இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்



குழுக்களை உருவாக்குதல்

சென்ற சில வாரங்களில், நாம் ஒரு அடிப்படை அட்டவணையை மதிப்பெண்களுடன் தயாரித்து, மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு அதற்கு ஏற்றபடி கேள்விகளையும் நழுவல் காட்சிகளாக எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்த்திருந்தோம்.

இனி மாணவர்களை ஒரு குழுக்களாக எவ்வாறு நாம் பிரிக்கலாம் என்று பார்க்கலாம். ஏற்கனவே நாம் கூகுள், புலனம் மைக்ரோசொஃப்ட் வழி குழுக்களை மாணவர்களின் மின்னஞ்சல் வழியாகவும் அவர்களது அலைபேசி எண்கள் வழியாகவும் இணைத்துத் தொடர்பில் இருக்கின்றோம். ஆனால் இந்தக் குழுக்களில் நாம் வகுப்பு பற்றிய பொதுவான செய்திகளையே பகிர்ந்து கொண்டு வருகின்றோம்.

மாணவர்களின் பொதுவான தொடர்புக்காகக் குழுக்களைப் பயன்படுத்தும் போது, அவர்களின் தனிப்பட்ட திறனை நாம் பயன்பாட்டில் எடுத்துக் கொள்வது இல்லை. அதே போலக் குழுக்கள் அமைத்து மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சிகளை நாம் கொடுப்பதும் குறைவு. மாணவர்கள் குழுக்களாகச் செயல்படும் போது, அவர்கள் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் விதம் மாறுபடுவதோடு அவர்களின் வாழ்க்கைக் கல்வியும் மேம்படுகின்றது. ஒரு அணியில் ஒருவராக தங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவும், குறிப்பிட்ட கால கட்டத்தில் தங்களுடையப் பங்கை ஆற்றி முடிக்கவும் கற்றுக் கொள்கின்றனர். முக்கியமாக தங்களுடைய செயல்திறனை அவர்களே மதிப்பீடு செய்யக் குழு சார்ந்த செயல் முறைப் பயிற்சி உதவி செய்கின்றது.

இன்றைய கால கட்டத்திலும் எதிர்காலத்திலும் மாணவர்கள் ஒரு அணியாகச் சேர்ந்து செயல்பட்டுத்தான் தங்களுடைய பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். வகுப்பில் இரண்டு மூன்று குழு முறை செயற்பயிற்சிகளை செய்து மாணவர்கள் பழகி விட்டால் ஒரே நேரத்தில் அவர்கள் ப்ளூம்ஸ் தக்சானமியில் கூறப்படும் நினைவு கூறுதல், முதல் படைத்தல் வரை எல்லா திறன்களிலும் ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ள வழி கிடைக்கின்றது. இந்த குழுவிற்கான செய்முறைப் பயிற்சிகளைச் செய்யும் போது நான்கு முக்கியக் கருத்துக்களை ஆசிரியர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  1. குழுப் பயிற்சிகளின் போது ஆசிரியர் ஒரு வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும்

  2. குழுப்பயிற்சியை செய்து முடிக்கக் குறைந்த பட்சம் இரண்டு வாரங்களும் அதிக பட்சம் ஒரு பருவம் முழுவதும் கொடுக்கலாம்

  3. குழுவில் கொடுக்கப்படும் செயல் முறைப் பயிற்சியின் நிலைகளை நாம் தெளிவாகப் பிரித்துக் கொடுத்து இருக்க வேண்டும்.

  4. பயிற்சியின் நிலைகள் ஒவ்வொன்று முடியும் போதும் மாணவர்கள் ஒரு சுய அலசலில் ஈடுபட வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்.



குழு செயல் பயிற்சிகளின் பொருண்மை

பாடத்தின் உட்பொருளைக் கொண்டு மாணவர்கள் ஏதாவது ஒரு வாழ்வில் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகச் செயல்முறைப் பயிற்சிகளின் பொருண்மை அமைய வேண்டும். வாழ்வியல் பிரச்சனைகள் என்று சொல்லும் போது, அது மாணவர்களின் அன்றாட வாழ்க்கையை ஒட்டி அமையலாம் , அல்லது எதிர்காலத்தில் மாணவர்கள் சந்திக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கலாம். எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளைச் சார்ந்த செயல்முறை பயிற்சிகளைக் கொடுக்கும் போது அவை, மூன்று ஆண்டுகள், அல்லது ஐந்து ஆண்டுகள் தள்ளி வரக்கூடிய பிரச்சனைகளாக இருக்க வேண்டும். செயல்முறைப் பயிற்சியாக மாணவர்கள் தீர்வு காணும் பிரச்சனைகள் மாணவர் ஆசிரியர் ஆகியோரின் கற்பனையில் உதிக்காமல் , அன்றாட வாழ்விலும், செய்திகளிலும் ஊடகங்களிலும் வரும் பொருண்மையைக் கொண்டு செயல் முறைப் பயிற்சிகளை அமைக்கவேண்டும். எதிர்காலத்தில் வரும் மாற்றங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க மாணவர்களுக்கு இந்த மாதிரியான செயல்முறைப் பயிற்சிகள் உதவி செய்யும். இந்த செயல் முறைப் பயிற்சியின் விளைவாக ஒரு கூட்டுப் படைப்பு உருவாகலாம்.

குழு செயல் பயிற்சிகளை இணைய வகுப்பிற்கான கற்றல் சூழ்நிலையை மனதில் கண்டு உருவாக்கும் போது, மாணவர்களின் முதல் தேவை, அவர்கள் பாடப் பொருண்மையை எந்த அளவு புரிந்து கொள்கின்றனர் என்பது. இரண்டாவது முக்கியத் தேவை, அவர்கள் பாடங்களைப் படிக்க எவ்வளவு நேரம் ஒதுக்குகின்றனர் என்பது. மூன்றாவது தேவை, சவால்களையும் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தாலும் அவர்களுக்குக் குழு செயல் முறை தேர்வில் எவ்வாறு உதவியது என்பதே!

இந்த தேவைகளை மனதில் கொண்டு ஒரு நாம் யோசித்தோமேயானால், சில விதமான செயல் முறைப் பயிற்சிகள் உதவிக்கு வருகின்றன.

  • மாணவர்களைப் பாடப் பொருண்மைக்கான கையேடுகளைத் தயாரிக்கச் சொல்லுதல்

  • மாணவர்களைப் பாடப் பொருண்மையைப் பயன்படுத்தித் தீர்த்து வைக்கும் அன்றாடப் பிரச்சனைகளைப் பட்டியல் இடச்சொல்லுதல்

  • பாடப் பொருண்மையை மற்றவர்கள் விளங்கில் கொள்ளும் படி ஊடகங்களாகத் தயாரித்தல்

  • பாடப் பொருண்மையின் அத்தியாவசியம் பற்றி மாணவர்களை தங்களுடைய சமூகத்தினரிடம் விளக்கச் சொல்லுதல்.

  • பாடப் பொருண்மையின் ஒரு கூற்றை வித்தியாசப்படுத்தி விளைவுகள் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைத்தல்

  • பாடப் பொருண்மையை அன்றாட வாழ்வில் பயன் படுத்தும் பயனீட்டாளர்களின் தேவையை முற்றிலுமாக மாற்றி அமைத்து, அதற்கேற்ற படி பாடப் பொருண்மையை மாற்றச் சொல்லுதல்

இப்படிப்பட்ட குழு செயல்வகைகளின் மூலம், பாடத்தை மாணவர்கள் ஆழமாகக் கற்கவும், அவற்றை வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன் படுத்தி கற்றல் கற்பித்தலை அடுத்த நிலைகளுக்கு எடுத்துச் செல்லவும் முடியும். இத்தகையக் குழுப் பயிற்சி மாணவர்களைப் பாடப் பொருண்மையின் விதிகளையும் சொல்லாடல்களையும் கற்கும் போதே ஒரு நல்ல எடுத்துக் காட்டை அவர்களே உருவாக்குகின்றனர். பாடப் பொருண்மைக்கான எடுத்துக்காட்டை மாணவர்களே உருவாக்கும் போது, எதிர்பாராத சிக்கல்களைச் சந்திப்பார்களேயானால் அதைத் தீர்த்து வைக்க, புதிய புத்தாக்க சிந்தனையும் அங்கே உருவாக வாய்ப்பு உள்ளது.

இணைய வகுப்பில் தேர்வில் வரும் வினா விடைகளைக் கேட்பது மூலமும் குழு செயல்முறை பயிற்சிகள் கொண்டும், மாணவர்களை வகுப்பில் ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் பங்கு கொள்ளச் செய்யலாம்.குறிப்பாகச் சொல்லப்போனால் குழு செய்முறை பயிற்சிகள் தேர்விற்காகப் படிக்கும் விவரங்களை மனப்பாடம் செய்யவும், மனப்பாடம் செய்ததை மீட்டெடுக்கவும் உதவிசெய்கின்றன.இந்தக் கட்டத்தில் பாடப் பொருண்மையிலிருந்து தேவையான விவரங்களைச் சேகரிப்பது மாணவர்களின் பொறுப்பாகின்றது. பாடப் பொருண்மையை விளங்கிக் கொள்ளவும், அதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் குழு அமைப்பு ஒரு உந்து சக்தியாக விளங்குகின்றது. பாடப் பொருண்மையிலிருந்து மனப்பாடம் செய்த விதிகளையும் பாடத்தின் கூறுகளையும் மாணவர்கள் உடனடியாக பயன்படுத்தத் தொடங்குகின்றனர். செய்முறைப் பயிற்சியில் கொடுக்கப்படும் சிக்கல்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளும் அவசியத்திற்கு ஆளாகின்றனர். குழு செய்முறைப் பயிற்சியில் கொடுக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முற்படும் போது, ஒரு குறிக்கோளுடன் கூடிய சிந்தனை மாணவர்களிடம் உருவாகுகின்றது பொருண்மையின் விளக்கங்களும் அதன் செயல்பாடுகளும் செயல் பாடுகளினால் வரும் விளைவுகளும் மாணவர்களால் கண்டறியப்படுகின்றது. ஒரு குழுவாகச் செய்யும் போது செயல்பாடுகளும் விளைவுகளும் ஒவ்வொரு மாணவருக்கும் வேறுபட்டு வரும். வேறுபட்ட விளைவுகளை ஆராய்ந்து செயல்படும் திறனும் பக்குவமும் மாணவர்களிடையே வளரும். இதனால் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளும் எதிர்காலத்தில் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளுக்கும் விடை கண்டுபிடிக்கும் திறன் மாணவர்களிடையே வளர ஆரம்பிக்கின்றது. மாணவர்கள் ஈடு பாட்டுடன் கற்பதோடு அவர்களின் நேரமும் வீணாவதில்லை..

அலைபேசி வழி குழு தொழில்நுட்பங்கள்

நாம் அனைவருமே தற்போது புலனம் சிக்னல் டெலிகிராம் ஆகியத் தொழில்நுட்பங்கள்

  • Google Drive

  • Micosoft Yammer

  • Microsoft one drive

  • Dropbox

  • Assana

  • Trello

  • Slack

  • Evernote

  • Chanity

இந்தத் தொழில்நுட்பங்களை ஆசிரியரும் மாணவரும் தங்கள் அலைபேசியில் பயன்படுத்தலாம். Google Drive, Micosoft Yammer, Microsoft one driveஆகியவற்றை ஆசிரியர்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டு கூட இருக்கலாம். இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்திய அனுபவம் ஒரு மாணவர் வெற்றிகரமாகத் தன் கல்வியை முடித்து வெளியேறும் போது மாணவர்களின் வேலை வாய்ப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஏன் எனில் கணினி சாந்த பல பணிகளில் இந்தவிதமான தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பயன் படுத்தப்படுகின்றனர்.

தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

 



தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்



தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்



தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்



தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்




தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்



தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்

 



தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *