இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 65 – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 65th Series - Suganthi Nadar. Book Day, Bharathi Puthakalayam. இணைய வகுப்பறைஎண்ணியியல் செலவாணியின் நிலையற்ற தன்மையும் அதன் பதிவேட்டு முறையும்

ஒரு வாடிக்கையாளரோ அல்லது ஒரு குழுவோ எண்ணியியல் செலவாணிகளைப் பரிவர்த்தனை செய்யும்போதோ அல்லது ஒரு புதிய எண்ணியியல் நாணயம் உருவாக்கும்போதோ தோன்றும் தரவுத் தகவல்கள் எல்லாம் p2p networkல் உள்ள கணினிகள் வழி ஒரு பொதுக்கணினியில் ledger எனப்படும் ஒரு பொதுத் தரவாகப் பதிவாகி இருக்கும். என்று பார்த்தோம். ஒரு எண்ணியியல் செலவாணியின் இணையத்தில் உள்ள ஒவ்வோரு கணினிநிரலாராலும் பார்க்கக் கூடிய திறந்த எண்ணியல் பதிவேடு என்றும் பார்த்தோம்.

இந்த ledgerஒரு எண்ணியல் செலவாணி நிறுவனத்தின் எல்லாப் பரிவர்த்தனையும் கொண்ட ஒரு தரவுத் தொகுப்பேயாகும். இந்தத் தரவுத் தொகுப்பிற்கான நிரல்கள் திறவூற்று கட்டமைப்பிற்குள் வருவதால், இந்த திறவூற்று நிரல் கணக்கீடுகளைத் தெரிந்த எந்த ஒரு நிரலரும் இந்தப் பதிவேடுகளைச் சரி பார்க்க முனையலாம். இன்றைய நிலையில் நிரலர் அல்லாத ஒருவர் எண்ணியியல் செலவாணியை வாங்குவதும் விற்பதும் எண்ணியியல் செல்வாணி வர்த்தக மையங்கள் வழியாகத் தான் என்றும் இந்த எண்ணியியல் செல்வாணி வர்த்தகங்கள் பொதுவாக நிரலர்களின் குழுக்களாக இருக்கும் என்றும் நாம் ஏற்கனவே பார்த்தோம் இவர்கள் செலவாணியின் பரிமாற்றத்தைச் சரி பார்ப்பதற்காக அவர்களுக்குப் புதிதாகத் தோன்றிய எண்ணியியல் செலவாணியும் கொடுக்கப்படும் என்றும் பார்த்தோம். இன்றைய நிலையில் எண்ணியியல் பிணையத்தில் ஒரு பொது கணினியில் பதிவேடாகச் செயல்படும் ஒரு கணினி முழு nodes என்று அழைக்கப்படுகின்றது. நாம் ஏற்கனவே பார்த்தது போல குழுக்களாகச் செயல்படும் எண்ணியியல் அகழ்வு மையங்கள் பதிவேட்டில் இருக்கும் ஒரு சில தரவு பரிமாற்றங்களையே சரி பார்த்துக் கொள்ளும் என்றும் நாம் பார்த்தோம்.

இன்னும் கொஞ்சம் புரிதல் ஏற்பட வேண்டுமானால் உருவாக்கப்படும் ஒவ்வோரு எண்ணியியல் பாளமுமே எண்ணியியல் செலவாணியின் ஒரு பதிவேடுதான். எண்ணியியல் அகழ்தலில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வோரு நிரலரும் ஒரு புதிய எண்ணியியல் பாளத்தை உருவாக்கும் முயற்சியில் ஏற்கனவே இருக்கும் எண்ணியியல் பாளத் தரவுகளைச் சரி பார்க்கின்றனர் என்று கூட நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு பாளத்தில் உள்ள தரவுகள் மறைகுறியாக்கம் செய்யப்படுகின்ற காரணத்தால், தரவுகள் மாறாமல் இருக்க வாய்ப்பு இருக்கின்றது என்பது எண்ணியியல் செலவாணி வல்லுநர்களின் ஒரு கருத்து. எண்ணியியல் பாளத்தரவுகளில் ஏதோ ஒரு எண்ணை மாற்றினாலும் மறைக்குறியீட்டாக்கக் குறியீடு மாறுபட்டு விடுமென்பதால் இதில் ஒவ்வோரு எண்ணியியல் பாளம் உருவாக்கப்படும் போது ஏற்படும் மறைக்குறியீட்டாக்கமே ஒரு எண்ணியியல் பரிவர்த்தனை சரி என்று நிரூபிக்க வேண்டிய சான்றாக அமைகின்றது.

அனைத்து எண்ணியியல் நிரலர்களின் ஒத்திசைவால் உருவாக்கப்பட்ட மூல வரைமுறைகளால் தான் மறைக்குறியீட்டாக்கம் நடைபெறுகிறது என்பதால் எண்னியியல் பதிவேட்டைச்சரிபார்க்கும் விதிமுறைகள் ஒழுங்காக செயல்படுகின்றது என்றும் இவர்கள் கருதுகின்றனர், எப்போது நிரலர்களால் முறையாகக் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் கணிதப் புதிரை விடுவிக்க இயலாமல் போகிறதோ அங்கே தவறு நடந்து இருக்கின்றது என்று அறிந்து கொள்ளலாம் என்பது இவர்களின் கருத்து.

கணிதம் பயில்பவர்கள் எல்லாம் 1=1 =2 என்பதை ஒருசேர ஒத்துக் கொள்வதைப் போல நிரலர்களின் ஒத்திசைவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மூல நிரல் வரைமுறை எண்ணியியல் செலவாணியின் அடிப்படையாகக் கருதப்படுகின்றது. அப்படியென்றால் கணிதம் என்ற ஒரு பொருண்மை போல எண்ணியியல் செலவாணி என்ற ஒரு பொருண்மை புத்தம் புதியதாய் உருவாக்கப் பட்டுள்ளதா?

கணினி வழி செய்யப்படுவதால் நிரலர்கள் கூறுவதே இங்கு விதிகளாகச் செயல்படுமா?

எவ்வாறு வங்கிகளில் நமது வரவு செலவைப் பதிவேட்டில் வைத்து இருக்கின்றார்களோ அதே போல இந்த பதிவேடும் செயல்படுவதாக எண்ணியியல் செலவாணி நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு வங்கியின் கணக்குகளைக் கணக்கராகப் பயிற்சி பெற்ற எவராலும் சரி பார்க்க முடியும் . அதே நேரத்தில் வங்கியும் வாடிக்கையாளர்களுக்கும் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைச் சரி பார்த்துப் புரிந்து கொள்ள முடியும். ஒரு வாடிக்கையாளர் கணக்கராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் எண்னியியல் செலவாணிபரிவர்த்தனையில் ஒரு வாடிக்கையாளர் ஒரு நிரலராக இல்லாத பட்சத்தில் தனது கணக்கில் இருக்கும் செலவாணியின் மதிப்பைக் கண்கூடாகப் பார்க்க இயலாது. எண்ணியியல் பரிவர்த்தனை மையங்கள் என்ன கணக்கைக் காட்டுகின்றனவோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என்ன தான் நிரலர்கள் எண்ணியியல் செலவாணி மிகவும் பாதுகாப்பானது யாராலும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற முடியாது என்று கூறினாலும் இந்த எண்னியியல் தரவுகள் மாற்றப்படலாம் என்றும் இவை நச்சு நிரலர்களால் பாதிக்கப்படலாம் என்ற ஆபத்தும் கண்டிப்பாய் இருக்கிறது.

கடன் அட்டைகள் புழக்கத்தில் வந்த காலத்திலும் களில் நாம் அட்டைகளைப் பயன் படுத்தும் போதும் நமது விவரங்கள் ஒரு காந்த பட்டையில் விவரங்களாகச் சேமிக்கப்பட்டன. அந்த விவரங்களைத் திருடப்பட்டுப் பல வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை இழந்த போது வங்கிகளும் கடன் அட்டை நிறுவனங்களும். பாதுகாப்பிற்காகப் பல வழிமுறைகளைக் கையாண்டனர். அவற்றில் ஒன்று அவர்களின் கணினிகளில் வாடிக்கையாளரின் பணப்புழக்கத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால் அந்த வணிகத்திற்குப் பணம் கொடுக்க கணினிகளே மறுத்து விடுவதோடு வாடிக்கையாளர்களுக்கும் அது பற்றி உடனே குறுஞ்செய்தி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் செய்தி போகின்றது. கடன் அட்டைகளை அன்றாட வாழ்க்கை முறையில் பயன்படுத்தும் போது ஒரு வாடிக்கையாளரின் பணப்புழக்கம் அனைத்தும் தரவுகளாகக் கணினியில் பதிந்து இருக்கும் தானே? தீடிரென்று வழக்கத்திற்கு மாறான பணம் செலவிடப்படு மேயானாலும், வாடிக்கையாளரரின் இருப்பிடத்தைத் தாண்டி கடன் அட்டை செயல் பட்டாலோ உடனே கணினி ஒரு எச்சரிக்கையை எழுப்பும்படி பாதுகாப்பு மூல வரைமுறைகள் கடன் அட்டைத் தொழில்நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்டன.

Binance launches quarterly Bitcoin futures contracts on Thursday | BitcoinDynamic.com

அதே போல எண்ணியியல் செலவாணியில் பொதுமக்கள் பாதிக்கப் படுவார்களேயானால் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் வருமோ என்னவோ? கொளவுக் கணிமை முறையில் செயல்படும் எண்ணியியல் அகழ்வு மையங்களை நச்சுநிரலகள் தாக்கினால் என்னவாகும்? எண்ணியியல் செலவாணியைப் புகழ்ந்து பாடும் நிரலர்களுக்கும் அதை,மூலதனமாகக் கொண்டாடும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் தான் வெளிச்சம்.

ஏற்கனவே சீன அரசு தங்களுடைய எண்ணியியல் செலவாணிக் கொள்கைகளைத் தரப்படுத்தி இருப்பதாலும் பல கெடுபிடிகள் கொண்டு வந்திருப்பதாலும் பங்குச் சந்தையில் எண்ணியியல் செல்வாணியின் நிலை ஒரு தள்ளாட்டத்தில் இருக்கின்றது.பங்குச்சந்தையில் எண்னியியல் செலவாணியில் முதலீடு செய்தவர்கள் பெருமளவு பணத்தை இழந்து இருப்பதோடு அதில் புதிதாக முதலீடு செய்யக் கூடியவர்கள் மறுயோசனை செய்யும் அளவிற்கு இன்றையப் பங்குச்சந்தையில் அவை ஆட்டம் கண்டு கொண்டு இருக்கின்றன. பங்குச்சந்தை என்றாலே ஒரு நிலையற்ற தன்மையும் பொருளாதார இடையூறுகளும் இருக்கும் தான். என்றாலும் எண்ணியியல் செலவானியின் இந்தப் பங்குச்சந்தை தடுமாற்றம் மிகப் பெரிய அளவில் ஊடகங்களாலும் வர்த்தக நிறுவனங்களாலும் பேசப்படுகின்றது.

சீன அரசரின் கடுமையான சட்டதிட்டங்களால் அங்குள்ள எண்னியியல் பரிவர்த்தனை மையமான Huobi Global இனி புது வாடிக்கையாளர்களை ஏற்பது இல்லை என்றும் தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து விலகிக் கொள்வதாகவும் அறிவித்து உள்ளது. அப்படி வெளியேறும் போது வாடிக்கையாளர்கள் அவர்களிடம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்குமா என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை. அதே போல பிரபலமான Binance எண்னியியல் வர்த்தக மையமும் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் சேவையைத் தொடரப்போவது இல்லை என்றும் அறிவித்து உள்ளனர்.

இன்றைய இத்தகையப் பொருளாதாரப் போக்கிற்கு இணையாகச் சில்லி நாட்டு வங்கி சென்பாங்க் அவர்களுடைய எண்ணியியல் செலவாணியை 2022ம் ஆண்டு வெளியிடப் போவதாக அறிவித்து உள்ளனர். வைரம் விலை மதிப்பிடமுடியாத கலை வகைகள், ஓவியங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களின் விவரங்களை மறைக்குறியாக்கம் செய்யப்பட்ட எண்ணியியல் பாளங்களாக மாற்றி ஒருவர் தங்கள் உரிமைத் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது போன்ற பேச்சுக்களும் இன்றைய பொருளாதார உலகில் முக்கியமான பேச்சாக இருக்கின்றது. அதிபர் ஒபாமாவின் காலத்தில் பணி செய்த அமெரிக்க முன்னாள் (நிதியமைச்சர் former treasury secretary Lawrence சும்மேற்ஸ் தொலைக்காட்சி நிலையத்திற்குப் பேட்டிக் கொடுக்கையில் எண்ணியியல் பாளங்களும் அது தொடர்பான செலவாணிகளும் என்னதான் இரகசியம் காக்கும் தொழில்நுட்பமாகவும், விதிகளுக்குக் கட்டுப்படாத ஒரு தொழில்நுட்பமாகவும் பேசப்பட்டாலும் அவற்றிற்கான விதிமுறைகளை உருவாகி எண்ணியியல் செலவாணியின் புழக்கத்தைச் சட்டப் படி வரைமுறை படுத்தும் போது தான் எண்ணியியல் செலவாணி தொழில்நுட்பம் வளர முடியும் என்று கூறினார். அவர் தன் கருத்துக்கு எடுத்துக்காட்டாக இன்றைய மகிழுந்து உற்பத்தியையும் விமானங்களின் உற்பத்தியையும் குறிப்பிட்டார்.

இன்றைய நிலையில் பொது மக்களின் புழக்கத்திற்கு வந்துள்ள எண்ணியியல் செலவாணி புதிதாய் மிதிவண்டி ஓட்டிப்பழகும் ஒருவரின் பயணம் போலத் தள்ளாடித் தடுமாறித்தான் சென்று கொண்டு இருக்கின்றது. எண்ணியியல் செலவாணி நிபுணர்களும் நிரலர்களும் கூறுவது போல ஏவுகலனாய் வேகம் எடுக்குமா? அல்லது காலத்தின் கோலத்தில் மின்னி மறையும் ஒரு மிகப்படுத்தபட்டபுதுப்பாணித் தொழில்நுட்பமா தெரியவில்லை.

இன்னும் பார்க்கலாம்…

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 (எண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 49 (எண்ணியியல் செலவாணி ஒரு விபரீத விளையாட்டா? அல்லது எதிர்கால வர்த்தக முறையா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 50 (எண்ணியல் செலவாணி நிலைத்து இருக்க கூடிய சாத்தியக் கூறுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 51 (மறைக்குறியீட்டாக்க செலவாணியை ஒருவர் பெறுவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 52 (மறைக்குறியீட்டு செலவாணியில் walletஐப் பற்றிய விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 53 (மறைக்குறியீட்டு செலவாணியில் wallet தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 (அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 57 (Monero, Titcoin, Zcash) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 58 (எண்ணியியல் செலவாணி பரிவர்த்தனை மையங்களின் அடிப்படை என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 59 (எண்ணியல் செலவாணி வர்த்தக மையங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 60  (எண்ணியியல் செலவாணி வர்த்தக மையங்களும் அவற்றிற்கான எச்சரிக்கைகளும்)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 61 (எண்ணியல் செலவாணிகளை அகழ்தல்)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 62 (இன்றைய கொளவு எண்ணியியல் – ஒரு பார்வை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 63 (இராட்சத கொளவு எண்ணியியல் அகழ்தல் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 64 (கொளவுக்கனிமை வழி எண்ணியியல் அகழ்தல் )– சுகந்தி நாடார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.