நழுவல் காட்சிகள்
இன்றைய ஆசிரியர்களுக்குக் கரும்பலகையைப் போலப் பயன் படுவது நழுவல் காட்சித் தொழில்நுட்பம் தான். Microsoft Powerpoint, Google Slides, Libre office ImpressApple Keynoteஎன்று நான்கு முன்னணி தொழில்நுட்பங்கள் இன்று புழக்கத்தில் உள்ளன. இதில் எந்த தொழில்நுட்பம் கல்வியாளர்களுக்குச் சாதகமானது என்பது நாம் அந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்தைப் பொறுத்துத்தான் அமையும்
இணைய வகுப்பறையில் நழுவல் காட்சிகளைப் பயன் படுத்தும் நோக்கம் தான் என்ன? அதுவும், பாடத்தின் இன்னொரு வடிவமாக இருக்கும் பட்சத்தில் நழுவல் காட்சிகள் வகுப்பிற்குத் தேவையா?. நழுவல் காட்சிகள் என்று சொல்லும் போதே அதை அமைப்பதற்கான நேரம் அதிகமாகச் செலவிட வேண்டும் என்று நம்மில் சிலர் கருதுவோம்.. நம்மில் பலர் நாம் விரிவுரைக் கொடுக்க வேண்டுமென்றால் விரிவுரையை அப்படியே உரை ஆவணத்திலிருந்து நகலெடுத்து அது நழுவல் காட்சியில் ஒட்டி அதை வாசித்துக் காட்டுவோம்
அடுத்ததாக நழுவல் காட்சியில் குறிப்புச்சொற்களாகத் தந்து அவற்றுடன் இணையத்திலிருந்து ஒரு படத்தையும் போட்டு விடுவோம்
ஒரு இணைய வகுப்பில் இதனுடையத் தாக்கம் என்னவாய் இருக்கும்?
கண்டிப்பாக இது மாணவருக்கு உதவியாக இருக்காது. ஏனெனில் பாடப்புத்தகத்தில் இருப்பதை மீண்டும் கூறும் போது, பழகிப் போன செய்தியைக் கூறுவதால் அவர்களின் கவனம் சிதற ஆரம்பிக்கும். பாடப்புத்தகத்தில் இருப்பது தானே நாம் பிறகு கவனித்துக் கொள்ளலா, என்ற அலட்சியப் போக்கும் அவர்களிடையே உண்டாகும்.. முக்கியமாக மாணவர்கள் தேர்விற்குப் படிக்க மற்ற கையேடு நூல்களின் உதவியோடுத் தேர்விற்குப் படிக்கும் போது நழுவல் காட்சிக்கு வேலையே இல்லாமல் போய் விடுகின்றது.
நம்மிடத்தில் ஏற்கனவே உரை ஆவணமாக இருக்கும் விஷயத்தை நாம் அப்படியேக் கணினித் திரையில் காட்ட முடியும் என்ற வசதி இருக்கும் போது நழுவல் காட்சிகள் தயாரிக்க வேண்டிய காரணம் தான் என்ன?
எனவே நம் வகுப்பிற்கு நழுவல் காட்சி தேவையான ஒன்றா என்று நாம் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய அடுத்த கேள்வி நழுவல் காட்சிகளை நாம் எவ்வாறு வகுப்பறையில் திறன் படக் கையாளலாம் என்பதாகும். இரண்டிற்குமான விடையைக் கீழே வரும் மூன்று கேள்விகளுக்கான விடைகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
-
நாம் என்ன கற்றுக் கொடுக்கப் போகின்றோம் ?
-
மாணவர்கள் ஏன் நாம் கற்பதைக் கேட்க வேண்டும்?
-
எந்தத் திறனைக் கற்றுக் கொடுக்கப் போகின்றோம்?
இந்த மூன்றுக் கேள்விகளை விட மிக முக்கியமானது, மாணவர்களின் கவனச் சிதறல் ஏற்படாமல் இணைய வகுப்பை எவ்வாறு நடத்துவது? ஆகிய கேள்விகளின் அடிப்படையில் நாம் நழுவல் காட்சிகளை எவ்வாறு அமைக்கலாம் என்று பார்ப்போம்.
நாம் என்னக் கற்றுக் கொடுக்கப் போகின்றோம் என்பது நமது பாடத்தைப் பொறுத்ததாகவோ மாணவர்களின் திறனைப் பொறுத்ததாகவோ அமையும். பாடப்புத்தகத்திலிருக்கும் இருக்கும் விவரங்களையே மீண்டும் மீண்டும் ஏன் நாம் நமது விரிவுரையில் கொடுக்க வேண்டும்?. பொதுவாக மாணவர்களைப் பாடப்புத்தகத்தை வீட்டில் வாசித்துவிட்டு வரச்சொல்வதும் நமது விரிவுரைகளைக் காணொளியாகக் கொடுப்பதும் மிகவும் பயன் அளிக்கும் என்று முன்பேப் பார்த்தோம்.
மாணவர்கள் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி சுருக்கமான பதில் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுதல் என்பதாகும். ஆனால் பள்ளியில் அடிப்படை அறிவை மாணவர்கள் பெறுகின்றார்கள் என்றால் கல்லூரியில் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தையும், சமூகத்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் திறன் கொண்டவர்களாக வர வேண்டும், கற்றல் கற்பித்தல் பள்ளியில் நடந்தாலும் கல்லூரியில் நடந்தாலும் எதிர்கால புத்தாக்க சிந்தனையை மாணவர்களிடம் விதைத்து வளர்க்கும் விதமாக நம்முடையக் கற்பித்தல் இருக்க வேண்டும்
ப்ளும்ஸ் தாக்ஸானமியில் நினைவுகூறுதல், புரிதல், பயன்படுத்துதல், ஆராய்தல், மதிப்பிடுதல், படைத்தல் ஆகிய திறன்களையும் வலியுறுத்தி மாணவர்களைத் தேர்விற்கும் தயார் செய்யும் ஒரு தொழில்நுட்பம் தான் நழுவல் காட்சிகள். நினைவுகூறுதல், புரிதல், பயன்படுத்துதல் ஆகிய மூன்று திறன்களும் கண்டிப்பாக மாணவர்களைத் தேர்விற்குத் தயார் செய்ய உதவும்.ஆராய்தல், மதிப்பிடுதல், படைத்தல் ஆகியவை மாணவர்களின் உயரிய சிந்தனையை வளர்த்து அவர்களை சுயமாகச் சிந்தித்து புத்தாக்க செயல்களில் ஈடு பட வைக்கும்.
நினைவுகூறுதல், புரிதல், பயன்படுத்துதல் என்ற மூன்று அடிப்படைத் திறன்களை விளையாட்டுக்கள் மூலமாகவும் ஆராய்தல், மதிப்பிடுதல், படைத்தல் மூலமாகவும் நாம் மேம்படுத்தலாம். வகுப்பறையில் விளையாட்டுக்களாய் நாம் வினாடி வினா, நினைவுகூறுதல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
நழுவல் காட்சிகளைப் பயன் படுத்தும் போது அவை 15 நிமிடத்திற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த பதினைந்து நிமிடத்திலும் ஒவ்வோரு 7 நிமிடத்திற்கு இடையில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததை மீண்டும் அவர்கள் நினைவுகூறுமாறு செய்து விட்டு, அடுத்து வருவதற்கு முன்னோடியாக இரு காட்சி வில்லைகளைப் பயன் படுத்தலாம். அறிவியல் கணக்கு பாடங்களை காட்சி வில்லைகளின் ஊடாடும் திறனை பயன்படுத்தி பாடப் பொருண்மையை மாணவர்கள் மனதில் பதிய வைக்கலாம். படங்களையும் ஒலிக்கோப்பையும் ஒன்றாகப் பயன் படுத்தி மாணவர்களுக்கு மொழி அறிவை வலியுறுத்தலாம். நாம் காட்சி வில்லைகளை நன்றாக வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும் எனில் உரைக்கான தொழில்நுட்பத்திற்கும் காட்சி வில்லைக்கானத் தொழில்நுட்பத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் சிறப்பையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. கீழே கல்வியாளர்களுக்கு என்று முக்கியமான சில சிறப்புக்களை எடுத்துக் கூறியுள்ளேன்.
காட்சி வில்லைகளின் சிறப்பு
நழுவல் காட்சி வில்லைகள் உரையை மட்டும் காட்டாமல் அசைவூட்டம், animation ஊடாடுதல் interaction ஆகியவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Microsoft Powerpoint, Google Slides, Libre office Impress Apple Keynote ஆகிய அனைத்திலும் அசைவூட்டம் செய்ய வழி வகுக்கின்றது. சுட்டிகள் விசைகள் ஆகியனவும் காட்சி வில்லைகளை உரையாடலுக்கு பயன் படும் வகையில் அமைக்க முடியும். அனைத்து காட்சி வில்லைத் தொழில்நுட்பங்களிலும், ஒரு காட்சி வில்லையை படமாகச் சேமிக்க இயலும். இதனால் ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்கு ஏற்றப் படங்களைத் தாங்கலே உருவாக்கிக் கொள்ளலாம். அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் காட்சி வில்லைகலை சேமிக்கும் போது கீழுள்ள அம்புக்குறியை அழுத்தினால் படமாகச் சேமிக்க நமக்கு ஒரு வாய்ப்பைத் நழுவல் தொழில்நுட்பம் கொடுக்கின்றது. Microsoft powerpointல் காட்சி வில்லையைப் படமாக்குவதோடு வில்லையில் உள்ள விவரங்களை வலது பக்கமாகச் சொடுக்கி படமாகச் சேமிக்கலாம்.
ஒவ்வோரு காட்சி வில்லைக்கு ஏற்ற Master slide(பிரதான காட்சி வில்லை) ஒன்றை அமைத்து எல்லா காட்சி வில்லைகளில் வரும் முக்கியமான விவரங்களை அந்த வில்லையில் நாம் போட்டு விடலாம். ஒவ்வோரு வகுப்பிற்கான தனியாக நாம் இவ்வாறு காட்சி வில்லைகளை உருவாக்கி வைக்கலாம். காட்சி வில்லைகளை நாம் ஒலிக்கோப்புக்களாகப் பயன்படுத்தலாம். காட்சி வில்லைகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தி கதை சொல்லும் விதம், ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தலாம்.
நாம் காட்ச்சிவில்லைகளை பாடநூலுக்கும் மற்ற ஆதார வளங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வளமாகப் பயன்படுத்தும் போது காட்சி வில்லைத் தொழில் நுட்பத்தில் உள்ள notes நம்முடைய குறிப்புக்களை எழுதி வைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தக் குறிப்புக்களைத் தனியே அச்சடிக்கவும் முடியும் என்பதால், மாணவர்களும் கூட நழுவல் காட்சித் தொழில்நுட்பத்தைத் தேர்வுக்குத் தயார் செய்யப் பயன்படுத்தலாம்.
Microsoft power point
Microsoft power pointல் காட்சி வில்லைகளைப் படமாக மட்டுமன்றி நாம் காணொளியாகவும் சேமிக்கலாம். export ஏற்றுமதி செய் என்ற வேலை நமது காட்சி வில்லைகளைக் குறுந்தகடாகவும் சேமிக்க உதவுகின்றது.காட்சி வில்லைகளில் நாம் ப்வ்வோறு வில்லைக்கும் பெயர் கொடுத்தும், பல பிரிவுகளையும் நாம் உருவாக்க முடியும். மேலும் நாம் ஏற்கனவே செய்து வைத்திருந்த காட்வில்லைகலை நாம் புதிதாக உருவாக்கிக் கொண்டு இருக்கும் காட்சி வில்லைகளோடு எளிதாக இணைக்கலாம் சாதாரணமாக நாம் காட்சி வில்லைகளை நம்முடைய விரிவுரைக்கு ஒரு துணைக்கருவியாகப் பயன்படுத்துகின்றோம் ஆனால் Google Slides, Libre office Impress Apple Keynote ஆகிய தொழில் நுட்பங்களை விட Microsoft power pointல் இருக்கும் Animation Pane Trigger ஆகியவை விளையாட்டுக்களை உருவாக்க உதவுகின்றது.இந்தக் காட்சி வில்லைகளில் முப்பரிமாணப்படங்களையும் இணைக்க முடியும். நாம் நோட்டுப்புத்தகத்தில் , கரும்பலகையில் எழுதிக் காட்டுவதைப் போலவும் நேரிடையாக காட்சி வில்லைகளிலேயே செய்யலாம்.நமது திரையில் செய்வதை காணொளியாகவும் படமாகவும் சேமிக்கலாம். கீழேக் கொடுக்கப்பட்டுள்ள காணொளி Microsoft power pointல் செய்து ஏற்றப்பட்ட து.
காட்சி வில்லைகளை ஆசிரியர்களாகிய நாம் அதிகம் பயன்படுத்தினாலும், தொழில்நுட்பத்தின் அனைத்து வசதிகளையும் திறம்படப் பயன்படுத்திப் பாடங்களை மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் கொண்டு செல்லலாம். இங்கே காட்சி வில்லைகளைப் பயன் படுத்துவது பற்றி ஒரு சுருக்கமான தகவல் மட்டுமே தரப்பட்டுள்ளது.நாமாகவே காட்சி வில்லைத் தொழில்நுட்பத்தில் insert, export போன்ற அலுவல்களை ஆராய்ந்து மேலும் நமக்குத் தேவையானவற்றை அறிந்து கொள்ளலாம்.
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3:
தொடர் 4
தொடர் 5
தொடர் 6:
தொடர் 7:
தொடர் 8: