இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்

நாம் இதுவரை இணைய வகுப்பு என்பது, மாணவர்களை முன்னிலைப் படுத்தி நடத்தப்பட வேண்டும் என்றும் வகுப்பில் நடக்கும் விரிவுரைகளை மாணவர்களுக்கு வீட்டுப் பாடமாகக் கொடுக்க வேண்டும் என்றும் பார்த்தோம். வாழ்க்கைக் கல்வியை வகுப்பறையில் கொண்டு வரும் போது, மாணவர்களின் தேர்வின் முக்கியத்துவம் இடைஞ்சலாக இருக்கக்கூடும் என்றும் பார்த்தோம். இப்படிச்சின்னசின்ன சிக்கல்களைக் கொண்ட இணைய வகுப்பறைக்கு மாதிரியாக இன்று ஒரு மொழிப்பாடத்தை எடுத்துக் கொள்வோம்.

இந்தப் பாடத்தினை ஆராய்வதன் மூலம் நாம் மாணவர்களின் திறன்களின் அடிப்படையில் அவர்களை எப்படித் தேர்விற்குத் தயார் செய்யலாம் என்று பார்ப்போம்.

இணைய வகுப்பறையை மாற்றி அமைப்பது என்பது பலருக்குப் பெரிய சிக்கலே. அதுவும் தேர்வின் மதிப்பெண்களுக்காகப் பாடம் நடத்தி கொண்டு, தொழில்நுட்ப சிக்கல்களையும் கையாண்டு கொண்டு இருப்பது  நேரத்தை வீணாக்கும்

அதனால் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் 11ம் வகுப்பு சிறப்புத்தமிழ்ப் பாடத்தை எவ்வாறு இணைய வகுப்பறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம் என்று ஒரு எடுத்துக்காட்டை வைத்துக் கொண்டு பார்ப்போம். இந்தப் பாடப்புத்தகத்தில் மொத்தம் ஆறு பகுதிகள் உள்ளன. இதில் முதல் பருவத்தில் நடத்தப்படும் மூன்று பாகங்களை நாம் எடுத்துக்காட்டாக வைத்துக் கொள்வோம். இந்த பாடத்தை எடுத்துக்காட்டாக வைத்து நாம் மூன்று விஷயங்களை ஆழமாக ஆராயப் போகின்றோம்

  1. வாழ்க்கைத் திறனை எவ்வாறு மதிப்பெண்களுக்காகப் படிக்கும் பாடத்தில் எப்படிப் புகுத்துவது?

  2. வகுப்பறைக்கானத் திட்டத்தை எளிமையான அட்டவணையாகத் தயாரித்தல் நமது அட்டவணையை

  3. வகுப்பு நாட்காட்டியை உருவாக்குவது என்று பார்ப்போம்.

வாழ்க்கைத்திறனைப் புகுத்துதல்:

இணையத்தில் வகுப்பறை நடவடிக்கை தேர்வுகள் தயார் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டால்  மாணவர்களுக்குக் கொடுக்கும் வீட்டுப்பாடம் அவர்கள் பாடப் பொருண்மையை ஆழமாகப் படித்தறியும் வகையில் கொடுக்க வேண்டும். தேர்வுகள்  பருவ இறுதியிலோ அல்லது ஆண்டு இறுதியிலோ நடைபெறும்.  ஆனால் வீட்டுப்பாடங்களாக் கொடுக்கப்படும்  செயல்கள், மாணவர்கள்  பாடங்களைப் படித்து வந்துள்ளனரா அல்லது அவர்கள் சிரமப் படும்  பொருண்மைகள் என்ன என்று  தெரியும்.

 பொதுவாக ஒரு உரையை  ஒருவர் மூன்றுமுறைப் படித்தாலே அவருக்குப் பொருண்மையின் பொருள் புரிய ஆரம்பிக்கும்.  மூன்றாவது முறை ஒரு உரையைப் படிக்கும் போது  மாணவர்கள் பொருண்மையிலிருந்து குறிப்புக்களையும் , கேள்விகளையும் தாங்களே எடுக்கும் வண்ணம் வீட்டுப்பாடம்  அமைய வேண்டும்.   வீட்டுப் பாடத்திற்கு கொடுக்கும் மதிப்பெண்கள், மாணவர்களை ஆழ்ந்து படிக்கச் செய்ய  உத்வேகம் கொடுக்கும். பாடங்களைப் படித்து அதைப் படைத்தலில் பயன்படுத்தும் போது மூளை ஒரு ஒரு புத்துணர்ச்சியைப் பெறுகின்றது. அதனாலேயே நாம்  வித்தியாசமான வீட்டுப்பாடங்களை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும்

சிறப்புத் தமிழ் பாடநூலின் முகப்பிலேயே மாணவர்களுக்கு எத்தகையத் திறன்கள் தெரிந்து இருக்க வேண்டும் என்று பட்டியல் இடுகின்றது. ஆனால் பாடங்களின் பின்னால் வரும் கேள்விகள் எதுவும் பட்டியலிடப்படத்திறன்களைச் சோதிக்கவில்லை. எனவே இங்கு மாதிரிக்கு ஒரு பட்டியலைத் தயார் செய்து இடுகின்றேன்.

பாடப்புத்தகத்தில் கவிதையியல், சிறுகதையியல் என்ற இரண்டு இயல்களும் வாரத்தின் இரு நாட்களின் பாடங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. பாடப்புத்தகத்தை மாணவர்கள் வீட்டிலேயே படித்து, வீட்டுப்பாடத்தைத் தயார் செய்து விட்டு வருவதன் மூலம், ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தைப் பருவம் தொடங்கிய முதல் நாள் அன்றே மாணவர்களைத் தேர்விற்குத் தயார் செய்ய ஆரம்பிக்கலாம்.

மாணவர்கள் பாடங்களை வீட்டில் ஆழ்ந்து வாசித்து இருந்தாலே அவர்களால்  மதிப்பெண்  தரக்கூடிய  பயிற்சிகளைச் செய்ய முடியும் என ஆசிரியர்கள் இங்கே பார்க்கலாம். வீட்டுப்பாடமாக  கொடுக்கப்படும் பயிற்சிகள் , மாணவர்களை  ஒரு  தங்கள் வகுப்பிற்கான கையேடு ஒன்றைத் தயாரிக்க வைக்கின்றது. இது கல்வி நிலையத்தை விட்டு பணியில் சேரும் போது அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் அந்த வேலையைச்செய்யக்கூடியத் திறனையும் கொடுக்கின்றது. மாதிரியாக் கொடுக்கப் பட்டு இருக்கும் வீட்டுப் பாடங்கள், மாணவர்களின் நினைவுகூறல் திறனிலிருந்து அவர்களின் படைக்கும் திறன் வரை அனைத்தையும் ஒருமித்து ஊக்குவிக்கின்றது.

Table Description automatically generated

மாணவர்களுக்கு இது போல ஒரு பட்டியல் தயாரித்து மதிப்பெண்கள் வழங்கும் அளவுகோலையும் இணைத்துக் கொடுத்தால் கண்டிப்பாக  ஒரு மாணவர் பாடப் பொருண்மையை ஆழமாக் கற்பதோடு, பாடநூலில் கொடுக்கப்படாத  பல திறன்களையும் பெறுவர். வீட்டுப்பாடங்களை கணினிபயன்படுத்திசெய்யும் செயலாகக் கொடுத்தோமேயானால்  அது இன்னமும் மாணவர்களை ஊக்குவிக்கும்.

அட்டவணைத் தயாரித்தல்:

வகுப்பறையில் மாணவர்களைத் தேர்விற்குத் தயார் செய்ய வேண்டும் என்றால், மாணவர்கள் முதலிலிருந்தே பாடத்தை ஆழமாகக் கற்கவேண்டும், அவர்கள் கற்பித்தலைப் பயன்படுத்திப் பார்க்கவும் சோதித்துப் பார்க்கவும் வகுப்பறையைப் பயன் படுத்திக் கொள்ளும் விதத்தில் மேலுள்ள அட்டவணை தயார் செய்யப்பட்டது.

இந்த அட்டவணையில் வாரத்தின் எண்ணிக்கை, பாடம் நடக்கும் நாட்கள், மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன், அதை எடுத்து செய்ய வழி செய்யும் வீட்டுப்பாடங்கள், வீட்டுப்பாடங்களை மெருகூட்டக்கூடிய வகுப்பறை செயல்கள், பாடநூலின் எந்தப்பகுதி யை மாணவர்கள் தெரிந்து கொண்டு வீட்டுப்பாடத்தைச் செய்வதும், வகுப்பறை நடவடிக்கைகளுக்குத் தயாராக வருவதும், வீட்டுப்பாடத்திற்கான மதிப்பெண்களும் அட்டவணையில் கொடுக்கப்பட வேண்டும்.

பாடநூலில் கொடுக்கப்படும் விவரங்களைத் தாண்டி ஆசிரியர்கள், தங்கள் விரிவுரையைப் பாடப் புத்தகத்திற்குத் துணைபோகும் ஒரு ஆதார வளமாகத் தங்கள் காணொளிகளையும் மின்னூல்களையும் படைக்கலாம். இப்படிப் பட்ட யோசனைகளைச் செய்ய   மேல் கொடுத்து இருப்பது போல் ஓர் அட்டவணையை நமக்கு உதவி செய்யும்.

பெரும்பாலான ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் சில இணைய வழிமுறைகளைப் பயன்படுத்தி வந்தாலும் அவர்களின் தொழில்நுட்ப பயன்பாடு குறைவாக இருப்பதால் அட்டவணை செய்யச் சிரமப்படலாம். 

ஒரு உரைக் கோப்பில் ஒரு அட்டவணை எவ்வாறு அமைக்கலாம் என்று பார்க்கலாம்

  1. எந்த ஒரு உரைத் தொகுப்பானுக்குள் சென்று insert  எனப் பார்க்க வேண்டும்  அட்டவணை படமும்   மேலே கொடுத்து இருக்கும்
  2. எளிதாக அட்டவணையை அட்டவணைப் படத்திலிருந்தே நாம் கணக்கிட்டுப் போடலாம் அல்லது
  3. More options என்பதை அழுத்தி நமக்குத் தேவையான வகையில் அட்டவணையைத் தேர்ந்து எடுக்கலாம்.

  1. போடப்படும்  அட்டவணை எந்தவித கோடுகளும் இன்றி இருக்கும்.

அதனால் அட்டவணையை வலப்பக்கம் சொடுக்கி table properties ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்


A picture containing diagram Description automatically generated

கூட்டல் குறியை  Table properties என்று வலது பக்கம் சொடுக்கினால்  வரும்

Table properties தான் அட்டவணைக்கு நிறம் கொடுப்பது, கோடுகளுக்குத் தடிமன் கொடுத்து நிறம் கொடுப்பதும் இங்கு தான். அடுத்து வரும் திரையில் Borders and shading என்ற பொத்தானை அழுத்தினால் நாம் அட்டவணைக்குள் தடிமனான கோடுகளை இட முடியும்

Graphical user interface, application Description automatically generated

 அட்டவணையின் உள் கட்டத்தில் வலது பக்கம் சொடுக்கினால்   வரும் திரையின் வழி புதிய செங்குத்து வரிசைகளையோ (column- தூண் போன்றது) புதிய படுக்கை வரிசைகளையோ  (row) சேர்க்கவோ அல்லது அழிக்கவோ  முடியும்.

Graphical user interface Description automatically generated

1வது வரிசைகளைச் சேர்க்கவும். 2வது வரிசைகளை அழிக்கவும் 3வது  அட்டவணையின் கட்டங்களை அழிக்கவும் இரண்டாகப் பிரிக்கவும் பயன்படுகின்றது

இரண்டு கட்டங்களை இணைக்க அவற்றைத் தேவு செய்து வலதுபக்கம் சொடுக்கினால் merge cellலென்று வரும் கட்டளையைத் தேர்ந்து எடுக்க வேண்டும்

அட்டவணையில் உள்ள சொற்கள் சரியாகப் பொருந்த அட்டவணையை வலது பக்கம் சொடுக்கி Autofit என்பதைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.

Excel செயலிதான் அட்டவணைச் செய்யப் பயன்படுத்தப்பட்டாலும் ஆசிரியர்களுக்கு உரை செயலியில் ஒரு அட்டவணைத் தயாரிப்பது மிகவும் எளிது.

 ஒரு அட்டவணையில் நாம் வகுப்பிற்கான பணிகளை 16 வாரத்திற்கும் கற்றல் திறனை மனதில் வைத்து உருவாக்கி அதைக்  கணினியின் நாட்காட்டியில் சேர்க்கலா,

நாட்காட்டியும் பணிகளும்

மைக்ரோசாப்ட் கணினியில் இயங்குதள நாட்காட்டியும் outlook செயலி வழி நாட்காட்டியும் என்று இரண்டு வகைநாட்காட்டிகள் கணினியில் உள்ளன,’நாம் சென்ற வாரம் பார்த்தபடி இயங்குதள நாட்காட்டிகள், ஒரு பிரதான நாட்காட்டியாகும். அதற்குள் ஆசிரியர் தங்களுக்கு வகுப்புக்களுக்கு ஏற்றபடி நாட்காட்டிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.  கணினியில் உள்ள  கடிகாரத்தை control panel  சென்று பார்க்கலாம்

  தேடுதல் பகுதியில் நாட்காட்டி என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாலே நமக்கு, இயங்குதள நாட்காட்டி வரும். Microsoft Outlook செயலி வழி சென்று நாம் நாட்காட்டிகளைப் புதிதாகச் சேர்க்கலாம்.

கணினிக்குள்ளே  என்ற mail செயலியும் இயங்குதளத்திற்குள்ளே உள்ளது. கணினியின் நாட்காட்டியும் இந்த mail செயலியும் மைக்ரோசாப்ட்  நிறுவனத்தாலேயே  உருவாக்கப் பட்டதால்  அவை   மைக்ரோ சாப்ட்  அவுட்லுக் போலவே இருக்கும்.

 கணினிக்குள் சென்று mail என்று தேடினால்  mail , outlook  இரண்டு செயலிகளும் வரும்.

இதற்குக் காரணம் மைரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளான office 365 நம் கணினியில் இல்லை என்றாலும் கணினியின் அடிப்படைத் தேவைகளான மின்னஞ்சல், நாட்காட்டி, கடிகாரம் ஆகியவை  சிறப்பாகச் செயல் பட வேண்டும் என்பது தான்.

Graphical user interface, application Description automatically generated

 அதனால் கணினிக்குள் சென்று defalult program  என்றுத் தட்டச்சு செய்து  default mailஐ outlook கிற்கு மாற்றவும்

Graphical user interface, application, Word Description automatically generated

கணினித்திரையில் படிப்பதை விடப் பார்த்துச் செய்ய வசதியாக இரு காணொளியில் இங்கே இடப்பட்டு உள்ளன.

புது நாட்காட்டி உருவாக்குதல் Creating a new calendar in Microsoft Outlook

நமக்குத் தேவையான நாட்காட்டியை உருவாக்கிய பின், நாட்காட்டிக்குள்  நமது கல்விப் பருவத்தில் வரும் வேலைகளை எவ்வாறு கணினிவழி  உருவாக்குவது என்பதை  அடுத்தக் காணொளியில் பார்க்கலாம்

நாட்காட்டியில் பணிகளை உருவாக்குதல்

 பணிகளை நாம் விவரமாக மாணவர்களுக்குக் கணினி வழி மின்னஞ்சல் வழி  அனுப்பும் போது அவர்கள் நமது கட்டளைகளையும்  விவரங்களையும் தொலைக்க வாய்ப்பு இல்லை. ஒரு பணியில் எழும் சந்தேகத்தை ஆசிரியரிடமோ, மாணவர்களிடமோ உடனடியாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறாக நீங்கள்  கணினியில் உங்கள் நாட்காட்டியையும் பணி விவரத்தையும் உருவாக்கிய பின்   உங்கள்  மின்னஞ்சலில் உள்ள மாணவர்களுக்குப்  பகிரலாம்.

 அவர்கள் தங்கள்  மின்னஞ்சலைத் திறன்பேசியில்  வைத்திருந்தால் இந்த நாட்காட்டியும்  பணிகளும் அவர்களின் திறன்பேசியில் தெரியும். எனவே அவர்களுக்கு  உங்கள் கணினியில் ஒரு முறை பதிவு செய்த பணியை  உங்களுடைய கணினியும் திறன்பேசியும் , உங்களுக்கு நினைவூட்டுவது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கும்  கண்டிப்பாக நினைவூட்டிக் கொண்டு இருக்கும்.

 தற்போது கணினியில் மைக்ரோசாப்ட் கூகுள்போன்ற  தொழில்நுட்பங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும்  சில இடங்களில் திறவீற்றுத் தொழில்நுட்ப மென்பொருட்களும் கல்விக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதைல்  அதிகம் பேர் மைக்ரோசாப்ட் பயன் படுத்துவதால் அந்த தொழில் நுட்பத்திற்கான காணோலியை இங்கே இட்டுள்ளேன். கூகுள் நாட்காட்டியும் கிட்த்தட்ட இதேபோலத்தான் இயங்கும். நீங்களும் செய்து பார்க்கலாமே?

தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

 தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்
தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்Show 3 Comments

3 Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *