Apple, Starbucks, McDonalds போன்ற நிறுவனங்கள் அந்த நாட்டில் எண்ணியியல் செலவாணியை வைத்து வர்த்தகம் செய்ததாகக் கூறுகின்றனர்.
எண்ணியியல் செலவாணியின் மதிப்பை அமெரிக்க டாலரின் மதிப்போடு ஒத்துப் பார்த்து, அதை ஒரு தங்கம், வெள்ளி போலப் பலர் மதிப்பிடுவதால் உலக பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். அதனாலேயே எண்ணியிஅல் அகழ்தல் ஒரு நல்ல லாபம் தரும் ஒரு தொழிலாக நம்பப்படுகின்றது.
இன்னும் பார்க்கலாம்…
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 (அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 57 (Monero, Titcoin, Zcash) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 59 (எண்ணியல் செலவாணி வர்த்தக மையங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 61 (எண்ணியல் செலவாணிகளை அகழ்தல்)– சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.